Cinema

Kovai Sarala, Age, Family, Wife, Comedy, Vadivelu, Height, Salary, Wiki, Biography, Real Name, Movie, Photos, Images

Kovai Sarala, Age, Family, Wife, Comedy, Vadivelu, Height, Salary, Wiki, Biography, Real Name, Movie, Photos, Images

தமிழ் சினிமாவை பொருத்தவரையில் காமெடி நடிகர்கள் என்றால் பெரும்பாலும்  ஆண் நடிகர்கள் தான், அவர்களுக்கு மத்தியில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான்  காமெடி நடிகைகள் திரை துறையில் உள்ளனர்.

அவர்களில் உச்ச காமெடி நடிகை  மற்றும் பலருக்கும் பிடித்த நடிகை தான் கோவை சரளா ( Kovai Sarala ) இவரை பற்றிய பல சுவாரஸ்ய மற்றும் தெரியாத பல தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம்.

ஆரம்ப காலம்:

கோவை சரளா அவர்கள் ஏப்ரல் 7ம் தேதி 1962 ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தார். கோவையில் உள்ள ஒரு மலையாள குடும்பத்தில் தான்  பிறந்தார்.

kovai sarala details & reaction
kovai sarala details
kovai sarala details

நடிப்பின் மீது ஆசை:

இவர் 60’s  ல் பிறந்ததால் அந்த காலத்தில் டாப் ஹீரோவான MGR -ன் படங்களை அதிக அளவில் விரும்பி பார்ப்பார்.

அவர் நடிப்பில் ஈர்க்கப்பட்ட பின் தான் நாமும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் வர தூண்டுதலாக இருந்தது.

முதலாவது படம்:

திரை துறையில் சாதிக்க வேண்டும் என துடிப்போட இருந்த சரளாவுக்கு, அவரின் அப்பா மற்றும் சகோதரி உறுதுணையாக இருந்தனர்.

பின் “வெள்ளி ரத்தம்” (  Velli Ratham  ) என்கிற படத்தில் நடித்தார். இதுதான் தமிழில் இவர் ( kovai sarala ) நடித்த முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படமானது 1979 – ல் வெளிவந்தது. அப்போது சரளாவுக்கு 17 வயது தான் பள்ளியில் படித்து கொண்டிருந்தார்.

படவாய்ப்புகள்:

இதுக்கு பிறகு சரளா நடித்த படம் என்றால் அது “முந்தானை முடிச்சு” படம் தான் இதில்  அருக்காணி என்ற ரோலில் நடித்திருந்தார்.

இந்த படத்துக்கு பிறந்து அடுத்த வருஷமான 1984 ல்  ஐந்து படங்கள் அடுத்தடுத்து நடித்தார்.

அந்த ஐந்து படங்கள்:
  • வைதேகி காத்திருந்தாள்
  • தம்பிக்கு எந்த ஊரு
  • நான் சிகப்பு மனிதன்
  • நூறாவது நாள்
  • மண்ணுக்கேத்த பொண்ணு

இந்த படங்களில்  நடித்ததன் ( kovai sarala details ) மூலம் திரைத்துறையில் தெரிய ஆரம்பித்தார்   என்று சொல்லலாம்.

Kovai sarala movies - biography - name reason - kovai sarala details
Kovai sarala movies
எனர்ஜியின் ரகசியம்:

கோவை  சரளா என்றாலே அவரின் எனர்ஜி ஆன நடிப்பு பலருக்கும் கண்முன் வந்துபோகும் அதை  பற்றி அவர் சொல்லுவது ” எப்போதுமே பாசிடிவ் ( Positive ) – ஆ எப்போதுமே சந்தோஷமா இருக்கனும் எதை பற்றியும் அதிகம் யோசிச்சு கவலைல ஒக்கார கூடாது ” நாம கவலைல இருந்த மட்டும் அந்த விஷயம் நடந்துருமா என்ன?

நாளைக்கு என்ன நடக்குங்கறது நம்ம கைல இல்லை இதை தான் நான் follow செய்கிறேன் இதுதான் என்னுடைய எனர்ஜியின்  ரகசியம் என்று சொல்கிறார்.

குடும்ப ரசிகர்கள்:

பொதுவாகவே, இவரின் படங்களுக்கு குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேட்பு கிடைக்கும் அதுவும் இவரின் காமெடி காட்சிகள் என்றால் சொல்லவே வேண்டாம்.

வடிவேலுவுடன் இவர் நடித்த காமெடி திரை படங்களாகட்டும் லாரன்ஸ் மாஸ்டருடன் இவர் இணைந்து நடித்த “காஞ்சனா” படமாகட்டும் பேமிலி ( Family Audiences) ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட படங்கள்.

” காஞ்சனா படத்தில் நடிக்கும் போது  இது குழந்தைகளுக்கு இவ்வளவு பிடிக்கும் கவரும் என்று நான் நினைக்கவே இல்லை எல்லா புகழும் இயக்குனர் லாரன்ஸ்கே ” – Kovai sarala speech

வாண்டுகள்:

இந்த படங்களுக்கு பிறகு எங்கயாவது வெளியில் சென்றால் வாண்டுங்கள் ( குழந்தைகள் ) கூட்டம் கூட்டமாக என்னுடைய ரசிகர்களாக என்னை சுற்றி விடுவார்கள்.

kovai sarala vadivelu comedy - interview
kovai sarala vadivelu comedy

அதோடு, என்னை தூக்கிக்கோங்க என்று அடம் பிடிப்பார்கள்  நானும் தூக்கி வெச்சுப்பேன் மற்றும் புகைப்படங்களும் என்னுடன் குழந்தைகள் விரும்பி எடுத்து கொள்வார்கள்.

இது மனதுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்கிறார்.

ஹிட் படங்கள்:

சரி , இவர் நடித்து மக்கள் மனதை கவர்ந்து நன்கு ஓடிய சூப்பர் ஹிட் படங்களின் பட்டியலை பார்ப்போம்.

படங்களின் பெயர் வெளியான வருடம்
வெள்ளி ரதம்1979
வைதேகி காத்திருந்தாள் 1984
முந்தானை முடிச்சு 1983
தம்பிக்கு எந்த ஊரு 1984
நான் சிகப்பு மனிதன் 1985
நூறாவது நாள் 1984
எங்கள் குரல்1985
சின்ன வீடு 1985
ஜப்பானில் கல்யாணராமன்1986
யாரோ எழுதிய கவிதை 1986
லட்சுமி வந்தாச்சு1986
சின்ன குயில் பாடுது1987
பேர் சொல்லும் பிள்ளை1987
பாண்டி நாட்டு தங்கம்1989
தம்பி தங்க கம்பி1988

படங்களின் பெயர்வெளியான வருடம்
புதிய ராகம் 1991
சேதுபதி IPS 1994
காலம் மாறிப்போச்சு 1996
அவள் வருவாளா 1998
மின்சார கண்ணா 1999
திருப்பதி ஏழுமலை
வெங்கடேஷா
1999
பாட்டாளி 1999
மனைவிக்கு மரியாதை 1999
கந்த கடம்பா கதிர் வேல 2000
கூடி வாழ்ந்தால் கூடிநன்மை 2000
மாயி 2000
பட்ஜெட் பத்மநாதன் 2000
மிட்டா மிராசு 2001
வீட்டோட மாப்பிளை 2001
பஞ்சதந்திரம் 2002
கோவை பிரதர்ஸ் 2006
முனி 2007
காஞ்சனா 2011
கொம்பன் 2015
காஞ்சனா 2 2015
மெர்சல் 2017
தனது நடிப்பு:

ஒரு படத்தில் இவர் நடிக்க கமிட் ஆன பின் கதாபாத்திரம் பற்றி இயக்குனர் சொன்னதும் அந்த ரோலில் எப்படி நடித்தால் சரியாக வரும் என்று ஹாம் ஒர்க் எல்லாம் செய்வாங்களாம்.

இருந்தாலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஸ்பாட் இம்ப்ரொவிசேஷன் ( spot improvisation )  நடக்கும் என்கிறார்.

பெயர் காரணம்:

நடிகை சரளாவுக்கு “கோவை சரளா” என்று பெயர் உள்ளதால் பெரும்பாலானோர் இவர் பூர்வீகம் கோயம்புத்தூர் என்று நினைப்பீர்கள் ஆனால் இவர் பூர்வீகம் கேரளா.

இவரின்  அம்மா அப்பா சொந்த ஊர் கேரளா, ஆனால் சரளா அவர்கள் படிச்சது வளர்ந்தது எல்லாமே கோயம்புத்தூர் தான். வீட்டிலும் பெரும்பாலும் தமிழில் தான் பேசுவாராம்.

kovai sarala name reason
kovai sarala name reason

இதன் காரணமாய் சரளாவை விட “கோவை சரளா” என்பது நன்றாய் உள்ளதே என மீடியா நபர்கள்   இவரிடம் கேட்க சரி அப்படியும் கூப்பிடலாம் என இவர் சொல்ல அன்றிலிருந்து தான் இவரை அப்படி கூப்பிட ஆரம்பித்தார்கள்.

இன்று கோவை சரளா என்றால் மட்டும் தான் இளைஞர்களுக்கு  தெரியும் வெறும் சரளா என்றால் நிச்சயம் கொளம்புவார்கள்.

பேய்-நம்பிக்கை:

இவங்க பயங்கரமான பேய் பயம் உள்ள நபராம் . வீட்டில் தனியாக தூங்கவும் ரொம்ப பயப்படுவாங்கலாம்.

இப்போது அப்பறோம் சினிமாவில் மட்டும் எப்படி பேயுடன் காமெடி பண்ணுகிறார் என்று , அது பற்றி இவர் சொல்லுவது அது சினிமாங்க கூட்டம் கூட்டமா நேரிய பேரு இருப்பாங்க.

அதனால், பயமே இருக்காது நடிக்கும் போது எங்க பேயி வரு என்ன எஸ்பிரஸ் நம்ம கொடுக்கணும்னு நமக்கு தெரியுங்க. இதனால் பயம் இருக்காது.

Kovai Sarala Age, Family, Wife, Comedy, Vadivelu, Height, Salary, Wiki, Biography, Real Name, Movie, Photos, Images

சரளா வடிவேலு:

கோவை சரளாவின் பல காமெடிகள் மிக பிரபலமானவை அதில் வடிவேலு உடன் இவர் சேர்ந்து  கணவன் மனைவியாக நடித்தது பார்க்க செம தமாஷாக இருக்கும்.

இந்த காட்சிகளுக்கென  தமிழ் சினிமாவில் மிக பெரிய கூட்டமே உள்ளது என்றாலும் மிகை ஆகாது.

இது பற்றி இவர் சொல்லுவது “பொதுவாக தமிழ் கலாச்சாரத்தில் கணவன் என்ன செய்தாலும் மனைவி பொறுத்து பொறுத்து  போவார்கள் ” அதாவது 90’s காலகட்டத்தில் அந்த டைம்லேயே புருஷனை போட்டு துவைத்த ஆளு கோவை சரளா.

அதாவது அந்த டயமில் ( timing ) –  ல்  தான் இவரும் வடிவேலும் சேர்ந்து நடித்த பல படங்கள்  திரைக்கு வந்தது.

அதை பார்த்த மக்கள் “என்னமா போட்டு அடிக்குற புருஷனை “ னு பேசிய காலம் ..

மனைவி உண்மையில் புருசனை அடிக்க முடியாவிட்டாலும் ஒரு நாள்  உனக்கு இருக்கு கோவை சரளா ( kovai sarala details  ) மாதிரி அடி என்று நிறைய குடும்பங்களில் பேசுவார்கள். நானே கேள்வி பட்டது உண்டு என்கிறார்.

நள்ளிரவில் வந்த படவாய்ப்பு:

இவர் இரவில் நன்றாய் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது 12 மணியளவில்  பாக்யராஜ் manager மற்றும் அவரிடம் பணி செய்பவர்கள் சரளா வீட்டு கதவை தட்டி பாக்யராஜ் சார் கூப்பிட்டார் என்று சொல்லியுள்ளனர்.

இவர் நைட் 12 மணிக்கு எப்படி வருவது வேற யாராவது பாருங்க அது இது என கத்தியுள்ளார் ( kovai sarala details ). இவருக்கு உண்மையில் இவர்கள் சினிமா ஆட்கள் தான என்றும் சந்தேகம் இருந்துள்ளது.

இருப்பினும், நடுஇரவு என்பதால் திட்டி அனுப்ப பார்த்து உள்ளார், ஆனால் சரளாவின் அப்பா, வயதானவர் ( பாக்யராஜ் அனுப்பியவர் ) மற்றும் 2 சினிமா  நபர்கள் வந்துள்ளனர் பாக்யராஜ் கூப்பிடத்தாக கூறுகிறார்கள்.

போயி பாருங்க என்று சொல்லி அவரும் கூடவே வந்துள்ளார். பின்பு ஷூட்டிங் ஸ்பாட்  சென்று பார்த்தால் நூற்றுக்கணக்கானோர் இருந்து உள்ளனர்.

பயங்கரமாய் லைட் செட்டிங்லாம் செய்து பரபரப்பாய் ஷூட்டிங் போய் கொண்டிருந்ததாம். இவருக்கும் அப்போதான் கொஞ்சம் நம்பிக்கை வந்தது நிஜ ஷூட்டிங் என்று.

பின் நடந்த விஷயம் தான் மேலும் சுவாரஸ்யமே, இவருக்கு ( சரளா ) என்ன ரோலில் நடிக்க போறோம் என்பதே தெரியவில்லை.

அப்போது இவருக்கு இளம்வயது இரண்டாவது படம் வேற, அதனால் முக்கிய ரோலாக இருக்கும் என நினைத்தார். அப்போது இவரிடம் வந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ( makeup artist ) இவங்களுக்கு மேக்கப் போடா ஆரம்பித்தான்.

“எதுக்கு இப்போ மூஞ்சியில கோடு வரையுற , எதுக்கு வெள்ளை முடி விக் எடுக்கற ” என பல கேள்வி சரளா கேட்க மேக்கப் போட்டதும் தான் அவருக்கு தெரிந்தது.

kovai sarala age

 old comedy movies - baakiyaraj - chinna veedu
chinna veedu movie

அம்மா  ரோலில் தான் நடிக்க கூப்பிட்டு இருக்கிறார்கள் என்று பின் வேற யாரவதை நடிக்க கூப்பிடுங்கள் நான் பண்ண முடியாது என சொல்லிவுள்ளார்.

அடுத்து, பாக்யராஜு இவரை அழைத்து தன்மையாக பேசி உள்ளார், இந்த ரோலில் நடித்தால் உனக்கு நல்ல  இடம் சினிமாவில் கிடைக்கும் என்று கூற இவரும் சம்மதித்து நடித்த படம்தான் சின்ன வீடு.

23 வயது:

அப்போது இவருக்கு வெறும் 23 வயதுதான் (kovai sarala age) ஆனால் ஏற்று நடித்த ரோலின் வயது  60 என்பது குறிப்பிடத்தக்கது.

சதிலீலாவதி:

கமல் மற்றும் சரளா சேர்ந்து நடித்த வெற்றி படம்  தான் “சதிலீலாவதி” அந்த காலகட்டத்தில் பலருக்கும் பிடித்த படமாக இருந்தது. இன்றும் பலர் இப்படத்தை டிவியில் ஒளிபரப்பும் போது விரும்பி பார்ப்பதுண்டு.

ஆரம்பத்தில் இவரிடம் ( kovai sarala ) கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கிறீர்கள் என்றபோது இவர் நம்பவே இல்லையாம்.

ஏதோ நம்மிடம் விளையாடுகிறார்கள் என்றுதான் நினைத்தாராம். பின்பு தான் இது நிஜம் என்பது அவருக்கு தெரியவந்துள்ளது.

இருந்தாலும், படம் திரைக்கு வரும் வரை அது நம்ப முடியாத வகையில் தான் இருந்தது என்கிறார்.

காதல்:

இவர் ஒரு பேட்டியில் தனக்கு வந்த ப்ரோபோசல் பற்றி சொல்லும் போது ” முதல் முதலாய் ஒருவர் எனக்கு லவ் லெட்டர் தரும்போது வாங்கிட்டேன் ஆனால் கைலா செமயா நடுங்கிருச்சி” பின் அதை எடுத்துட்டு போய் அப்பாகிட்ட கொடுத்துட்டேன்.

எதுக்கு இவன் என்ன பாத்து லவ் பண்றா அப்டிதா ஃபீல் பண்ணனேன், பிறகு அப்பா அவரை கூப்பிட்டு இதுல தப்பு இனிமேல் இப்படி செய்யாத என்று டீசெண்டா சொல்லிட்டார்.

இதுக்கு பிறகும் சில ப்ரோபோசல் வந்தது எனக்கு நேரமில்லை என்று சிரித்தப்  படி சொல்லிவிட்டு சென்று விடுவாராம்.

லவ் பண்ணிருந்தால்:

அப்படி யாரவதை லவ் செய்து போயிருந்தால்   சினிமாவில் இந்த இடத்தில இருந்திருப்பேனா என்பது தெரியவில்லை.

ஹீரோயின் or காமெடி நடிகை:

தற்போது சினிமாவில் ஹீரோயினாக நடிக்க விரும்புவீங்களா இல்லை காமெடி நடிகையாக நடிக்க விரும்புவீங்களா என்று கேட்க, அவரின் பதில் ஹீரோயினாக நடித்தால் சில வருடங்கள் தான் நடிக்க முடியும்.

comedy tamil movie kanchana 2
kovai sarala speech in comedy

பின்பு காணாமல் போய் விடுவோம். ஆனால் காமெடி நடிகையாக நடித்தால் பல வருஷம் தொடர்ந்து சினிமாவில் இருக்க முடியும்.

அதனாலயே எனக்கு காமெடி நடிகையாக இருக்க  தான் மிகவும் புடிக்கும் என்கிறார்.

சரளாவின் கருத்து:

ஒரு வரியில் பிரபல   நடிகர்களை பற்றி இவங்க சொல்லுவது ( Kovai sarala speech ).

கவுண்டமணி – நக்கலுக்கு அளவே இல்லை

செந்தில் – பாக்க குழந்தை முகம் ஆனா பண்ற வேலை இருக்கே

வெண்ணிற ஆடை மூர்த்தி – மிகவும் பிடித்த நபர், அவர் ஒரு இடத்தில இருந்தால் செம சிரிப்பு சத்தம் அங்கு இருக்கும்.

விவேக் – நல்ல ஜெண்ட்ல இருப்பாரு சிரிக்காமயே காமெடி பண்ணுவாரு.

வடிவேலு  – என்னா கலைஞன் எல்லாமே சிறப்பாக செய்வார்.

உங்களுக்கு கோவை சரளா நடித்த படத்தில் காமெடியில் எது மிகவும் பிடிக்கும் என்பதை கீழே தெரிவியுங்கள்.

10 thoughts on “Kovai Sarala, Age, Family, Wife, Comedy, Vadivelu, Height, Salary, Wiki, Biography, Real Name, Movie, Photos, Images

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube