Cinema

TR Rajendar Age, Family, News, Songs, Health, Height, Wife, Native Place, Dob, Son, Simbu, Salary, Wiki, Padal, Padam, Biography, Real Name, Photos, Images

TR Rajendar Wife, Age, Family, News, Songs, Health, Height, Native Place, Dob, Son, Simbu, Salary, Wiki, Padal, Padam, Biography, Real Name, Photos, Images

தமிழ் திரையுலகில் பல்வேறு திறமைகளை தனக்குள் வைத்துள்ள மிக சிறந்த கலைஞர் டி ராஜேந்தர். இவரின் வசனங்களை பல்வேறு பிரபல  டிவி நிறுவன நடிகர்கள் கலாய்த்து பதிவுகளை போட்டுருப்பார்கள்.

என்ன தான் இவரை இந்த வகையில் கேலி செய்தாலும், தமிழ் சினிமாவின் திறமையான நடிகர்களில் இவரும் ஒருவர் என்பதை  யாராலும் மறுக்க முடியாது.

இயக்கம், வசனம், நடிப்பு மற்றும் ஆளுமை என அனைத்தையும் சிறப்பாக செய்யக்கூடிய  டி ராஜேந்தர் அவர்களை பற்றி நம்மில் பலருக்கும் தெரியாத மற்றும் சுவாரஸ்யமான தகவல்களை பார்ப்போம்.

ஆரம்ப காலம்:

தேசிங்கு ராஜேந்தர் என்பது தான் டிராஜேந்தர் அவரின் உண்மையான பெயர். மே மாதம் 1955-ல்  இவர் பிறந்துள்ளார். இவரின் சொந்த ஊர் என்றால் அது தமிழகத்தில் உள்ள  மயிலாடுதுறை ஆகும்.

t rajendar movies
t rajendar movies
பள்ளி நாட்களில்:

சிறுவதில் இருந்தே இவருக்கு மேடையில் பேசி பலரின் முன் கைத்தட்டல்கள் வாங்க வேண்டும் என்று பெரிய ஆசை இருந்துள்ளது.

ஆனால் அப்போது இவர் மேடையில்  ஏற வாய்ப்பு கிடைக்காததால், வகுப்பில் இருந்த டேபிள் மீது ஏறி எதுகை மோனையில் பேசி சக மாணவர்களிடம் கைத்தட்டு வாங்கினார்.

அது அவருக்கு மிக சந்தோஷத்தையும் பெரிய நம்பிக்கையையும் கொடுத்தது. இந்த சம்பவம் TR மூன்றாவது படிக்கும் போது நடந்தது  என்பது குறிப்பிடத்தக்கது.

படிப்பிலும் திறமை:

பொதுவாக சினிமாவில்  அதீத  ஆர்வம் உள்ளவர்கள் படிப்பில் கோட்டை விடுவது வழக்கம் என்றே சொல்லுலாம். அவர்களின் கவனம் முழுவதும் பிடித்த திசையிலேயே போகும்.

நடிகர்கள் மட்டுமின்றி பலரும் அப்படித்தான், கடமைக்கு என்று படிப்பார்கள் காரணம் வேற திசையில் சாதிக்க அவரின் மனம் எண்ணம் என அனைத்தும்  அங்கேயே செல்லும்.

ஆனால்  TR ராஜேந்தர்  அப்படியில்லை , சினிமாவில் சிறந்த கலைஞராக இருந்தாலும் அதே மாதிரி படிப்பிலும் சாதித்து காட்டியவர்.

இவர் படித்த பி.ஏ பட்டப்படிப்பில் தங்க பதக்கம் வென்று சாதித்தவர் என்பது பலரும் அறியாத ஒன்று.

எளிமையான குடும்பம்:

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், மயிலாடுதுறையில் இருக்கும் ஏ வி சி கல்லூரிக்கு ( A.V.C. COLLEGE Autonomous  )   தினமும் ரயிலில் தான் சென்றுவருவார்.

t rajendar wife
t rajendar old look

அப்போது அங்குள்ளவர்களின் பொழுதுபோக்குகாக விதவிதமாய் பாட்டுகளையும் தினமும் படுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

ஒரு கட்டத்தில் அந்த ரயிலில் பயணிப்பவர்கள் ( passengers ) விரும்பி இவரின் ரயில் பெட்டிக்கு வரும் அளவுக்கு இவரின் “ரயில் பாட்டு” பிரபலம் ஆனது.

கேலி செய்வது:

இவர் 100 பேரை ரசிக்கும் படி பாடுகிறார் என்றால் கண்டிப்பாக ஒன்னு ரெண்டு பேர் கேலி செய்வதுசாதாரணம் தான்.

அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மற்றவர்களை ரசிக்கும்படி செய்வதே நோக்கம் என்று  எண்ணுபவர்.

சினிமா பாட்டு:

இதில் சுவாரசியம் என்ன வென்றால் இவர் படிக்க சென்றப்போது  ரயிலில் பாடிய உருவாக்கிய பாடல்கள் சினிமாவில் இவர் நடிக்க ஆரம்பித்ததும் இவர் படங்களில் ஒலித்து வெற்றி பெற்றது.

குறிப்பிட்டு சொல்லவேண்டும் ஆனால் “ஒருதலை ராகம்” படத்தில் இடம்பெற்ற “கூடையிலே கருவாடு” பாடலை சொல்லலாம்.

வெளியான புதிதில் பெரிய வரவேற்பு கிடைத்து ஹிட் ஆன பாடல் இது ஆகும்.

அடுத்த கட்டம்:

கல்லூரி படிக்கும் போதிலிருந்தே சினிமாவின் மீது இவருக்கு ஆர்வம் அதிகரிக்க தொடங்கியது அதோடு மற்ற  நடிகர்களை போல சாதாரணமாக வசனம் ( dialogue ) பேச கூடாது.

அதில் ஒரு புதுமையை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று சிந்தனையோடு இருந்துள்ளார்.

TR Rajendar Wife, Age, Family, News, Songs, Health, Height, Native Place, Dob, Son, Simbu, Salary, Wiki, Padal, Padam, Biography, Real Name, Photos, Images

சினிமாவின் மீது காதல்:

ஏழை வீட்டில்  பிறந்து பல சிரமத்துக்கு இடையில் வளர்ந்த இவருக்கு  சினிமாவின் மீது பிரியம் ஆசை இருந்தாலும்   சினிமா தியேட்டர் சென்று  படம் பாக்க கூட வழி இல்லை பணம் இல்லாததால்.

இருந்தாலும் வீட்டின் அருகே ஓடும் தியேட்டர் வெளிப்புற  பக்கத்தில் உள்ள சாக்கடை சைடு ( side ) நின்று கொண்டு கொள்ளவராம். காரணம்  அங்கே  தியேட்டரில் ஓடும் வசனங்கள் பாடல்கள் கேக்குமாம் அதன்  மூலம் படத்தை காட்சியாக கற்பனை செய்துகொள்வராம்.

டி ராஜேந்தர் - t rajendar wife -  age - family
டி ராஜேந்தர்

அந்த அளவுக்கு சினிமாவின் மீது  ஆர்வம் வைத்து இருந்துள்ளார். இதை பற்றி நண்பர்கள் கேட்க “சினிமாவில்  நான் நடிகனாக, வசன எழுத்தாளராக, மற்றும் இயக்குனர் ஆகா வேண்டும் “ இதற்காக சென்னை போகிறேன் என்று  சொல்லிருக்கிறார்.

அதுக்கு அவர்கள் இப்படி நீ இவ்வளவு விசியங்களை ( நடிகர் , வசன எழுத்தாளராக, மற்றும் இயக்குனர் ) செய்து படம் திரைக்கு வந்தால்  நீ மட்டும் தான் படத்தை பார்க்கணும் என்று கேலி செய்துள்ளனர்.

வாய்ப்பு தேடி:

யார் என்ன  கேலி செய்தாலும் பரவாயில்லை என்னுடைய இலக்கை நோக்கி  நான் போய்க்கொண்டே இருப்பேன என முயற்சி செய்ய தொடங்கினார்.

வாய்ப்புக்காக சென்னைக்கு வந்த TR ஒரு தலை ராகம் ( Oru Thalai Ragam ) படத்தின் கதையை பல தயாரிப்பாளரிடம் சொல்லி வாய்ப்புக்காக அலைய தொடங்கினார்.

ஆனால் பலரும் இவரை ஏளனமாய் பார்த்தத்துடன் வாய்ப்புக்கு மறுப்பு  தான் தெரிவித்து உள்ளனர், இருந்தும் விடாமல் முயற்ச்சி செய்து வந்தார்.

சில மாதங்கள் இப்படியே சென்றன பின், TR ராஜேந்திரனின்  நண்பர் ஒருவர்  தனக்கு தெரிந்த  தயாரிப்பாளர் இப்ராஹிம் ( Ibrahim ) அவரை சென்று பாரு என்று சொல்லியுள்ளார்.

முதல் வாய்ப்பு:

அப்படி அவரை சென்று  “ஒரு தலை ராகம்” படத்தின் கதையை சொல்லிருக்கார். அது  அவருக்கும்  பிடித்ததால் முதல் வாய்ப்பு கிடைத்தது.

கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி எழுத்து, இயக்கம், நடிப்பு,  இசை மற்றும் பாடல் வரிகள் என எல்லாத்திலும் புகுந்து விளையாண்டார்.

1980-ல்  வந்த இப்படம் மக்களுக்கு மிகவும் பிடித்தது காரணம் இவரின் மாறுபட்ட கதைக்களம் வெகுவாக பலரையும் கவர்ந்தது அத்துடன் படம் வெற்றி பெற்று ஓராண்டுக்கு மேல் ஓடியது.

தாடியின் ரகசியம்:

TR என்றாலே பலருக்கும் முதலில் மைண்டுக்கு ( mind ) வருவது அவரின் தாடி தான். அதன் பின் உள்ள ரகசியம் தெரியுமா? வாங்க பார்ப்போம். t rajendar wife

இவர் சினிமா வாய்ப்பு தேடி அலையும் போது “இந்த மூஞ்சிக்கெல்லாம் ஷேவிங் ஒரு கேடா சும்மா விட்டால் ப்ளாட் ( blade ) ஆவது மிஞ்சும்” என பலரும் கேலி கிண்டல் செய்து உள்ளனர்.

அப்போது இவர் தன் மனதில் சினிமாவில் ஜெய்க்கற வரை இந்த தாடியை எடுக்கவே மாட்டேன் என நினைத்தார். நினைத்தது போல் சினிமாவில் நுழைந்து பெரும் ஆதரவையும் பெற்றார்.

simbu father TR - t rajendar wife
simbu father TR

பின்பு, தாடியை எடுக்கலாமா என்று யோசித்தார் “நம்மக்கு மற்றவர்கள் மத்தியில் தனி அடையாளத்தை தந்ததே இந்த தாடி தான்” அதை ஏன் எடுக்க வேண்டும் என சொல்லி தடியை இப்பொது வரையுமே Maintain செய்கிறார்.

(  தாடியுடன் சுற்றுவது இப்போது வேண்டுமானால் ட்ரெண்ட் ( Trend ) ஆக இருக்கலாம்.

ஆனால் 80’s ல் அப்படி இல்லை  துக்க வீட்டில் & சோகமாக இருப்பதின் வெளிப்பாடாய் மற்றுமே தாடி வளர்த்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது  )

TR Rajendar Wife, Age, Family, News, Songs, Health, Height, Native Place, Dob, Son, Simbu, Salary, Wiki, Padal, Padam, Biography, Real Name, Photo, Images

வெற்றி படங்கள்:

ஒரு தலை ராகமுக்கு பின்  வந்த மற்றும் இவர் இயக்கிய “வசந்த அழைப்புகள்” மற்றும் “ரயில் பயணங்களில்” போன்ற இவரின் படங்கள் மெகா ஹிட் அடிக்க தொடங்கியது.

இவரின் ஆரம்ப காலம் முதல்  இப்பொது  வரை இவர் நடித்த வெற்றி படங்களின் தொகுப்பை கீழே பார்ப்போம்.

  • ஒருதலை ராகம்
  • வசந்த அழைப்புகள்
  • நெஞ்சில் ஒருராகம்
  • ரயில் பயணங்களில்
  • தங்கைக்கோர்  கீதம்
  • உயிருள்ளவரை உஷா
  • மைதிலி என்னை காதலி
  • என் தங்கை கல்யாணி
  • எங்க வீட்டு வேலன்
  • சாந்தி எனது சாந்தி
  • ஒரு வசந்த கீதம்
  • மோனிஷா என் மோனலிசா
  • சொன்னால்  தான் காதலா
  • காதல் அழிவதில்லை

போன்ற எண்ணற்ற ஹிட் படங்களை சொல்லிக்கொண்டே போகலாம். 

இந்த படங்கள் இல்லாமல் “வல்லவன்” மற்றும்  “கவண்” போன்ற படங்களில் கவுரவ வேடங்களிலும் இவர் நடித்துள்ளது நாம் அறிந்ததே.

பாடலில்:

இயக்கம் & நடிப்பில் இவர் எப்படி கிடைத்த ரோலை மிக சிறப்பாய் செய்வாரோ அதே மாதிரி பாடலும் மிக நன்றாக பாடக்கூடயவர் இவர் என்பதை மறுக்க முடியாது.

புது முகங்கள்:

ஒரு கட்டத்தில் சினிமாவில் நன்கு வளர்ந்த இவர் தன்னுடைய படங்களில் தன்னை போன்றே சினிமாவில் வாய்ப்பு தேடி எதுவும் கிடைக்காமல் இருந்த நடிகர் நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் முன்னுரிமை கொடுத்து வந்தார்.

அப்படி இவர் படங்களின் மூலம் தான் ஆனந்த் பாபு, நளினி , ரேணுகா , மற்றும் மும்தாஜ் போன்ற  ஏராளமான நடிகர் நடிகைகளை அறிமுகம் செய்துள்ளார்.

சினிமாவில் தனிமை:

TR முன்னணி  நடிகராக வலம் வரும்போது ” சண்டை காட்சிகள் வசனம் பேசிக்கொண்டே செய்வார் தமிழ் சினிமாவில் இந்த பாணியை அறிமுகம்  செய்ததில் இவர் பங்கு தான் அதிகம் “ மக்களால் இது ரசிக்கவும்  பட்டது.

குடும்பம்:

உஷா ( TR Rajendar Wife ) என்ற பெண்ணை திருமணம்  செய்த இவருக்கு சிம்பு மற்றும் குறளரசன்  என்கிற இரண்டு மகன்களும் இலக்கியா   என்ற மகளும் உள்ளார்.

t rajendar wife
TR family photoss
TR Rajendar Wife & Family

மகன்கள் :

சிம்பு

குறளரசன்

மகள்:

இலக்கியா

கோடிகளில் சம்பளம்:

இன்றைய சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் எளிதாக கோடிகளில் சம்பளம் வாங்க முடியும். ஆனால் அன்றைய சினிமாவில் நடிகர் நடிகைகளுக்கு லட்சங்களில் சம்பளம் கிடைப்பதே  அரிதாக பார்க்கப்பட்டது.

இப்படி இருக்கும் பட்சத்தில் அப்போதே கோடியில் சம்பளம் வாங்கிய மிக முக்கிய நடிகர் TR ராஜேந்திரன் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

அப்போது இவரின் படங்கள் திரையில் வருமானால் ரஜினி மற்றும் கமல்  படங்களே வெளியிட யோசனை செய்வார்கள் அந்தளவுக்கு மிகபெரிய சினிமா ஆளுமையை வைத்திருந்தார்.

இளையராஜா:

நல்ல இயக்குனராக மட்டுமில்லாமல் நல்ல இசைமைப்பாளராகவும் திகழ்ந்த  இவர் இளையராஜா உச்சத்தில் இருந்த காலத்திலேயே பல வெற்றி பாடல்களை கொடுத்தார்.

ஒருதலை ராகம், தங்கைக்கொரு கீதம், ரயில் பயணங்களில், மைதிலி என்னை காதலி, மற்றும்  உயிருள்ளவரை உஷா போன்ற பல படங்களில்  இசைமைப்பாளராக  பணி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிவியில் ராஜேந்தர்:

சரி இவர் கலந்துகொண்ட முக்கிய  டிவி நிகழ்ச்சிகள் எவை என்பதை பார்ப்போம். சன் டிவியில் வந்த “சூப்பர் குடும்பம்” நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.

அதேப்போல சன் டிவியில் வந்த “மக்கள் அரங்கம்” நிகழ்ச்சியை வழி நடித்தினார். பின்பு விஜய் டிவியில் வந்த “நியாயம் என்றும் சொல்வேன்” ( Nyayam Endrum Solven ) மற்றும் ஜோடி No.1-ல் கலந்து கொண்டார்.

டிவியில் இவ்வளவு நிகழ்ச்சியில் கலந்திருந்தாலும் இவர் தான் நடித்த படங்களுக்கு டிவி ரைட்ஸ் கூட இவர் வாங்கவில்லை என்பது வேடிக்கையான விஷயம் தான்.

கற்றுக்கொள்ள வேண்டும்:

இவரிடமிருந்து இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை தைரியமாக பேசுவது, சிறப்பான தமிழ் உச்சரிப்புஒழுக்கம், அதீத தமிழ் பற்று  போன்ற விஷயங்கள் நாம் குறிப்பிடலாம்.

இந்த பதிவை வாசிக்கும் உங்களுக்கு TR நடித்ததில் மிகவும்  பிடித்த படம் எது என்பதை கீழே  தெரிவிக்கலாம். இது மாதிரியான பதிவுகளுக்கு நம் இணையதளத்தை  Bookmarks –  புக்மார்க்ஸ் செய்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube