Cinema

Sathyaraj Upcoming Movies, Son, Daughter, Age, Family, New Movie, Height, Dob, Wife, Salary, Wiki, Biography, Real Name, Photos, Images | சத்யராஜ்

Sathyaraj Upcoming Movies, Son, Daughter, Age, Family, New Movie, Height, Dob, Wife, Salary, Wiki, Biography, Real Name, Photos, Images | சத்யராஜ்

வில்லனாக, ஹீரோவாக மற்றும் காமெடியனாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று  மிகப்பெரிய இடத்தை  பிடித்தவர் தான் சத்யராஜ்.

இவரை பற்றி  நம்மில் பலருக்கும்  தெரியாத தகவல்களை இந்த பதிவில்  பார்ப்போம்.

ஆரம்பம்:

அக்டோபர் மாதம் 3ம் தேதி 1954  ல் தான் இவர் பிறந்தார். கோயம்பத்தூரில் உள்ள காந்திபுரத்தில் தான் பிறந்துள்ளார். ரங்கராஜ் சுப்பையா (  Rangaraj Subbia ) என்பது இவரின் உண்மையான பெயர் ஆகும்.

படிப்பு:

இவர்  செயின்ட் மேரிஸ் கான்வென்ட் பள்ளியில் ( St Mary’s Convent school ) தன்னுடைய பள்ளி படிப்பை முடித்து விட்டு  அரசு கலை கல்லூரியில் ( Government Arts College ) தன் கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.

ஆர்வம்:

இவர் சின்ன  வயதில் இருந்தே  சினிமாவின் மீது அதீத  ஆர்வம் கொண்டவராக  இருந்துள்ளார்.  ஒரு நடிகன் ஆயிர வேண்டும் என்று மிகப்பெரிய கனவுடன்  இருந்துள்ளார்.

சத்யராஜ் old movies
sathyaraj movies old

ஆனால்,  இவர் வீட்டில் இவருக்கு அப்படியே எதிராக ( opposite  ) இவரின் தாய்   சினிமாவில் சத்யராஜ் நடிப்பதில் விருப்பமின்றி  இருந்துள்ளார்.

முதல்படி :

தாய்க்கு விருப்பம் இல்லாமல் இருந்தாலும், அவரிடம் பேச்சை மீறி கோயம்பத்தூரில் இருந்து சென்னைக்கு சென்று பட வாய்ப்பு தேடி அலைந்தார்.

முதல் படம்:

சென்னையில் பல இடங்களில் வாய்ப்பு தேடி அலைந்த இவருக்கு 1978-ல் சட்டம் என் கையில் படத்தில் விக்கி கதாபாத்திரத்தில்  நடிக்க  வாய்ப்பு வந்தது. இப்படத்தில்  ஹீரோவாக கமல்ஹாசன் மற்றும் ஹிரோயினியாக ஸ்ரீப்ரியா நடித்திருந்தார். 

பின்,  அதே  வருடத்தில் நடிகர் சிவகுமார் நடித்த “கண்ணன் ஒரு கை குழந்தை” படத்தில் உதவியாளராக ( Henchman ) வேலை செய்தார்.

1978:
  • சட்டம் என் கையில்
  • கண்ணன் ஒரு கை குழந்தை

அடுத்தவருடம்: 

இதுக்கு அடுத்த வருடமே மூன்று படங்களில்  நடிப்பதட்கான வாய்ப்பு இவருக்கு  கிடைத்தது. அந்த படங்களின் பெயர்களை  கீழே குறிப்பிட்டுள்ளோம்.

  • முதல் இரவு
  • குடிசை 
  • ஏனிப்படி
முக்கிய படங்கள்:

இவர்  திரைவாழ்க்கையில்  மிக  முக்கிய பங்கு வகிக்கும் படங்களின் பட்டியலை பார்ப்போம்.

  • மூன்று முகம் –  1982
  • பாயும் புலி – 1983
  • நூறாவது நாள்  – 1984
  • தம்பிக்கு எந்த ஊரு – 1984
  • காக்கி சட்டை –  1985
  • பிள்ளை  நிலா –  1985
  • சின்ன தம்பி பெரிய  தம்பி – 1987
  • ஜல்லிக்கட்டு   –    1987
  • வேதம் புதிது  –  1987
  • வாத்தியார் வீட்டு பிள்ளை – 1989
  • நடிகன்    –  1990
  • ரிஷ்சா மாமா  –  1992
  • வால்டர் வெற்றிவேல்  – 1993
  • உடன் பிறப்பு  –  1993
  • அமைதி படை –   1994
  • தாய் மாமன்   –  1994
  • வெற்றிவேல்  சக்திவேல்  –  2005
  • பெரியார்    –   2007
  • பொள்ளாச்சி மாப்பிளை – 2010
  • நண்பன்   –  2012
  • சென்னை எக்ஸ்பிரஸ்  –  2013
  • தலைவா  –  2013
  • வருத்த படாத வாலிபர் சங்கம்  –  2013
  • ராஜா ராணி  –  2013
  • பாகுபலி  –  2015
  • பாகுபலி  2 –  2017
  • மெர்சல் – 2017
  • கடைக்குட்டி சிங்கம் – 2018
  • கனா  –  2018
  • MGR மகன் –  2021
  • எதுக்கும் துணிர்ந்தவன்

மேலே குறிப்பிட்ட படங்கள் தாண்டி பல வெற்றி படங்களில் இவர் நடித்துள்ளார்  என்பதை  நாம் மறுக்க முடியாது.

குடும்பம்:

sathyaraj daughter

சத்யராஜ் குடும்பம் - sathyaraj daughter - wife - son - news - biography
சத்யராஜ் குடும்பம் – Sathyaraj family

1979-ம் ஆண்டு  மஹேஸ்வரி  என்ற பெண்ணுடன் சத்யராஜுக்கு கல்யாணம் நடைபெற்றது. இதை தொடர்ந்து 1983 ல் சிபிராஜ் ( மகன் ) பிறந்தார்.

sathyaraj daughter

பின்பு,  திவ்யா என்ற மகள் ( sathyaraj daughter ) 1985-ல்  பிறந்தார். சிபிராஜ்  சத்யராஜை  போன்றே சினிமாவில் சாதிக்க வேண்டும்  என்று  செயல்பட்டு வருவது நாம்  பலரும் அறிந்ததே.

இவரின் தங்கை பெயர் கல்பனா ஆகும்.

சகோதிரியின்  மறைவு:

சத்யராஜின் தங்கச்சியான கல்பனா அவர்கள் 2021  டிசம்பர் மாதம் உடல் நல குறைவு காரணமாக கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் மறைவு சத்யராஜின் ஓட்டு மொத்த குடும்பத்தினரையும் மிகவும்  சோகத்துக்கு உள்ளாகியது.

விருதுகள்:

1987  ல்  “வேதம் புதிது”  படத்திக்காக  பிலிம்பேர் விருது (  Filmfare Award for Best Actor ) கிடைத்தது. அடுத்து நடிகன்’  படத்திக்காக  1990-ல் தமிழ்நாடு மாநில திரைப்பட விருது வென்றார்.

‘பெரியார்’  படத்துக்காக 2007ல் தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, தமிழ்நாடு அரசு விருது,  மற்றும் ஆனந்த விகடன் விருது என  மூன்று விருதுகளை குவித்தார்.

sathyaraj awards
sathyaraj awards

Sathyaraj Upcoming Movies, Son, Daughter, Age, Family, New Movie, Height, Dob, Wife, Salary, Wiki, Biography, Real Name, Photos, Images | சத்யராஜ்

‘ஒன்பது ரூபாய் நோட்டு’ படத்திற்கு 2007ல் மற்றும்   ‘நண்பன்’ படத்திற்கு 2012-ல் விஜய் விருது ( vijay award ) கிடைத்தது.

2013-ல் ராஜா ராணி’ படத்திற்கு  பிலிம்பேர் ( Filmfare Award ) விருது  வாங்கினார். 2015-ல் 1st IIFA Utsavam விருது  கிடைத்தது.

கனா’  படத்திக்காக  2018-ல்   பிலிம்பேர் விருது – Filmfare Award வாங்கினார்.

சிவகார்த்திகேயன்:

ஒரு பேட்டியில் உங்களுக்கு மகனாக நடிக்க  நடிகர்களில் யார் சரியாக இருப்பார்கள் என்று நீங்க நினைக்கீறீர்கள்  என்றதுக்கு “சிவகார்த்திகேயன்” என்று சொல்லுவார்.

லொள்ளுக்கு லொள்ளு கரெக்டா இருக்கும்  என்றார் சிரித்தபடி, மகளாக நடிக்க  ( ஹீரோயின்களில் ) தீபிகா படுகோன்  என்று பதில் சொன்னார்.

கவுண்டமணி:

சத்யராஜுக்கு திரைத்துறையில் மற்றும் நிஜ வாழ்கையையில் நல்ல நண்பன் என்றால்  அது ‘கவுண்டமணி’ அவர்கள் தான். இவர்கள் சேர்ந்து  நடித்ததில்  இவருக்கு ( sathyaraj ) மிகவும்  பிடித்தது “நடிகன்” என்று கூறியிருந்தார்.

மேலும்  கவுண்டமணியிடம்  ஒரு சேலஞ் ( challenge ) கொடுக்கணுனா யாரையும் நக்கல் அடிக்காமா இருக்கணும்  ஒரு வாரத்துக்கு என்று  சொல்லிருப்பார்.

தளபதி விஜய்:

நண்பன்” மற்றும் “தலைவா” போன்ற படங்களில் இவர் விஜயுடன் பணி புரிந்துள்ளார் அப்போது விஜய் கேப்பாராம்  “கவுண்டமணி  சாரோட நடிக்கும் போது எப்படி அந்த காட்சிகளில் சிரிக்காம நடித்தீங்க”.

 (  தளபதி விஜய்  கவுண்டமனையின் தீவிர ரசிகர் என்பது பலருக்கும்  தெரியாது. வேலாயுதம் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடக்கும் போது அருகில் கவுண்டமணியின் அம்மா வீடு  இருப்பதை அறிந்த விஜய் நேரில் சென்று சந்தித்து பேசியதும் குறிப்பிடத்தக்கது ).

கவுண்டமணி சார் கூட நடித்த காட்சிகள்  அனுபவம் எப்படி சார்  என்று நம் தளபதி  விஜய் அதிகமாக அவரை பற்றித்தான் கேப்பாராம்.

சத்யராஜும் அவர்களின் ஷூட்டிங் அனுபவங்கள் மற்றும்  கவுடமணி offscreen – ல் செய்யும் காமெடி  லொள்ளுகளை பற்றி சொல்லுவாராம் அதை கேட்டு தளபதி  விழுந்து விழுந்து  சிரித்தாராம்.

சூர்யா:
sathyaraj with suriya
sathyaraj with suriya

நடிகர் சூர்யா நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படம் தான் “ஜெய் பீம்” இந்திய அளவில்  இந்த படமானது  மிகப்பெரிய வரவேட்பு பெற்றது.

அதேசமயம், ஒரு தரப்பினர் இப்படத்தை எதிர்த்தும் வந்தனர் அப்போது சத்யராஜ் சூர்யாவுக்கு ஆதரவாக ஒரு சில விஷயங்களை பகிர்ந்தார். அது மிகவும் வைரலானது அதில் அவர் முதல்வர் மற்றும் சினிமா ஜாம்பவங்கள் பலர் இப்படத்தை பற்றி பாராட்டி விட்டனர்.

இதை தாண்டி நான் என்ன சொல்ல போகிறேன். ஒருசில படங்கள் விசில் அடித்து ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இருக்கும்  சில படங்களை பார்த்தால் பாராட்டும் வகையில் இருக்கும் ஆனால் மிகவும் சில படங்கள் மட்டுமே போற்ற கூடிய வகையில் இருக்கும்.

அந்த மாதிரியான ஒரு படம் தான்  “ஜெய்  பீம்” என்று குறிப்பிட்டார். அத்துடன் “எதுக்கும் துணிந்தவன்” படமும் நன்றாக உள்ளதாக தனது மனமார்ந்த வாழ்த்துகளை  சொல்லிருந்தார்.

கதை தேர்வு:

ஒரு பேட்டியில் நீங்கள்  நடிக்கும் கதையை எதை வைத்து தேர்வு செய்கிறீர்கள் என்று கேட்க, நான் ஆரம்பத்தில் ஹீரோவாக  கதையை தேர்வு செய்யும் போது அது வேற மாதிரி இருக்கும் இப்போது என்னுடைய கதாபாத்திரம்

எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை பார்ப்பேன் மற்றும் படத்தில் எதோ ஒரு விஷயம் பெருசா இருக்கனும் என்று எதிர் பார்ப்பேன் என்கிறார்.

பாகுபலி:

இவர் நடித்த படங்களில்  மிக முக்கியமான படம் தான் பாகுபலி மற்றும் பாகுபலி 2 இந்த படங்களில் முக்கிய கதாபாத்திரமான “கட்டப்பா”என்ற ரோலில் நடித்திருப்பார்.

படத்தின் மூலன் மற்ற  மொழியிலும்  நன்கு ரசிக்க பட்ட கதாபாத்திரமாக மாறினார். இப்படத்திற்க்கு  பின் இவர் நிறைய படங்களில் நடிக்க மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

இது பேசும் பொருளானது என்றே கூறலாம் இது பற்றி  சத்யராஜே கூறுகையில் “நான் வித்தியாச வித்தியாசமானா ரோலில் நடிப்பதையே விரும்புவேன்” ஆனால் சில  கதைகளில் ஹீரோயின் அப்பா அல்லது  ஹீரோவின் அப்பா

போன்ற ரோல் மட்டுமே  வரும் அந்த ரோலில் நடித்தால் பின்  சலிப்பு தான் ஏற்படும் அதன் காரணமாக தான்  சில  கதைகளில் நான் நடிக்க மறுப்பு தெரிவித்தேன் என்று வெளிப்படையாக சொன்னார்.

இதையும் கண்டிப்பா படிங்க: பிரசாந்த் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள்!

படங்களில் வேறுபாடு:

படத்திற்க்கு படம் எப்படி இவரால் வேறுபட்ட அதேசமயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் நடிப்பை வெளிப்படுத்துகிறார் என்ற கேள்வி நம்மில் பலருக்கும் இருக்கும்.

இதை பற்றி இவர்  கூறுவது ” பொதுவாக  நான் படப்பிடிப்பிற்கு போகும் போது பிளாங்க் பேப்பர் (  blank paper ) ஆக தான் செல்வேன். அந்த ரோல் மற்றும் டைரக்டருக்கு என்ன தேவையோ  அதை தான் நடிப்பேன்”.

சத்யராஜ்
சத்யராஜ்

அதனால் தான் படங்களுக்கு படம்  வேறுபட்ட நடிப்பை  என்னால் கொடுக்க முடிகிறது இல்லையென்றால் எல்லா படங்களிலும் ஒரே சத்யராஜை தான் நீங்கள் பார்க்க முடியும் என்கிறார்.

சினிமாவில் பிரச்சனை:

நீண்ட காலம் சினிமாவில்  உள்ள நடிகராக சினிமாவில் உள்ள பிரச்னை பற்றி இவர்  கூறுவது  “ஒரு படத்தில் எல்லாமே  புதிதாக இருந்தால்  அந்த படத்திற்கு ரசிகர்கள் அவ்லோவு எளிதில் வரமாட்டார்கள்.

சினிமாவில் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படத்திற்கு தோல்வி வர காரணம், வசூலில் நன்கு பட்டைய கிளப்பும் 100 கோடி  150  கோடி என்று ஆனால்  அந்த படத்தின் பட்ஜெட் ( budget ) மட்டுமே 100 கோடி அல்லது 150 கோடியாக இருக்கும்.

இப்படி உள்ள படங்கள் அவ்ளோ பணம்  வசூலித்தால்  கூட அது வெற்றியாக கருதப்படுவதில்லை  இவ்ளவு தான் விஷயம் என்று சொன்னார்.

இந்த பதிவை படித்து கொண்டிருக்கும் உங்களுக்கு சத்யராஜின் நடிப்பில் வெளிவந்த எந்த  படம் மிகவும்  பிடிக்கும் என்பதை  Comment box -ல் பதிவு செய்யவும்…

7 thoughts on “Sathyaraj Upcoming Movies, Son, Daughter, Age, Family, New Movie, Height, Dob, Wife, Salary, Wiki, Biography, Real Name, Photos, Images | சத்யராஜ்

  • canadian pharmacy cialis He felt more and more that the process viagra coupon 3 free pills of governing the country was a process of Barbarian Xl Shop viagra coupon 3 free pills fighting wits and strength with the officials of the birth control pills and im testosterone for female low libido whole country

  • what is clomid Author, year, country Sample size n Treatment enclosed Drug intolerance, n Transient weakness, n Arthralgia and or decreased bone density, n Nausea, n Headache, n Diarrhea, n Loss of hair, n Subclinical hepatic dysfunction, n Decrease loss of libido, n Discontinuation due to side effects, n Clark and Sherins 19 1989, USA 25 Testolactone 2 g daily 8 32 NR NR 3 12 NR NR NR NR NR 2 8 Pavlovich et al.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube