Cinema

Actor Prashanth , Wife, Second Wife, Father, Age, Family, Marriage, Daughter, Height, Dob, Next Movie, Salary, Wiki, Biography, Real Name, Photos, Images

Actor Prashanth , Wife, Second Wife, Father, Age, Family, Marriage, Daughter, Height, Dob, Next Movie, Salary, Wiki, Biography, Real Name, Photos, Images all information are mentioned below.

90’s  ல் உச்சத்தில் இருந்த முக்கியமான நடிகர் தான் பிரஷாந்த் இவரை பற்றி பல சுவாரஸ்யமான தகவலை இந்த பதிவில் பார்ப்போம்.

பிறந்தது வளர்ந்தது:

இவரின் முழு பெயர் பிரஷாந்த் தியாகராஜன், ஏப்ரல் மாதம் 6 ம் தேதி 1973 ல் இவர் பிறந்தார்.    இவரின் சொந்த ஊரானது சென்னை தான் இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாம் இங்கே தான்.

படிப்பு:

பிரசாந்த் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மற்றும் மல்டிமீடியா படிப்பு  ( Computer Graphics and Multimedia ) படித்துள்ளார்.

பள்ளி படிப்பை முடித்ததும் டாக்டர் ஆக வேண்டும் என்பது தான் இவரின் ஆசையாக இருந்துள்ளது. இதற்காக இரண்டு மருத்துவ கல்லூரியிலும்  படித்து இருக்கிறார்.

பின்,  இவரின் தந்தையான தியாகராஜன் அவர்களை பார்த்து தானும் சினிமாவில் நடிக்க வேண்டும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இவருக்கும் உருவானது.

prashanth movie old
prashanth movie old

முதல் அனுபவம்:

“வைகாசி பொறந்தாச்சு” படம் மூலம் தான் இவர் தமிழ் சினிமாக்குள் அறிமுகமானார். இப்படமானது 1990 ல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் நடித்து ஓரளவுக்கு மக்களிடம் சென்றவுடன் பட வாய்ப்பு குவியும் என்று எதிர் பார்த்தார் ஆனால் அதே வருடத்தில் இவருக்கு மேலும் ஒரு படவாய்ய்பு கூடா வரவில்லை .

அடுத்த படங்கள்:

மனம் தளராமல் முயற்ச்சி செய்த இவருக்கு படங்கள் வர தொடங்கியது.1992 ல் தான் இவருக்கு அடுத்த தமிழ் படமான “செம்பருத்தி “ -ல் நடிக்க வாய்ப்பு வந்தது.

RK செல்வமணி எழுதி இயக்கிய இப்படத்தில் நடிகை ரோஜாவுக்கு ஜோடியாக பிரஷாந்த் நடித்திருந்தார்.

தொடர் வாய்ப்புகள்:

prashanth movie:

“எங்க தம்பி” மற்றும் “திருட திருட” போன்ற படங்களில் 1993 ல் நடித்தார் பின் அடுக்கடுக்காக இவர் நடித்த படங்களின் பட்டியலை கீழே பார்க்கலாம். 

 • கிழக்கே வரும் பாட்டு
 • கண்மணி
 • ஆணழகன்
 • கல்லூரி வாசல்
 • கிருஷ்ணா
 • ஜீன்ஸ்
 • பூமகள் ஊர்வலம்
 • ஜோடி
 • ஆசையில் ஒரு கடிதம் 
 • அப்பு
 • பார்த்தேன் ரசித்தேன்
 • குட் லக்

மேலே குறிப்பிட்டுள்ள, படங்களில் தான் 90’s – 2000 வரை பிரஷாந்த் நடித்தார்.

ஜீன்ஸ் ( jeans ), ஜோடி ( jodi ) அப்பு ( appu ) போன்ற  படங்களில் இவரின் நடிப்புக்கு  பெரும்   வரவேட்பு கிடைத்தது.

2000 க்கு பின்:

சரி, இவர் நடித்து 2000 ஆம் ஆண்டுக்கு பின் வெளிவந்து வெற்றி அடைந்த படங்களின் ( prashanth movie ) தொகுப்பை பார்ப்போம்.

 • சாக்லேட்
 • வின்னர் 
 • ஷாக்
 • மஜுன்னு
 • அடைக்கலம்
 • மம்பட்டியான்

மேலே, குறிப்பிட்ட படங்கள்  2000 – 2021 வரை இவர் நடித்த படங்களில் சில என்பது குறிப்பிடத்தக்கது.

2022:

இந்த ஆண்டு   அதாவது  2022 ல்  “அந்தகன்” படத்தில் பிரசாந்த் (prashanth movie ) நடித்து வருகிறார்.  இப்படம் இவர் அப்பா தியாகராஜன்  இயக்கி  தயாரித்து வெளியிடுகிறார்.

பிரசாந்த் படம்
பிரசாந்த்

சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி மற்றும் யோகி பாபு போன்ற பல சினிமா பிரபலங்கள்  இப்படத்தில் நடிக்கின்றனர்.

2018 ல் வெளியாகி வெற்றி பெற்ற Andhadhun என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் தான் “அந்தகன்”. இப்படமானது பிரஷாந்துக்கு மீண்டும் தமிழ் சினிமாவில் நல்ல என்ட்ரி ஆக இருக்கும் என  நம்பப்படுகிறது.

Actor Prashanth , Wife, Second Wife, Father, Age, Family, Marriage, Daughter, Height, Dob, Next Movie, Salary, Wiki, Biography, Real Name, Photos, Images

ஆரம்பத்தில் நடிப்பு:

இவரின் ஆரம்ப படங்களில் நடக்கும் வகையில் காட்சி   எடுக்கும் போது வேகமாய் நடந்து வருவாராம் அதை பார்த்து இயக்குனர் ரஜினி மாதிரி  வேகமாய் வேண்டாம் என்று சொல்லுவாங்கலாம்.

பின், டக்குனு திரும்பும் படி சொல்லும்போது வேகமாய் திரும்பினாராம் அப்போதும் இயக்குனர் ரஜினி மாதிரி வேகமாய் வேண்டாம் என்று சொன்னார்களாம்.

அப்புறம்  தான் இவர் நாம் செய்வதை மற்ற நடிகர்களுடன் ஒப்பிட்டு மக்கள் பார்ப்பார்கள் அதனால்  தனக்கு என்று தனித்துவம் உருவாக்க வேண்டும் என எண்ணி உள்ளார்.

மே 1:

வழக்கமாக மே 1 வந்தால் போதும் பிரஷாந்த் மற்றும் அஜித் சேர்ந்துள்ள பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில்  பரவ ஆரம்பித்து விடும்.

அதில் இவருக்கு மட்டும்  மாலை அணிவித்து இருப்பார்கள். இப்புகைபடத்தை பதிவிட்டு “அன்று  தலை குனிந்தார் இப்போது தலை ஆனார்” என்று அஜித் ரசிகர்கள் கூறுவதுண்டு.

thala ajith vs 90's actor
prashanth movie

இதை பற்றி பிரசாந்திடம் ஒரு பேட்டியில் கேள்வி கேட்டு இருப்பார்கள், அதற்கு  அவரின் பதில் “அது என்ன Function என்று ஒன்று உள்ளது அஜித்திற்கு அந்த போட்டோ எடுத்த பின்பு கூட மாலை  அணிவித்து இருக்கலாம்” என்றார்.

மேலும், என்னை பிடித்தவர்கள் நிறைய ரசிகர்கள் இருப்பாங்க அதே மாதிரி அஜித்தை பிடித்த நபர்கள் அவரின் மீது கொண்ட அன்பினால் அப்படி சொல்கிறார்கள்.

அதை நாம் எடுத்துக்கொண்டு பேச வேண்டிய அவசியமே இல்லை என்கிறார்.

விக்ரம்:

பலருக்கும் தெரியாத ஒன்று நடிகர் விக்ரம் ( vikram ) பிரசாந்தின் உறவினர் ( cousin) என்று, ஆம் உண்மைதான் இதை அவரே பேட்டில் சொல்லி இருக்கிறார்.

விக்ரமின் ஆரம்பகாலத்தில் சினிமாவில் நீங்க உதவி செய்யவில்லை என்று ஒரு வதந்தி உள்ளது இதை எப்படி பார்க்கிறீர்கள் என்றதுக்கு, வதந்தி இதுபோல் ஏகப்பட்டது உள்ளது.

அதை, எடுத்து நாம் பேசினால் நேரம் தான் வீணாகும் என்று நெத்தியடியாக பதில் சொன்னார்.

தற்போதைய சினிமா:

90’s  ல் இருந்த சினிமாவிட்கும் இப்போது உள்ள சினிமாவிக்கும் கேமரா அப்டேட் நன்றாக உள்ளது. மொபைல் இருந்தால் போதும் படம் எடுப்பது ஈஸியாக உள்ளது. Youtube வாலிபர்கள் இப்போது அப்படித்தான வீடியோ குறும்படங்கள் எல்லாம் எடுக்கிறார்கள்.

அப்போது அப்படி இல்லை, ஒரு படம் இப்போது உள்ள மாதிரி எளிதில் எடுத்திற முடியாது வசதிகள் போதிய அளவில் இல்லை.

தேர்ந்தெடுப்பது:

இவர் தன்னிடம் ஒரு கதை வருகிறது என்றால் இரண்டு விஷயங்களை பார்ப்பாராம்.

 • மக்கள் இந்த கதையை ஏற்கனவே பார்த்து உள்ளார்களா? கேட்டு உள்ளார்களா?
 • கதைக்களம் தனித்துவம் வாய்ந்ததாக உள்ளதா?

மேலே, குறிப்பிட்ட இந்த இரண்டு விஷயங்களை தான் இவர் கவனித்து ஒவ்வொரு படத்தையும் தேர்வு  செய்வாராம்.

உதாரணத்திற்க்கு, “ஷாக்” என்ற படம் வந்தது அப்படம் வரும்முன் 20 வருடங்களுக்கு அந்த மாதிரி ஒரு ஹார்ரர் படம் வராவே இல்லை.

அதே போன்று “வரலாற்று” தொடர்புடைய படம் நடிக்கிரார் என்றால் அப்போது அந்த மாதிரி படங்களை யாரும் நடித்திருக்க மாட்டார்கள் இப்படி யாரும் அப்போது தொடாத கதைகளையே  தேர்வு செய்து நடித்து வந்துள்ளார்.

மனைவி :

2005 ல் இவருக்கும் கிரகலட்சுமி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இதுக்கடுத்த ஆண்டே இந்த தம்பதிகளுக்கு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது.

prashanth movie - wife - biography - unknown facts
prashanth wife

குழந்தை பிறந்தபின், சில மாதங்களில் இவர்களுக்குள் சில கருத்து வேறுபாடு சண்டை போன்றவற்றை தொடங்கியது.

இதற்க்கு முக்கிய காரணம் இவரின் மனைவி முதல் கல்யாணத்தை மறைத்து ஏமாற்றி தன்னை கல்யாணம் செய்து கொண்டார் என்று வழக்கை தொடந்தார்.

தீர்ப்பு:

இந்த வழக்கில்  நீதி மன்றம் முதல் கல்யாணத்தை மறைத்ததால்  இருவருக்கும் விவாகரத்து வழங்கி அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.

இதையும் படிங்க: சிம்ரன் பற்றி இந்த விஷயங்கள் தெரியுமா? பலரும் அறியாதவை

வீட்டில் விபரீதம்:

சமீபத்தில் இவரின் முன்னாள் மனைவி வீட்டில் திருடர்கள் புகுந்து 150 க்கும் மேற்பட்ட சவரன்களை திருடிவிட்டு சென்றது பெரிதும் பேசப்பட்டது.

இரண்டாவது திருமணம் :

கடந்த சில  நாட்களாக பிரசாந்த் இரண்டாவது திருமணம் செய்ய இருக்கிறார் என்று செய்தி வெளியாகிய வண்ணம் உள்ளது. இன்னும் சில மாதங்களில் இவரது கல்யாணத்தை எதிர் பார்க்கலாம் என்று செய்தி வந்தது.

குறிப்பு: இந்த தகவல் நம்ப தகுந்த வட்டாரங்களில் வெளிவந்தவை இரண்டாவது கல்யாணம் பற்றி பிரஷாந்த் ஏதும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் அஜித்:

தற்போது தளபதி விஜய் மற்றும் தலை அஜித்க்கு இணையாக சினிமாவில் கலக்க வேண்டிய இவர்,

மனைவியுடன்  பிரச்சனை மற்றும்  விவாகரத்து போன்ற சில சர்ச்சைகளில் சிக்கியதால் சினிமாவில் சரியான இடத்தை இழந்துவிட்டார்  என்று சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது.

அன்று VS இன்று:

ஒரு பேட்டியில் இவரிடம் கேட்டிருப்பாங்க 2000  ல் “அடுத்த சூப்பர் ஸ்டார்” யார் என்ற லிஸ்டில் உங்க பெயர் விஜய் மற்றும்   அஜித் பெயர்கள் வருகிறது.

இதில் நீங்கள் நிறைய தடவை No.1 இடத்தை பிடித்து இருக்கீங்க. ஆனால் இப்பொது அதை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்க,

அந்த No 1 கேம் ( Game ) லாம் அப்போதாங்க அப்போது ஒரு படம் 365 நாட்களை கடந்து கூட போகும் ஸ்பெஷல் விருது வெல்லும்.

ஆனால் இப்போதோ ஒரு படம் ஒரு வாரம் ஓடி மக்கள் கூட்டம் நன்றாக வந்தால் போதும் அந்தப்படம் வெற்றி.

இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓடினாலே மிக ஆச்சர்யம் தான்.

இப்படி இருக்கையில் No கேம் இப்போது சினிமாவில் இல்லை.  நல்ல கதை உள்ள படங்கள் வந்தால் கண்டிப்பாக  வெற்றி பெறும் மக்கள்  ஆதரவும் கிடைக்கும் என்கிறார்.

பிரசாந்த் movie look upcoming - cinema news in tamil
prashanth movie look
சமீப படம் :           

சமீபத்தில் வந்து வெற்றியடைந்த படங்களில் ப்ரஷாந்துக்கு பிடித்தது  விஷ்ணு விஷால் நடித்த FIR படம் தானாம்.  இந்த படத்தின் கதைக்களம் ரொம்ப பிடித்ததாக தெரிவித்துள்ளார்.

சம்பளம்:

முன்னால் வெளிவந்த இவரின் படங்களுக்காக இவர் லட்சங்களில் சம்பளம் வாங்கி வந்தார். இப்போது நடிக்கும் படங்களுக்கு  2 கோடி முதல் 5 கோடி வரை  இவர் சம்பளமாக பெறுகிறாராம்.

இவரின் மொத்த சொத்து மதிப்பு 15 கோடி முதல் 30 கோடி வரை என்று சொல்லப்படுகிறது. இது அதிகாரபூர்வ தகவல் இல்லை என்பதை கருத்தில் கொள்வோம்.

விருது:

தமிழ் சினிமாவில் இவரின் மிக சிறப்பான பங்களிப்பை தந்ததற்காக கலைமாமணி ( Kalaimamani Award ) விருது இவருக்கு 1998 ல் வழங்கப்பட்டது.

1998 – கலைமாமணி ( Kalaimamani Award )

ஏ ஆர் ரகுமான்:

ஜோடி, திருடா  திருடா, மற்றும் ஜீன்ஸ் போன்ற பல  பிரசாந்தின் படங்களுக்கு  ஏ ஆர் ரகுமான் ( ar rahman ) இசையமைத்துள்ளார். இவர்களுக்குள் இருக்கும் இந்த இணைப்பு கெமிஸ்ட்ரி பற்றி இவர்  சொல்லுவது

“படத்தின்  சூழ்நிலைகளை இயக்குனர்  ஏ ஆர் ரகுமானுக்கு  ( AR Rahman ) தெளிவாக சொல்லிருவாங்க அவரும் சூப்பரான நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்த கூடிய வகையில் இசையை கொடுத்து விடுவார்”

இதை  நான் இயக்குனர் மற்றும் AR Rahman ன் team  work காக தான் பார்க்கிறேன். அத்தோடு ஏ ஆர் ரகுமான் கடுமையாக உழைக்க கூடிய நபர் அப்போதும் இப்போதும் அதை கடைபிடிக்கிறார் என்றார்.

புது புது டோன் tone அறிமுகப் படுத்தியதும் இவர் தான் – பிரசாந்த்

பாசம்:

மக்கள் இவர் மீது காட்டும் பாசத்தை இவர் எப்படி பார்க்கிறார்?

நான் மக்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது கூட சும்மா நல்லாருக்கிங்களா என்று மக்களிடம் கேட்டுவிட்டு போகாமல் அவர்களிடம் நன்றாக கலந்துரையாடி அவர்களை entertaiment செய்ய வேண்டும் என்பதே ஆசை.

என்னக்கு ரசிகர்களிடம் இருந்து நிறைய கடிதங்கள் வரும் அதில் அவர்கள் காட்டும்  அன்புக்கு ஈடு இணையே இல்லை என்று  கூறுகிறார்.

இந்த பதிவை வாசித்து கொண்டிருக்கும் உங்களுக்கு  பிரசாந்த்  நடித்ததில் மிகவும்  பிடித்த படம் எது என்பதை கீழே கமெண்ட் ( comment ) செய்யவும் நமது  இணையதளத்தை புக்மார்க்ஸ் செய்து வைத்து கொள்ளுங்கள்  நன்றி….

9 thoughts on “Actor Prashanth , Wife, Second Wife, Father, Age, Family, Marriage, Daughter, Height, Dob, Next Movie, Salary, Wiki, Biography, Real Name, Photos, Images

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube