Cinema

ரோஜா சீரியல் பிரியங்கா பற்றி பலரும் அறியாதவை!

Roja serial priyanka details: சின்னத் திரையில் சீரியல் தொடருக்கு பெயர் போன பல டிவி சேனல்கள் உண்டு அந்த வரிசையில் சன் டிவி பல ஆண்டுகளாக தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளது எனலாம்.

தற்போது ஒளிபரப்படும் தொடர்களில் முதல் மூன்று இடத்திற்குள் வருவது இத்தொடர் தான். சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 7மணிக்கு ஒளிபரப்பபடும் தொடர் ரோஜா.

ரோஜா தொடரில் ரோஜாவாக வலம் வரும் பிரியங்காவை பற்றின சில சுவாரசியமான தகவல்களைக் காண்போம் வாங்க.

தனி பட்ட தகவல்கள் :

Roja serial priyanka details:

ரோஜாவின் முழு பெயர் பிரியங்கா நல்காரி. இவர் ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி 1994ஆம் ஆண்டு ஆந்திரப்பிரத்தேசத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் பிறந்துள்ளார்.

Roja serial priyanka details
roja serial priyanka details

இவர் தனது பள்ளி படிப்பை Brilliant Grammar High School, Narayanaguda என்ற பள்ளியில் முடித்துள்ளார். மேலும் இவர் தனது கல்லூரி படிப்பை Sri Chaitanya Educational Institutions முடித்துள்ளார்.

அங்கு இவர் பிகாம் பட்டம் பெற்று உள்ளார். மேலும் Osmania University ல் தன்னுடைய MBA பட்டத்தினையும் பெற்றுள்ளார். தற்போது இவர் ஹைதெராபாத்தில்  வசித்து வருகிறார். 

ஏழ்மையும் சவால்களும் :

ரோஜா தொடரில் வருவது போலவே ஆரம்ப காலங்களில் இவருடைய குடும்பமும் மிகவும் ஏழ்மையான குடும்பமாக இருந்துள்ளது. இவருடைய அப்பாவிற்கு காலில் விபத்து ஏற்படவே குடும்பம் மிகவும் ஏழ்மையான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.

இவர் திரை உலகிற்கு வருவதற்கு முன்பு இவருடைய குடும்பம் அன்றாட உணவிற்கே சிரம்ம பட்டதாகவும் பல நாள்கள் ஒரு நேர உணவு மட்டும் சாப்பிட்டு விட்டுத் தூங்க செல்வார்களாம்.

இவருக்கு படிப்பு என்றால் மிகவும் பிடிக்குமாம். இதனால் இவர் பள்ளிக்கு தவறாமல் சென்றுஉள்ளார்.
அதோடு பள்ளியில் பீஸ் கட்ட முடியாமல் பல நாட்கள் வகுப்பு அறைக்கு வெளியே நின்று உள்ளதாகவும்  கூறியுள்ளார்.

பின்னர் ஒரு வழியாக பள்ளி படிப்படிப்பை முடித்து விட்டார். பின்னர் கல்லூரியில் சேர ஆசை இருந்துள்ளது. ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக என்ன செய்வது என்று தெரியாமல் இருந்துள்ளார்.

Roja serial priyanka real name and life

அப்போது பிரியங்கா அப்பாவுடன் வேலை செய்த நண்பர் ஒருவர் பண உதவி செய்து உள்ளார். அதன் மூலம் கல்லூரி முதலாம் ஆண்டுப் படிப்பை முடித்துஉள்ளார்.

பின்னர் மீண்டும் இரண்டாம் ஆண்டு கல்வி கட்டணம் கட்ட வேண்டி இருந்து யாரிடம் கேட்பது என்று தெரிய வில்லையாம் அப்போது தான் இவர் ஒரு முடிவு எடுத்தாராம்.

இனி நாம் படிக்க வேண்டாம் நம்முடைய தங்கைகளைப் படிக்க வைப்போம் என்று முடிவு எடுத்துள்ளார். தன்னுடைய தங்கைகளைப் படிக்க வைக்க தன்னுடைய படிப்பை தியாகம் செய்துள்ளார்.

பின்னர் திரையுலகில் நுழைந்த பிறகு மீண்டும் தன்னுடைய கல்லூரிப் படிப்பை தொடர்ந்துள்ளார்.

அம்மாவின் உழைப்பும் வெற்றியும் :

தற்போது பிரியங்கா இந்த நிலையில் உள்ளார் என்றால் அதற்கு முதல் காரணம் இவருடைய அம்மா தானம் ஏனெனில் எந்த இடத்தில ஆடிஷன் நடந்தாலும் இவரை அழைத்துச் செல்வாராம்.

அவ்வாறு இவர் அம்மாவும் இவரும் செய்த செய்த கடின உழைப்பே இவரை இந்த நிலைக்கு இவரைக் கொண்டு வந்துள்ளது எனலாம்.

Roja serial priyanka mother - family sisters

ANCHOR பிரியங்கா:

இவர் தன்னுடைய பள்ளி காலத்திலே நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகிவிட்டராம். பின்னர் இவரிடம் உங்களுக்கு நடிக்க ஆசை உள்ளதா என்று கேட்டு உள்ளார்கள் இவரும் உடனே சரி என்று கூறியுள்ளார். இதன் மூலம் ஆந்திராவில் உள்ள பல டிவி தொடர்களில்  நடித்துக் கொண்டு இருந்துள்ளார்.

பின்னர் இவர் பத்தாம் வகுப்பு படிக்கும்போது இவருக்கு முதல் வெள்ளி திரை வாய்ப்பு வந்ததாம்.

2010 இயக்குனர் சந்திர சித்தார்த்த இயக்கத்தில் அந்தரி பந்துவய(Andari Bandhuvaya) என்ற தெலுங்கு படத்தில் பிரியங்கா என்ற பெயரில் நடிகை பத்மபிரியா அவர்களுக்கு  தங்கை வேடத்தில் நடித்து இருந்தார்.

இவருக்கு நடனம் என்றால் மிகவும் பிடிக்குமாம். அதனால் தெலுங்கில் இவர் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு உள்ளார்.  

தமிழ் படங்களில்  பிரியங்கா:
தமிழில் இவருடைய முதல் படம் சுந்தர்சி அவர்களின் இயக்கத்தில் 2013ல் வெளியான தீயா வேலை செய்யனும் குமாரு ஆகும். அந்தப் படத்தில் அன்ஷிகா அவர்களுக்கு தோழியாக நடித்துள்ளார்.

ரோஜா வாய்ப்பு:

பிரியங்கா ஆந்திர சின்னத் திரை தொடர்களில் நடித்துக் கொண்டு இருக்கும் பொழுது இவருக்கு சன் தொலைக்காட்சிலிருந்து அழைப்பு வந்துள்ளது.

அந்தச்சமயம் இவர் ஆந்திராவில் இருந்துள்ளார். அதனால் இவருக்கு தமிழ்நாட்டிற்கு வர விருப்பம் இல்லாமல் இருந்துள்ளது. அதனால் இவர் எனக்கு பயமாக இருக்கிறது நான் வரமாட்டேன் என்றே கூறிவிட்டாராம்.

இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் அழைப்பு வரவே இவருடைய தோழி ஒருவர் ஒரு முறை முயற்சி செய்து பாரு என்று கூறியுள்ளார்.

பின்னர் இவர் பட குழுவிற்கு தொடர்பு கொண்டு என்னோட அம்மாவுடன் வரலாமா என்று கேட்டுள்ளார் இவர்களும் வர சொல்லி உள்ளனர்.

Roja serial priyanka details

இவர் இந்தத்தொடருக்கு வரும்பொழுது எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் இருந்துள்ளார். சரி பாக்கலாம் என்ற எண்ணத்துடன் தான் தமிழ்நாட்டிற்கு வந்ததாக ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

இவருக்கு இத்தொடரில் ஆடிஷனே வைக்கவில்லையாம் அதற்கு பதிலாக ப்ரோமோ ஷூட்டிங் வைத்து விட்டனராம். அதன் மூலம் இவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். 

ரோஜா:

தற்போது ரோஜா தொடரில் ரோஜாவாக நடித்துக் கொண்டு இருக்கிறார். இவருக்கு ஜோடியாக அர்ஜுன் என்ற பெயரில் சிபு நடித்துக் கொண்டு இருக்கிறார். இத்தொடரில் இருவரின் நடிப்பும் பிரமாதமாக உள்ளது என அணைத்து மக்களும் நினைக்கின்றனர்.


இவர்களைப் பார்ப்பவர்கள் இவர்கள் இருவரும் நிஜ ஜோடிகள் என்றே நினைகின்றனர்.
தற்போது இரண்டரை வருடங்களாக இத்தொடர் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.

ஒரே ஒரு சீரியலின் மூலம் அணைத்து தமிழ் மக்களின் குடும்பங்களிலும் ஒருவராக மாறியுள்ளார் ரோஜா.
அதோடு தமிழ் நாட்டில் மட்டும்மல்லாமல் வெளி நாட்டில் உள்ள பல  தமிழ் மக்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கிறார்.

இத்தொடரில் நடிப்பதால் இவர் சென்னையில் தங்கி உள்ளார் அதனால்  இவர் தன்னுடைய குடும்பத்தை மிகவும் மிஸ் பண்ணுவதாக கூறியுள்ளார்.

sun tv serial actress bio

மாதத்திற்கு இருபத்து ஐந்து நாள்களும் ஷுட்டிங் உள்ளதாம். அதனால் ரோஜாவிற்கு தன் சொந்த ஊருக்கு செல்ல முடியவில்லையாம் இருந்தாலும் தமிழ் நாட்டு மக்களின் அன்பை பார்க்கும்போது இவருக்கு அந்த வருத்தம் மறைந்து விடுகிறதாம்.

சன் குடும்ப விருதுகள்:

இவருக்கு சன் குடும்ப விருதுகளிலிருந்து சின்னத் திரையில் சிறந்த நடிகைக் காண விருது கிடைத்து உள்ளது.

மேலும் இதே விருது வழங்கும் விழாவில் அர்ஜுன் உடன் இணைந்து Popular Couple Award என்ற மற்றொரு விருதையும் பெற்றுள்ளார். இது இவருக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கிறதாம்.

காஞ்சனா 3:

இவர் நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களின் மிகப் பெரிய ரசிகையாம். காஞ்சனா படத்தில் நடிக்க ஆடிஷன் சென்றுள்ளார் பார்த்தால் அங்கு ஆடிஷன் முடிந்து விட்டதாம். இவரும் லாரன்ஸ் அவர்களுடன் செல்பீ எடுத்துக் கொண்டு வந்து விட்டாராம்.

சிறிது நாள்கள் கழித்து  காஞ்சனா படத்தில் நடிக்க ராகவா லாரன்ஸ் அவர்களிடமிருந்து அழைப்பு வந்ததாம். 
அதில் லாரன்ஸ் அவர்கள் “உங்களுக்கு சின்ன வேடம் உள்ளது நடிக்க விருப்பம் இருந்தா வாங்க கட்டாய படுத்தமாட்டோம்” என்றார்களாம்.

இது இவருக்கு மிகப் பெரிய ஆச்சிரியமாக இருந்ததாம் பின்னர் இவரே “சார் நான் உங்களின் மிகப் பெரிய ரசிகை உங்கள் படத்தில் வந்தால் மட்டும் போதும்” எனக் கூறியுள்ளார். பின்னர் காஞ்சனா3 படத்தில் நடித்துள்ளார். 

திருமண ஏற்பாடுகளும் நிறுத்தமும் :

இவர் ராகுல் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் தெலுங்கு சின்னத் திரை உலகில் ஒன்றாக நடித்து வந்து உள்ளனர்.

பின்னர் இவர்கள் இருவருக்கும் 2018ஆம் ஆண்டு திருமண ஒப்பந்தம் நடந்துள்ளது. ராகுல் தான் உலகம் என்று ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.

family of serial actress - sun tv

பின்னர் ராகுல் அவர்கள் மலேசிய சென்று விடவே இருவரும் தொலைபேசியில் பேசிவந்துள்ளனர்.     

இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது இதனால் தற்போது இருவரும் சிறிது காலம் பிரிந்துஉள்ளனர். இருப்பினும் பிரியங்காவிற்கு ராகுல் மீது உள்ள காதல் சிறிதும் குறையவில்லையாம்.

மீண்டும் ராகுலை பார்க்கும்போது அவரைச் சமாதான படுத்தி விடுவதாக ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

இவருடைய பெயரை பலரும் தவறாக அழைக்கின்றனராம் ஆனால் இவருக்கு அது பெரிய விஷயம் இல்லையாம் ஏனெனில் தமிழ் நாட்டு மக்களுக்கு இவர் ரோஜா தான்.

மேலும் இத்தனை ரசிகர்கள் கிடைப்பார்கள் எனக் கனவிலும் நினைக்க வில்லையாம்.
வெள்ளி திரை வாய்ப்பு வந்தவண்ணம் உள்ளதாம் கூடிய விரைவில் நல்ல கதையில் நடிப்பாரென எதிர் பார்க்கப்படுகிறது.


சின்னத் திரையில் பூத்து குழுங்கிய ரோஜா வெள்ளி திரையிலும் பூத்து அனைவரின் மனதையும் கொள்ளை அடிக்கும் என ரோஜாவின் ரசிகர்கள் நம்புகின்றனர்.

6 thoughts on “ரோஜா சீரியல் பிரியங்கா பற்றி பலரும் அறியாதவை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube