SerialTV Artist

பாரதி கண்ணம்மா ரோஷிணி பற்றி பலரும் அறியாதவை

bharathi kannamma actress roshini: தென் இந்திய தொலைக்காட்சிகளிலே அதிகப்பட்ச ரசிகர்களைக் கொண்டுள்ள நிறுவனம் விஜய் டிவி ஆகும். இந்நிறுவனம் பல புது முகங்களைச் சின்னத் திரையுக்கும் வெள்ளித் திரைக்கும் அறிமுகப்படுத்தி உள்ளது.

அந்த வரிசையில் தற்போது அறிமுகமாகியுள்ள நடிகை ரோஷினியை பற்றிய தகவல்களைக் காண்போம் வாங்க.

bharathi kannamma actress roshini unknown facts


வெள்ளை நிறம் தான் அழகு என்று இருந்த நேரத்தில் வெள்ளை கருப்பு எல்லாம் இல்லங்க தன்னம்பிகை தான் எல்லாம் என்று சொல்லும் நம்ம பாரதி கண்ணம்மா கண்ணம்மாவை பற்றி ருசிகரமான தகவல்கள்.


நடிகைகள் என்றாலே அழகு அழகு என்றாலே வெள்ளை அந்தக் கூற்றினை முழுமையாக உடைத்து நம்பிக்கை நட்சத்திரமக ஜொலித்து கொண்டு இருப்பவர்தான் ரோஷிணி.


தற்போது விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலின் நாயகிதான் ரோஷிணி இவரின் முழு பெயர் ரோஷிணி ஹரிப்ரியன்.

தனிப்பட்ட வாழ்கை :


இவரின் தந்தை பெயர் ஹரிபிரியன் 1992ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவர் ஒரு சென்னைவாசி பிறந்தது முதல் இன்று வரை சென்னையில் தான் வசிக்கிறார்.


ரோஷிணி தனது பள்ளிப்படிப்பை சென்னையில் பெரம்பூரில் உள்ள ஜோசப் ஆங்கிலோ இந்தியன் ஸ்கூல் (St. Joseph’s Anglo-Indian School)மற்றும் சென் மேரிஸ் ஹையர் செக்கண்டெரி ஸ்கூலிலும் படித்து முடித்தார்.(St Mary’s Matriculation Girls Higher Secondary School, Chennai).


பின்னர் யூஜி பாய்ச்சுலர் டிகிரியை சென்னை விமன்ஸ் எத்திராஜ்(Ethiraj College for Women, Chennai) காலெட்ஜெலும், பிஜி டிகிரியை எஸார்ம் (SRM College)காலெட்ஜெலும் முடித்தார்.


ரோஷினி தனது கல்லூரி காலத்தின் பொது தான் கருப்பாக இருப்பாக இருப்பதால் தன்னை மிகவும் தாழ்வாக நினைத்துக் கொண்டார்.

unknown facts of bharathi kannamma actress roshini - barathi kannamma serial


இவர் தனது கல்லூரி படிப்பை முடித்தவுடன் சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கி துறையில் பணிபுரிந்தார்.

பின்பு சென்னை ஈக்காடு தாங்கள் ஒலிம்பியா டெக் பார்க்கில் மீண்டும் வங்கி துறையில் பணிக்கு சேர்ந்தார். அதற்குப் பிறகு ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்து கொண்டு இருந்தார். 

ஸ்கேர்ஸ் ஆப் சொசைட்டி (Scars of Society):


அர்ச்சனாஆர்த்தி  இயக்கத்தில் ஸ்கேர்ஸ் ஆப் சொசைட்டி (Scars of Society)என்ற குறும் படத்தில் சைலஜா என்ற  கதாபாத்திரமகா நடித்துள்ளர்.இதன் மூலம் சிறிதளவு பிரபலம் அடைந்துள்ளார். இதன் மூலம் இவருக்குக் கண்ணம்மா வாய்ப்பு கிட்டியது எனலாம்.

மாடலிங் துறையில் கண்ணம்மா :


தன் கல்லுரிக் காலத்திலேயே மாடல் துறையில் கலந்து கொண்டு இருந்துள்ளார்.இது மட்டுமில்லாமல் பல விளம்பரங்களில் நடித்துள்ளார்.

அவற்றில் மனம் டெஸ்க்ஸ்டைல் (Manam  Textile), மெஹத  ஜூவல்லரி (Mehta Jewellery) ஆனந்தம் சில்க்ஸ் (Anantham silks)போன்றவை முக்கியமானவை.

பாரதி கண்ணம்மா :

bharathi kannamma actress roshini:

பின்னர் இவருக்குப் பாரதி கண்ணம்மா வாய்ப்பு கிடைத்தது. இதில் பாரதிக்கு மனைவியாக மற்றும் கண்ணம்மாவாக தன் நடிப்பு திறனை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார்.

இதில் இவரின் கணவராக அருண் நடிக்கிறார். இதில், நம்முடைய ரோஷினி கண்ணம்மாவாக தன் நடிப்பு திறன் முழுவதும் காட்டி உள்ளார்.


கருப்பாக இருக்கும் பெண் தன் வாழ்வின் அடைந்த துன்பங்கள் பற்றின கதை தான் இது.


இத்தொடரில் ஹீரோ பாரதி(arun) கண்ணம்மாவை(roshini) காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். கண்ணம்மா கருப்பாக உள்ளதால் பாரதியின் தாய் அவரை ஏற்க மறுக்கிறார்.


பின்னர் கண்ணம்மா அம்மாவாக போகிறாள் என்பதை அறிந்து அவரைத் தன் மருமகளாக ஏற்று கொள்கிறார். ஆனால், பாரதிக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு இல்லையென மருத்துவ அறிக்கை கூறவே பாரதி கண்ணம்மாவின் மீது சந்தேகம் கொள்கிறான்.

அதைப் பற்றிக் கண்ணம்மாவிடம் கேட்கவே. கண்ணம்மா பாரதியிடம் கோபம் அடைந்து வீட்டை விட்டு வெளியேறினார்.

பின்னர் இவருக்கு இரட்டை குழந்தை பிறந்தது. கருப்பாக உள்ள குழந்தையை பாரதியின் தாயிடமும் மற்றொரு குழந்தை கண்ணம்மாவிடம் உள்ளது.

unknown information of bharathi kannamma actress roshini haripriyan

இதைத் தொடந்து பாரதியும் கண்ணம்மாவும் ஒன்று சேர்வர்களா இல்லையா யார் தவறு செய்தனர் என்பது வரும் தொடர்களில் காணலாம். 


இத்தொடரில் மட்டும் இல்லை இவரின் வாழ்விலும் இவருடைய நிறத்தால் பல இடங்களில் மனக்கசப்பு அடைந்து உள்ளார். இவரின், நண்பர்களே இவரைக் கிண்டல் செய்தனராம்.

இதன் மூலம் இவர் மிகுந்த வேதனை அடைந்துள்ளார் மாடலிங் ஆடிஷன்க்கு சென்ற பொது இவரைப் பார்த்து “இது எல்லாம் ஆடிசன்க்கு வருகிறது” என்று கூறினார்களாம்.


இவரின் நிறம் குறைவாக உள்ள காரணத்தால் தன் கல்லூரி காலத்தில் இவர் அதிக அளவு மேக்கப் போட்டாராம். பின்னர், தான் இவருக்குப் புரிந்தது நிறம் என்பது குறை இல்லை தானும் அழகாக தன் இருக்கிறோம் என்று.


மாடலிங் மற்றும் ஷார்ட்பிலிம்களில் தொடங்கி இப்பொது பாரதி கண்ணம்மாவில் பாரதி கன்னட புதுமைப் பெண்ணாக வலம் வருகிறார்.


இப்பொது கண்ணம்மாவாக வலம் வரும் நம்ம ரோஷினி தன்னுடைய நடிப்பு திறனால் பல குடும்பங்களில் ஒருவராய் உள்ளார்.

இப்பொது இவர் நிறத்தை வைத்துக் கேலி செய்த்தவர்களுக்கு அந்த நிறத்தின் மூலமே வெற்றி பெற்று பதில் கூறியுள்ளார்.


அழகு என்பது நிறத்திலோ இல்லை உடல் வடிவமைப்பிலோ இல்லை அது மற்றவரை எவ்வாறு நடத்துகிறோம் என்பதிலே உள்ளது. நம் மனதால் எவ்வளவு அழகாக இருக்கிறமோ அதிலுள்ளது. அப்படி, பார்த்தால் நம்ம ரோஷினி பேரழகி தான்.

model roshini haripriyan


கண்ணம்மாவாக நாடகத்திலும் ரோசினியாக நிஜத்திலும் பாரதி கண்ட பெண்ணாக வலம் வருகிறார்.


இந்த வாய்ப்பின் மூலம் நம்ம கண்ணம்மாவான ரோஷினியின் வாழ்கையே மாறிப் போனது நிறத்தால் கஷ்டங்களை அடைத்த கண்ணம்மா தன்னுடைய முயற்சியால் அந்த நிறத்தை அழகானதாக மாற்றி அந்த நிறத்தை பலரும் ரசிக்கும் படி செய்தார்.

6 thoughts on “பாரதி கண்ணம்மா ரோஷிணி பற்றி பலரும் அறியாதவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube