Cinema

நடிகை சரண்யாவின் சமீப நிலை!

Saranya mohan current status: யாரடி நீ மோஹினி மற்றும் வெண்ணிலா கபடி குழு படப்புகழ் சரண்யா மோஹனை பற்றி இங்குக் காண்போம்.


யாரடி நீ மோகினி திரை படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்றவர் நம் சரண்யா மோகன்.

ஆரம்பகாலம் :

சரண்யா மோகன் கேரளத்தில் ஆலப்புழா என்ற இடத்தில் மோகன் மற்றும் கழமண்டல தேவிக்கு முதல் மகளாக 1989ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் நாள் பிறந்தார்.

Saranya mohan current status

சரண்யாவின் மற்றொரு பெயர் அப்பு ஆகும்.இவருக்கு ஒரு தங்கையும் உண்டு அவர் பெயர் சுகன்யா மோகன் அவரும் ஒரு பாரத நாட்டிய கலைஞர் ஆவர்.


சரண்யா மோகன் தனது பள்ளி படிப்பை கேரளத்தில்  முடித்தார். சரண்யா செயின்ட்  ஜோசப் பெண்கள் கல்லுரியில்(ST JOSEPH COLLEGE FOR WOMEN) ஆங்கில இலக்கியம்(BA LITERATURE) படித்தார்.

பின்பு முதுகலை கல்வியை சிதம்பரம்  அண்ணாமலை பல்கலைக்கழத்தில் முடித்தார்.இவர் பாரதநாட்டியத்திற்கான(MFA) படிப்பையும் இதே கல்லுரியில் பயின்றவர் ஆகும் .

நாட்டியத்தில் ஆர்வம் :


இவர் தாய் மற்றும் தந்தை இருவரும் பாரத நாட்டிய கலைஞர்கள்  மற்றும் ஆசிரியர்கள் ஆவர். இவர்கள் கேரளாவில்  Y.K.B நடன அகாடமி (Y.K.B Dance Academy)யின் மூலம் நாட்டியபயிற்சி அளித்து வந்தனர்.

இதனால் சரண்யா மோகனுக்கும் சிறு வயது முதலே பாரத நாட்டியத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது.

அது மட்டும் அல்லாமல் இவர் ஒரு பாடகரும் அவர் சரண்யா சிறு வயது முதலே நாட்டிய பயற்சி பெற்றுள்ளார் மற்றும் இவர் பல மேடைகளில் பாரதநாட்டியம் ஆடி உள்ளார்.

இதன் மூலமே இவருக்குச் சினிமா வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

saranya mohan current status

Saranya mohan current status

முதல் பட வாய்ப்பு :


இவர் நாட்டிய அரங்கேற்றத்தின் பொழுது இவரின் அரங்கேற்றத்தை பார்த்த கேரளாவில் பிரபல இயக்குரான பாசில் சரண்யாவின் பெற்றோரை தொடர்பு கொண்டு இவரை ANIATHIPRAVU(1997) என்ற படத்தில் குழந்தை கதாபாத்திரமாக நடிக்க வைத்தார்.


பின்பு ANIATHIPRAVU இதே படம் தமிழில் காதலுக்கு மரியாதை(1997) என்ற பெயரில் விஜய் மற்றும் ஷாலினி இருவரும் சேர்ந்து நடித்து வெளியானது இந்தப் படத்திலும் சரண்யா குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தார்.

யாரடி நீ மோகினி :


யாரடி நீ மோகினி (2008) படத்தில் இவர் நடிக்கும்பொழுது இவருக்கு மிகவும் பயமாக இருந்ததாம்.ஆனால் இவருடைய நடிப்பு அனைவராலும் ரசிக்கப்பட்டது.

குறிப்பாக இவர் தனுஷ் மீதான காதலை நயன்தராவிடம் கூறும் விதம் அருமை.

அதுமட்டும் இல்லாமல் அந்தப் படத்தில் இவர் தனுஷுடன் இணைந்து பாலக்காட்டு பக்கத்திலே என்ற ரீமிக்ஸ் பாட்டில் நடனம் ஆடி இருப்பார். அந்தப் பாடல் மக்கள் மனதில் இடம் பிடித்தது.

அப்போது அந்தப் பாட்டின் பழைய வெர்சனில் நடித்த நடிகர் சிவாஜியின் மகனான பிரபு இவரிடம் அந்தப் பாட்டில் ஆடியதை குறித்து பாராட்டினாராம.

அவர் கூறியதாவது (ரீமிக்ஸ் என்ற பெயரில் பல பாடல்களை நாசம் செய்து வருகின்றனர் ஆனால் இந்தப் பாடல் அப்படி இல்லை மிகவும் ரசிக்கும் படி இருந்தது என்றராம்)இதைக் கேட்டவுடன் சரண்யா சந்தோஷத்தில் துள்ளி குதித்தாராம்.

மேலும்  இந்தப் படத்திற்காக இவர் சிறந்த துணை நடிகை விருதினை (பெஸ்ட் சப்போர்டிங் அக்ட்ரேஸ்) பெற தேர்வு ஆகி இருந்தார்.

கதையின் நாயகி :


வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தமிழில் இவர் கதையின் நாயகி ஆனார் இந்தப் படத்தில் பாவாடை தாவணி அணிந்து கல்லூரியில் படிக்கும் கிராமத்து பெண்ணாக வலம் வந்தார்.

வேலாயுதம் :


இவர் வேலாயுதம்(2011) படத்தில் நடிகர் விஜயின் தங்கையாக நடித்துள்ளார்.அந்தத் திரைப்படத்தில்.விஜய், அன்ஷிகா சூரியுடன்  உடன் இணைந்து இவர் செய்த உப்புமா காமெடி அனைவராலும் விரும்ப பட்டது.

velayudham movie vijay sister


தமிழ் மட்டுமல்லாது பல மொழிகளில் நடித்து உள்ளார்.அதுமட்டுமில்லாமல் இவருடைய தாய் மொழியான மலையாளத்தில்  பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார் அவற்றில்  மீரா, சுவாமி ஐயப்பன், மனசாரியதே முக்கியமானவை.


இவர் பல மொழி படங்களில் நடித்திருந்தும் இவருக்குத் தமிழ் படங்களிலே நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தனவாம். இவ்வாறு சரண்யா மோகனேஒரு நேர்காணலில் கூறியுள்ளார். 

விளம்பரங்கள் :


இவர் திரைப்படங்களில் மட்டுமில்லாமல் பல விளம்பரங்களிலும் நடித்து உள்ளார் அவற்றில் கல்யாண் ஜுவல்லர்ஸ, வீக்எண்டு அண்ட் சாரீஸ், பாம்பெர்ஸ்  முக்கியமானவை ஆகும்.


இவரின் நடனம் மற்றும் பாடல் சிறப்பாக இருப்பினும் இவரின் நடிப்பிலும் உடல் மொழியிலும் தனி தன்மை வாய்ந்தவர்.

ஏனென்றால் இவர் கதா நாயகியாக நடிக்காவிடிலும் எந்தப் படத்தில் நடிக்கிறாரோ அந்தப் படத்தில் இவர் நடிப்பு பேசப்படும். 

திருமணம் மற்றும் குழந்தைகள் :

saranya mohan current status :


இவருக்கு 2015ல் திருமணம் நடந்தது இவருடைய திருமணம் காதல்த்திருமணம் என்று பலரும் நினைத்தனர் ஆனால் சரண்யா மற்றும் அவரது கணவர் இருவரும் 7வருடங்கள் நண்பர்களாக இருந்துள்ளனர்.

அதன்பின், இவருடைய குடும்ப நண்பரான இந்திரஜித் என்பவரின் மூலம் இவர்களின் நட்பு திருமணத்தில் முடிந்தது. 

Saranya mohan current status

Saranya mohan current status


தற்போது இவருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது இவருடைய மகனின் பெயர் அனந்தபத்மநாபன்அரவிந்த்  மற்றும் மகளின் பெயர் அன்னபூரணி அரவிந்த்.


திருமணத்திற்கு பிறகு இவர் திரை உலகிற்கு வராமல் உள்ளார் ஆனால் இவர் தற்போது கேரளாவில் நாட்டிய பள்ளி நடத்தி வருகிறார்.

இவர் ஒரு நடன ஆசிரியரும் கூட நடிகர் சிலம்பரசன் கடந்த சில மாதங்களாக  சரண்யா மோகனிடம் பாரத நாட்டிய பயிற்சி பெற்றுக்கொண்டு வருகிறார்.

அப்போது எடுக்க பட்ட புகை படம் சமூக வலை தலங்களில் பரவி வந்தது நாம் அனைவரும் அறிந்ததே.

tamil actor simbu - next movie


இவரை மீண்டும் வெள்ளி மற்றும் சின்ன திரையில் காண மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

சில தமிழ் பட வாய்ப்புகளும் சரண்யாவை தேடி வருவதாக தகவல் பரவுகிறது அதை ஏற்று நடிப்பாரா என்று நாம் பொறுத்திருந்து பார்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube