Actress Simran Height, Husband Name, Native Place, Latest News, Age, Family, Marriage, Dob, Son, Next Movie, Salary, Wiki, Biography, Real Name, Photos, Images
Actress Simran Family, Height, Husband Name, Native Place, Latest News, Age, Marriage, Dob, Son, Next Movie, Salary, Wiki, Biography, Real Name, Photos, Images
90’s ல் அறிமுகமாகி தற்போது வரை சினிமாவில் கலக்கி கொண்டுவரும் நடிகை தான் சிம்ரன். அவரை பற்றி பல சுவாரஸ்ய உண்மையான தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம்.
பிறந்தது வளர்ந்தது:
ரிஷிபாலா நாவல் ( Rishibala Naval ) என்பது தான் சிம்ரனின் உண்மையான பெயர், 4 ம் தேதி ஏப்ரல் மாதம் 1976 ஆண்டு பம்பாயில் உள்ள மகாராஷ்டிராவில் பிறந்து இருக்கிறார்.
சிம்ரன் குடும்பம்:
simran family:
சிம்ரனின் அப்பா பெயர் அசோக் நாவல், தாயின் பெயர் ஷர்தா நாவல். இவரின் ( simran family ) பிறந்தவர்கள் மூன்று பேர்.
ஒரு தம்பியும் இரண்டு தங்கச்சியும் உள்ளனர். தங்கச்சியின் பெயர் மோனல் ( monal ) & இன்னொரு தங்கச்சியின் பெயர் ஜோதி ஆனந்த் ( Jyothi Anand ) மற்றும் தம்பியின் பெயர் சுமீத் ( sumit ) ஆகும்.
படிப்பு:
இவர் மும்பையில் உள்ள St. Anthony’s high school பள்ளியில் படித்துவிட்டு அங்கேயே ஒரு தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

பள்ளி மற்றும் கல்லுரியில் படிக்கும் போதே நிகழும் நடனம் மற்றும் ட்ராமா போன்றவைகளில் அதீத ஆர்வம் கொண்டவர். அதன் காரணமாய் ஒரு நிகழ்ச்சி பள்ளி கல்லூரியில் வந்தால் கண்டிப்பாக சிம்ரன் பெயர் அதில் இருக்குமாம்.
பெயர் அர்த்தம்:
நம்மில் பலரும் “சிம்ரன்” என்ற இவருடைய பெயரின் அர்த்தம் என்னவென்று யோசித்திருப்போம், ஆனால் பலருக்கும் பெயரின் அர்த்தம் தெரியாது. சிம்ரன் ( simran ) என்றால் “தியானம்” என்று அர்த்தமாம்.
ஒரு பேட்டியில் அவரே இதை பற்றி சொல்லிருந்தார். “வடக்கு இந்தியாவில் ( north india ) இந்த பெயர் பிரபலம் ஆனால் தமிழ்நாட்டில் இந்த பெயர் புதுசு தான்” என்று குறிப்பிடுகிறார்.
சினிமா வாய்ப்பு:
படித்து முடித்ததுமே இவர் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து நடிக்க ஆரம்பித்துவிட்டார். 1997 ல் வந்த வி ஐ பி
( VIP ) என்ற படம் மூலமாக தான் இவர் தமிழ் சினிமாவில் கால்பதித்தார்.
இந்த படத்தில் பிரபு தேவா, ரம்பா மற்றும் அப்பாஸ் உடன் இவர் இணைந்து நடித்திருந்தார். இதுக்கு அடுத்த படமே தளபதி விஜயுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆம், ஒன்ஸ் மோர் ( once more ) என்ற படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்திருந்தார். இப்படத்தில் சிவாஜி அவர்களும் நடித்திருந்தது கூடுதல் சிறப்பு.
இரண்டாவது படத்திலேயே விஜய் மற்றும் சிவாஜி என பிரபலங்களுடன் நடித்தார்.
படங்கள்:
அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து குவிந்தன அப்படி 90’s ல் வந்த இவரின் படங்களின் தொகுப்பை கீழே பாப்போம்.
- நேருக்கு நேர்
- அவள் வருவாளா
- நட்புக்காக
- கொண்டாட்டம்
- துள்ளாத மனமும் துள்ளும்
- வாலி
- கனவே கலையாதே
- ஜோடி
- உன்னை கொடு என்னை தருவேன்
- ப்ரியமானவளே
- பார்த்தாலே பரவசம்
- பார்த்தேன் ரசித்தேன்
- பம்மல் கே சம்பந்தம்
- கன்னத்தில் முத்தமிட்டாள்
- பஞ்சதந்திரம்
- அரசு
- யூத்
போன்ற படங்கள் இவர் 90’s ல் நடித்த படங்கள் இதில் பெரும்பாலானவை மிகப்பெரிய வெற்றி அடைந்தைவை.
நேருக்கு நேர்:
ஒரு பேட்டியில் “நேருக்கு நேர்” படத்தில் சூர்யாவை பார்த்ததும் லவ் பண்ண ஆரம்பிச்சுடீங்க ரியல் லைப் ல எப்படி என்று கேட்டதுக்கு,
ரியல் லைஃப்லயும் எனக்கு போட்டோவில் பிடித்து நேரில் பழகிய பின்னும் பிடித்தால் லவ் பன்னிருவேன் என்று தனது இளமை பருவத்தில் சொல்லிருந்தார்.
கணவர்:
அவர் இளமை பருவத்தில் சொன்னது போலயே தீபக் ( Deepak Bagga ) என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.
இவரும் இந்திய நடிகர் தான். சினிமாவில் பிசியாக இருக்கும் போது ஒருவருக்கு ஒருவர் பிடித்துப்போக வீட்டில் சொல்லி பின் கல்யாணமும் 2003 ல் நடந்தது.

குழந்தைகள் :
இப்போது இந்த தம்பதிக்கு அழகான இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஒருவர் பெயர் அதீப் ஓடோ ( Adheep Odo ) இன்னொரு குழந்தையின் பெயர் ஆடிட் வீர் ( Aadit Veer ). simran family
* Adheep Odo
* Aadit Veer
படங்கள்:
இவர் இதுவரை55 படங்கள் தமிழில் நடித்துள்ளார். அதே மாதிரி 25 படங்கள் தெலுங்கில் நடித்துள்ளார். இது இல்லாமல் ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளத்தில் மொத்தம் 30 படங்கள் நடித்து இருக்கிறார்.
விருதுகள்:
வாலி படத்தில் பிரியா ரோலில் நடித்தற்காக 1999-ல் சினிமா எக்ஸ்பிரஸ் அவார்ட் ( Cinema Express Award ) வாங்கி இருக்கிறார். கன்னத்தில் முத்தமிட்டாள் ( Kannathil Muthamittal ) படத்தில் இந்திரா ( indra ) ரோலில் நடித்ததுக்கும் விருது கிடைத்தது.
* சினிமா எக்ஸ்பிரஸ் விருது – வாலி ( vaali )
* சினிமா எக்ஸ்பிரஸ் விருது – கன்னத்தில் முத்தமிட்டாள் ( Kannathil Muthamittal )
மாநில திரைப்பட விருது:
“துள்ளாத மனமும் துள்ளும்” படத்தில் ருக்மணி கதாபாத்திரத்தில் நடித்ததுக்கு “தமிழ்நாடு மாநில திரைப்பட விருது” பெற்றார்.

விஜய் விருது :
வாரணம் ஆயிரம் படத்தில் நடித்ததற்கு “விஜய் விருது “ ( vijay television award ) பெற்றார்.
கலைமாமணி:
2003 ல் சிம்ரானுக்கு “கலைமாமணி விருது” ( Contribution to Tamil film Field ) கிடைத்தது.
சர்வதேச தமிழ் திரைப்பட விருது:
2002 ல் வந்த “கன்னத்தில் முத்தமிட்டாள்” ( Kannathil Muthamittal ) படத்தில் நடித்ததுக்கு “சர்வதேச தமிழ் திரைப்பட விருது” கிடைத்தது.
நல்ல நல்ல கதை அம்சங்கள் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்ததின் விளைவு தான் நாம் மேலே குறிப்பிட்ட விருதுகள் சிம்ரனுக்கு கிடைக்க உறுதுணையாக இருந்தது.
பெருமை:
சிம்ரன் அவர்கள் அவரை நினைத்து பெருமை படக்கூடிய விஷியமாக சொல்வது “நான் ஈஸியாக எல்லோருடையும் பேசி connect ஆகிருவேன் அப்படி மக்களும் எனக்கும் இருக்கும் connection அருமையானது.
அதை நினைத்து தான் நான் பெருமை படுகிறேன் என்று கூறுகிறார்.
அழகின் ரகசியம்:
தன்னுடைய அழகின் ரகசியமாக சிம்ரன் சொல்வது “யோகா செய்வது, அதிகம் தண்ணீர் குடிப்பது, இரவு 8 மணிக்கு மேல் சாப்பிட மாட்டாராம்” எப்போதும் இரவு உணவை எட்டு மணிக்குள் சாப்பிட்டு விடுவாராம்.
அதேபோன்று உடற்பயிச்சி செய்வது நடனம் ஆடுவது போன்ற விசயங்களை தினமும் செய்வாராம். இதன் காரணமாக தான் இவர் இன்னும் பிட்டாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரொம்ப பிடித்தது:
இவருக்கு நடனம் ஆடுவது என்றால் மிகவும் பிடித்த விஷயம், 4வது படிக்கும் போதில் இருந்தே நடனத்தில் ஆர்வம் இருந்ததாம் அப்போதிலிருந்தே கற்றுக்கொள்ளவும் ஆரம்பித்துவிட்டார்.

பின்பு, பரதநாட்டியம் ஒரு வருடம் படித்து கற்றுகொண்டு இருக்கிறார். அதே போல் “கதக் நடனமும்” பல மாதங்கள் வகுப்பு சென்று கற்றிருக்கிறார்.
கஷ்டப்பட்டது:
சினிமாவில் இவர் பல படங்களில் நடனம் ( dance ) மிக சிறப்பாக பண்ணிருப்பார் ஆனால் இவர் கஷ்டப்பட்டு ஆடிய பாடல் என்றால் அது பிதாமகனில் வரும் இவரின் பாடல் தானாம்.
சூர்யா விக்ரம் உடன் ஆடும் போது குறிப்பாக ” அந்த கடைசி பகுதி ஒரே டேக்கில் ” எடுத்தாங்கலாம். அதனால் கஷ்டமாக இருந்தது என்கிறார்.
செலிபிரிட்டி Crush:
இவருக்கு செலிபிரிட்டி Crush என்றால் அது நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தானாம். அவர் ( ரஜினி ) செமயாக இருப்பார் அதே சமயம் உச்ச நடிகர் என்ற பந்தாவோ அல்லது நடவடிக்கையோ இருக்காது.
எளிமையின் உச்சம் என்றால் அது ரஜினிகாந்த் அதே சமயம் சிறந்த நடிகரும் கூட அவருடன் இருக்கும் போது ஒரு ஸ்பெஷல் எனர்ஜி வரும் என்கிறார்.
பயோபிக்:
உங்களுடைய பயோபிக்ல் யாரு நடிக்க வேண்டும் என்று கேட்க, என்னுடைய பயோபிக் எடுப்பதே என்னக்கு விருப்பம் இல்லை அதுமட்டும் இல்லாமல் என்னுடைய பயோபிக் ல் மசாலாவும் இருக்காது.
அதனால் என்னுடைய பயோபிக் எடுக்க வேண்டாம் என்று சொல்வேன். மேலும் பயோபிக் ( biopic ) ல் நடிப்பது தான் ரொம்ப கஷ்டம் என்று நினைக்கிறேன்.
ஆம், யாரின் biopic ம் நான் பன்னுவேனே என்பதும் கேள்விக்குறியே என்கிறார்.
நீங்க நடிச்ச படத்தில் எது இரண்டாம் பாகம் வந்தால் நல்லாருக்கும்?
வாலி, துள்ளாத மனமும் துள்ளும், கன்னத்தில் முத்தமிட்டாள் மற்றும் அரசு. அரசு படத்தில் வரும் காமெடி காட்சிகள் மிகவும் நன்றாக இருக்கும்.
அதனால் அந்த படமும் இரண்டாம் பாகம் வந்தால் நல்லாருக்கும்.
பிரியா:
சிம்ரன் இதுவரை ஏழு படங்களில் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் “பிரியா” என்பது சுவாரஸ்யமான ஒன்று தான். எந்தஎந்த படங்கள் என்றால்,
- வாலி ( vaali )
- ஐ லவ் யூ டா ( I Love You Da )
- விஐபி ( vip )
- கண்னெதிரே தோன்றினால் ( kanethire thondrinaal )
- நியூ ( new )
- ப்ரியமானவள் ( ப்ரியமானவள் )
- 12B
பிரசாந்த்:
இவர் நடிகர் பிரஷாந்த் பற்றி கூறுவது ” ஆல் ரவுண்டர், ரொம்ப ரொம்ப hard work பண்ணுவார் மற்றும் soft character என்கிறார்.
இப்போது உள்ள நடிகர்:
இவருக்கு இப்போது உள்ள இளம்நடிகர்களில் மிகவும் பிடித்தது சிம்பு மற்றும் சிவகார்த்திகேயன் தானாம். அவர்கள் நடனம் நடிப்பு என ஒவ்வொன்றுக்கும் தன்னுடைய சிறப்பான வெளிப்பாடை தருகிறார்கள்.
ரஜினிகாந்த்:
“பேட்ட” படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடன் நடித்த அனுபம் பற்றி இவர் சொல்லுவது “அவருடன் ( rajinikanth ) நடித்த பின் சினிமா வாழ்க்கை முழுமை அடைந்து உள்ளது”.

காரணம், அவருடன் சேர்ந்து திரையில் தோன்ற வேண்டும் என்பது பல நாள் கனவு அது ஒரு வழியாக நிறைவேறி உள்ளது. படத்தில் எங்க “chemistry” நல்ல workout ஆயிருந்தது என்று அனைவரும் கூறினார்கள்.
இவர் நடித்ததில் இவருக்கு பிடித்த பாடல் :
வாலி படத்தில் “நிலவை கொண்டுவா” மற்றும் “மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததோ” பாடல்கள் தானாம்.
பிடித்த நடிகை:
சூர்யா மனைவி மற்றும் நடிகையுமான ” ஜோதிகா “.
பிடித்த உடை:
டைட் ஜீன் மற்றும் லூசான டீஷிர்ட்
பிடித்த மேக்கப் பொருள்:
லிப்ஸ்டிக்
மறக்கமுடியாத படப்பிடிப்பு அனுபவம்:
வாலி மற்றும் கன்னத்தில் முத்தமிட்டாள் இந்த இரண்டு படங்கள் தான் இவரின் மறக்கமுடியாத படப்பிடிப்பு அனுபவம் ஆகும்.
காரணம் காலை 5 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிவரை நடக்கும் ஷூட்டிங் மிக ஒழுக்கமாக இருக்கும் 5 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 4.30 கு நம்ம ரெடியாக இருக்க வேண்டும்.
அனைவரும் அதை கடை பிடிப்பார்கள் அதனால் அந்த படப்பிடிப்பு நாட்கள் மறக்கமுடியாத படப்பிடிப்பு அனுபவம் எனக்கு என்கிறார்.
மிகவும் பிடித்த தென் இந்தியா உணவு:
இட்லி மற்றும் சாம்பார்
மிகவும் பிடித்த vacation place:
லண்டன் ( London )
இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நம்புகிறோம். சிம்ரன் அவர்கள் நடித்த படங்களில் உங்களின் Favorite படம் எது என்று கீழே கமெண்ட் செய்யுங்கள்.
Actress Simran Family, Height, Husband Name, Native Place, Latest News, Age, Marriage, Dob, Son, Next Movie, Salary, Wiki, Biography, Real Name, Photos, Images
Pingback: prashanth movie - பிரசாந்த் பலருக்கும் தெரியாத உண்மைகள்!
Acquisto del Viagra presso la nostra farmacia online ГЁ sicuro da ogni parte dell Italia, anche se qualcun altro, ad esempio il vicino di casa riceve il pacco, non verrГ mai a conoscenza, cosa n ГЁ presente all interno buy cialis non prescription