Cinema

சரசரவென சம்பளத்தை உயர்த்திய டாப்ஸீ!!!

டாப்ஸீ பன்னு, இவங்க ஒரு இந்திய ஆக்ட்ர்ஸ். ஆனால் இவங்க முதலில் சாப்ட்வேர் என்ஜினீராக தான்
இருந்துருக்காங்க. இவங்க ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் தான் நிறைய படங்கள் பண்ணிருக்காங்க.

இவங்க 2 பிலிம்பார் அவார்ட்ஸ் வாங்கிருக்காங்க. 2018 இருந்து இவங்க போர்ப்ஸ் இந்திய செலிபிரிட்டி 100 வரிசையிலையும் இருக்காங்க. டாப்ஸீ 1 ஆகஸ்ட் 1987 இல் நியூ டெல்லியில் பிறந்தாங்க. இவங்க முதலில் மாடல்லா தான் இருந்துருக்காங்க. அதுக்கு அப்றம் தான் 2010 இல் “ஜூம்மந்தி நாடம்” அப்படிங்கிற தெலுங்கு படம் மூலியமா திரையுலகத்திற்கு அறிமுகமானங்கா.

அதற்கு பிறகு 2011 இல் “ஆடுகளம்” என்ற தமிழ் படம் மூலியமா தமிழ் சினிமாவிற்கும் அறிமுகம் ஆனாங்க. அதற்கு பிறகு இவங்க டேவிட் தாவானோட காமெடி படமான “சாஷமே பட்டோர்” என்கிற ஹிந்தி படத்திலையும் நடிச்சிருகாங்க.

இத்தனை படங்களில் நடிச்சத்துக்கு அப்றம் டாப்ஸீ “பிங்க்” படம் மூலியமா தான் பிரபலம் ஆனாங்க. இந்த ட்ராமா விமர்சனத்திலையும் பொருளாதாரத்திலும் மிக பெரிய வெற்றி கொடுத்ததுனு சொல்லலாம். அதுக்கு அப்றம் இவங்களுக்கு படவாய்ப்பு அதிகமானது. காஜி அட்டாக் , நாம் ஷபானா, மண்மர்ஜியான் போன்ற படங்களிலும் நடிச்சிருக்காங்க.

இவங்க நேஷனல் பிலிம் அவார்ட்ஸ், ஆனந்த விகடன் சினிமா அவார்ட்ஸ், ஜீ சினி அவார்ட்ஸ் போன்ற நிறைய அவார்ட்ஸை பெஸ்ட் ஆக்ட்ரஸ்க்காக வாங்கிருக்காங்க.

டாப்ஸீ பன்னு தற்போது ஜெயம் ரவி நடித்து வரும் “ஜனகனமன” படத்தின் நாயகியாக நடித்து வராங்க. ஆனாலும் இவங்க மற்ற மொழி படங்களை காட்டிலும் இப்போ ஹிந்தி படங்களுக்கு அதிக கவனம் செலுத்தி வராங்க. இப்போ டாப்ஸீ பன்னு ஹஸீன் டில்லறுபா, ரஷ்மி ராக்கெட், லூப் லப்பட போன்ற படங்களில் நடிச்சிட்டு இருக்காங்க. இந்த படம் 2021 இல் ரிலீஸ் ஆகலானு சொல்லிருக்காங்க.

இவ்வாறு பல படங்கள் வெளியாக இருக்கும் இந்த சூழ்நிலையில் இவங்க அதிர்ச்சியான செய்தியை சொல்லிருக்காங்க. அது என்னனா, இதுவரைக்கும் டாப்ஸீ நடிச்ச படங்களுக்கு ரூ. 5 கோடி சம்பளம் வாங்கிய நிலையில் இப்போ இவங்க சம்பளத்தை உயர்த்திருக்காங்க. இவங்க ஒரு படத்திற்கு ரூ. 8 கோடி சம்பளமாக கேக்குறாங்களாம். இந்த தகவலை கேட்ட பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் சில திரைவட்டாரங்கள் ஷாக்காகி இருப்பதாக சொல்றாங்க.

6 thoughts on “சரசரவென சம்பளத்தை உயர்த்திய டாப்ஸீ!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube