பாக்கியலட்சுமி சீரியல் நடிகை யார் தெரியுமா?
baakiyalakshmi serial suchitra: சின்னத் திரை தொடர்களுக்கு கென்று சில ரசிகர்கள் இருப்பார்கள் அவர்களுக்கு வேண்டியது எல்லாம் வித்தியாசமான கதை அம்சம் கொண்ட தொடர் தான்.
அவ்வாறான என்ன ஓட்டமுள்ள ரசிகர்களுக்கு தீனி போடும் வகையில் அமைந்த தொடர் தான் பாக்கியலட்சுமி.
தற்போது தமிழ் நாட்டு பெண்கள் அதுவும் குடும்ப தலைவிகள் அனைவரும் பாக்யலஷ்மிக்கு ரசிகர்களாகி விட்டனர்.
இவ்வாறு பல ரசிகர்களைப் பெற்ற பாக்கிய லட்சுமி பற்றின சில சுவாரசியமான தகவல்களைக் காணலாம் வாங்க….
தனிப்பட்ட தகவல்கள் :

பாக்கியலட்சுமி அவர்களின் உண்மையான பெயர் சுஜித்ரா இவர் 1984ல் பெங்களூரில் பிறந்துள்ளார்.
இவர் தனது பள்ளி படிப்பை பசுவனக்குடிலில் உள்ள நேஷனல் பள்ளியில்(National Public School) முடித்துள்ளார். மேலும் இவர் தன்னுடைய கல்லூரிப் படிப்பை நேஷனல் காலேஜில் முடித்துள்ளார்.
திரை உலக பயணம் :
இவர் தன்னுடைய திரை வாழ்க்கையை பதினான்கு வயதிலே தொடங்கி விட்டார். ஆம் உபேந்திரா அவர்களின் தங்கையாக எ(A) என்ற படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.
தொடர்ந்து ஒன்மேன் ஆர்மி என்ற படத்திலும் மஞ்சுநாதா, காட் பாதர், சிவா, பீமா, கிரெசி ஸ்டார் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அதோடு தற்போது 2019ல் வெளியான எஜமான என்ற கன்னட படத்திலும் நடித்துள்ளார்.
மேலும் இவர் இருபதிற்க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ளார்.
சின்னத் திரை பயணம் :
வெள்ளி திரையில் நடித்துக் கொண்டு இருக்கும்பொழுது சுஜித்ரா அவர்களுக்கு சின்ன திரையின் மீது ஆர்வம் ஏற்பட்டது.
உதய டிவியில் ஒளிபரப்பான மனே தன(MANO DHANA) என்ற தொடரின் மூலம் கன்னட சின்னத் திரைக்கு அறிமுகமாகி உள்ளார்.
மேலும் இவர் காவியாஅஞ்சலி, ராதா ரமணா, மாங்கல்ய, ஈஸ்வரி போன்ற பல கன்னட தொடர்களில் நடித்து உள்ளார். இவ்வாறு கன்னட தொடர்களில் நடித்துக் கொண்டு இருந்தவருக்கு தெலுங்கு சின்னத் திரைக்கனா வாய்ப்பு கதவை தட்டியது.
ஜெமினி டிவியில் கன்டெ குடற் நீ கடலி (KANEY KUDAR NE KADALI) என்ற தொடரில் அறிமுகமானார்.

மேலும் அபரஜ்ஜித, நாகாம்மா, பந்தம், மௌன ராகம், அபிலாஷா போன்ற பத்திற்கும் மேற்பட்ட தெலுங்கு தொடர்களில் நடித்து வந்துள்ளர்.
இவர் தமிழ் தொடரிலும் ஒரு கைப்பார்த்துள்ளார். கலைஞர் டிவியில் ராபர்ட் ராஜஸேகரன் இயக்கத்தில் 2008ல் ஒளிபரப்பான நாணல் தொடரின் மூலம் சின்னத்திரையில் தமிழில் அறிமுகமானார்.
தற்போது இவர் விஜய் டிவி யில் ஒளிபரப்படும் பாக்கியலட்சுமி தொடரில் நடித்துக் கொண்டு உள்ளார்.
சைவம் :
சுஜித்ரா அவர்களுக்கு தமிழில் வந்த முதல் வாய்ப்பே வெற்றி படமாக அமைந்தது. 2014ல் AL விஜய் அவர்களின் இயக்கத்தில் வெளியான சைவம் படத்தில் உமா என்ற பெயரில் பெரிய நடிகர் பட்டாளத்துடனே நடித்து இருந்தார்.

பாக்கியலட்சுமி தொடரில் சுஜித்ரா:
முதலில் இந்த தொடருக்காக இவரை அழைத்து உள்ளனர். ஆனால் இவர் எந்த பதிலும் சொல்லாமல் இருந்துள்ளார்.
பின்னர் மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் பாக்கியலட்சுமி தொடர் மேனேஜரிடமிருந்து இவருக்கு அழைப்பு வந்துள்ளது. நீங்கள் உடனே சென்னைக்கு வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
அப்பொழுது இவர் ஹைதராபாத்தில் தெலுங்கு பட பிடிப்பில் இருந்துள்ளார். அந்த படப்பிடிப்பிலிருந்து நேராக சென்னை வந்துவிட்டாராம். அதன் பிறகு இவர் இந்த தொடரில் நடிக்க தேர்வாகி விட்டாராம்.
பாக்கியலட்சுமி :
சிவசேகர் இயக்கத்தில் சதிஷ் அவர்களுடன் இணைந்து பாக்கிய லட்சுமி என்ற கதா பாத்திரத்த்தில் நடிக்கிறார் சுஜித்ரா. மேலும் இவருடன் வேலு லட்சுமணன், நேகா மேனன், விஷால் போன்ற பலர் நடிக்கிறார்கள்.
இத்தொடரில் மூன்று குழந்தைகளுக்கு தாயக நடித்துள்ளார். மேலும் இத்தொடரில் குடும்பமே வாழ்கையென இருக்கும் பெண்ணாக நடிக்கிறார்.
ஆனால் இவருடைய கணவர் வேறொரு பெண்ணுடன் குடும்பத்தாருக்கு தெரியாமல் வாழ்ந்து வருகிறார். அதோடு பாக்கியலட்சுமியை கண்டால் எரிந்து விழுவதும் அவரை அவமான படுத்துவதும் என்று தொடர் நகர்கிறது.
இத்தனைச் சிரமங்களுக்கு மத்தியில் கணவனும் குடும்பமும் தான் முக்கியம் என இருக்கிறார் பாக்கியலட்சுமி.
வாழ்வில் எப்படியாது முன்னேறி விட வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
அதோடு கடந்த இரு வாரங்களாக புதிதாக ஒரு பிசினஸ் தொடங்க திட்டமிட்டு வருகிறார்.
பிசினஸ் தொடங்க போதுமான பணம் இல்லாததால் கணவரிடம் கேக்கிறார் ஆனால் வழக்கம்போலக் கணவர் கோவமாக பேசி விட்டுச் சென்று விடுகிறார்.
தற்பொழுது மேலும் சுவரசியமாக கணவரின் இரண்டாவது மனைவி பாக்கியலட்சுமிக்கு நட்பாகி உள்ளார். அதோடு இவரின் தொழில் தொடங்க பண உதவியும் செய்த்துள்ளார். இவ்வாறு கதை விறுவிறுப்பாக நகர்கிறது.
கடந்த 2020ல் ஜூன் 27ல் வெளியான இந்த தொடர் அதிக வரவேற்பை பெற்று உள்ளது எனலாம்.
மேலும் இந்த தொடர் ஸ்டார் ஜல்சா என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஸ்ரீமோயி’ என்ற பெங்காலி மொழித் தொடரின் ரீமிக்ஸ் ஆகும்.

இவருக்கு பிள்ளைகளாக நடிப்பவர்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்த பிறகும் கூட இவரை அம்மா என்றேஅழைக்கின்றனராம்.
தற்போது பல குடும்பங்களின் நிலைகளை இந்த தொடர் எடுத்துக் கூறுகிறது. மேலும் பல குடும்பங்களில் உள்ள பெண்களின் மனதில் ஒரு சிறு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது எனலாம்.
தற்போது வாலிப பிள்ளைகளுக்கு இவரைப் பார்த்தால் ஒரு தாய்மை எண்ணமே வருகிறது. அதோடு தன்னுடைய அம்மாவும் இதுபோலத் தான் பல துன்பங்களைத் தாங்கி வாழ்கிறார் என்ற எண்ணமும் தோன்றுகிறது.
நமக்கான வருவாய்ப்புகளை உண்டாகாமல் நம்மால் இந்த சமூகத்தில் சமமாக நடக்க முடியாது என்பதற்கும். நமக்கான மதிப்பை நாம் தான் உருவாக்க வேண்டும் என்று இந்த தொடர் உணர்த்திவருகிறது.
மனிதர் துணை இல்ல விடினும் நம்பிக்கை என்ற உருவம் மில்லா ஆனால் சக்தியுள்ள ஒரே துணையை கொண்டு இந்த உலகத்தை ஜெயித்து விடலாம் என்பதற்கும் உதாரணமாக விளங்குகிறது பாக்கியலட்சுமி தொடர்.
Can I take Viagra with antiretrovirals ARVs for HIV buy cialis online
No, Cialis is a prescription-only medicine priligy uk Get our best medicines for the premature ejaculation and eretile dysfunction healing with shipping in Burlington
Review advantages of the delivery terms and price in Baltimore from ViaBestBuy online pharmacy comprar cialis online
Your ED Combo Pack of 100 200 300 500 1000 tabs may include the following tablets cialis vs viagra
clomid crazies AF came Friday.
Conceiving, reaching a minute or you well. letrozole vs tamoxifen Details on smoking behavior, such as package years, are missing in the PARA study, and could not be analyzed further.