திருமகள் சீரியல் அஞ்சலி யார் தெரியுமா!

Thirumagal serial anjali :

சின்னத் திரைக்குப்பெயர் போன ஒரு தொலைக்காட்சி தான்  சன்டிவி அதில் திங்கள் முதல் சனி வரை சின்னத்திரை தொடர்கள் ஒளிபரப்படும் அதுபோன்று ஒளிபரப்படும் ஒருத்தொடர் தான்  திருமகள்.

இத்தொடரின் நாயகியான அஞ்சலி என்ற ஹரிகவை பற்றியான சில வியப்பனா தகவல்கள்.

சின்னத் திரைக்கு முன்பு


இவருடைய நிஜப்பெயர் ஹரிக ஸ்ஸாடு. இவர் ஆந்திர பிரதேசத்தில் அக்டோபர் 23 ஆம் தேதி அனந்த்புர் எனும் இடத்தில பிறந்தார்.

thirumagal serial anjali

இவர் பள்ளி படிப்பை ஆந்திராவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முடித்தார். பின்பு கல்லுரிப்படிப்பை ஆந்திராவில் பிரபலமாக உள்ள இன்டெல் இன்ஜினியரிங் காலேஜ்யில் முடித்தார் இவர் ஒரு இன்ஜினியர் பட்டதாரி ஆகும்.


குடும்பம்:இவருடைய அப்பாவின் பெயர் ஹரிநாத் அம்மாவின் பெயர் நாகமணி இவருக்கு ஒரு தம்பியும் உண்டு அவர் பெயர் கிருஷ்ணா.

திரை உலக ஆசை

இவருக்குச் சிறு வயது முதலே நடிப்பு துறையில் ஜொலிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது ஆனால் இவருடைய குடும்பத்திற்கு சினிமா பின்புலம் இல்லாததால்

இவர் தன்னுடைய திறமையைச் சமூக வலை தளத்தில் (டிக் டாக் மற்றும் டப்ஸ்மாட்ச்) பதிவேற்றி வந்தார். அதன் மூலம் இவருக்கு நாடக வாய்ப்புகள் வந்தது.


ஜெமினி டிவி (தெலுங்கு)வாய்ப்பு : இவர் வாய்ப்பு கிடைக்க செய்த செயலுக்கு வெற்றி கிடைத்தது.இவரை ஜெமினி டிவி குழு தொடர்புக்கொண்டு ஆடிஷன்னுக்கு வரவழைத்தது இவர் ஆடிஷன்னில் கலந்து கொண்டு தேர்வு அடைந்தார்.

கல்யாணி தொடர்


பின்பு இவருக்குக் கல்யாணி என்ற தொடரில் கதாநாயகியாக வாய்ப்பு கிட்டியது அத்தொடர் காதல் பின்புலத்தை கொண்ட கதை என்பதால் இவர் விரைவாக மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

Thirumagal serial anjali

அத்தொடரில் இவருடைய பெயர்   கல்யாணி ஆகும். இத்தொடர் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றது.


இவர் வாய்ப்பு கிடைத்த உடன் தன் திறமையைச் சின்னத்திரை உலகுக்கு காட்ட தொடங்கினர் அதன் மூலம் இவருக்குப் பல வாய்ப்புகள் கிடைத்தன.

திருமகள் – Thirumagal serial anjali


தெலுங்கில் கல்யாணி தொடர் அடைந்த வெற்றியால் இவருக்குத் தமிழ் வாய்ப்பும் கிடைத்தது.தமிழ் மொழி தாய் மொழியாக இல்ல விடினும் அதை ஒரு பொருட்டாக நினைக்காமல் தன் திறமையை மட்டும் நம்பி தமிழ் மொழியில் அறிமுகமாகியுள்ளார்.


(2020)  ஹரிஷ் ஆதித்ய இயக்கத்தில் திருமகள் தொடரின் மூலம் தமிழில் ஹரிக நடிக்க தொடங்கினர்.இத்தொடர் ஜெமினி தொலைக்காட்சில் 2015 ஆம் ஆண்டு வெளியான (Atho Athamma Kuthuro) தொடரின் ரீமேக் ஆகும்.


இத்தொடரில் சுரேந்தர் ஷண்முகத்துடன் இணைந்து அஞ்சலியாகக் கலக்கி கொண்டு இருக்கிறார்  ஹரிக. 
அஞ்சலி இத்தொடரில் மிகவும் தைரியமான பெண்ணாக வலம் வருக்கிறார்.

அஞ்சலி வீட்டிற்கு ஒரே மகள் செல்லமாக இருக்கிறார் பின்பு அஞ்சலி மற்றும் ராஜா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் அது ராஜாவின் தாய்க்கு பிடிக்கவில்லை இதைத் தொடர்ந்து திருமகள் கதை நகர்ந்து கொண்டு இருக்கிறது.

இத்தொடர் 45 பகுதிகளைத் தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. ஹரிக ராஜாவின் மனைவியாகக் கலக்கி கொண்டு இருக்கிறார் மற்றும் இவருக்கு அஞ்சலி கதாபாத்திரம் சரியாகப் பொருந்துகிறது.

வெள்ளித்திரை வாய்ப்பு


இவருடைய கனவே வெள்ளித்திரை தான் பல நடிகர்கள் சின்னத்திரையின் மூலம் வெள்ளி திரை உலகினை அடைந்தது போல இவரும் அடைவாரென எதிர்ப்பார்க்க படுகிறது.


தாய் மொழியான தெலுங்கில் இவருக்குப் பல ரசிகர்கள் உள்ளனர் தற்போது இவருக்குத் திருமகள் தொடரின் மூலமும் தமிழ் ரசிகர்களும் அதிகரித்து உள்ளனர். இதன் மூலம் இவருக்குத் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் நடிக்க வாய்ப்புள்ளது.


தமிழ் ரசிகருக்குப் பிடிக்கும் தோற்றத்தில் இருப்பதால் வரும்காலத்தில் இவரை அணைத்து தமிழ் மக்களுக்கும் பிடிக்கும் எனலாம்.

தற்போது இவர் தமிழ் நன்றாகப் பேசிக் கொண்டு இருக்கிறராம் இதுவும் இவர்க்கு தமிழ் திரை உலகில் கால் பதிக்க வழிவகுக்கும் எனலாம்.மேலும் வெள்ளித்திரையினில் கலக்க காத்துகொண்டு இருக்கிறார் இந்தத் தெலுங்கு திருமகள்.

Leave a Reply

Your email address will not be published.

Follow Us

Subscribe us on Youtube