Serial

சுந்தரி சீரியல் கருப்பழகி பற்றி தெரியாதவை!

sundari serial gabriella : சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் வேற்று மாநிலத்தில் காலூன்றி வரும் நிலையில் தற்பொழுது புதிய ட்ரெண்டிங் ஆக நம்முடைய தமிழ் பெண்களை தமிழ் தொடரில் நடிக்க வைக்கும் போக்கு அதிகமாகி வருகிறது.

இது மக்களிடத்தில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது எனலாம். சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் தான் சுந்தரி.

சுந்தரி என்ற பெயருக்குப் பொருத்தமாகத் இத்தொடரில் நடித்து வரும் கறுப்பழகி கேப்ரில்லா வாழ்க்கையில் ஏற்பட்ட சுவாரசியமான தகவல்களை காணலாம் வாங்க…

தனிப்பட்ட தகவல்கள் :

இவருயை முழுப் பெயர் கேப்ரில்லா செல்லுஸ். இவர் 1994ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதி திருச்சியில் பிறந்துள்ளார். இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை திருச்சியில் முடித்துள்ளார். இவருடைய அம்மா அப்பா இருவருமே ஆசிரியர்கள் ஆவர். தற்போது இவர் சென்னையில் வசிக்கிறார்.

திரை உலக ஆசையும் முயற்சியும் :

இவருக்குத் சிறுவயது முதலே திரை உலகில் எப்படியாவது கால் பதித்து விட வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது. ஆனால் அதை பற்றித் தன் பெற்றோரிடம் எதுவும் கூறாமல் இருந்துள்ளார். பின்னர் பள்ளி படிப்பு முடிந்த உடன் நடிப்பதற்காக வீட்டை விட்டு ஓடி வந்து விட்டாராம். sundari serial

செலவுக்காகத் தான் அணிந்து இருந்த நகையை அடகு வைத்துள்ளார். ஒரு வழியாகச் சென்னை வந்து அங்கு இவருடைய நண்பரை சந்தித்து உள்ளார். ஆனால் இவர் வீட்டை விட்டு வந்த ஐந்து மணி நேரத்திற்குள் இவரை கண்டு பிடித்து விட்டார்களாம்

மேலும் இவர் இருந்தது ஒரு கிராமமாம் அதனால் இவர் வீட்டை விட்டு வந்தது காட்டு தீயாகப் கிராமத்தில் பரவி உள்ளது. அந்தக் கிராமத்தில் உள்ள அனைவரும் கேப்ரில்லா பெற்றோரிடம் உன் பொண்ணு ஓடிப் போயிட்டலாமே என்று கேட்டு உள்ளனர்.

இதனை கேட்டு மிகவும் மனம் வருந்தி உள்ளார் கேப்ரில்லா ஆனால் இவருடைய பெற்றோர் இவருக்கு “நீ செய்தது அவ்வளவு பெரிய தப்பு இல்லை” அதனால் நீ கவலை படாதே கூறியுள்ளனர்.

அந்தத் தைரியத்தில் இவருயை அக்காவின் திருமணத்தில் இவர் தன்னுடைய திறமையை காட்டி உள்ளார். அதன் மூலம் இவருடைய பெற்றோர்களுக்கு இவர் திறமையின் மீது நம்பிக்கை வந்ததாம். பின்னர் இவர் பெற்றோர்கள் இவரிடம் உன் கனவை நோக்கி ஓடு என்று கூறியுள்ளனர். பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் சென்னைக்கு வந்து ஷாஸ்ட்டலில் தங்கி வாய்ப்பு தேடி உள்ளார்.

இவர் முதலில் மைம் ஆக்ட்டிங் தான் செய்து வந்துள்ளார். அதன் மூலம் இவருக்குப் பல ஷார்ட் பிலிம்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இதுவரைக்கும் இவர் முப்பதிற்கும் மேற்பட்ட ஷார்ட் பிலிம்களில் நடித்துள்ளார் அதோடு 24ற்கும் மேற்பட்ட (AWARD) அவார்ட்களும் பெற்றுள்ளார். நடிப்பு மட்டுமில்லாமல் பல நாடகங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதுவாரம். பல மேடை நாடகங்களுக்கு ஸ்கிரிப்ட் ரைட்டராக இருந்துள்ளார்.

விஜய் டிவி:

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு 5 நிகச்சியில் கலந்து கொண்டு உள்ளார். அந்தச் சமயம் விஜய் டிவி பிரபலம் திவ்யதர்சினியை போன்று நடித்துக் காட்டினார் அதைப் பார்த்து அந்த அரங்கமே வியந்தது. தற்போது வரை இவரை போன்று யாரும் செய்தது இல்லையாம் அந்த அளவுக்கு நடித்துள்ளார்.

கடிதாசி காரி :

கடிதாசி காரி தலைப்பில் எழுதியாச்சு படிச்சுபுடலாம் என்று ஆரம்ப்பித்து சமூகத்தில் சொல்ல வேண்டிய ஆனால் சொல்லப்படமால் இருக்கும் பல விஷயங்களைத் தனக்கே உரித்தான வார்த்தை வரிகளில் பலதரப்பட்ட தலைப்புகளில் கோபம் அல்லாமல் நடைமுறை வாக்கியங்களைக் கொண்டு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இவருடைய வீடியோவை பார்த்த பிறகு ஒரு நிமிடம் ஆம் இவர் சொல்வது சரிதான் என்று அனைத்து மக்களின் மனதிலும் தோன்றுகிறது. இதன் மூலம் இவர் பல ரசிகர்களை பெற்றுள்ளார் எனலாம்.

ஐரா:

ஐரா திரைப்படத்தில் சின்ன வயது நயன்தாராவாக வாழ்ந்து இருந்தார். பவானி என்ற பெயரில் இவர் நடித்தது இருந்தார். இவரின் நடிப்பு அனைவரின் பாராட்டை பெற்றது.

இவருடைய ஸ்ஸீன் மட்டும் கருப்பு வெள்ளை நிறத்தில் இருக்கும் அது இவருக்கு மேலும் ஒரு மெருகை ஏற்றியுள்ளது.

சீனில் நடித்து முடித்த பிறகு இயக்குனர் சைஜு ஸ் இவரைப் பார்த்து நன்றாக நடித்தாய் அதோடு கேமராவில் பார்க்கும் பொது பைண்டிங் போல உள்ளாய் என்று கூறுவாராம்.

“நடிப்பு நல்ல இருக்கு அனா கொஞ்சம் நிறம் இருந்து இருக்கலாம் என்று சொல்பர்கள் மத்தியில்” இயக்குனர் இவ்வாறு கூறியது இவருக்கு மிகவும் ஆச்சிரியம் கலந்த சந்தோசத்தினை கொடுத்ததாம்.

திருமணம் :

2019ஆம் திருமணம் நடந்தது. இவருடைய கணவர் பெயர் ஆகாஷ் மேலும் இவர் ஒரு ஒளிப்பதிவாளர் ஆகும்.

இவர்கள் திருமணம் காதல் திருமணம் அதோடு இவருடைய கணவரும் திரையுலகில் இருப்பதால் இவருடைய கலை திறமையை காட்ட கேப்ரில்லாவிற்கு எந்த வித தடையும் இல்லையாம்.

மேலும் தன்னுடைய அம்மாவைவிட தன் கணவர் தன்னை நன்றாகப் பார்த்துக் கொள்வதாகப் பல இன்டெர்வியூவில் கூறியுள்ளார்.

சுந்தரி :

சுந்தரி ஒரு கிராமத்தில் வளர்ந்த தமிழ் மண்ணின் நிறத்தில் உள்ள ஒரு பெண் அதோடு கலெக்டர் அக வேண்டும் என்ற ஆசையுள்ள பெண்.

ஆனால் ஊர் மக்களுக்கும் சுந்தரி அம்மவிற்கும் அது பிடிக்கவில்லை.

இதற்கிடையில் கார்த்திக்கும் சுந்தரிகும் திருமணம் நடைபெறுகிறது இதை தொடர்ந்து கதை நகரத்து கொண்டு இருக்கிறது.

ஐரா படத்திற்கு பிறகு இவருக்குச் சரியான வாய்ப்பும் வராமல் இருந்துள்ளது இதனால் சரி நமக்கு இனி திரை உலகம் வேண்டாம்.

நாம் மேடை நாடகங்களுக்குக் கதை வசனம் எழுத போலாம் என்று முடிவெடுத்து விட்டாராம்.

பார்த்தால் சுந்தரி வாய்ப்பு இவரைத் தேடி வந்துள்ளது. அப்போது நினைத்தாராம் நாம் உழைத்துக் கொண்டே இருந்தால் நமக்கான வாய்ப்பு கண்டிப்பாக வரும் என்று.

வாழ்த்துக்களும் வலிகளும் :

கண்கள் தெரியாத குழந்தைகளுக்குக் கதை சொல்ல (BLIND SCHOOL) போய் இருந்தாராம். இவர் கதை சொல்லிக் கொண்டு இருக்கும் பொது அங்கு ஒரு குழந்தை இவரை பார்த்து அக்கா நீங்க கேப்ரில்லா தானே என்று கூறியதாம்.

இதை கேட்டவுடன் இவருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லையாம். தான் திரை வாழ்க்கையில் வெற்றி அடைந்தோம் என்று அவருக்கு அப்போது தோன்றியதாம். உடனே இவர் அந்த குழந்தையை கட்டிக்கொண்டாராம்.

அப்போது இவருக்கு அழுகை வந்தாதாம் ஆனால் அது அந்தக் குழந்தைக்குத் தெரியக் கூடாது என்று சிரித்து சமாளித்தாராம்.

இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகுதியில் ஏதேனும் ஒரு போட்டோவை போட்டால். அதற்கு இவருடைய ரசிகர்கள் குறிப்பாகச் சில நிறம் குறைவாக உள்ள பெண்கள் “அக்கா எப்படி இந்தக் மாதிரி கலர் டிரஸ் போடுறீங்க எங்களுக்கு இந்தக் கலர்ல டிரஸ் போடுறக்கு கஷ்டமா இருக்கு” என்று சொல்லுவார்களாம்.

அது இவருக்கு மிகவும் சங்கடமாக இருக்குமாம். அப்போது இவர் முதலில் உங்களை உங்களுக்குப் பிடிக்கணும் அப்போது தான் மத்தவங்களுக்கு புடிக்கும் என்று சொல்வராம்.

sundari serial

பல படங்களுக்கு உடலை வருத்திக் கொண்டு நடிப்பாராம் ஆனால் அந்தப் படங்கள் பாதியில் நிறுத்த பட்டுவிடுமாம். அதனால் மிகவும் மனவேதனை அடைவாரம்.

ஆனால் இவருக்கு எதோ ஒரு தைரியம் மனதிற்குள் இருக்குமாம். சரி அடுத்த வாய்ப்பை தேடுவோம் என்ற எண்ணம் மனதிற்குள் வந்துவிடுமாம்.

மேலும் இவர் பொள்ளாச்சி சம்பவத்தை பற்றி ஒரு வீடியோ போட்டு இருந்தாராம்.

விழிப்புணர்வுக்காக வீடியோ போட்டுள்ளார். ஆனால் இவர் அதில் சர்சையில் சிக்கி கொண்டார். அந்தச் சமயம் இவருடைய கணவர் தான் இவருக்கு உறுதுணையாக இருந்தாராம்.

தற்போது திரை உலகில் இருப்பது இவருக்கு மிகவும் சந்தோசத்தினை கொடுக்கிறதாம் உதாரணமாகத் தினமும் இரவில் கடவுளிடம் நான் சினிமாவில் இருப்பதற்கு நன்றி என்று சொல்லுவாராம்.

கறுப்பழகி தியேட்டர் பேக்டரி என்ற பெயரில் இவர் ஆன்லைன் மூலம் நடிப்பு பயிற்ச்சி அளித்து வருகிறார். கபாலி படத்திலும் சிறு வேடத்தில் நடித்துள்ளார்.

தற்போது கேப்ரில்லாவிற்க்கு ( sundari serial sunthari ) கொரோன தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் தன்னை தனிமை படுத்தி கொண்டு வீட்டில் இருக்கிறார்.

ஆனால் இவரை பற்றின வதந்திகள் சமூக வலை தலத்தில் வேகமாக பரவ தொடங்கியது அதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் சமூக வலை தலத்தில் ரசிகர்களிடம் பேசியுள்ளார்.

ஒருவரின் அங்க அடையாளங்களையும் நிறத்தையும் வைத்து அவருடைய எண்ணங்களை அல்லது செயல்களை நம்மால் எக்காலமும் நிர்ணயிக்க முடியாது. அவ்வாறு நிர்ணயிப்பவர் அந்தக் கணம் நாம் வெட்கப்பட வேண்டும்.

5 thoughts on “சுந்தரி சீரியல் கருப்பழகி பற்றி தெரியாதவை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube