Cinemaweb series

‘பாவக்கதைகள்’ காளிதாஸ் ஜெயராம் பற்றி தெரியுமா?

Paava kadhaigal kalidas jayaram: தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளி திரைக்கு போட்டியாக வலை தொடர்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

வெப் சீரிஸ்சில் பல மொழிகளில் பல தொடர்கள் வந்தாலும் தற்போது பலரையும் பேச வைத்த ஒரு தொடர் தான் பாவக்கதைகள் தொடர்.

தற்போது நான்கு பகுதிகளாக தொடர்கள் ஒளிபரப்பட்டது அதில் முதல் தொடராக ஒளிபரப்ப பட்ட தொடர் தான் தங்கம்.

நான்கு தொடர்கள் வந்து இருப்பினும் அனைவரின் மனதிலும் அழுத்தமாக நின்ற தொடர் என்றால் அது தங்கம் தான்.

தங்கம் தொடரில் சத்தாராக வந்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் காளிதாஸ் ஜெய்ராம்  இவரைப் பற்றின சுவாரசியமான தகவல்களைக் காணலாம் வாங்க…..

Paava kadhaigal kalidas jayaram real name & lifestyle

தனிப்பட்ட தகவல்கள் :

காளிதாஸ் அவர்களின் முழு பெயர் காளிதாஸ் ஜெய்ராம் இவர் 1993ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி சென்னையில் பிறந்தார்.

இவர் தந்தை நடிகர் ஜெய்ராம் தாயார் பெயர் பார்வதி ஜெயராம் மேலும் இவருக்கு ஒரு தங்கை உண்டு அவருடைய பெயர் மாளவிகா ஜெய்ராம்.

இவர் தன்னுடைய பள்ளி படிப்பை பத்ம சேஷாத்திரி பாலா பவன் (Padma Seshadri Bala Bhavan) என்ற பள்ளியிலும் கல்லூரி படிப்பை சென்னையில் பிரபலமான கல்லூரியான லயோலா காலேஜ்ஜில் முடித்துள்ளார்.

நடிப்பும் திறமை இங்கிருந்து தான் வந்து இருக்குமோ:

இவருடைய தந்தையும் ஒரு நடிகர் தான் ஆம் கேரளா திரை உலகில் தனக்கெனத் தனி இடத்தினை பிடித்தவர். அதோடு தமிழ் மற்றும் பல மொழிகளிலும் தன்னுடைய திறனை காட்டியுள்ளார்.

மேலும் காளிதாஸ் அவர்களின் தாயாரும் ஒரு நடிகை தான் இவர் 80ஸ்ல் இருந்து 90ஸ் வரை மலையாள படங்களில் கலக்கி கொண்டு இருந்துள்ளார். தாய் எட்டு அடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பதுபோலத் தற்போது காளிதாஸின் நடிப்பு பேசப்படுகிறது.

தேசிய விருது :

சிபி மலையல் (sibi malayil) அவர்களின் இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு அப்பாவாவுடன் இணைந்து எண்டே வீடு அப்புவின்டெயம் (ente veedu appuvinteyum) என்ற படத்தில் நடித்து இருந்தார்.

kalidas jayaram in ente veedu appuvinteyum movie

இந்த படத்திக்காக காளிதாஸிற்கு தேசிய விருதும்(2004) கிடைத்துள்ளது. அதுவும் அப்போதைய குடியரசு தலைவரான APJ அப்துல் கலாம் ஆவர்களின் கைகளிலிருந்து இந்த விருதினை வாங்கியுள்ளார்.

பின்னர் திரை உலகிற்கு வராமல் தன்னுடைய படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்து உள்ளார் சிறு வயது முதலே நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்துள்ளது.

மீன் குழம்பும் மண் பானையும் :

மீன் குழம்பும் மண் பானையும்(2016) என்ற தமிழ் படத்தில் தான் ஹீரோவாக அறிமுகம் ஆனார் நம்ம காளிதாஸ்.

இந்தப் படம் முழுவதும் மலேசியாவில் எடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் ஒரு சீனில் நடிக்க கமல் ஹாசன் அவர்களிடம் கேட்டுள்ளனர் அவரும் சரியென நடிக்க ஒப்பு கொண்டுள்ளார்.

பின்னர் கமல் அவர்கள் எவ்வாறு நடிப்பது. திரை படத்தை எவ்வாறு தேர்வு செய்வது என்று சொல்லிக் கொடுத்தாராம்.

இந்தப் படத்தில் காளிதாஸிற்கு தந்தையாக நடிகர் பிரபு அவர்கள் நடித்து இருந்தார். இந்தப் படத்தில் நடிக்கும் பொழுது பிரபு அவர்களும் வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவருடன் சகஜமாக பழகுவாராம்.

இருவருக்கும் இடையில் தந்தை மகன் உறவுபோலத் தான் இருந்துள்ளது என ஒரு நேர்காணலில் காளிதாஸ் அவர்களே கூறியுள்ளார்.

ஒரு பக்க கதை :

ஒரு பக்க கதை படத்தை 2014ல் எடுக்க ஆரம்பித்துள்ளனர் சில காரணங்களால் படம் பாதியில் நின்றது பின்னர் 2020ல் படம் வெளியிடபட்டது. பாலா தரணி தரன் இயக்கத்தில் மேகா ஆகாஷ் உடன் இணைத்து நடித்து இருந்தார்.

இயக்குனர் சுதாவிடமிருந்து அழைப்பு :

சினிமா தனக்கு சரி வராது என்று நினைத்து அமெரிக்கா புறப்பட தயார் ஆகி கொண்டு இருக்கும்பொழுது சுதா அவர்களிடமிருந்து அழைப்பு வந்ததாம்.

Paava kadhaigal kalidas jayaram unknown information


காளிதாஸிடம் உங்களுக்கு ஒரு கேரக்டர் உள்ளது என்று கூறினாராம் இவரும் முதலில் தயங்கவே என்னை நம்புங்கள் என்று கூறியுள்ளார் இயக்குனர்.

ஜெய்ராம் அவர்களிடம் கூறவே முதலில் அவரும் தயங்கினாராம் ஆனால் சுதா அவர்கள் ஜெய்ராம் அவர்களின் வீட்டிற்கு சென்று முழு கதையும் கூறி சம்மதம் வாங்கி உள்ளார் ஆனால் ஜெய்ராம் அவர்கள் சத்தார் நடிப்பை திரையில் பார்த்து அழுது விட்டாராம்.

முதலில் தங்கம் கதா பாத்திரம் இவருக்கு கொடுத்தார்களாம் ஆனால் இவர் தான் எனக்கு சத்தார் வேடம் தான் வேண்டும் என்று கேட்டாராம்.

பாவக்கதையில் காளிதாஸ் Paava kadhaigal kalidas jayaram

சுதா கொங்கரா இயக்கத்தில் இந்தத் கதையில் சத்தார் என்ற பெயரில் முஸ்லீம் குடும்பத்தில் வாழும் திருநங்கையாக நடித்து உள்ளார் காளிதாஸ்.

சத்தாரின் உயிர் தோழனாக தங்கம் என்ற பெயரில் நடித்துள்ளார். சாந்தனு சத்தாரின் தங்கையாகவும் தங்கம் அவர்களின் ஜோடியாகவும் பவானி நடித்துள்ளார்.

கதை 80களின் ஆரம்பங்களில் தொடங்குகிறது கோவை அருகே உள்ள ஈரோடு தான் கதை களம் கோவை பேச்சு வழக்கும் 80ஸ் கேமரா வியூவும் நம்மை  80களுக்கே கொண்டு செல்கிறது.

கதையின் ஆரம்பமே நம்ம சத்தார் என்ட்ரி தான் இவரை அனைவரும் ஏளனமாக பேசுவது சீண்டுவது போன்று கதை உள்ளது.

இதில்  திருநங்கையாக வரும் சத்தார் தன்னுடைய சின்ன வயது நண்பனான தங்கம் மீது ஒரு காதல் இருந்துள்ளது. சத்தாரிடம் அன்பாக பேசும் ஒரே ஆண் மகன் என்றால் அது தங்கம் தான்.

இவ்வாறு கதை நகர தங்கத்திற்கு சத்தாரின் தங்கைமீது காதல் உள்ளது. இதைச் சத்தாரிடம் கூறவே அவர் மிகவும் கோவப்படுகிறார்.

பின்னர் தன்னை தானே சமாதான படுத்தி கொள்கிறார் அங்க தான் காளிதாசன் நடிப்பு உச்சம் தொட்டு இருந்தது எனலாம்.

தன்னுடைய காதலை மனதில் வைத்துக் கொண்டு  தங்கை மற்றும் நண்பரின் காதலுக்கு உதவி செய்கிறார்.

thangam web series cast

பின்னர் இருவரின் காதலை பெற்றோர் எதிர்க்கிறர்கள் இருவரையும் ஊரை விட்டுச் செல்ல சத்தார் உதவி செய்கிறார்.

இதன் மூலம் இரு குடும்பத்து எதிர்ப்பையும் சத்தார் அடைகிறார். சத்தார்ரை அவரின் அப்பா வீட்டிற்குள் விட மறுக்கிறார்.

இதனால் எங்குச் செல்வது என்று தெரியாமல் இருக்கும் பொது  அந்த ஊரில் சத்தாரிடம் வம்பு செய்யும் நபர்களால் சத்தார் கொலை செய்யப்படுகிறார்.

காதல் ஏமாற்றம் போன்ற பல பாவனைகளைக் காட்டியுள்ளார். கோவம் வந்தாலும் அதை வெளிக்காட்டாமல் தனக்கு உரித்தான குணத்தில் அதைக் காட்டுவது என்று நடிப்பில் ஒரு கலக்கு கலக்கி உள்ளார்.

கதையின் முடிவில் அனைவரும் ஒரு நிமிடம் கண் கலங்க வைக்கும் என்றெ கூற வேண்டும். காளிதாஸ் மட்டுமில்லாமல் அனைவரும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்தக் கதை அனைத்து திருநங்கையர் மீது இத்தனை நாட்களாக இருந்த எண்ணத்தை ஓரளவு மாற்றி உள்ளது என்றே கூற வேண்டும்.

அவர்களுக்கும் காதல் அழுகை உணர்வு எல்லாம் உண்டு என்றும் அதோடு அவர்களைச் சக மனிதர்களாக நடத்த வேண்டும் என்று இந்தப் பாவ கதை சொல்லாமல் சொல்லிச் சென்று உள்ளது.

பாவக்கதைகள் திருநங்கையாக காளிதாஸ் :

இனிவரும் காலங்களில் தன்னுடைய திரை பயணத்தில் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக சுதா கொங்கரா தான் முடிவு கேட்பாராம் இவ்வாறு ஒரு நேர்கானலில் கூறியுள்ளார்.

அந்த அளவு காளிதாஸின் திரை வாழ்க்கையையே மாற்றி உள்ளார் என்றே கூற வேண்டும்.

thangam web series

நடிகராக இருந்தால் கட்டு மஸ்தான உடலாகவும் பெண்கள் சுற்றி வருவதும் பின்னர் சண்டை காட்சிகளில் பத்து பேரை அடிப்பது என்று தான் இத்தனை நாட்களாக இருந்துள்ளது.

ஆனால் தன் உடல் மொழியாலும் நடிப்பாலும் அனைவரையும் தன் வசப்படுத்திவிட்டார்.

ஒரு ஹீரோவாக நடித்துக் கொண்டு இருக்கும் ஒரு நடிகர் அவ்வளவு எளிதில் இந்த வேடத்தை தேர்ந்து எடுப்பாரா என்று கூற முடியாது.

ஏனெனில் வளர்ந்து வரும் நடிகர் இந்த வேடத்தை எடுத்தால் வரும் காலங்களில் அந்த நடிகரின் திரை வாழ்க்கையையே பாதிக்கப்படும் ஆனால் சத்தார் அந்த எண்ணத்தை தவிடு பொடியாக்கி விட்டார்.

தற்போது பெண் ரசிகர்கள் அதிக அளவுள்ள ஒரு நடிகர் (Paava kadhaigal kalidas jayaram) என இவரைக் கூறலாம்.

படத்தில் நடித்தபொழுது கூட இவர்க்கு இந்த அளவு வாய்ப்பு கிடைத்து இல்லை ஆனால் ஒரே வெப் சீரிஸ்யில் பல ரசிகர்கள் கிடைத்து உள்ளனர்.

அஜித் அவர்களுடன் :

காளிதாஸ் கல்லூரில் படித்துக் கொண்டு இருக்கும்பொழுது அஜித் அவர்களைத் சந்திக்க வேண்டும் என்று தன் அப்பாவிடம் அடம் பிடித்துள்ளார் பின்னர் ஜெயராம் அவர்களுடன் சேர்ந்து அஜித் அவர்களின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு நடிகர் அஜித் அவர்கள் நடந்து கொண்ட விதத்தை பார்த்து இவருக்கு ஆச்சரியம் தாங்க வில்லையாம் அஜித் அவர்களே இவருக்கு சாப்பாடு பரிமாறினாராம் என்று அஜித் அவர்களுடன் இருந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

பின்னர் கல்லூரிக்கு சென்ற பொழுது நண்பர்கள் இவரிடம் பேசாமல் இருந்துள்ளனர் ஏன் என்றால் இவர் மட்டும் தனியாக சென்றுள்ளார் இதனால் நண்பர்கள் இவரிடம் கோவமாக இருந்துள்ளனர்.

மீண்டும் அப்பாவுடன்:

kalidas jayaram with father

தற்பொழுது அப்பாவுடன் இணைந்து புத்தம் புது காலை என்ற அந்தோலஜி பிலிம்மில்  நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஊர்வாசி, ஸ்ருதி ஹாசன், கல்யாணி பிரியதர்ஷன் போன்றோர் நடித்துள்ளனர்.

பதினான்கு ஆண்டுகள் கழித்து அப்பாவுடன் சேர்ந்து நடிக்கிறார்.இந்தப் படமும் பாவ கதைகள் போன்று அந்தோலஜி பிலிம் தான்.

கூடிய விரைவில் வெள்ளி திரையில் அப்பாவை போலவே கலக்குவார் என்று எதிர் பார்க்க படுகிறது.

இவருக்கு பிடித்த படம் விருமாண்டி தானாம். காளிதாஸிற்கு நடிப்பு மட்டுமில்லாமல் மிமிக்கிரியும் நன்றாக வரும்.

நமக்கு என்ன தான் திரைத்துறை அனுபவம் ஆதரவும் இருந்தாலும் தனித்திறமை இல்லாமல் திரை உலகில் எதுவும் நடக்காது என்பதற்கு காளிதாஸ் அவர்களின் திரை பயணம் தான் முன் உதாரணம்.

6 thoughts on “‘பாவக்கதைகள்’ காளிதாஸ் ஜெயராம் பற்றி தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube