CinemaSerial

பிக் பாஸ் ஆரி பற்றி பலரும் அறியாதவை!

Bigg Boss Aari:

சின்னத்திரையில் நாடகங்கள் அதிக அளவு மக்களால் பார்க்கபட்டாலும் சில நிகழ்ச்சி தனிச்சிறப்பு மற்றும் TRP மதிப்பு கொண்டது அதுபோல நிகழ்ச்சி தான் விஜய்டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி.


பிக்பாஸ் மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனில் வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது இன்றளவும் 1600000 லட்சத்திற்கு மேலான மக்களை தன் வசப்படித்துள்ளது.


பிக்பாஸ் ஷோவில் கலந்து கொண்ட ஆரி என்கிற ஆரி அர்ஜுனன் பற்றி பலரும் அறியாத தகவல்களை இங்கு காண்போம்.

பிறந்தது வளர்ந்தது

 
ஆரி 1985இல் பிப்ரவரி 12ம் தேதி பழனியில் பிறந்துள்ளார். இவர் தன்னுடைய பள்ளிப்படிப்பை அருள் மிகு பழனி ஆண்டவர் மெட்ரிகுலேஷன்யிலும் மற்றும் தனது கல்லூரிப் படிப்பை MK காலேஜ் (தமிழ்நாடு) இல் முடித்தார்.


இவருடைய முழு பெயர் ஆரி தான் ஆனால் மக்கள் நடிகர் ஆரியவின் பெயரையும் இவர் பெயரும் வைத்து குழப்பம் அடைவதால் தன் பெயருக்கு பின்னல் அர்ஜன் என்று சேர்த்து கொண்டார்.

திரையுலகம் ( Bigg Boss Aari )


நம் பிக்பாஸ் ஆரி நடிப்பு துறைக்கு வரும் முன்பு பிட்டன்ஸ் ட்ரைநராக இருந்து உள்ளார். பல தென் இந்தியன் தமிழ் நடிகர்களுக்கு பிட்னெஸ் பயிற்சி குடுத்து உள்ளார்.

bigg boss aari biography

தென் இந்திய நடிகர்களான ஜீவா,சசிகுமார்,ஆதி மற்றும் அமீர்  போண்டோருக்கு பயிற்சி அளித்து உள்ளார் .


பின்பு ஆரிக்கு நடிப்பு துறையின் மீது ஆர்வம் ஏற்ப்பட்டது அதற்கு முக்கிய காரணம் அவர் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக ஏழு வருடம் பணிசெய்து உள்ளார் அதன் மூலமே அவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது.


ஆரியின் முதல் படமான ஆடும் கூத்தில் சேரன் இயக்கத்தில் சிறு வேடத்தில் நடித்தார் அனால் அந்த படம் திரையரங்கில் வெளிவராமல் போனது அனால் அந்த படம் பல திரை மேடைகளில் காட்சி படுத்த பட்டு பல விருதுகளை வென்றது.


ஆரியன் திரை வாழ்க்கையில் முக்கியமான படம் என்றால் அது நெடுஞ்சாலை இந்த படத்திக்காக ஆரி பத்து கிலோ வரை தன் உடல் எடையை குறைத்து உள்ளார்.

bigg boss aari biography

மேலும் இந்த படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பேச பட்டது இந்த படத்திக்காக ஆரிக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.

2015 இல் தமிழில் வெளியான மாயா என்ற படத்தில் நடிகை நயன்தாராவுடன் இணைந்து நடித்து இருந்தார் அந்த படம்   அணைத்து மக்களாலும் விரும்பப்பட்டது.

அதற்கு பின்பு ஆரியின் திரை வாழ்க்கை ஏறுமுகமாகவே இருந்தது இப்பொது அவர் பல படங்கள் நடித்து கொண்டு இருக்கிறார்.


ஆரிக்கு திரைப்படத்தின் மூலம் கிடைத்த ரசிகர்ளை தாண்டி பிக்பாஸ்  மூலம் கிடைத்த ரசிகர்களே அதிகம் ஏனெனில் பிக்பாஸ் வீட்டுனுள் நேர்மையாக இருப்பவர் வரிசையில் முதல் இடத்தில இருப்பவர்.

இவரே நேர்பட பேசும் குணமும். அனைவரிடம் அன்பாக நடந்து கொள்வதால் இவருக்கு பிக்பாஸ் 4 ஜெயிப்பதற்கு வாய்ப்பு அதிகம் என்று மக்களால் நம்ப படுகிறது. 

சமூக சேவை ( Bigg Boss Aari )

ஆரி பிக்பாஸ்ஸிற்கு வருவதற்கு முன்பாக பல சமூக சேவைகளை செய்து மக்களின் மனதில் இடம் பிடித்தார்.

குறிப்பாக 2016 இல் ஏற்பட்ட வெள்ளத்தில்  இவர் -கேர் இந்தியா மற்றும் APJ அப்துல் கலாம் இயக்கத்துடன் இணைந்து உதவி செய்துஅனைவராலும் பாராட்டு பெற்றார் மற்றும் அதற்க்காக இவருக்கு யூத் ஐகான் என்ற விருதினை கொடுத்து கெளரவித்தனர்.


இவர் மாறுவோம் மார்டுவோம் (MARUVOM MARTUVOM) என்ற இயக்கத்தினை உருவாக்கி விவசாயிகளுக்கு உதவி செய்து கொண்டு இருக்கிறார்.

தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் தமிழில் கையெழுத்து போட அணைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.

ஆரிமுகம் என்ற அமைப்பின் மூலம் ஏழ்மையின் பிடியில் உள்ள உதவி இயக்குனர்களுக்கு உதவி செய்து கொண்டு இருக்கிறார்.

மனைவி & மகள்

இவரின் திருமணம் காதல் திருமணம் ஆகும் 2015ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் நாள் இவர்களுக்கு திருமணம் நடை பெற்றது ஆரியின் மனைவி பெயர் நதியா.

இவர் ஒரு இலங்கை தமிழ் பெண்ணாகும். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது திரையுலகில் மட்டும் இல்லாமல் பொது சேவைலும் தன்னை இணைத்து கொண்டு சிறப்பாக செயல் பட்டு வருகிறார் நம் பிக்பாஸ் ஆரி.

தற்போது இருக்கும் நிலையில் பிக் பாஸில் இவருக்கு தான் ரசிகர்கள் மிக அதிகம் அதனால் இவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

6 thoughts on “பிக் பாஸ் ஆரி பற்றி பலரும் அறியாதவை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube