Serial

வானத்தை போல சந்தியா பற்றி நாம் அறியாதவை

நம்ப நிறைய அண்ணா தங்கச்சிய பாத்து இருப்போம். சில அண்ணா தங்கச்சிய பாக்கும் போது இவங்கள மாதிரி இருக்கணும்னு நினைப்போம்,
சில அண்ணா தங்கச்சிய பாக்கும் போது இப்படி இருக்க கூடாதுனு நினைப்போம். சிலருக்கு அண்ணா இல்லனுகூட வருத்தம் பட்டு இருப்பாங்க.
அந்த மாரி வறுத்த பட்டுட்டு இருக்கறவங்களுக்கு ஒரு ஆறுதலாக இருந்த சீரியல் தான் வானத்தை போல.
தற்போது சன் டீவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர் தான் வானத்தை போல.

இந்த தொடர் திங்கள் முதல் சனி வரை இரவு 7:30 மணிக்கு சன் டீவியில் ஒளிபரப்பாகிறது.
சன் டீவியில் நிறைய சீரியல்கள் பிரபலம் ஆகிட்டு இருக்கு, அதில் ஒன்று தான் வானத்தை போல. இதில்
அண்ணண் தங்கை பாசத்தை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டது.
இதில் சந்தியாவாக நடிக்கும் டெப்ஜனி மொடக்கை பற்றி பாக்கலாம்.

தனி பட்டதகவல்:

வானத்தை போல சீரியலில் நடிக்கும் சந்தியாவின் நிஜ பெயர் டெப்ஜனி மொடக் கின்னி. கின்னி மொடக் என்பது இவருடைய புனைபெயர். இவர் 1996ஆம்
ஆண்டு மார்ச் 20 தாம் தேதி கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தார். இவரது ராசின் அடையாளம் கடகம். இவர் கொல்கத்தாவில் உள்ள ஜான்
மறைமாவட்ட பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இவர் படித்தார்.

இவருடைய தந்தையின் பெயர் அபூர்வா மொடக், இவருடைய தாயாரின் பெயர் மீதா. இவருக்கு நந்தினி மொடக் என்று ஒரு தங்கை உள்ளார். இவருடைய தந்தை ஒரு
தொழிலதிபர் மற்றும் இவருடைய தாய் ஒரு இல்லத்தரசி. டெப்ஜனிக்கு 11 ஆம் வகுப்பில் படிக்கும் போது சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஆனா டெப்ஜனி யோட தந்தை
நடிக்க விட வில்லை. இவர் படிப்புஎல்லாம் முடிச்சிட்டு இவருடைய அம்மா அப்பாகிட்ட நடிக்க அனுமதி கேட்டு கொடுத்தாங்கலாம். அதுக்கு அப்பரம் டெப்ஜனி மொடக்
நடிக்க தொடங்கினர். டெப்ஜனி மொடக் ஒரு இந்திய கர்நாடக மற்றும் தமிழ் நடிகை. டெப்ஜனி மொடக் 2021 ஆம் ஆண்டு மே 31தின் நிலவர படி தனது இன்ஸ்டாகிராம்
பக்கத்தில் 45.9 k பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார்.

பிடித்தவைகள்:

இவருக்கு பிடித்த நடிகர் ராஜ கிருஷ்ணப்ப பைரிய, பிடித்த நடிகை ராதிகா பண்டிட். இவருக்கு ஸ்கை ப்ளூ கலர் நா ரொம்ப பிடிக்குமா. டெப்ஜனிக்கு பிடித்த உணவு பீட்சா
மற்றும் பழச்சாறு. இவருக்கு பிடித்த கார் ஹூண்டாய் ஐ20. இவருக்கு பேக்கரிகளில் செய்த கேக் நா ரொம்ப பிடிக்குமாம். நடனம், பயணம் மற்றும் புத்தகங்களை படித்தல்
என்பது இவரின் பொழுதுபோக்குகள்.

திரைப்பட வாழ்க்கை:

டெப்ஜனி மொடக் நடித்த முதல் திரைப்படம் நாக் அவுட். நாக் அவுட் என்ற தெலுங்கு படம் 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இவர் நாக் அவுட் என்ற திரைப்படத்தில்
கதாநாயகியாக நடித்து தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார்.இவர் கேஸ்டர் கிங் என்ற தெலுங்கு படத்திலும் மற்றும் டோல் ஃப்ரீ 143 என்ற பெங்காலி படத்திலும்
நடித்து வந்தார். இவங்க நடிச்ச மூவி லாம் ஹிட்டாகாத காரணத்தினால்,
இவங்களுக்கு திரைப்படம் நடிக்க வாய்ப்பு கிடைக்கல.அதனால் இவர் சீரியலில் நடிக்க தொடங்கினர்.

சீரியல் வாழ்கை:

டெப்ஜனிக்கு 11 ஆம் வகுப்பில் படிக்கும்போது ஒரு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, ஆனால் இவருடைய தந்தை அதற்கு உடன்படவில்லை. இவர் 16
வயதிலிருந்து நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். ஜீ பங்களா டீவியில் ஒளிபரப்பான மகாபாரத சீரியலில் திரௌபதி கேரக்டரில் நடித்தார். இந்த சீரியல் சூப்பர் டூப்பர்
ஹிட்டானுச்சு. இதை தொடர்ந்து கலர்ஸ் பங்களா என்ற டிவியில் 2015 ஆம் ஆண்டு ஒளிபரப்பு செய்யப்பட்ட அப்போன்ஜோன் என்ற சீரியலில் அண்ட்ரா என்ற வேடத்தில் டெப்ஜனி மொடக் நடித்தார்.
சன் டீவியில் சோப் ஓபரா வகையில் ராஜ் கபூரால் தயாரிக்கப்பட்ட ராசாத்தி என்ற தமிழ் சீரியலில் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்து டெப்ஜனி மொடக் தமிழ் தொலைக்காட்சில்
அறிமுகமானார். இப்போது இவர் சன் டீவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக போய்டு இருக்கும் வானத்தை போல என்ற சீரியலில் நடிச்சிட்டு இருக்காங்க. இந்த சீரியலில் சின்ராசுக்கு ஜோடியாகக
நடிப்பாங்கனு எதிர்பார்க்கப்படுகிறது.

கதை:

இந்த சீரியலில் சின்ராசு மற்றும் அவரது தங்கையின் துளசி இருவரை பற்றி தான் இந்த கதை அமைந்துள்ளது . இருவரும் மிக சிறிய வயதிலேயே பெற்றோரை இலந்து, பாட்டியால் வளர்க்கப்பட்டனர்.
சின்ராசு தனது தங்கையை ஒரு கூட்டு குடும்பத்தில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு சரியான மணமகனை தேடுகிறார். துளசி தன் சகோதரனை
விட்டு வெளியேற விரும்பாததால், அவர் திருமணத்தை ஒத்திவைக்கிறார்.

சின்ராசுவை வெறுக்கும் சின்ராசுவின் எதிரியான பஞ்சாயத்து வாரிய அதிகாரியை துளசி காதலிக்கிறார். சின்ராசுக்கு மற்றும் துளசிக்கு இடையில் என்ன நடக்கிறது மற்றும் சின்ராசு தனது தங்கையான துளசி விரும்பும் மணமகனுடன் திருமணம்
செய்து வைக்கிறாரா இல்லையானு பாக்கலாம். இருவரிடம் பிரிக்க முடியாத பாசம் எவ்வாறு பாதிக்கப்படும் என்பது கதையின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.

இந்த கதைல இருந்து அன்பான உறவை யாராலையும் பிரிக்க முடியாதுனு உணர முடிகிறது. எந்த உறவுகளையும் அன்பின் காரணமாக பிரிக்க முடியாதுனு இந்த கதையின் மூலம் உணர முடிகிறது.

5 thoughts on “வானத்தை போல சந்தியா பற்றி நாம் அறியாதவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube