SerialTV Artist

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா biography

pandian stores kavya: தற்போது உள்ள சின்ன திரை தொடர்களில் அதிகம் பேசப்பட்ட தொடர் என்றால் அது பாண்டியன் ஸ்டோர் தான்.

சின்னத் திரை தொடர்களுக்கு வந்து பிரபலம் அடைந்த நபர்களைப் பார்த்து இருப்போம். ஆனால் அந்த தொடரில் நடிக்காமலே பிரபலம் அடைந்த நபர் நம்ம காவிய தான். 

பாண்டியன் ஸ்டோரின் முல்லை கதாபாத்திரத்திற்கு என்று தனி ரசிகர்பட்டாளமே இருக்கிறது.

அந்த கதா பாத்திரத்தில் புதிதாக வந்துள்ள காவ்யா அவர்களைப் பற்றின தனிப்பட்ட தகவல்களைக் காணலாம் வாங்க…

தனிப்பட்ட தகவல்கள் :

இவருடடைய முழு பெயர் காவிய அறிவுமணி. இவர் 1996ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி வேலூரில் பிறந்துள்ளார்.

pandian stores kavya bio
pandian stores kavya

பள்ளிப்படிப்பை வேலூரில் உள்ள பெத்தேல் மெட்ரிகுலேஷன்(bethal metriculation higer secondary school) பள்ளியில் முடித்துள்ளார்.

மேலும் இவர் தன்னுடைய கல்லூரிப் படிப்பை சென்னையில் பிரபலமான மீனாட்சி காலேஜில் முடித்துள்ளார். இவர் ஒரு அர்க்கிடெக் (Architect) பட்டதாரி ஆவார். இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். 

ஷார்ட் பிலிம்:

காவ்யா அவர்கள் அதிகமாக அறிய பட்டதே ஷார்ட் பிலிம்களின் மூலம் தான் இவர் பத்திற்கும் மேற்பட்ட ஷார்ட் பிலிம்களில் நடித்துள்ளார்.

அவற்றில் பல ஷார்ட் பிலிம்கள் மில்லியன் வீயூசை தாண்டிப் பார்க்கப் பட்டுள்ளது.

இவர் நடித்த ஷார்ட் பிலிம்கள் என் காதலுக்கு மொழி இல்லை, ஆயுதம் ஏந்திய கைகள், பாப்பா, அகலாதே, இல் தக்க சைய, நம்மல கேக்க ஆளு இல்ல போன்றவை ஆகும். மேலும் இவருடைய பிரபலமான ஷார்ட் பிலிம் என்றால் வெர்ஜின் கல்யாணம் தான். 

இவர் கல்லூரி காலங்களிலே பல மாடல் ஷோக்களில் கலந்து கொண்டு உள்ளார். இவ்வாறு மாடல் ஷோ மற்றும் ஷார்ட் பிலிம்களிலில் பங்கேற்றது  தான் இவருக்கு சின்ன திரை வாய்ப்பினை தந்தது எனலாம்.

பாரதி கண்ணம்மா :

பாரதி கண்ணம்மா இயக்குனர் பிரவீன் அவர்களிடமிருந்து இத்தொடரில் நடிக்க அழைப்பு வந்ததாம். முதலில் இவருக்கு தயக்கமாக இருந்ததாம் பின்னர் இத்தொடரில் நடிக்க ஒப்பு கொண்டாராம்.

பிரவீன் பென்னட் அவர்களின் இயக்கத்தில் 2019ல் வெளியான பாரதி கண்ணாம்மா தொடரில் அறிவுமணி என்ற பெயரில் பாசிட்டிவ் கேரட்டரில் நடித்து இருந்தார். 

pandian stores kavya biography

இத்தொடரில் பாரதி அவர்களுக்கு தங்கையாகவும் கண்ணம்மாவிற்கு ஒரு தோழியாகவும் நடித்துள்ளார்.

இந்த தொடருக்கு இவரின் கதாபாத்திரத்துக்கு முதலில் தனம்மா என்ற பெயர் தான் வைத்து இருந்தனராம். பின்னர் அறிவுமணி என்று மாற்றி விட்டனராம்.

பின்னாளில் அறிவுமணி என்ற பெயரை தன்னுடைய பெயருக்கு பின்னர் இணைத்துக் கொண்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர் வாய்ப்பு :

பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லைக்கு என்று தனியாக ரசிகர் பட்டாளம் உண்டு. முல்லைக்ககாவே இந்த தொடரினை பார்ப்பவர்களும் உண்டு. மேலும் கதிர் முல்லை என்றால் பலருக்கும் பிடித்த ஜோடியாகும். 

முல்லை கதாபாத்திரத்தில் சித்ரா நடித்துக் கொண்டு இருந்தார். கடந்த 2020 டிசம்பர் மாதம் 9ம் நாள் சென்னையில் உள்ள பிரபல ஓட்டலில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

சித்ராவின் இறப்பிற்கு பின்னர் அந்த தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்று தெரியாமல் இருந்தது. பொது மக்களிடமும் முல்லை ரசிகர்களிடமும் இத்தொடரில் நடிக்க யார் வருவாரெனப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. 

பாரதி கண்ணம்மா குழு முல்லை கதா பாத்திரத்திற்கு காவிய சரியாக இருப்பார் என்று எண்ணியது.

பின்னர் காவ்யா அவர்கள் பாரதி கண்ணனம ஷூட்டிங்கில் இருந்த பொது உங்களுக்கு ஒரு டெஸ்ட் ஷூட் உள்ளது என்று இவருக்கு இவருடைய குழுவிலிருந்து அழைப்பு வந்ததாம். 

இவர் எந்த யோசனையும் இல்லாமல் அங்குச் சென்று உள்ளார். முதலில் ஒரு ஐந்து நிமிடம் பயமாக இருந்ததாம் பின்னர் இவர் தன்னை சமாதான படுத்தி கொண்டாராம். 

பின்னர் இவருக்கு ஒரு டைலாக் கொடுத்துப் பேச சொன்னார்களாம். இவரும் பேசி விட்டு வந்து விட்டாராம். 
பின்னர் ஒரு இரண்டு நாள்கள் கழித்து இவரை அழைத்து நீங்க தான் அடுத்த முல்லையெனக் கூறிவிட்டனராம்.

இந்த தொடரின் வாய்ப்புக்கு முன்னர் இவர் பாண்டியன் ஸ்டோர் தொடரினை பார்த்தது இல்லையாம். அதனால இவருக்கு முல்லை கதா பாத்திரத்தை பற்றி எந்த யோசனையும் இல்லாமல் இருந்துள்ளார். 

பாண்டியன் ஸ்டோர்:

பாண்டியன் ஸ்டோரில் புது முல்லையாக நடிக்க தொடங்கி உள்ளார்.இந்த தொடரில் முல்லை என்ற கதாபாத்திரம் ஒரு நடுத்தர குடும்பத்து மருமகளாவும் மிகவும் பாசமான மற்றும் அமைதியான பெண்ணாக இருக்கும். 

இந்த தொடரில் முல்லையாக  சித்ரா அவர்கள் நடித்தார் என்பதை விட வாழ்ந்தார் என்றே சொல்ல வேண்டும். 

pandian stores kavya biography

சித்ரா இறப்பிற்கு பின்னர் முல்லை கதா பாத்திரத்திற்கு யார் வருவார்கள் என மக்கள் எதிர் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

அதோடு சித்ராவின் இடத்தை எவ்வாறு பிடிப்பது என்று மற்ற நடிகர் மனதிலும் ஒரு பயம் இருந்தது. இது காவ்யாவிற்கு கொஞ்சம் சவாலான விஷயம் தான்.

ஒரு மாதங்களுக்கு மேலாக இவர் முல்லை பாத்திரத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார் மக்களும் மெல்ல மெல்ல இவரை ஏற்று கொண்டு வருகின்றனர்.

இவருக்கு முதல் நாள் ஷூட்டிங் மிகவும் பயமாக இருந்தaதாம். இவர் முதல் நாள் ஷூட்டிங்கிலேய கூறிவிட்டாராம். நான் சித்ரா அவர்களைப் போன்று நடிக்கமாட்டேன்.

என்னுடைய ஸ்டைலில் தான் நடிப்பேன் என்று கூறிவிட்டாராம். இயக்குனரும் சரியெனச் சொல்லி விட்டாராம்.

இவருக்கு முதல் நாளில் பழைய டப்பிங் வாய்ஸ் தான் இருந்தது. பின்னர் அடுத்தடுத்த எபிசொட்க்களில் இவருக்கு வாய்ஸ் மாற்றி விட்டனர். 

பாண்டியன் ஸ்டோர் குழுவில் உள்ளவர்கள் இவரிடம் அன்பாக நடந்து கொண்டனராம்.


பாண்டியன் ஸ்டோர் வாய்ப்பினை சரியாக பயன் படுத்தி கொள்வாரா என்று வரும் காலங்களில் பார்க்கலாம்… 

பிகில் பட வாய்ப்பு நழுவல் :

பிகில் படவாய்ப்பினை நழுவ விட்டு விட்டராம். இந்த படத்தில் இவருக்கான கதா பாத்திரம் என்ன வென்று தெரியாமல் இருந்ததாம்.

அப்போது வாட்ஸ் ஆப் இல் இவரைத் தொடர்பு கொண்டு  ஷூட்டிங்க்கிற்கு வர சொல்லி இருந்தனராம்.

அந்த சமயம் இவருக்கு பாரதி கண்ணம்மா ஷூட்டிங் இருந்ததால் இவரால் அங்குச் செல்ல முடிய வில்லையாம். இதனால் சில நாள்கள் வருத்தமாக இருந்ததாம். 

vijay tv serial actress kavyaa biography

இவருக்கு நயன்தாரா என்றால் மிகவும் பிடிக்குமாம். நயன்தாரா அவர்களின் படங்களை ஒன்று விடாமல் பார்த்து விடுவாராம். அதோடு நயன்தாரா நடித்ததில் பிடித்த காட்சிகளை டிக் டாக் செய்து வெளியிடுவாராம்.

மேலும் இவர் விருப்பப்பட்டு படித்த ஆர்க்கிடெக் பணியை செய்யவும் விருப்பம் உள்ளதாம்.

தற்போது வாடிய முல்லைக்கு உயிர் கொடுத்த காவிய வரும் காலங்களில் வெள்ளி திரையிலும் வாடாத மலராக மலருவரென எதிர்பார்க்க படுகிறது.

5 thoughts on “பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா biography

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube