Cinema

கொரோனவால் பிரபல நடிகரின் மனைவி மரணம் !!!!

கொரோனா தொற்றால் தமிழ் சினிமாவில் பிரபலங்கள் பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள இந்த நிலையில் ,
பிரபல பலபெரும்நடிகர் ரவிச்சந்திரனின் மருமகளும் , நடிகர் ஹம்சவர்தனின் மனைவியும் ஆன சாந்தி ஹம்சவர்தன் வயது 45 ஆன இவர் காலமானார் . காதலிக்க ஏதும் இல்லை , நான் , ஊமை விழிகள் உள்ளிட்ட 100 களும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ரவிச்சந்திரன் . இவரது மகன் ஹம்சவர்தன் மானசீக காதல் , வடுக்கப்பட்டி மாப்பிள்ளை ,
இனிது இனிது , புன்னகைை தேசம் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார் . மம்முட்டியுடன் சேர்ந்து ஜூனியர் சீனியர் படங்களிலும் நடித்துள்ளார். இவர் தயாரிப்பாளராகவும் பீற்று என்ற படத்தை தயாரித்து நடித்து உள்ளார்.

இவரது மனைவி சாந்தி பூமணி படத்தில் இரண்டாவது நாயகியாகவும் , நடிகர் கார்த்திக்குடன் கிழக்கு முகம் என்ற படத்தில் நாயகியாகவும் நடித்து உள்ளார் . மேலும் சில படங்களிலும் நடித்து உள்ளார். ஹம்சவர்தன் தம்பதிக்கு இரண்டு மகன்கள் மற்றும் மகள் உள்ளனர்.

கடந்த மாதம் சாந்திக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து இருந்தார் . அவருக்கு கொரோனா நெகடிவ் வந்த நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையிலும் சாந்திக்கு மூச்சி விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருந்தது . அதனால் அவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிக்சை பெற்று வந்தார் .

நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் . தேனாம்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்திற்கு சாந்தியின் உடல் கொண்டு வரப்பட்டு இன்று மதியம் இரண்டு மணியளவில் ப்ரசன்னகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது . நடிகர் சாந்தியின் மறைவு செய்தியை கேட்டு திரையுலகினர் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் திரைத்துறையினர் மற்றும் பொதுமக்கள் ஹம்சவர்தன் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர் .

5 thoughts on “கொரோனவால் பிரபல நடிகரின் மனைவி மரணம் !!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube