Cinema

Actor Jeeva Real Name, Movie, Family, Son, Father, New, Jiiva, Instagram, Brother Name, Wife, Salary, Wiki, Baby, Biography, Mother, Age, Photos, Images

Actor Jeeva Real Name, Movie, Family, Son, Father, New, Jiiva, Instagram, Brother Name, Wife, Salary, Wiki, Baby, Biography, Mother, Age, Photos, Images

தனது இயல்பான நடிப்பாலும் காமெடி பேச்சாலும் பல லட்சம் பேரை கவர்ந்த நடிகர் தான் நடிகர் ஜீவா. இவரின் திரை  வாழ்க்கை மற்றும் நிஜ வாழ்க்கை என அனைத்தும் இந்த பதிவில் பார்ப்போம்.

முழுமையாக படித்துவிட்டு உங்களது கருத்துக்களை  கமெண்ட் செய்யவும் அது எங்கள் இணையதளத்தின் தரத்தை உயர்த்த மிக உதவியாக இருக்கும்.

ஆரம்பவாழ்க்கை:

1984 வருடம் ஜனவரி மாதம் 4-ம் தேதி ஜீவா அவர்கள் சென்னையில் பிறந்திருக்கிறார். அமர் சோவுடரி  ( Amar Choudary ) என்பதே இவரின் உண்மையான பெயர்.

சினிமாவுக்காக தனது பெயரை ஜீவா ( jeeva ) என்று மாற்றி உள்ளார். இவரின்  அப்பா பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி ஆவார்.

படிப்பு:

இவர் சென்னையில் உள்ள ஆதர்ஷ் சீனியர் பள்ளியில் (   adarsh senior secondary school ) படித்துள்ளார். இதுக்கடுத்து கல்லூரியில் multimedia graphics எடுத்து படித்திரிக்கிறார்.

மனைவி

நடிகர் ஜீவாவின்  மனைவியின் பெயர் சுப்ரியா ( Supriya )  ஆகும். 2007-ல் இவர்களது திருமணமானது  நடைபெற்றது. இவருக்கு தற்போது ஒரு மகன் உள்ளார் அவர் பெயர் ஸ்பர்சா ( Sparsha ).

நடிகர் ஜீவா
jeeva wife & son
முதல்படம்:

2003-ல் வெளிவந்த “ஆசை ஆசையாய்” என்ற படம்  தான் இவரின் முதல் படம் ஆகும். இந்த படத்தில் வினோத் ( vinoth ) என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பின்பு, அதே வருடம்  தித்திக்குதே ( thithikuthea ) படத்தில் நடித்திருந்தார். இந்த படம் நன்கு  வெற்றி அடைந்து பலரிடம் கவனத்தை ஈர்க்கும் நடிகனாய் மாறினார்.

2004:

மேலே குறிப்பிட்ட படங்களுக்கு பிறகு    ஒரு  வருடம் எந்த படங்களிலும் நடிகர் ஜீவா (actor jeeva ) நடிக்கவில்லை.

இதன்பின், 2005-ல் “ராம்” படத்தில் நடித்தது மூலம் கவனம் ஈர்த்தார். இப்படத்தில் ராமா கிருஷ்ணா ( Rama Krishna ) என்ற ரோலில் மிக  அருமையாக நடித்திருந்தார்.         

மலையாளம்:

இவர் நடித்த முதல் மலையாள படம் “கீர்த்தி சக்ரா” இதில் ஹவில்டர் ஜெயகுமார்  ரோலில் ( Havildar Jaikumar )                நடித்து  இருந்தார்.

இப்படத்திக்காக Asianet இடமிருந்து Best Star Pair Award இவருக்கு கிடைத்தது என்பது மேலும் சிறப்பு.

அடுத்தப்படங்கள்:

இதன்பின்,  “ஈ” என்ற  படத்தில் ஈஸ்வரன் என்ற கதாபாத்திரத்தில்  நடித்தார் பின் இவர் நடித்த படங்களின்  பட்டியலை கீழே பார்ப்போம்.

2007  பொறி ( ஹரி )
2008 கற்றது தமிழ் ( பிரபாகர் )
2009  சிவா மனுசுல சக்தி ( சிவா )
2010 பாஸ் என்கிற பாஸ்கரன் ( சிவா )
2011 கோ ( அஷ்வின் )
2011 ரௌத்திரம் ( சிவா )
2011 வந்தான் வென்றான் ( அர்ஜுன் )
2012 நண்பன் ( செவர்குடி செந்தில் )
2012 நீதானே என் பொன் வசந்தம் ( வருண் )
2013 என்றென்றும் புன்னகை ( கௌதமம் )
2014 யான் ( சந்திரசேகர் )
2016 போக்கிரி ராஜா ( சஞ்சீவி )
2016  திருநாள் ( பிளேடு கணேஷ் )
2016 கடவுள் இருக்கான் குமாரு ( கார்த்திக் )
2017 சங்கிலி புங்கிலி கதவை திற ( வாசு )
2018 தமிழ் படம் ( அவராகவே )
2018 கலகலப்பு 2 ( ஸ்ரீனிவாஸ் )
2019  கொரில்லா ( ஜீவ )
2020 ஜிப்ஷி ( ஜிப்ஷி )
2020 சீறு ( மணிமாறன் )
2021  களத்தில் சந்திப்போம் ( அசோக் )
2021  83 ( கிரிஸ் ஸ்ரீகாந்த் )

மேலே குறிப்பிட்ட படங்களில் 2007 லிருந்து 2021 வரை  நடித்திருக்கார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Jeeva Real Name, Movie, Family, Son, Father, New, Jiiva, Instagram, Brother Name, Wife, Salary, Wiki, Baby, Biography, Mother, Age, Photos, Images

வர போகும் படங்கள்:

இவர் நடித்து  அல்லது நடித்துக்கொண்டிருக்கும் சில படங்களை கீழே  காணலாம்.

  • கோல்மால்
  • வரலாறு முக்கியம்
  • மேதாவி 

இந்த மூன்று படங்கள் தாண்டி சுந்தர் சியின் பெயரிடாத படத்தில்  ண்ணடித்து வருகிறார் என்பது  குறிப்பிடத்தக்கது.

விருது:

2012 ல் நீதானே எந்தன் பொன் வசந்தம் படத்திக்காக ( வருண் கதாபாத்திரத்திக்காக )  சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது ( Award  ) கிடைத்தது.

2006-ல் கீர்த்தி சக்ரா ( Keerthi Chakra ) என்ற மலையாளம் படத்திக்காக Asianet Best Star Pair Award என்ற விருது கோபிகாவுடன் இவருக்கு கிடைத்தது.

இது இல்லாமல் 2007 ல் விஜய் விருது ( vijay awards ) கற்றது தமிழ் படத்தில் பிரபாகர் ( Prabhakar ) ரோலில் நடித்ததுக்காக நாமினேட் ஆனார்.

நாசர்:

நடிகர் நாசர், ஜீவா நடிக்க வந்த புதிதில் “Producer மகன் என்றால் நடிக்க வந்திருவீங்களா எதுக்காக நடிகன் ஆகணும் என்று கேட்டாராம். அதுக்கான பதில் இப்போது வரை என்னிடம் இல்லை என ஒரு மேடையில் ஜீவாவே குறிப்பிட்டுள்ளார்.

Actor jeeva movie, wife , family
Actor jeeva movie
பிடிக்காத விஷயம்:

மீடியாவில்  இவருக்கு பிடிக்காத விஷயம் என்றால் “சிலர் பேட்டி எடுக்கும் போது 20 வயது கல்யாணம்  ஆகாத நபர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகளை என்னிடம் கேட்பாங்க அதுக்கு நான் எப்படி பதில் கூற முடியும்”

குடும்பம் பார்க்கும் மீடியா தளத்தில் அந்த மாதிரி பேசுவது சரியல்ல என்று கூறி இருந்தார்.

இதையும் படிங்க: ஜெயம் ரவி பற்றி பலரும் அறியாதவை!

Action ஹீரோ:

இவருக்கு  ( actor jeeva ) மிகவும் பிடித்த ஆக்ஷன் ஹீரோ என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தானாம். அவரை தாண்டி தளபதி விஜய் மற்றும் தல அஜித் போன்றவர்கள்  பிடிக்கும்  என  குறிப்பிடுகிறார்.

Multi Star:

இவர் நிறைய படங்களில் மத்த நடிகர்களுடன் இணைந்து நடிப்பார் உதாரணத்துக்கு நண்பன், கலகலப்பு 2 மற்றும் என்றென்றும் புன்னகை போன்ற படங்களை (   Multi Star movie ) கூறலாம்.

இப்படி நடிப்பதுக்கும் சோலோ ஹீரோவாக நடிப்பதையும் பற்றி இவர் சொல்லுவது, சோலோ ஹீரோவாக நடிக்கும் போது மொத்த படத்தையும் நாம் நமது தோளில் சுமந்து போற மாதிரி.

ஆனால் மற்ற நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் போது ( Multi Star movie ) ஒரு fun  இருக்கும் மொத்த சுமையும் நம் மேலே இருக்காது என்கிறார்.

நடித்ததில்  பாதிப்பு:

இவர் நடித்த படங்களில் இவருக்குள் பாதிப்பு ஏற்படுத்திய படம் என்று இவர் கூறுவது  “கற்றது தமிழ்” ( Katradhu Tamizh   ) படம் தானாம். படம்  நடித்து முடிந்தும் இவருக்குள் மிகப்பெரிய பாதிப்பை இப்படம் ஏற்படுத்தியதாம்.

அதன் காரணமாய் இவருக்கு  “கற்றது தமிழ்” அனுபவம் என்றுமே ஸ்பெஷல் என்கிறார்.

பட தேர்வு:

சில படங்களை நாம்  தேர்வு செய்யும் போதே தெரிந்துவிடும் இது அந்த குறிப்பிட்ட Audience க்கு மட்டும்  தான் பிடிக்கும் என்றும் உதாரணத்துக்கு தற்போது உள்ள இளம் ஜோடி காதல் கதையை மையமாக கொண்டு படம் எடுத்துவிட்டு

அந்த படத்தை வயதானவர்களிடம் (  தாத்தா பாட்டி போன்றவர்கள் ) போன்றவர்களிடம் போட்டு காட்டினால் கண்டிப்பாக அவர்களுக்கு பிடிக்காது   கலாச்சார மாற்றமாக தான் அவர்களுக்கு  தோன்றும் பிடிக்காது.

அதனால் பட தேர்வு செய்யும் போதே அதற்கு என்று உள்ள Audience தான் நான் பார்ப்பேன் என்று வெளிப்படையாக கூறுகிறார்.

ஜீவா அவர்கள் நடித்ததில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது என்பதை கீழே கமெண்ட் செய்யவும்…

6 thoughts on “Actor Jeeva Real Name, Movie, Family, Son, Father, New, Jiiva, Instagram, Brother Name, Wife, Salary, Wiki, Baby, Biography, Mother, Age, Photos, Images

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube