தர்ம சங்கடத்தில் விஜய் சேதுபதி!
Vijay sethupathi Embarrassment: தன் உழைப்பால் மற்றவர்களின் உதவி இல்லாமல் சினிமாவில் சாதித்தவர்கள் என்றால் ஒரு சிலர் மட்டுமே.
அதுவும் புதிதாக சினிமாக்குள் வருபவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம் அப்படி அனைத்து பிரச்சினைகளையும் எதிர்கொண்டு இன்று தமிழ்சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் விஜய்சேதபதி.
ஆரம்பத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக இருந்து பிறகு ஹீரோவாக சில தரமான படங்களில் நடித்த விஜய்சேதபதி, கதாநாயகனாக கடைசியாக நடித்த சில படங்கள் தோல்வியடைந்தது.
vijay sethupathi Embarrassment

அதன்பிறகு தான் வில்லனாக களமிறங்கி சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தளபதியின் மாஸ்டர் படத்திலும் வில்லனாக நடிக்க 10 கோடி மேல் சம்பளம் வாங்கியுள்ளார்.
என்னதான் வில்லனாக நடிக்க சம்பளம் அதிகமாக கிடைத்தாலும், ஹீரோவாக பழையபடி வெற்றி படங்கள் தரவேண்டும் என்பதுதான் தற்போது விஜய்சேதபதியின் இலக்காக உள்ளது.
அதனால் கதையை தேர்வு செய்வதில் மிக கவனமாக செயல்ப்பட்டுவருகிறார்
ஆனாலும் இவரது முன்னாள் தோல்வி படங்களை இயக்கிய தெரிந்த நண்பர்கள் மீண்டும் கதை சொல்லி வருகிறார்களாம்.
அந்த கதைகள் பிடிக்காமல் நண்பர் இயக்குனர்களிடம் No எப்படி சொல்வதென்று தெரியாமல் தர்ம சங்கடத்தில் இருந்த விஜய்சேதுபதி அந்த கதைகளை வைத்து Webseries எடுங்கள் என அறிவுரை கூறி அவர்களை திருப்பி அனுப்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.