Serial

தாலாட்டு சீரியல் இசை பற்றி நாம் அறியாதவை!

சன் டீவியில் புத்தம் புது சீரியல்கள் வந்து உள்ளன. இதில் நிறைய சீரியல் பிரபலம் ஆகிட்டு இருக்கு, அதில் ஒன்று தான் தாலாட்டு. இந்த சீரியல் சன் டீவியில் திங்கள் முதல் சனி வரை மதியம் 2.30 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது. இந்த சீரியல் ஏப்ரல் 26 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு சன் டீவியில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

இந்த சீரியலில் விஜைக்கு மனைவியாக நடித்து வரும் இசை பற்றி பாக்கலாம்.

தனிப்பட்டதாகவல்:

தாலாட்டு சீரியலில் இசையாக நடிக்கும் இவரின் நிஜ பெயர் ஸ்ருதி ராஜ். லக்ஷ்மி, சோனு, ப்ரீதி என்பது இவருடைய புனைபெயர்.
இவங்கள எல்லாருமே சோமினு தான் கூப்பிடுவாங்கலாம். இவங்க ஒரு பிலிம் அக்ட்ரஸ், சீரியல் அக்ட்ரஸ் இது மட்டும் இல்லாமல் இவங்க மாடலும் கூட. இவங்க மார்ச் மாதம் 27 ஆம் தேதி 1980 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தாங்க. இவங்களோட சொந்த ஊர் கேரளா, ஆனா இவர் தற்போது சென்னையில் வாழ்ந்து வந்துட்டு இருக்காங்க. இவங்களோட அப்பா பெயர் ஷிவா ராஜ், இவங்களோட அம்மா பெயர் டிம்பி ராஜ். இளமையான தோற்றத்தோட இருக்குற இவங்களுக்கு இப்போ நாப்பது வயசு ஆகுதாம். இவருடைய அப்பா சின்ன வயசுலயே
எறந்துட்டாங்க. அதனால், இவங்களோட அம்மா தான் இவர வளத்தாங்களாம். இவர் 1995 ஆம் ஆண்டு நடிக்க தொடங்கிட்டாங்க. ஷாப்பிங் மற்றும் டேட்டிங் இதுதான் இவருடைய பொழுதுபோக்குகள்.

திரைப்படவாழ்க்கை:

ஸ்ருதி ராஜ் ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை. இவர் 1995 ஆம் ஆண்டு நடிக்க ஆரம்பிச்சாங்க. இவங்க எல்லா
மொழிகளிலும் நடிச்சிருக்காங்க. இவர் முதலில் நடித்த அக்ராஜன் என்ற மலையாளபடத்தில் இவர் திரையுலகில் அறிமுகமானார். இதில் ஜான்சி என்ற துணை வேடத்தில் இவர் நடித்தார். 1996 ஆம் ஆண்டு விஜய் நடித்த மாண்புமிகு மாணவன் என்ற திரைப்படத்தின் மூலம் பிரியா என்ற கேரக்டரில் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார். 1998 ஆம் ஆண்டு ஒரு தமிழ்
காதல் திரைப்படமான இனி எல்லாம் சுகமே என்ற படத்தில் அப்பாஸ் மற்றும் சங்கவியுடன் முக்கிய கதாபாத்திரத்தில்
ஸ்ருதி ராஜ் நடித்தார். அந்தமான் என்ற கன்னட திரைப்படத்தில் மோனிஷா என்ற முன்னனி கதாபாத்திரத்தில் இவர் நடித்தார். இதை தொடர்ந்து மலையாளத்தில் எலவம்கோடு தேசம் என்ற படத்தில் நந்தினி கேரக்டரிலும் மற்றும் உதயபுரம் சுல்தான் என்ற
படத்தில் ஸ்ரீலக்ஷ்மி கேரக்டரிலும் இவர் நடித்தார். பிரியாம் மற்றும் வரவாய் என்ற மலையாள படத்திலும் இவர் நடித்தார்.
சுல்தான் என்ற கன்னட படத்தில் மங்கா வேடத்தில் இவர் நடித்தார். தோஸ்த் என்ற மலையாள படத்தில் இவர் நடித்தார். வீடெக்கடி மொகுடண்டி மற்றும் ஓ சைனதானா என்ற தெலுங்கு படத்திலும் இவர் நடித்தார். போர் மற்றும் காதல் என்ற
மலையாளப்படத்தில் ஷாபனா கேரக்டரில் இவர் நடித்தார். மேலும் காதல் டாட் காம், மந்திரன், ஜெர்ரி மற்றும் ஐயக்கம் என்ற தமிழ் திரைப்படத்தில் இவர் நடித்தார். இவங்க எல்லா மொழிகளையும் நடிச்சிருக்காங்க என்பது இவருடைய வாழ்க்கையின் சாகசமாக அமைந்தது.

சீரியல் வாழ்க்கை:

2009 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிப்பரப்பு செய்ய பட்ட தென்றல் என்ற தமிழ் சீரியலில் துளசி என்ற முன்னனி கதாபாத்திரத்தில் இவர் நடித்தார். இந்த சீரியலில் நடித்ததால் இவர் மிகவும் பிரபலமானார். இதை தொடர்ந்து ஜெமினி டீவியில் ஒளிப்பரப்பு செய்யப்பட்ட ஷரவானி சுப்பிரமண்யம் என்ற தெலுங்கு சீரியலில் ஷரவானி என்ற கேரக்டரில் இவர் நடித்தார். மேலும் விஜய் டீவியில் 2013 ஆம் ஆண்டு ஒளிப்பரப்பு செய்யப்பட்ட ஆஃபீஸ்
என்ற சீரியலில் ராஜி என்ற கேரக்டரில் கதாநாயகியாக நடித்தார். இதை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான அன்னக்கொடியும் பெண்களும் என்ற சீரியலில் காயத்ரியாக நடித்தார். மேலும் சன்டீவியில் அப்பூர்வ ராகங்கள் மற்றும் அழகு போன்ற சீரியலில் இவர் நடித்தார். இவர் நிறைய சீரியல்களில் நடித்ததால் மிகவும் பிரபலமானார். தற்போது சன் டிவியில்
ஒளிப்பரப்பு செய்யப்பட்ட தாலாட்டு சீரியலில் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலும் பிரபலமாகிட்டு வருகிறது.

விருதுகள்:

இவர் தென்றல் சீரியலில் துளசி என்ற கேரக்டரில் நடித்ததால் இவருக்கு 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில தொலைக்காட்சி விருதுகளில் சிறந்த நடிகை என்ற விருது இவருக்கு கிடைத்தது. 2011 ஆம் ஆண்டு மைலாப்பூர் அகாடமி விருதுகளில் சிறந்த நடிகை என்ற விருது ஸ்ருதி ராஜுக்கு கிடைத்தது. 2012 ஆம் ஆண்டு சன் டீவியில் நடத்தப்பட்ட சன் குடும்ப விருதுகளில் சிறந்த ஜோடி மற்றும் சிறந்த நடிகைக்கான என இரண்டு விருதுகள் இவருக்கு கிடைத்தது. ஸ்ருதி ராஜ் தென்றல் சீரியலில் நடித்ததால் இவருக்கு இந்த சீரியலில் மட்டும்
நான்கு விருதுகள் கிடைத்தது. விஜய் டீவியில் 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட விஜய் டெலி அவார்டில் பிடித்த ஜோடி என்ற விருது கார்த்திக்குடன் ஸ்ருதி ராஜ் வாங்கினார். 2014 ஆம் ஆண்டு சன் குடும்ப விருதுகளில் சிறந்த ஜோடி என்ற விருது தீபக்குடன் ஸ்ருதி ராஜ் வாங்கினார் மற்றும் தேவதைகள் என்ற விருதும் இவர் வாங்கினார். மேலும் 2015 ஆம் ஆண்டு விஜய் டெலி அவார்டில் பிடித்த ஜோடி விருது கிடைத்தது.

கதை:

தாலாட்டு சீரியலில் விஜய் சுற்றி வருகிறது . அவர் தாயின் பாசத்தை ஒருபோதும் அனுபவிக்கவில்லை. இதனால் தனது குழந்தைக்கு தாயின் பாசத்தை முழுமையாக கிடைக்கவேண்டும் என்று இவர் விரும்புகிறார். அவர் இசை என்பவரை திருமணம் செய்கிறார். அவர் தனது குடும்பத்தின்
மீது மிகவும் பாசத்தை காமிக்கிறார். அவர் பெற்றோர் இல்லாத நபர். விஜய் ஒரு தாயின் பாசத்துக்கு ஏங்குகிறார். அவரது தயார் பணிப்பெண்ணாக தங்கள்
வீட்டிற்குள் நுழையும் போது வாழ்க்கை ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகிறது. உண்மையை அறிந்த இசை மீண்டும் தாயையும் மகனையும் ஒன்றுயிணைக்க முடியுமா? அவர் தனது தாயை ஏற்றுக்கொள்வாரா இல்லையா என்பது கதையின் முக்கிய அம்சமாக அமைகிறது.

6 thoughts on “தாலாட்டு சீரியல் இசை பற்றி நாம் அறியாதவை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube