Cinema

Jayam Ravi Movies, Wife, Wiki, Son, Father, Brother,  Height, Upcoming Movie, Born, Dob, Aarav, Ayaan,  Salary, Wiki, Baby, Biography, Age, Photos, Images

Jayam Ravi Movies, Wife, Wiki, Son, Father, Brother,  Height, Upcoming Movie, Born, Dob, Aarav, Ayaan,  Salary, Wiki, Baby, Biography, Age, Photos, Images

பலருக்கும் பிடித்த தமிழ் நடிகர்களில் முக்கிய நடிகர் தான் ஜெயம் ரவி. சில நடிகர்களுக்கு haters இருக்க மாட்டார்கள் அப்படிபட்ட நடிகர்களில் ஒருவர் தான் ஜெயம் ரவி.

இவரை பற்றின பல இன்ரெஸ்டிங்கான தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம்.

பிறப்பு:

இவர் செப்டம்பர் 10 ம் தேதி 1980-ம் வருடம் பிறந்தார். மதுரையில் உள்ள திருமங்கலம் என்ற ஊரில் தான் இவர் பிறந்தார். 

மோகன்  ரவி ( Mohan Ravi ) என்பதே  இவரின் பெயராகும். தமிழில் இவரின் முதல் படம் ஜெயம்’ இது வேற லெவல் வெற்றியை இவருக்கு குடுத்தது.

இதன்  பின்னரே இவரின் பெயர்  ஜெயம் ரவி’ என்றானது. ஜெயம் படத்திற்கு பின் வந்த படங்களில் எல்லாம் ‘ஜெயம் ரவி ‘ என்றுதான் திரையில் தோன்றியது.

jayam ravi wife
மனைவி:
jayam ravi wife & sons
jayam ravi wife & sons

இவரின் மனைவியின் பெயர் ஆர்த்தி ( Aarthi – jayam ravi wife ), 2009-ல் இவர்களது கல்யாணம் நடைபெற்றது. தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களது பெயர் ஆரவ் ( Arav ) மற்றும் அய்யன் ( Ayaan ).

2  மகன்கள்:

 அர்னவ் ( Arav )

அயான் ( Ayaan ).

ஜூன் 29, 2010 -ம் வருடத்தில் அர்னவ் பிறந்தார் இவர் பிறந்து நான்கு வருடங்கள் கழித்து அயான் ஆகஸ்ட் மாதம்  10 ம் தேதி 2014 ம் வருடம் பிறந்தார்.

இதில் அர்னவ் 2018-ல் வெளிவந்த “டிக் டிக் டிக்” படத்தில் ஜெயம்  ரவியுடன் நடித்திருந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.

முதலாவது படம்:

ஜெயம் ரவி நடித்த முதலாவது படம் என்றால் அது 1993-ல் வெளிவந்த “பாவா பாவமெரிடி” ( Bava Bavamaridi ) என்கிற தெலுங்கு படம் தான் இதில் Child artist ( குழந்தை கலைஞராக  ) ஆக நடித்திருந்தார்.

இதுக்கு அடுத்த வருடமும் தெலுங்கில் நடித்த இவர் 2003 ல் தான் ‘ஜெயம்’ ( Jayam ) என்ற படம் மூலமாக தமிழ்   திரையுலகில் கால்பதித்தார்.

இப்படத்தில் ரவி (  Ravi ) என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ்மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார் என்றே சொல்லலாம்.

இவரின் முதலாவது படமே நன்கு வெற்றி அடைந்து இவரின் அடுத்த படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

ஜெயம்:

இந்த ஜெயம் படத்தில் சதா அவர்கள் ரவியை பார்த்து  “போயா போயா” என்று கையை தூக்கி சொல்லுவார் அந்த  வசனமானது மிக பிரபலம். இந்த படத்திற்கு பின் இவர் வெளியில் செல்லும் போது பலரும்  இவரை  “போயா போயா”  என்று  சொல்லுவார்களாம்.

jayam movie -  actress sadha
jayam movie

குறிப்பாக இவர் ஒரு function ல் கலந்துகொள்ளும் போது அங்குள்ளவர்கள் நடிகை சதா  போன்று   “போயா போயா” என்று  சொல்லி உள்ளனர் விளையாட்டாக, இவரும் நகைச்சுவையாக நிகழ்ச்சியை விட்டு போகவா என்று சிரித்தபடி கூறியுள்ளாராம்.

பின் அவர்கள்  ஐயோ வேண்டாம்  சார் என்று  சொல்லி உள்ளனர்.

அடுத்தப்படம்:

அந்த எதிர்பார்ப்பை ரவி  வீண்போக விடவில்லை M.குமரன் Son of Magalakshmi படத்தின் முலம் ரசிகர்களை மீண்டும் கவர்ந்தார். 2004 ல் இப்படமானது வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திக்காக  “தமிழ்நாடு மாநில திரைப்பட விருது” இவருக்கு கிடைத்தது.

பின், இவர் நடித்த படங்களின் பட்டியலை பார்ப்போம்.

படங்கள்:
  • தாஸ்
  • மழை
  • உனக்கும் எனக்கும்
  • தீபாவளி
  • தாம் தூம்
  • சந்தோஷ் சுப்ரமணியம்
  • பேராண்மை
  • எங்கேயும் காதல்
  • நிமிர்ந்து நில்
  • தனி ஒருவன்
  • மிருதன்
  • போகன்
  • அடங்கமாறு
  • பூமி
  • கோமாளி

மேலே, குறிப்பிட்ட படங்களில்  ஜெயம் ரவி 2003 – 2021 வரை நடித்தார்  என்பது குறிப்பிடதக்கது. இதை  தாண்டி ஒருசில படங்களில் இவர் நடித்தும்  உள்ளார்.

தனி ஒருவன்:

இவரது சினிமா வாழ்க்கையில் “தனி ஒருவன்” படத்தின் பங்கு மிக முக்கியம் முந்தைய படங்கள்   சிலது சரியாக போகாமல் இருக்கும் போது  இவருக்கும் மிகப்பெரிய ரீ என்ட்ரி ஆக அமைந்த படம் தான் தனி ஒருவன்.

32 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படமானது கிட்டத்தட்ட  105 கோடி வசூல்  செய்தது குறிப்பிடத்தக்கது. 

அப்பா (Father) :

ஒரு பேட்டியில் உங்கள் அப்பாவிடம் நீங்கள் வியந்து பார்க்கும் விஷயம் என்று கேட்க, அதுக்கு ஜெயம் ரவி  என் அப்பாவிடம் நிறைய விஷயங்கள் பார்த்து  வியந்து உள்ளேன்.

குறிப்பாக, ஒரு வேலையை அவர் எடுத்துவிட்டால்  அதை முடிக்கும் வரை வேற சிந்தனையே இருக்காது. அது சூப்பர் நான் அப்பறம் பண்ணலாம் அப்பறம் பார்த்துக்கலாம் என்று நிறைய தடவை இருந்திருக்கேன் என்றார்.

சினிமாவில்  நிலைப்பது:

சினிமா வாழ்க்கையில் நன்கு பிரபலம் ஆவது எந்த அளவுக்கு கஷ்டமோ  அதே அளவுக்கு அந்த வெற்றியை தக்க வைத்து கொள்ளவது எளிதில்லை.

இதை பற்றி இவர் சொல்லுவது “என்னை நானே challenge செய்து கொள்வேன் பண்ண கதாபாத்திரத்தையே நன்றாக  பண்ணுவது challenge ஆகாது” புதிது புதிதாக கதாபாத்திரத்தை  தேர்வு செய்து பேஸ்டாக நடிக்கணும் அது தான் challenge.

தோல்வி:

பொதுவாக தோல்வி ( failure ) போன்ற விஷயங்கள் கண்டிப்பாக pressure ஆக தான் இருக்கும். ஆனால் படப்பிடிப்பின் போது அதை  ( pressure ) பத்தி நினைக்க கூடாது. அப்போது தான்  வேலையை நன்றாக  செய்ய  முடியும்.

Jayam Ravi Movies, Wife, Wiki, Son, Father, Brother,  Height, Upcoming Movie, Born, Dob, Aarav, Ayaan,  Salary, Wiki, Baby, Biography, Age, Photos, Images

குடும்பம்:

பிசியாக படப்பிடிப்பில் நாட்கள்  போகும் போது குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் எப்போது  நேரம்  செலவிடுவார்கள்?

நான் படங்களில் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் வீட்டில் இருக்கும்  போது முழு நேரத்தையும்  குழந்தை மனைவியுடன் நன்கு செலவிடுவேன்.

jayam ravi wife and son aarav & ayaan
jayam ravi wife and sons

பசங்களின் படிப்பு பற்றி கேட்பது  அவர்களுடன்  விளையாடுவது பைக்கில் பிடித்த இடத்திக்கு போவது  என ஒரு வாரத்தில் பண்ண வேண்டியதை வெறும் ஒரு நாளில் பன்னிருவேன்  என்று கூறுகிறார்.

கடின உழைப்பு :

இவர் ஆதி பகவான் ( Aadhi bagavan ) படத்திக்காக 12 நாட்கள் பகல் மற்றும் இரவுகள் ஓய்வு  இல்லாமல் வேலை செய்து இருக்கிறார். அதாவது காலை 9 மணிக்கு சென்று அடுத்தநாள் 5 மணி  வரைக்கும் வேலை செய்துவிட்டு

வீட்டுக்கு வர  ஒருமணி நேரம் குளிச்சி  சாப்பிட்டு விட்டு ஸ்பாட் ( spot ) போக ஒரு  மணிநேரம் திருப்பியும் அடுத்த நாள் வரை சூட். இதே மாதிரி schedule 12 நாள் வரை சென்றுள்ளது  குறிப்பிடத்தக்கது.

மகனுடன் நடித்தது:

2018 -ம் வருடம்  வெளியான டிக் டிக்  டிக் (  Tik Tik Tik  ) படத்தில்  இவர் மகன் ஆரவுடன்  ( Aarav ) நடித்திருந்தார். இந்த படம் அனுபவம் பற்றி இவர் சொல்லுவது “இந்த மாதிரி experience சொல்ல முடியாத அளவுக்கு மிக மகிழ்ச்சி”.

பொதுவாக  ஆரவ் ஒரு இடத்தில  இருக்க மாட்டான்  அங்க இங்கனு ஓடிட்டே தான் இருப்பான்  ஆன ஷூட்டிங் ஸ்பாட்ல சமத்தா ஒரு chair-ல உக்காந்துட்டு அங்க நடக்கறதுல பாத்துட்டே இருந்தான்.

எப்போ நம்ம  scene  வரும்னு பொறுமையா பாத்துட்டு  இருந்தான்  யார் நடிச்சாலும் மானிட்டர் சென்று பார்ப்பான்.

ஒரு காட்சியில் நான் வசனம் பேசி முடித்துவிட்டு வரேன் “நீங்க ஒரு dialogue விட்டுடீங்கனு கரெக்டா நோட் பண்ணி  சொல்றான்”  எனக்கு வியப்பாக இருந்தது.

மேலும், இது எனக்கு  ரொம்ப மகிழ்ச்சியாக  இருந்தது  வார்தையில் விவரிக்க முடியவில்லை என   நெகிழ்கிறார்.

யார் உங்களை அதிகமாக திட்டுறாங்களோ அவங்கள கூட வெச்சுக்கோங்க, பாராட்டுறவங்க வேண்டாம்.  திட்டுறவங்க எதுக்கு திட்றாங்க என்ன குறை சொல்றாங்க பாத்து நடந்த போதும் ஒரு காலகட்டத்துல அவங்களே பரவலயே என சொல்லுவாங்க – ரவி

Jayam Ravi Movies, Wife, Wiki, Son, Father, Brother, Height, Upcoming Movie, Born, Dob, Aarav, Ayaan,  Salary, Wiki, Baby, Biography, Age, Photo, Images

ஆதரவு:

மனைவியின் ஆதரவு ஒவ்வொரு ஆண் மகனுக்கும்  ரொம்பவே முக்கியம். அது இல்லை என்றால் அவர்கள் பணி புரியும் துறையில் சரிவர உழைக்க  முடியாது என்பதை மறுக்க முடியாது.

இப்படி இருக்கும் போது இவர் தன் மனைவி  ( jayam ravi wife ) பற்றி சொல்லுவது “குழந்தைகளை பார்த்து கொள்ளுவது, வீட்டில் அவ்வளவு வேலைகளை செய்வது மட்டும்  இல்லாமல் எனக்காக சில வேலைகளை அக்கறையாக செய்வார் ஆர்த்தி” ( Aarthi).

இவருடைய சோசியல் மீடியா ( social media ) பக்கங்களை handle  செய்வதும் ஆர்த்தி தானாம் இதைதாண்டி accounts எல்லாம் இவர் மனைவி தான் பார்ப்பாராம்.

வில்லன்:

இவரின் திரை துறையில் மறக்கவே முடியாத படம் “தனி ஒருவன்” இப்படத்தில் இவருக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள்  அதிகமானதோ அதே அளவுக்கு அரவிந் சாமி அவர்களுக்கும் மிக பெரிய  திருப்புமுனையாக இப்படம் அமைந்தது .

ஆனால் இதில் சுவாரசிஸ்யாமான உண்மை என்னாவென்றால் தனி ஒருவனில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ராணா  அவர்களை கேட்டு உள்ளனர்.

பின், மாதவன் அவர்களை நடிக்க அணுகி உள்ளனர் ஆனால் எதுவும்  கைகூடவில்லை பிறகு தான் அரவிந் சாமியிடம் பேசி உள்ளனர்.

அவருக்கு அந்த வில்லன் கதாபாத்திரமான  சித்தார்த் அபிமன்யூ (  Siddharth Abimanyu )  மிகவும் பிடித்துபோக  உடனடியாக நடிக்க  ஒத்துக்கிட்டார்.

பின்பு, படம் வெளியாகி மிக பெரிய வெற்றி படம்  ஆனது நாம் அனைவரும் அறிந்ததே.

விருதுகள்:

இவர் வாங்கிய விருதுகளின் பட்டியலை பார்ப்போம். 2004 -ல் M. குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி ( M. Kumaran Son Of Mahalakshmi ) படத்திக்காக தமிழ்நாடு அரசிடம் இருந்து “மாநில விருது” (  state award ) வாங்கினார்.

‘பேராண்மை’ படத்திக்காக “சிறந்த நடிகர்” விருதினை “Filmfare” &”விஜய் டிவி” மற்றும் “எடிசன் விருது” என மொத்தம் மூன்று விருதுகளை பெற்றார்.

“தனி ஒருவன்” படத்திக்காக Filmfare மற்றும் SIIMA போன்ற விருதுகள்  தேடி வந்தன. இந்த இரண்டு விருதுகளை தாண்டி IIFA Utsavam மற்றும் எடிசன் விருதுகளும்  தனி ஒருவன் படத்திக்காக கிடைத்தது.

பிரசாந்த் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள்!

விகடன் விருது:

2015-ல் வெளிவந்த “பூலோகம்” படத்திக்காக இவருக்கு  விகடன் விருது ( சிறந்த நடிகர் ) கிடைத்தது.

lawrence master - ஜெயம் ரவி
lawrence master
SIIMA:

2018-ல் வந்த “அடங்க மறு” (  adanga maru ) படத்திக்காக SIIMA விருது வென்றார்.

மேலே, நாம்  குறிப்பிட்ட விருதுகளை  தாண்டி பல விருதுகளுக்கான பட்டியலில் அவர்  நாமினேட் ஆகி உள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன்:

Ponniyin Selvan 1:

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா மற்றும்  ஐஸ்வர்யா ராய்  என  பெரிய பெரிய  சினிமா நட்சத்திரங்கள் நடிப்பில் மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள படம்  தான் பொன்னியின் செல்வன் ( Ponniyin Selvan ).

இரண்டு பாகங்களாக இப்படமானது வெளியாகும்  என சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவின் பான் இந்திய  படமாக இந்த படம்  வலம் வர வேண்டும்  என தமிழ்  சினிமா ரசிகர்கள்  காத்து கிடக்கின்றனர்.

இப்படத்தில் அருள்மொழிவர்மன் ( Arulmozhivarman ) என்ற  கதாபாத்திரத்தில் தான் ஜெயம்ரவி நடித்திருக்கிறார்.

2022 -ல் இறுதிக்குல் இந்த படம் வரும் என்று அறிவித்திருந்தனர. தனி ஒருவனுக்கு பின் இவருக்கு இந்த பொன்னியின் செல்வன் – Ponniyin Selvan படமானது பேசும் படமாக அமையும் என ரசிகர்கள் நம்புகிறார்கள்.

இந்த Article படிக்கும் உங்களுக்கு ஜெயம் ரவி நடித்ததில்  மிகவும் பிடித்த படம் எது  என்பதை  கமெண்ட் ( Comment ) செய்யவும், நமது இணையதளத்தை bookmark செய்து வைத்துக்கொள்ளுங்கள்…

7 thoughts on “Jayam Ravi Movies, Wife, Wiki, Son, Father, Brother,  Height, Upcoming Movie, Born, Dob, Aarav, Ayaan,  Salary, Wiki, Baby, Biography, Age, Photos, Images

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube