Cinema

இவருக்கு கிடைத்த பணத்தை முழுவதும் கொரோனா நிவாரண நிதிக்காக தந்த இயக்குனர் சுசீந்திரன்!

திரைப்படம் மற்றும் நடிப்பு பயிற்சி மூலம் கிடைத்த பணத்தை கொரோன நிவாரண நிதிக்காக உதயநிதி ஸ்டாலினிடம் நேரில் சென்று 5 லட்சத்தை நிவாரண நிதிக்காக இயக்குனர் சுசீந்திரன் வழங்கினார்.

வெண்ணிலா கபடி குழு படத்தில் மூலமாக இயக்குனராக அறிமுகமானார் தான் சுசீந்திரன். இவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், பாடலாசிரியர் மற்றும் சினிமாவில் திரைக்கதை எழுத்தளார். இவர் 1978 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி இவர் பிறந்தார். இவருடைய
சொந்த ஊர் ஒட்டசந்திரம். இவருக்கு 18 வயதில் இருந்து சினிமாவில் ஆசை வந்ததால் இவர் சென்னைக்கு வந்தார்.

இவர் 2009 ஆம் ஆண்டில் இருந்து இவர் படத்தை இயக்க ஆரம்பித்தார். இவர் முதல் திரைப்படத்தை டைரக்ட் பன்ன 12 வருடங்கள் ஆனது. டைரக்டர் சபபதி அவர்களுடையும், எழில் அவர்களுடையும் உதவி இயக்குனராக சில காலங்கள் வேலை செய்தார். அதன்
பிறகு தான் இயக்குனராக உருவெடுத்தார். இவர் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் வெண்ணிலா கபடி குழு 2009 இல் வெளியானது.
முதல் திரைப்படம் சுசீந்திரனுக்கு நல்ல பெயரை கொண்டுள்ளது.

நான் மகன் அல்ல, பாண்டியன் நாடு, வில் அம்பு, மாவீரன் கிட்டு உள்ள வெற்றி படங்களை கொடுத்தவர், இயக்குனராக சுற்றி வந்தார். இவர் சுட்டு பிடிக்க உத்தரவு என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். அன்மையில் இவரது இயக்கத்தில் சாம்பியன் என்ற திரைப்படம் வெளியானது.
தனது ரசிகர்களுக்கு செய்தி கூற வேண்டுமானால் அதை தன் கைப்பட பேப்பரில் எழுதி இணையத்தில் வெளியிடுவது சுசீந்திரன் ஸ்பெஷல் ஆகும்.

திரைப்படம் தயாரித்தல் மற்றும் ஆன்லைன் வகுப்புகளில் நடத்தப்பட்ட நடிப்பு பயிற்சியின் மூலம் கிடைத்த 5 லட்சத்தை நிவாரண நிதிக்காக கொடுத்தார்.
கொரரோனாவால் ஒருவேளை உணவு இல்லாமல் தவிக்கும் ஏழை மக்களுக்காக நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகின்றனர். நிவாரண நிதிக்காக நிறைய
பிரபலங்கள் முதலமைச்சரிடம் நேரில் சென்று கொடுத்து வருகின்றனர். அதே மாதிரி இயக்குனர் சுசீந்திரன் சேப்பாக்கம் எம்.எல்.ஏ ஆனா உதயநிதி ஸ்டாலினிடம் 5 லட்சத்தை வழங்கினார். இதுதான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

5 thoughts on “இவருக்கு கிடைத்த பணத்தை முழுவதும் கொரோனா நிவாரண நிதிக்காக தந்த இயக்குனர் சுசீந்திரன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube