TV Artist

குக் வித் கோமாளி புகழ் பற்றி பலரும் அறியாதவை!

vijay tv pugazh biography: பல சிறப்பான மற்றும் வித்தியாசமான நிகழ்ச்சிகளைத் தர கூடியது நம்ம விஜய் டிவி அனைத்து தமிழ் மக்களையும் வயது வித்தியாசம் பாராமல் தன் வசப்பபடுத்தியுள்ளது.

குறிப்பாக, காமெடி, ஆடல், பாடல் என்று அணைத்து நிகழ்ச்சிகளிலும் கலக்கி கொன்டு இருக்கிறது.


அதுபோல, பல வித்தியாசமான நிகழ்ச்சிகளை கொடுக்கும் நம்ம விஜய் டிவியில் சமையல் நிகழ்ச்சிகளிலும் கலக்கி கொண்டு இருக்கிறது.

அந்த நிகழ்ச்சியின் தற்போது கொஞ்சம் வித்தியாசமாகக் குக் வித் கோமாளி என்ற பெயரில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

cook with comali shivangi

குக் வித் கோமாளி ஷோவின் முக்கியமான நபர் நம்ம புகழ் அவரின் வாழ்க்கையில் புகழ் அடைவதற்கு முன்பு பல கஷ்டங்கள் இருந்துள்ளன.

ஆனால், அதை எல்லாம் கடந்து தற்போது புகழின் உச்சியில் நிற்கும் நம்ம விஜய்டிவி செல்ல பிள்ளை புகழின் வாழ்கையில் நடந்த பல ரசிக்கத்தக்க அதிசயங்களை இங்குக் காண்போம். 

தனி பட்ட வாழ்கை :


நம்ம புகழ் ஒரு 90இஸ்  குழந்தையாகும். இவர் 1990ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி பிறந்தார்.புகழ் பிறந்து வளர்ந்தது எல்லாம் கடலூரில் தான்.

vijay tv pugazh biography | pugal with amma
vijay tv pugazh biography

இவர் தன்னுடைய பள்ளிப்படிப்பை கடலூரில் உள்ள ஸ்ரீ பாடலீஸ்வரர் (Sri Padaleswarar Higher Secondary school, Cuddalore) பள்ளியில் முடித்தார்.

குடும்பத்தின் பொருளாதார நிலைமை காரணமாக இவரால் மேற்கொண்டு படிப்பைத் தொடர இயலவில்லை.

சென்னை வாழ்கை :


இவர் கடலூரில் வேலை செய்து கொண்டு இருக்கும் பொது போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டுள்ளார்.

அப்போது இவருடைய அண்ணன் சென்னையில் இருப்பதால் கையில் ஒரு  100 ரூபாயுடன் சென்னைக்கு சென்றுள்ளார்.


புகழின் அண்ணன் அவரின் நண்பரிடம் வேலை கேட்குமாறு கூறியுள்ளார். புகழும் அந்த நண்பரை பார்க்க சென்று உள்ளார் அப்போது அவரின் கைபேசி மற்றும் பணம் காணாமல் போனது.

வேலையும் கிடைக்காமல் கையிலிருந்த பணமும் போனது இவருக்கு மிகுந்த மன வேதனையைக் கொடுத்தது.

vijay tv pugazh biography

vijay tv pugazh biography - unknown


பின்பு இவர் ஒரு வெல்டிங் வைக்கும் ஒர்க்கஷாப்பில் பணிக்கு சேர்ந்தார் இவருக்கு இந்தப் பணியின் மூலம் கண்எரிச்சல் ஏற்பட்டது.

அதனால் இவர் இந்த வேலையை விட்டு விட்டு வேறுபல வேலைகளைச் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

கலக்க போவது யாரு :


அப்போது இவருடைய நண்பர் உதயராஜ் இவர் சந்தித்தார். உதயராஜ் பானா காத்தாடி படத்தில் அதர்வா உடன் இணைத்து நடித்தவர்.

அவரின் மூலம் கலக்க போவது யாரு 6 வாய்ப்பு கிடைத்தது ஆனால் புகழ் அதில் வெற்றி பெறவில்லை.

மீண்டும் இவர் முயற்சி செய்து உள்ளார் ஆனால் வெற்றி கிடைக்கவில்லை. பின்பு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் மீண்டும் கடலூருக்கு சென்றார்.


மீண்டும் கடலூரில் கம்ப்யூட்டர் சர்வீஸ் செய்து கொண்டு இருந்தார் அப்போது உதயராஜ்யின் நண்பரான மோகன் ஏன்பவர் சென்னையில் டப்பிங் கலைஞராக இருந்துள்ளார்.

அங்கு அதிகமான கம்ப்யூட்டர்கள் சரி செய்ய இருப்பதால்  இவர் தான் பணி செய்யும் இடத்தில் புகழுக்கு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

உடனே, இவர் தன்னுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு சென்னை சென்று உள்ளார் அப்போது கம்ப்யூட்டர் பழுது பார்க்கும் பொருள்களைப் தொலைத்து விட்டார். அதனால் அந்த வேலையும் கிடைக்காமல் போனது.

இதற்கு பிறகு, இவர் சென்னையில் தான் முன்பு பணி செய்த இடத்தில் மீண்டும் பணிக்கு சேர்ந்தார். 

தீனாவின் உதவி vijay tv pugazh biography


சென்னையில் பணி செய்து கொண்டு இருக்கும் பொது மீண்டும் உதயராஜை சந்தித்தார் அவரின் மூலம் விஜய் டிவியில் சிரிப்புடா நிகழ்ச்சியில் சிறு வேடத்தில் கலந்து கொண்டார்.

vijay tv dheena help


மேலும் இவர் தங்கி இருந்த அறையில் தான் கலக்க போவது யாரு தீனா தங்கி இருந்தார் அதன் மூலம் இவருக்குக் கலக்க போவது சீசன்6 இறுதி சுற்றுகளில் கலந்து கொள்ள வாய்ப்புக்கிடைத்தது அதில் சிறு வேடத்தில் நடித்தார்.


விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஷோவில் அம்பியாக நடித்து அனைவரின் பாராட்டைப் பெற்றார். 

புகழுக்கான நேரம் ஆரம்பம் ( vijay tv pugazh biography )


இவ்வாறு விஜய் டிவியில் பல ஷோக்களில் கலந்து தற்போது குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில்  கோமாளியாகக் கலந்து இருக்கிறார்.

இந்த ஷோவின் மூலம் புகழின் புகழ் உச்சம் பெற்றது. குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக இருந்தாலும் ஹீரோவாக வலம் வருகிறார்.


சீசன்1இல் பாலா மற்றும் சிவாங்கியுடன் சேர்த்து கலக்கி வந்தார். அதிலும் ஜோக்கர் பட நாயகி ரம்யாவை பாலா மற்றும் புகழ் இருவரும் சேர்த்து வர்ணிப்பது அனைத்து மக்களால் ரசிக்க படுகிறது.

அதுவும் இவருடன் ஜோடி சேரும் பிரபலத்திற்கு வெற்றியினை பெற்று தர புகழ் மிகவும் உழைப்பர். 
இப்பொது இதே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 2 வது சீசன் வந்துள்ளது இதிலும் நம் புகழ் கலக்கி கொண்டு இருக்கிறார்.

இவரின் சுருட்டை முடி மற்றும் டைம் மிங்கில் காமெடி செய்வது தான் இவருக்குப் பிளஸ். 

cook with comali artist


எத்தனையோ நாள்கள் இந்தப் பிரசாத் ஸ்டூடியோ வாசலில் சட்டையில் கிரீஸ் கரையுடன் நின்று இருந்தேன் இப்பொது அதே பிரபாஸ் ஸ்டூடியோ உள்ள டிப் டாப் ஆக இருப்பது மிகவும் சந்தோசமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.


இப்பொது வெள்ளி திரை வாய்ப்பும் புகழுக்கு வந்து கொண்டு இருக்கிறது கூடிய விரைவில் நம்ம புகழ் வெள்ளி திரையிலும் கலக்குவார்.


எத்தனை பிரச்சனை வாழ்வில் இருப்பினும் விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கை இருந்தால் போதும் வெற்றி கனியினை பறித்து விடலாம். உதாரணம் நம்ம விஜய் டிவி புகழின் புகழ் தான்.

7 thoughts on “குக் வித் கோமாளி புகழ் பற்றி பலரும் அறியாதவை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube