Cinema

அர்ஜுன் தாஸ் நிஜ வாழ்க்கை!

Arjun das life: தற்போது பலராலும் பேசப்பட்டு வரும்  படம் என்றால் 2021 பொங்கலுக்கு வெளியாகி வசூலில் சாதனை படைத்த மாஸ்டர் திரைபடம் தான். 

மாஸ்டர் திரைபடம்  விஜய் அவர்களுக்கு 64ஆம் திரைப்படமாகும். மேலும் அந்தப்படத்தில் நடித்த அனைவரும் பிரபலமானவர்கள் தான். 

அந்த வரிசையில் தற்போது குரலால் பிரபலமடைந்த  நபர் என்றால் அது நம்ம அர்ஜுன் தாஸ் அவர்கள் தான்.

அர்ஜுன் தாஸ் அவர்களின் வாழ்வின் ஏற்பட்ட அனுபவங்களைக் காணலாம் வாங்க.

தனிப்பட்ட வாழ்கை: Arjun das life

Arjun das life

நம்ம அர்ஜுன் தாஸ் அவர்கள் 1990ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி சென்னையில் பிறந்துள்ளார். சிறிது காலம் துபாய்யில் இருந்துள்ளார்.

தற்பொழுது சென்னையில் தான் வசித்துக் கொண்டு இருக்கிறார். மேலும் இவர் படிப்பில்  MBA முடித்துள்ளார்.

வாழ்க்கையை மாற்றிய குரல்:

அர்ஜுன் தாஸ் அவர்கள் பள்ளி காலத்தில் மிகவும் உடல் பருமனுடன் தான் இருந்துள்ளார். அது இவருக்கு மிகவும் தாழ்வு மனப்பாண்மையை கொடுத்து கொண்டு இருந்தது. 

இவரின் குரல் முதலில் சாதாரணமா தான் இருந்துள்ளது. பின்னர் ஒரு நாள் காலை எழுந்து அம்மா என்று கூப்பிடும் பொது குரல் மாறி இருந்தது.

உடனே இவர் பாத்ரூமிற்கு சென்று அம்மா அம்மா என்று பல முறை சொல்லிப் பார்த்துள்ளார். அப்பொழுது வேறு யாரோ பேசுவது போல இருந்ததாம் அதனால் இவருக்கு மிகவும் பயமாக இருந்ததாம்.

சரி இரண்டு மூன்று நாள்களுக்குள் சரியாகி விடும் என்று நினைத்து உள்ளார். ஆனால் குரலில் எந்த மாற்றமும் இல்லை அதனால் இவர் ஒரு வாரமாக யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.

பின்னர் பேச தொடங்கவே நண்பர்கள் அனைவரும் கிண்டல் செய்ய தொடங்கி உள்ளனர். உன்னுடைய குரல்  “ஆட்டோ ஓட்டுற மாரி இருக்கு” என்றும் என்ன சாப்பிட்ட உன் குரல் இப்படி உள்ளது என்று இவரைக் கேலி செய்து உள்ளனர்.

ஏற்கனவே உடல் பருமனால் ஏளனம் செய்யபட்ட இவர் பின்னர் குரலாலும் கிண்டல் செய்ய பட்டார் இது இவருடைய தாழ்வு மனாப்பான்மையை மேலும்  அதிகரித்தது.

குரலால் வந்த ஏற்றமும் இரக்கமும் :

இவ்வாறு வாழ்கை நகர்ந்து கொண்டு இருக்கும்பொழுது இவர் ஒரு டிபட் காம்பெடிஷனில்(DEBUT COMPETITION)ல் கலந்து கொண்டு இருந்துள்ளார்.

பின்னர் இவர் அந்த ஷோவில் வெற்றி பெற்று விட்டார் இவருடைய குரலை குறிப்பிட்டு இவருக்கு பரிசை வழங்கி உள்ளனர்.

Arjun das life - biography - unknown
Arjun das life

அந்த பரிசை பெற்ற பிறகு தான் அர்ஜுன் அவர்களுக்கு தன்னுடைய குரலின் மீது நம்பிக்கை வந்ததாம்.

அதோடு பல போட்டிகளிலும் கலந்து கொண்டு உள்ளார் அதற்காக தன்னுடைய உடலை 36  கிலோ வரை குறைத்து உள்ளார்.

நடிப்பின் மீதான ஆர்வம்:

அர்ஜுன் அவர்களுக்கு துபாய்யில் வேலை கிடைத்து விடவே இவரும் துபாய் சென்று விட்டாராம்.
துபாயில் ஒரு வங்கியில் பணி  செய்து கொண்டு இருந்துள்ளார்.

அங்குக் குரலால் மீண்டும் இவருக்கு பிரச்சனை தொடர்ந்து உள்ளது. அர்ஜுன் கிளைன்ட்(client) உடன் போனில் பேசுவாராம்.

இவருடைய குரலை போனில் கேட்டால் 40 வயது மதிக்க தக்க ஆணாய் இருக்கும் என வர சொல்லுவார்களாம். 

பின்னர் இவரை நேரில் பார்த்து விட்டுச் சின்னப் பையன் போல் உள்ளார் இவர் எப்படி வேலை செய்வர் என வேண்டாம் என்று கூறி விடுவார்களாம் இதனால் இவர் மீண்டும் மனம் உடைந்துள்ளார்.

அப்பொழுது தான் தோன்றியதாம் நாம் எதுக்கு இப்படி அடுத்தவரிடம் வேலை செய்து கொண்டு இருக்கிறோம் நமக்கு பிடித்த வேலை செய்யலாம் என்று. 

பள்ளி படிக்கும் பொது பல மேடை ஷோக்களில் கலந்து கொண்டு உள்ளார் அதனால் நடிப்பின் மீது சிறுவயது முதலே ஆர்வம் இருந்துள்ளது. எனவே தனக்கு பிடித்த நடிப்பை தேர்ந்த்தெடுத்தார்.

பின்னர், அங்குச் செய்த வேலையை விட்டு விட்டு அம்மா அப்பாவை சமாதான படுத்தி உள்ளார்.

திரை உலக தொடக்கம்:

பின்னர் சென்னைக்கு வந்துள்ளார் ரேடியோ1(Radio One 94.3FM) என்ற ரேடியோ சேனலுக்கு வேலைக்காக சென்று உள்ளார். அங்கு இவரின் குரலை கேட்டுத் தேர்வு செய்து விடுகின்றனர். 

ரேடியோ1 சேனலில் மாலை நேர ஷோ ஒன்றை  ஹிந்தியில் ஒலிபரப்பிக் கொண்டு இருந்துள்ளார்.

பின்னர், இவருடைய அப்பா அவர்களின் அறிவுரை படி ஒரு ட்ராமா மற்றும் ஆக்ட்டிங் பயிற்சி வகுப்பிற்கு சென்று உள்ளார்.

tamil movie shooting

அதன் மூலம் இவருக்கு ஒரு ஷார்ட் பிலிமில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த ஷார்ட் பிலிமில் நடித்தபிறகு தனக்கு படங்களில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர் பார்த்துக் கொண்டு இருந்தாராம் ஆனால் எந்த வாய்ப்பும் இவருக்கு கிடைக்கவில்லையாம்.

இவ்வாறு நாட்கள் நகரவே இவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லையாம். நமக்கு கிடைத்த நல்ல வேலையும் விட்டு விட்டோம் என்று இவருக்கு மிகவும் பயமாக இருந்ததாம்.

அப்போதுதான் பேசாமல் நாம் துபாய்க்கே போய்விடலாம் என்று கூடத் தோன்றியதாம். அந்த சமயம் மிகவும் மனம் குழப்பத்துடனே இருந்துள்ளார் என்றே கூற வேண்டும்.

அந்தகாரம்:

பின்னர் 2014ல் அந்தகாரம் என்ற படத்தில் நடிக வாய்ப்பு வந்துள்ளது.
முதல் வாய்ப்பு என்பதால் தன்னுடைய முழு உழைப்பையும் இந்த படத்தில் செலுத்தி இருந்தார்.

குறிப்பாக, இந்த படத்தில் இவருக்கு மிகவும் ஆக்ரோஷமான கதா பாத்திரம் என்பதால் அந்த வேடம்  இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையும் பாதித்து இருந்தது.

இந்த படத்தில் இவர் கத்துவதும் கோவப்படுவதும் போன்ற பல பாவனைகள் இருந்துள்ளது. அதனால் அந்த  செயலை தன்னுடைய குடும்பத்தில் உள்ளவரிடமும் நண்பர்களிடமும் காட்டியுள்ளார்.

கேமரா காட்சி வெளிச்சத்திற்காக காலை மற்றும் மாலை இரு வேலைகளிலும் ஓடி உள்ளார். அதோடு 40 நாள்கள் தொடர்ந்து வெறும் காலில் ஓடியதாகவும் இதனால் உடல் அளவிலும் மனதளவிலும் மிகவும் பாதிப்பு அடைந்ததாக ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

இத்தனை உழைத்தும் இந்த படம் வெளிவரவில்லை அது அர்ஜுன் அவர்களுக்கு மேலும் பல மன உளைச்சலை தந்துள்ளது.

இந்தத் திரை படம் 2014ஆம் ஆண்டே தொடங்க பட்டதாம் ஆனால் படம் 2020ல் தான் வெளிவந்து இருந்தது. 
துருவ நட்சத்திரம்.

இந்த படத்தில் இவர் வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் ஆகா பணிபுரிந்து இருந்தார். இதன் மூலமே கைதி பட இயக்குனர் இவரைத் தொடர்பு கொண்டு உள்ளார்.

கைதி :

லோகேஷ் அவர்களின் இயக்கத்தில் கார்த்தி அவர்களுடன் இணைந்து தன்னுடைய திறமை உலகிற்கு வெளி காட்டியுள்ளார்.

கைதி திரை படத்தை முதலில் வேண்டாம் என்று சொல்லவே சென்றுள்ளார். அப்போது லோகேஷ் அவர்கள் மச்சி என்று அழைக்கவே இவருக்கு லோகேஷ் அவர்கள் மீது நம்பிக்கை வந்து விட்டதாம்.

கைதி படத்தில் பிரியாணி சீன் எவ்வளவு பேச பட்டதோ அந்த அளவு இவரின் வசனம் மற்றும் நடிப்பு பேச பட்டது. அதுவும் IGஆபிசில் உள்ளே நுழையும் சீன் தான் பலராலும் விரும்பப்பட்டது.

முதலில், இந்த காட்சி நடிக்கும்பொழுது அனைவரும் சிரித்து விட்டனராம்.  
இந்த படத்திற்காக இவருக்கு நார்வே தமிழ் பிலிம் பெஸ்டிவல் அவார்டிNorway Tamil Film Festival Awards 2020ல் சிறந்த வில்லனுக்கான விருது வழங்க பட்டது.

மேலும் Zee Cine Awards Tamil 2020 சிறந்த வில்லனுக்கான விருது வழங்க பட்டது.  தற்போது இந்த படத்திற்கு பிறகு இவரை அன்பு என்றே அனைவரும் அழைக்கின்றனர். 

மாஸ்டர் :

கைதி படத்திற்கு பிறகு லோகேஷ் அவர்கள் சரி பார்க்கலாம் நல்ல படத்தில் நடிக்கணும் என்று சொல்லிவிட்டு சென்றாராம்.

vijay's master movie team

அர்ஜுன் அவர்களும்  சரி என்று சொன்னபிறகு சார் மாஸ்டர் படத்தில் ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்டுள்ளார்.

அவர் தற்போது படம் தொடங்கவில்லை என்று கூறிவிட்டராம்.பின்னர் ஒரு நாள் மாலை 6 மணிக்கு லோகேஷ் அவர்களிடமிருந்து அழைப்பு வந்துள்ளது.

லோகேஷ் அவர்கள் மாஸ்டர் ஷூட் நடந்து கொண்டு இருக்கிறது நடிக்க தயாரா என்று கேட்டுள்ளார்.
அர்ஜுன் அவர்களுக்கு உடனே சரி என்று கூறியுள்ளார்.

அப்பொழுது, லோகேஷ் அவர்கள் சரி தயரிப்பாளர் உங்களைக் கூப்பிடுவார் என்று கூறினாராம். 
பின்னர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி அவர்களுடன் இணைந்து இந்த படத்தில் கலக்கி இருந்தார். 

தற்போது கும்கி 2வில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.  மேலும் வில்லன் என்றால் கம்பிரமான தோற்றமும் பார்த்தாலே பயம் வருவது போல இருப்பார்கள்.

ஆனால், இவர் தன்னுடைய நடிப்பாலும் குறிப்பாக குரலாலும் மிரட்டி விடுவார்.

தமிழ் நாட்டின் அடுத்த ரகுவரன் இவர் தான் என்று மக்களால் ஏற்று கொள்ள பட்டு வருகிறது. 

நமக்கான  இலக்கை நிர்ணயித்தபிறகு எத்தனை தடைகள் வந்தாலும் வேறு பாதையில் சொல்லாமல் நமக்கான இலக்கில் குறிப்பாக இருந்தலே போதும் நமக்கான வெற்றி கிடைத்து விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube