குக் வித் கோமாளி சிவாங்கி தனிப்பட்ட வாழ்கை!
cook with comali shivangi life: தற்போது சனி மற்றும் ஞாயிற்றுகிழமை மாலை 6.30 மணி ஆனாலே அனைவரும் டிவி ரிமோட்டை எடுத்து விஜய் டீவியை தேடுகின்றனர். காரணம் வேறு ஏதும் இல்லை குக் வித் கோமாளி ஷோ தான்.
தற்போது விஜய் டிவி மட்டும்மல்லாமல் ஹாட்ஸ்டார் யு டியூப்(you tube) போன்ற சமுக வலை தளங்களிலும் தன்னுடைய ஆதிக்கத்தை காட்டிவருகிறது இந்த ஷோ.
குக் வித் கோமாளியே பிரபலமான ஷோ தான். மேலும் கூடுதலாக அந்த ஷோவில் சில பிரபலமான நபர்கள் உண்டு. அந்த வரிசையில் முதல் இரண்டு இடத்திற்குள் வருவது நம்ம புகழ் மற்றும் சிவாங்கி.
தற்போது அணைத்து தமிழ் மக்களின் கியூட் பேபி என்றால் அது நம்ம சிவாங்கி தான். தன்னுடைய அழகான மற்றும் குழந்தைத்தனமான பேச்சால் அனைவரையும் தன் வசப்படுத்தி உள்ளார். அவரைப் பற்றின சில கியூட்டனா தகவல்களை இங்குக் காண்போம் வாங்க….
தனி பட்ட வாழ்கை: cook with comali shivangi life

நம்ம சிவாங்கி 2000 ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்துள்ளார். தற்போது குடும்பத்துடன் சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் வசித்துக் கொண்டு இருக்கிறார்.
தன்னுடைய பள்ளிப் படிப்பை சிவாங்கி சென்னையில் பிரபலமான சின்மய வித்யாலயா மெட்ரிக் ஸ்கூல்ளில்(Chinmaya Vidyalaya Matriculation Hr.SecSchool)முடித்துள்ளார். தற்பொழுது சிவாங்கி (MOP Vaishnav college for women) இரண்டாம் ஆண்டு Bachelor of Commerce (2nd year)படித்துக் கொண்டு இருக்கிறார்.
சிவாங்கியின் அப்பா பெயர் கிருஷ்ணாகுமார்(Krishnakumar). இவருடைய அம்மா பெயர் பின்னிக் கிருஷ்ணாகுமார்(Binni Krishnakumar). இவருக்கு ஒரு தம்பியும் உண்டு அவருடைய பெயர் சுந்தர் கிருஷ்ணாகுமார்(Sundhar Krishnakumar)ஆகும்.
இசை குடும்பம் :
சிவாங்கின் குடும்பம் ஒரு இசை குடும்பமாகும். அவருடைய அம்மா அப்பா இருவரும் மியூசிக்கில்(PHD) முடித்துள்ளனர். சிவாங்கின் அப்பா ஒரு இசை அமைப்பாளர் மற்றும் சாங் ரைட்டர் ஆகும்.
சிவாங்கியின் அம்மா மட்டும் சளைத்தவர் கிடையாது. இவர் ஒரு பிரபல கர்நாடக பாடகர் மற்றும் இசைக்கலைஞர் மேலும் இவர் ஒரு இசை ஆசிரியரும் கூட….

பல நாடுகளிலிருந்து இவரிடம் சங்கீதம் படித்துக் கொண்டு இருக்கின்றனர். மேலும் இவர் பல மொழிகளில் பல பாடல்களும் பாடியுள்ளார்.
சந்திரமுகி :
2005ல் வெளியான சந்திரமுகி திரைபடத்தில் இடம் பெற்ற பிரபல பாடலான ராரா பாடலை சிவாங்கி அம்மா தான் பாடியுள்ளார்.
அப்போதிலிருந்து இப்பொழுது வரை மிகப் பிரபலமாகவும் பல ரியாலிட்டி ஷோவில் பாடப்பட்டு வருகிறது.
அணைத்து மக்களும் தினமும் ரசித்துக் கேக்கும் அலைபாயுதே கண்ணா பாடலை பாடியவரும் இவர் தான்.
சிவாங்கி பிரபலம் அடைவதற்கு முன்பு:
அப்பா அம்மா இருவரும் இசையில் காலூன்றி இருக்கும்பொழுது சிவாங்கி எந்த ஷோவிலும் கலந்து கொள்ளாமல் இருந்துள்ளார்.
ஏனெனில் நம்ம சிவாங்கிக்கு ஒரு இடத்தில் உட்கார்ந்து சங்கீதம் படிப்பது மிகவும் சிரமமாம். ஆனால் பாட்டி சொல்லிக் கொடுத்தால் கவனிப்பாரம்.
சிவாங்கி அம்மா கச்சேரியில் கலந்து கொள்ளும் பொது உடன் இவரும் கலந்து கொள்வார். அப்பொழுது தான் சிவாங்கிக்கு பாட வேண்டும் என்ற எண்ணம் வந்ததாம்.
சூப்பர் சிங்கர் 7 :
அவ்வாறு இருக்கும்பொழுது சூப்பர் சிங்கர் 7 ஆடிஷனலில் கலந்து கொண்டு உள்ளார். ஆடிஷனில் தேர்வாகியும் விட்டார் நம்ம சிவாங்கி.
அனுராதா ஸ்ரீராம், ஸ்வேத்தாமோகன், உன்னிகிருஷ்ணன் மற்றும் பென்னிதையால் போன்றோர் இந்த ஷோவிற்கு ஜர்ஜ் ஆக இருந்தனர்.
புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா என்பது போல நம்ம சிவாங்கி முதல் சுற்றில் கலக்கி இருந்தார். சிவாங்கி பாடியபொழுது அனைவரும் யாரு இந்தப் பொண்ணு இவ்வளவு அருமையாக பாடுகிறது என்று பாராட்டினார்.
பின்னர் சிவாங்கி பேச ஆரம்பித்தபொழுது இவருடைய குரலை கேட்டு அனைவர்க்கும் வியப்பு.
ஏனெனில் இவர் பாடும்பொழுது இவருடைய குரல் பெரியவரை போல் இருக்கும். ஆனால் போசும்பொழுது இவருடைய குரல் குழந்தைபோல இருக்கும். இதனால் பலராலும் கிண்டல் செய்யப்பட்டார்.
சூப்பர் சிங்கரில் எலிமினேட் ஆனாப் பிறகும் PEOPLE CHOISE WINNER ராக தேர்ந்து எடுக்கப்பட்டார். இதனால் டாப் 6க்ஸ் கன்டஸ்டன்ட்(Contestants) லிஸ்டில் சிவாங்கி இருந்தார்.
கேலிகளும் அவமானங்களும் :
சிவாங்கி சூப்பர் சிங்கரில் பாடிய பிறகு இவருடைய ப்ரோமோவை இவர் பார்த்துள்ளார். அந்த ப்ரோமோவின் கமென்டில் “நீ என்ன ஓவியா மாரி பண்ணுறியா” என்றும்.

அது எப்படி பாடும் போதும் பேசும் போதும் வேறு வேறு குரல் வரும் என்றும் நீ நடிக்கிறாயென ஏளனம் செய்துள்ளனர்.
நீ என்ன பண்ணாலும் ஒன்னும் நடக்காது என்றெல்லாம் கூறியுள்ளனர். இதைப் பார்த்துச் சிவாங்கி மிகவும் மனவேதனை அடைந்துள்ளார்.
மேலும் இந்த அனுபவத்தை குக் வித் கோமாளி ஷோவில் கூறியிருந்தார். அம்மாவின் முடிவும் வெற்றியும் :
சூப்பர் சிங்கரில் எலிமினேட் ஆனா பிறகும் இவர் அடிக்கடி அந்த ஷோவில் பாடி வந்துள்ளார்.
அதோடு சூப்பர் சிங்கர் முடிவடையும் தருணத்தில் குக் வித் கோமாளி பற்றியும் அதில் சமைக்க வருமாறு சிவாங்கியிடம் கூறியுள்ளனர்.
அப்போது இவர் எனக்கு சமைக்கவே தெரியாது என்று கூறியுள்ளார். அப்போது “நீங்க தா இந்த ஷோவிற்கு கரெக்டான ஆளு” என்று கூறியுள்ளனர்.
இதைப் பற்றிச் சிவாங்கி வீட்டில் கூறவே முதலில் அவருடைய அப்பா இதை ஏற்கவில்லையாம்.
நம்முடைய குடும்பம் ஒரு மியூசிக் குடும்பம் “அதோடு முதலிலே உன்னை எல்லாரும் நடிக்கிறன்னு சொல்லுறாங்க இப்போ இந்த மாரி ஷோலாயும் கலந்துக்க போறிய” என்று கேட்டுள்ளார்.
சிவாங்கி அம்மா ஊக்கம்:
ஆனால் சிவாங்கி அம்மா சிவாங்கி குக் வித் கோமாலியில் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பி உள்ளார்.
இவளுக்கு சின்ன வயசு தான் ஆகுது அதனால் முயற்சி பண்ணட்டுமே என்று அனுமதி கொடுத்துயுள்ளார். சிவாங்கியும் குக் வித் ஷோவ்வில் கலந்து கொண்டுள்ளார்.
இந்த ஷோவின் முதல் பகுதியில் சிவாங்கி சமைக்க தெரியாமல் செய்த லூட்டி கொஞ்சம் நஞ்சம் இல்லை.
குக் வித் கோமாளி சீசன் 1ல் ரேகா அவர்களிடம் தோசை போட தெரியாமல் அடி வாங்கி ஓடுவது அனைவரையும் வாய் விட்டுச் சிரிக்க வைத்தது எனலாம்.
அதோடு எத்தனை மனக்கவலை இருந்தாலும் இந்த ஒரு விடியோவை பார்த்தால் போதும் அனைவருக்கும் சிரிப்பு வந்து விடும். அந்த அளவு சிவாங்கியின் குறும்புத்தனம் இருக்கும்.
குக் வித் கோமாளி சீசன் வின்னர் நம்ம வனிதா அவர்கள் தான். இறுதிசுற்றில் அவருடன் கோமாளியா இருந்தவர் நம்ம சிவாங்கி தான்.
புகழ் மற்றும் அஸ்வின் குக் வித் கோமாளில் சிவாங்கியுடன் அதிகமாக பேசப்படும் நபர்கள் என்று பார்த்தால் அஸ்வின் மற்றும் புகழ் தான்.

சிவாங்கி அஸ்வினை மாமா என்பதும் அஸ்வின் சிவாங்கியை குழந்தைபோலப் பார்ப்பதும் இந்த ஷோவிற்கான TRPயை மேலும் உயர்த்தி உள்ளது.
புகழ் சிவாங்கி அண்ணன் தங்கச்சி பாசத்திற்கு அளவேயில்லை என்றெ கூறலாம் இதோடு அஸ்வினை புகழ் மாப்பிள்ளை என்று அழைப்பது மற்றவரால் விரும்பப்படுகிறது எனலாம்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் குக் வித் கோமாளியால் சிவாங்கி பிரபலம் அடைந்தாறா இல்லை இவரால் இந்த ஷோ பிரபலம் அடைந்ததா என்றெ தெரியவில்லை.
சிவாங்கியை பார்த்தால் தனக்கும் இது போன்ற ஒரு தங்கச்சி கிடைக்காத எனப் பல ஆண்களும் நினைக்கின்றனர். அதே எண்ணம் நம்ம சிவகார்த்திகேயன் அவர்களும் வந்துள்ளது அதைக் குக் வித் கோமாளி ஷோவில் கெஸ்டாக வந்த பொது கூறியிருந்தார்.
சிங் வித் சிவாங்கி :
யு டியூப்ல்(YOU TUBE) சிங் வித் சிவாங்கி என்ற ஷோவில் ANCHOR ராக உள்ளார். அதில் பிரபலமான நபர்களையும் முக்கியமாக சூப்பர் சிங்கரில் கலந்து கொண்ட நபர்களையும் தனக்கே உரித்தான குழந்தைத்தனத்தில் கேள்விகள் கேட்டுக் கலக்கி கொண்டு இருக்கிறார்.
அதோடு தன்னுடைய பெயரில் ஒரு யு டியூப் சேனலையும் நடத்தி வருகிறார். இந்தச் சேனல் ஆரம்பித்த சில நாள்களிலே பல லட்சம் சப்ஸ்க்கிரைப்பர்களை பெற்றுள்ளது.
குறையாக நினைத்த குரலையெ அனைவரையும் பாராட்ட வைத்தவர் இவர் தான். அதோடு நடிக்கிறாய் என்று சொன்னவர்களே தற்போது குழந்தை, செல்லம் என்று அழைத்து வருகின்றனர்.

கூடிய விரைவில் வெள்ளித்திரை நட்சத்திரமாகவோ அல்லது பின்னனி பாடகராகவோ வருவாரென அணைத்து மக்களால் எதிர்ப் பார்க்கபடுகிறது.
பலர் ஏளனம் செய்தாலும் உன்னைக் குறை கூறினாலும் உன்னுள் இருக்கும் உன்னை நீ தான் விரும்ப வேண்டும், ரசிக்க வேண்டும் அவ்வாறு சிவாங்கி இருந்ததால் தான் தற்போது பலர் சிவாங்கியை ரசிக்கின்றனர் விரும்புகின்றனர்.
Pingback: Kaalaiyan (Cook With Comali Season 4) Biography, Age, Wiki,wife