சிவகார்த்திகேயனின் சொத்துமதிப்பு |Sivakarthikeyan
Sivakarthikeyan net worth: தற்போது தமிழ் சினிமாவில் உள்ள டாப் 10 நடிகர்களில் ஒருவர் தான் சிவகார்த்திகேயன். சினிமா பின்புலம் இல்லாதவர்களும் சினிமாவில் வெற்றியடைய முடியும் என்று சாதித்து காட்டியவர்.
சினிமா வாழ்க்கையில் சாதித்தது மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் போன்ற தீய பழக்கங்கள் இல்லாமல் இன்றைய மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் முன் உதாரணமாக இருக்கிறார்.
சாதாரண டிவி Anchor ஆக மீடியா பயணத்தை தொடங்கி பல அவமானம் மற்றும் விமர்சனங்களை எதிர்க்கொண்டு படிப்படியாக முன்னேறி தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருகிறார்.
டாக்டர் மற்றும் அயலான் படங்களில் கமிட் ஆகி தற்போது நடித்துவருகிறார்.
sivakarthikeyan net worth

சரி, நடிகர் சிவகார்த்திகேயனின் சொத்துமதிப்பு பற்றிய ஒரு தொகுப்பை நாம் இங்கு காணலாம்.
சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிப்பதற்கு சுமார் 13 கோடியிலிருந்து 20 கோடிவரைக்கும் சம்பளமாக பெறுகிறார்.
SK Productions என்ற கம்பெனி மூலம் படத்தை தயாரித்தும் கோடிகளில் வருமானம் ஈட்டுகிறார்.
சிவா, ஆடி Q7 கார் உட்பட மூன்று கார்கள் வைத்துள்ளார். இந்த மூன்று கார்களின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட 10 கோடிகள் இருக்கும்.
சென்னையில் உள்ள சிவகார்த்திகேயனின் வீடு நீச்சல் குளம், பெரிய கார் பார்க்கிங், சிறப்பான கார்டன் ஏரியா என ஒவ்வொன்றையும் பார்த்து கட்டியுள்ளார். வீட்டின் மதிப்பு மட்டும் 15 கோடி வரை இருக்கும்.
கோடிக்கணக்கில் பணம் பல நடிகர்களிடம் இருந்தாலும் ஒருசிலரே மக்களுக்கு ஏதோஒன்று என்றால் முன்வந்து உதவிசெய்கின்றனர்.
அந்தவரிசையில் சிவாவும் ஒருவர் என்றே கூறலாம், சமீபத்தில் கூட கொரோனா நன்கொடையாக 25 லட்சம் கொடுத்தது அனைவரும் அறிந்ததே.
நாம் இங்கு பார்த்த அனைத்து தகவல்களும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை, நம்பத்தகுந்த இணையதளங்களில் கிடைக்கப்பெற்ற தகவல் மட்டுமே.
Pingback: Super Star ரஜினி கல்லூரி வயதில்-tamilfy | rare photo rajinikanth | cini
Pingback: பிரபல விஜய் டிவி தொகுப்பாளருக்கு ஆண் குழந்தை பிறந்தது