Cinema

Goundamani Daughter, Age, Family, Wife, Comedy, Memes, Height, Native Place, Reaction, Salary, Wiki, Biography, Real Name, Photos, Images

Goundamani Daughter, Age, Family, Wife, Comedy, Memes, Height, Native Place, Reaction, Salary, Wiki, Biography, Real Name, Photos, Images

தமிழ்  திரையுலகில் பல பல காமெடி நடிகர்கள் வந்தாலும் என்றும் நீங்கவே நீங்காத வகையில் மக்கள் மனதில் நிரந்தரமாக இடம் பிடித்த ஒரு முக்கிய காமெடி நடிகர் தான் நக்கல் உலகின் மன்னன் கவுண்டமணி.

இவர் நடித்த பல படங்களை நாம் பார்த்து விழுந்து விழுந்து சிரித்திருப்போம். 90’s  காலகட்டத்தில் முன்னணி ஹீரோவுக்கு இணையாக இவருக்கு  ரசிகர்கள் பட்டாளம் இருந்தது அனைவரும் அறிந்ததே.

இந்த பதிவில் இவரை பற்றியும் இவர் வாழ்க்கையில் நடந்த பல  சுவையான தருணங்கள் பற்றியும் காண்போம்.       

தொடக்கம்:

சுப்பிரமணியன் கருப்பையா”என்பதுதான் இவரின் நிஜ பெயர். சினிமாவுக்காக தன் பெயரை  “கவுண்டமணி ” என மாற்றியுள்ளார்.

மே மாதம் 25-ம் தேதி 1939 வருடம் தான் கவுண்டமணி ( goundamani biography ) பிறந்தார். பொள்ளாச்சியில் உள்ள வல்லகுண்டாபுரத்தில் தான் இவர் பிறந்துள்ளார். இது ஒரு சிறிய கிராமம் ஆகும்.

goundamani memes - movies reaction
goundamani

உறவுகள்:

இவரின் அம்மா, அப்பா மற்றும் மனைவியின் பெயர்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

  • அம்மா ( mother ) – கருப்பையா
  • அப்பா ( father ) – அன்னம்மாள்
  • மனைவி ( wife ) –  சாந்தி

இவருக்கும் சாந்திக்கும் 1963-ல்  கல்யாணமானது. இந்த தம்பதிக்கு அழகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.

மீடியா ( media ) வெளிச்சம் பட விடாமல் குழந்தைகளை வளர்த்துள்ளார் கவுண்டமணி என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஒரு அக்காவும் உண்டு.

ஆர்வம்:

இவருக்கு சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது அதீத ஆர்வம் இதனாலயே பள்ளி  படிப்பில் பெரிதும் இவர் கவனம் செலுத்தவில்லை.

பள்ளியில் படிக்கும் சமயத்தில் அதிகமாய் பேச கூட மாட்டாராம். அப்டி பேசினாலும் மிக மெதுவாக தான் பேசுவாராம்.

தனது சிறு கிராமத்தில் நடக்கும் நாடகங்களில் கலந்து கொண்டு தன் திறமையை வெளிப்படுத்தி வந்தார்.

பெயர் காரணம்:

சுப்பிரமணியன் என்ற பெயர் கவுண்டமணி ( goundamani ) ஆனது எப்படி என்றால், சுப்பிரமணியன் என்ற இவரது பெயரை பலரும் சுருக்கி “மணி” என்று கூப்பிட்டு வந்துள்ளனர்.

கவுண்டமணி | senthil comedy
கவுண்டமணி

இவருக்கு யாராவது பேசினால் அவர்களுக்கு counter குடுத்து பேசுவது பழக்கம். அதுனால் நாளடைவில் “மணி” என்ற இவரின் பெயர். கவுண்டமணி என்றானது.

அடுத்த கட்டம்:

வீட்டில் நடிக்க வேண்டும் என இவர் பலதடவை கேட்டு உள்ளார். அவங்களும் இதை தட்டிக்கழித்தவாறே சென்றுள்ளனர்.

பின்பு, நடிப்பின் மீது மிகவும் ஆர்வம் கொண்ட இவரை நன்றாக புரிந்து கொண்ட அக்கா இவரை சென்னைக்கு அழைத்து வந்து ஒரு நாடக நிறுவனத்தில் சேர்த்து விட்டார்.

ரொம்ப நாட்கள் காத்திருந்த இவருக்கு சென்னையில் வாய்ப்பு கிடைத்ததும் அதை மிக அருமையாக பயன் படுத்தி முன்னேற தொடங்கினார்.

சிறிய நாடக நிறுவனத்தில் சேர்ந்த இவர் கிடைத்த அணைத்து கதாபாத்திரங்களிலும் மிக சிறப்பாக நடித்ததால் அடுத்த அடுத்த பெரிய நாடக கம்பெனியில் நடிக்க ஆரம்பித்தார்.

Goundamani Daughter, Age, Family, Wife, Comedy, Memes, Height, Native Place, Reaction, Salary, Wiki, Biography, Real Name, Photos, Images

முதல் படம்:

இவரின் முதல் படம் 1964 ஆண்டு நாகேஷின் நடிப்பில் வெளிவந்த “சர்வர் சுந்திரம்” என்கிற படம் இந்த படத்தில் டிரைவர் ஆக நடித்திருந்தார்.

இந்த படத்தில் பெரிதும் வசனங்கள் எதுவும் பேசாமல் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் இவர் நடிக்கும் போது வயது இருபத்தியாறு  ( 26 ).

அடுத்த படங்கள்:

இதுக்கு பிறகு 1965 ல் வெளியான “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் மீனவனாக நடித்தார்.

பின்பு, 1967-ல் செல்வ மகள் படத்தில் மீண்டும் டிரைவராக நடித்தார் இந்த மாதிரி சின்ன சின்ன வேடங்களில் தான் ஆரம்ப இரண்டு மூன்று படங்களில் நடித்தார்.

1970 – 1976:

டிரைவராக   முதல் படத்தில் நடித்த ராசியோ என்னமோ “ராமன் எத்தனை ராமனடி” மற்றும் “தேனும் பாலும்” போன்ற படங்களில் மீண்டும் மீண்டும் Driver ஆக நடித்தார்.

goundamani biography | family | wife | daughter | goundamani senthil comedy
goundamani biography

சினிமாவில் இப்படி முதல் பத்து வருடங்கள் கடந்தும் அறியப்படாத நடிகராகவே இருந்துள்ளார்.

இருப்பினும், தன் மேல் உள்ள நம்பிக்கை இவரை சினிமாவை விட்டு வெளியேற விடவில்லை. அதனால் தொடர்ந்து முயற்ச்சி செய்து கொண்டே இருந்துள்ளார்.

பதினாறு வயதினிலே:

பல வருடங்கள் காத்திருந்த இவருக்கு “16 வயதினிலே” படம் ஒரு நல்ல வாய்ப்பை தந்தது. இந்த படத்தில் இவர் பேசியே வசனங்கள் பிரபலமடைந்தது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், “பத்த வெச்சிட்டயே பரட்டை ” என்கிற வசனம் ( dialogue ) மக்கள் மத்தியில் பேசப்பட்டது.

குவிந்த படவாய்ப்புகள்:

பின் சரசரவென படவாய்ப்புகள் வந்தன. அடுத்து அடுத்து  கவுண்டமணி நடித்த சில படங்களின் பட்டியலை கீழே பார்ப்போம்.

  • ஆனந்தம் பரமானந்தம் ( Anandam Paramanandam )
  • சிகப்பு ரோஜாக்கள் ( Sigapu rojakal )
  • புதிய வார்ப்புகள் ( Puthiya Varpugal )
  • கிழக்கே போகும் ரயில் ( kilake pogum raiyil )
  • ஆனந்தம் என்று ஆரம்பம் ( Anandam endruu arambam )
  • சுவரில்லாத சித்திரம் ( Suvariladha chithiraam )
  • பருவத்தின் வயசிலே ( Paruvathin Vayasile )

மேலே குறிப்பிட்டு படங்களில் 1978 முதல் 1980 வருடம் வரை நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து, 1989 ல்  வெளியான “கரகாட்டகாரன்” படம் இவருக்கு மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியது என்றே கூறலாம்.

இவ்வரும் செந்திலும் வரும் ஒவ்வொரு காட்சிகளும் சிரிப்பு மழை பொழிந்தது. “ஒரு பழம் இங்கிருக்கு இன்னொன்னு எங்க” என்ற காமெடி காட்சி இப்போது வரைக்கும் பலரின் favorite ஆக உள்ளது.

வெற்றி படங்கள்:

1990’s  ல் முன்னணி காமெடி நடிகராக கொடிக்கட்டி பறந்த இவர் சத்யராஜ், ரஜினிகாந்த், மற்றும் கார்த்திக் என எந்த நடிகர் உடன்  நடித்தாலும் காமெடி காட்சிகள் ஹிட் தான்.

1. கரகாட்டக்காரன்  (  karakatakaran )

2. உள்ளதை அள்ளித்தா  ( ullathai allitha )

3. முறைமாமன் (  murai maman )

4. நாட்டாமை ( natamai  )

5. லக்கி மேன் ( laki man )

6. சிங்கார வேலன் ( singaravelan )

7. மன்னன் ( mannan )

8. மேட்டுக்குடி ( mettukudi  )

9. இந்தியன் ( indian )

10. கல்லுக்குள் ஈரம் ( kallukul eeram )

11. சின்ன கவுண்டர் ( chinna gounder )

12. சின்ன தம்பி ( china thambi )

13. எஜமான் ( ejamaan )

14. டாட்டா பிர்லா ( tatabirla )

15. ஜப்பானில் கல்யாணராமன் ( japanil kalyanaraman )

இந்த  மாதிரி கவுண்டமணி நடித்த பல வெற்றி படங்களை நாம் பட்டிலிட்டு போய் கொண்டே இருக்கலாம்.

அவர் நடித்து வெற்றி பெற்றதில் ஒரு சில  துளி திரைப்படங்களை தான் மேலே குறிப்பிட்டு உள்ளோம்.

காதல் திருமணம்:

பலருக்கும் தெரியாத ஒன்று இவர் காதலித்து கல்யாணம் செய்த விஷயம். இவர் சாந்தி என்கிற பெண்ணை தான் சில வருடங்கள் காதலித்து பின் திருமணமும் செய்து கொண்டார்.

goundamani marriage photo | wife shanthi - santhi
goundamani marriage photo

தற்போது இவருக்கு செல்வி மற்றும் சுமித்ரா என இரண்டு அழகான மகள்கள் உள்ளது பலருக்கும் தெரியாது அவ்வாறு மீடியா வெளிச்சமே படாத வகையில் வளர்த்துள்ளார்.

இருவருக்கும் திருமண ஆகிவிட்டது. இதில் சுமித்ரா வெங்கடாசலம் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

உயர்ந்த குணம்:

இப்போது சுமித்ரா சத்தமில்லாமல் பல வருஷங்கள் செய்துவந்த உண்மை குறித்து  செய்தி வெளிவந்தது.

சென்னையில் உள்ள புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் ஆதரவற்றோருக்கு மாதம் மாதம் சென்று உதவி செய்து வந்துள்ளார்.

தனது பெயரோ இல்லை யாரின் மகள்  என்பதையோ வெளிக்காட்டாமல் பல மாதங்களாய் உதவி வந்துள்ளார் சுமித்ரா.

தற்போது தான் அந்த காப்பகத்தில் உள்ளவர்களுக்கே இவ்வளவு மாதங்களாய் உதவி வந்தது கவுண்டமணியின் மகள்தான் என்று தெரிய வந்துள்ளது.

goundamani daughter sumithra
goundamani daughter

இந்த செய்தி கவுண்டமணி ரசிகர்கள் உட்பட பலரையும் நெகிழ செய்தது. அத்துடன் “அப்பா பெயரை காப்பற்றும் மகள் ” (goundamani daughter) என்றெல்லாம் மக்கள் சொல்வதை பார்க்க முடிந்தது.

உதவி:

கவுண்டமணி அவரும் சத்தமில்லாம பல உதவிகளை செய்வதில் சிறந்தவர் கொரோன நிதியாக கூட சில லட்சங்களை கொடுத்திருந்தார்.

goundamani senthil comedy :
கவுண்டமணி செந்தில்:

இவரின் காமெடி காட்சிகளை  இரண்டு வகையாக பிரிக்கலாம். படத்தின் கதாநாயகனுடன் இணைந்து அப்படத்தில் காமெடியில் கலக்குவது.

மற்றொன்று, செந்தில் அல்லது மணிவண்ணன் போன்ற மற்றவருடன் இணைந்து தனி காமெடி ட்ராக் ( track ) அப்படத்தில் இடம் பெறுவது.

goundamani senthil comedy
goundamani senthil comedy

இந்த இரண்டிலும் பட்டையை கிளப்ப கூடிய மிக சிறந்த காமெடியன் தான் கவுண்டமணி. அதும் குறிப்பாக செந்திலும் இவரும் சேர்ந்தால் காமெடி சரவெடி தான்.

மேலும், சிறப்பு என்ன வென்றால் 400-க்கும் மேற்பட்ட படத்தில் செந்தில் கவுண்டமணி ( goundamani senthil comedy ) நடித்துள்ளார்கள் என்பது மிக பெரிய சாதனை.

மொத்த படங்கள்:

அனைத்து மொழியிலும் இவர் நடித்த படங்களின் எண்ணிக்கை 700-ஐ தாண்டும். இதில் 12 படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிடிக்காத விஷயம்:

இவரின் படத்தில், பல காட்சிகளில் குடிப்பது போல நடித்திருப்பார். ஆனால் நிஜ வாழ்க்கையில் குடியை வெறுப்பவர். குடிகாரர்களை பார்த்தால் சுத்தமாக பிடிக்கவும் பிடிக்காதாம்.

அதே மாதிரி பெயரின் முன் எந்த பட்டமும் போட்டுக்கொள்ள பிடிக்காது.

இரண்டு படங்களில் நடித்தவர்கள் கூட பெயர் முன் பட்டம் போட்டுகொண்டு சுற்றும் இந்த காலத்திலும்  பெயர் முன் எந்த பட்டமும் இல்லாமல் இருக்கும் ஒரே உச்ச நடிகர் இவர் தான் என்பது தவிர்க்க முடியாத உண்மை.

சினிமா நடிகர்கள் வீட்டில் நடக்கும் பார்ட்டிகளில் ( party ) கலந்து கொள்ள பிடிக்காத நபர், அதே போல இவரின் வீட்டில் நிகழும் நிகழ்ச்சிகளுக்கும் எந்த நடிகரையும் நடிகையையும் கூப்பிட மாட்டார்.

பிடித்த விஷயம்:

ஹாலிவுட் படங்களை விரும்பி பார்ப்பார் அது இவருக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு மற்றும் தனிமையை விரும்புவர் அதன் காரணமாய் தான் பல சினிமா விழாவில் இவர் கலந்து கொள்வதில்லை என்றும் பேசப்படுகிறது.

பக்தி:

கடவுள் பக்தி உள்ள ஒரு நடிகர் தான் இவர் ஆனாலும் “போலி சாமியார்களை” பார்த்தால் வெரட்டி அடிக்க கூடிய நபர்.

கடவுளின் பெயரை  சொல்லி ஏமாற்றுபர்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்.

நண்பர்கள்:

தமிழ்  திரையுலகில் இவருக்கு நெருங்கிய நண்பர்கள் என்றால் அது சத்யராஜ் மற்றும் மணிவண்ணன் போன்ற  நடிகர்கள்.

ஹாலிவுட் படங்களை விரும்பி பார்க்கும் இவர் தான் பார்த்து ஒரு படம் பிடித்து விட்டால் அதை நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களை பார்க்க சொல்லக்கூடிய பழக்கம் கொண்டவர்.

Goundamani Daughter, Age, Family, Wife, Comedy, Memes, Height, Native Place, Reaction, Salary, Wiki, Biography, Real Name, Photos, Images

திரையில் வெற்றி:

சினிமாவில் வெற்றி பெற வேண்டும், சினிமாவில் சாதிக்க வேண்டும் நல்ல நடிகனாக வேண்டும் என நினைக்கும்  பலருக்கும் இவர் சொல்லிகொள்ளுவது ஒன்றே ஒன்று தான்.

goundamani with sivakarthikeyan | reaction | movie | bio | biography | templates
goundamani with sivakarthikeyan

அது என்னவென்றால் “சினிமால நடிகனாக வேனா அதிர்ஷ்டம் கை கொடுக்கலாம் ஆன சினிமாவில் பல வருடங்கள் பயணிக்க திறமை மட்டுமே கைக்கொடுக்கும்” கூடவே கொஞ்சூண்டு பொறுமையு இருந்தால் உங்க வாழ்க்கையில் வறுமையே இருக்காது என்கிறார்.

இந்த பதிவை இவ்வளவு நேரம் ஒதுக்கி படித்ததற்கு நன்றி மேலும் பல சிறந்த சீரியல் மற்றும் சினிமா கலைஞர்கள்  பற்றிய பதிவும் நம் இணையதளத்தில் உள்ளது படித்து மகிழவும். நமது வெப்சைட் – ஐ ( website ) புக்மார்க் ( Bookmarks ) செய்து கொள்ளுங்கள். நன்றி…

6 thoughts on “Goundamani Daughter, Age, Family, Wife, Comedy, Memes, Height, Native Place, Reaction, Salary, Wiki, Biography, Real Name, Photos, Images

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube