Cinema

வில்லியாக களமிறங்கிய சிம்ரன்!!! எந்த படத்தில் தெரியுமா???

சிம்ரன் பாக்க, இவங்க தமிழ் சினிமாவில் “சிம்ரன்” என்று அழைக்கப்படுகிறார். இவங்க 4 ஏப்ரல் 1976 இல் பம்பாயில் பிறந்தாங்க. இவங்க ஒரு இந்திய நடிகை, தயாரிப்பாளர் மற்றும் ஒரு சிறந்த டான்சர். இவங்க தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி சினிமாவிலும் நடிச்சிட்டு இருக்காங்க. இவங்களோட டான்ஸ் மற்றும் நடிப்பிற்காகவே இவங்க ரொம்ப பிரபலமானங்கனு சொல்லலாம். இவங்க ஸ்கூல் படிக்கும்போதே டான்ஸ், ட்ராமா போன்ற நிகழ்ச்சியில் ஆர்வமாக கலந்துக்குவாங்கலாம்.

இவங்க நிறைய ஹிந்தி படங்களில் நடிச்சிருக்காங்க. ஹிந்தியில் இவங்களோட முதல் வெற்றி படம் என்னனா “தேரே மேரே சப்னே” என்ற படம் தான். பிறகு இவங்க “இந்திரப்ரஸ்தா” என்கிற மலையாளம் படத்திலையும், “ஷாஹடா மாரி” என்கின்ற கன்னட படத்திலையும் நடிச்சிருக்காங்க. தமிழில் சிம்ரன் அவர்களின் முதல் படம் “வி.ஐ.பி” தான்.

இந்த படத்திற்கு அப்றம் தளபதி விஜயுடன் இணைந்து “துள்ளாத மனமும் துள்ளும்”, தல அஜித்துடன் “வாலி”, உலக நாயகன் கமல் ஹாசனுடன் இணைந்து பம்மல்.கே. சம்மந்தம் மற்றும் பஞ்சதந்திரம் போன்ற நகைச்சுவை படங்களையும் நமக்கு கொடுத்துருக்காங்க. இது போன்ற நிறைய வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு சிம்ரன் கொடுத்துருக்காங்க.

இவங்களோட எல்லா படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை தந்தது, அதனாலேயே இவங்க தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின்ஸில் ஒருத்தராக இருக்கறாங்க. இவங்க நிறைய அவார்ட்ஸும் வாங்கிருக்காங்க. பிம்ஃபார் அவார்ட் ஃபார் பெஸ்ட் தமிழ் ஆக்ட்ரஸ் அவார்டை “கன்னத்தில் முத்தமிட்டாள்” என்கிற படத்திற்காகவும், பில்ம்ஃபார் அவார்ட் ஃபார் பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆக்ட்ரஸ் அவார்டை “வாரணம் ஆயிரம்” படத்திற்காகவும் வாங்கிருக்காங்க.

இந்த வகையில் இவங்க பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் நடிக்க இருக்கிறதாகவும், இந்த படத்தின் கதாநாயகன் “கார்த்தி” எனவும் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ரஜிஸா விஜயன் ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் சொல்றாங்க. இந்த படத்தில் வில்லியாக சிம்ரன் நடிப்பதாகவும், இதற்கு முன்பு “பார்த்தேன் ரசித்தேன்”, “சீமா ராஜா” போன்ற படங்களில் சிம்ரன் வில்லியாக நடித்திருந்தாலும், இந்த படத்தில் சிம்ரன் சோலோ வில்லியாக நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

6 thoughts on “வில்லியாக களமிறங்கிய சிம்ரன்!!! எந்த படத்தில் தெரியுமா???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube