Cinema

சைக்கிளில் பொருள்களை எடுத்துச்சென்று பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய நடிகர்

sonu sood activity:

கொரோன காலத்திற்கு முன்னர் வில்லனாக இருந்த சோனு சூட் தற்போது இந்திய மக்களின் நிஜ ஹீரோவாகத் மாறியுள்ளார்.

கொரோன ஊரடங்கில் தினசரி கூலி வேலை செய்பவர்களும் வெளிமாநிலத்தவரும் பெரும் சங்கடத்திற்கு ஆளாகினர். இவர்களுக்கு எல்லாம் சரியான சமயத்தில் சோனு சூட் உதவி செய்தார். அவர் செய்த உதவிகள் அனைத்தும் அந்த உதவி பெற்றவர்களின் இடத்திலிருந்து யோசித்தால் அது ஈடுயினை அற்றது.

தற்போது உள்ளூர் வணிகர்களுக்கு ஆதரவாக கலம் இறங்கி உள்ளார். சைக்கிளில் பொருட்களை விற்று ஆதரவு தெரிவித்து வருகிறார்.

சோனு சூட் ஒரு இந்திய நடிகர் அதோடு தயாரிப்பாளரும் கூடத் தமிழ் ஹிந்தி தெலுங்கு போன்ற மொழிகளில் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராவும் வளம் வருகிறார். இவர் தமிழில் தான் தன்னுடைய முதல் பணியினை தொடங்கினர் இவர் 1999 கேப்டன் விஜகாந்த் அவர்கள் ஹீரோவாக நடித்து வெளியான கள்ளழகர் படத்தில் நடித்து இருந்தார்.

விஜய் அவர்களுடன் இணைந்து நெஞ்சினிலே படத்திலும் நடித்து இருந்தார். பின்னர் தமிழிலிருந்து தெலுங்கு திரை உலகிற்கு சென்றார் ஹான்சம் என்ற படத்தில் நடித்து அங்குப் பிரபலமாகினர். பின்னர் நேராக ஹிந்தி சினிமாவிற்கு சென்றுள்ளார் அங்கு அம ஷாகித் இ அசாம் Shaheed-E-Azam என்ற படத்தில் நடித்தார். இந்தப் படம் மாபெரும் வெற்றியை இவருக்குப் பெற்று தந்தது.

sonu sood activity

அருந்ததி மற்றும் ஒஸ்தி படத்தின் மூலம் வில்லனாகத் தமிழ் மக்களின் மனதில் நின்றார். பின்னர் பல படங்களில் வில்லனாகவே நடித்து இருந்தார். அனால் கொரோன சமயத்தில் மக்களுக்குச் செய்த உதவியால் தற்போது ஏழை மக்களில் ஹீரோவாகிவிட்டார். அதோடு பல இளைஞர்களுக்கு முன் மாதிரியாகவும் திகழ்கிறார்.

கொரோன ஊர் அடங்கால் வெளிமாநிலத்தவர் தங்களின் சொந்த ஊருக்குத் செல்ல முடியாமல் திணறிக் கொண்டு இருந்தனர். அவர்கள் தங்களின் சொந்த மாநிலத்திற்கு செல்ல பேருந்து வசதி செய்து கொடுத்து உதவினார் அதோடு அவர்கள் உணவிற்கும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். பலருக்கு தன்னுடைய சொந்த செலவிலே விமானம் மூலம் அவர்களின் ஊருக்குச் சொல்ல உதவி புரிந்தார்.

மேலும் ஏழை விவசாயிக்கு ட்ராக்டர் வாங்கி கொடுத்ததும். ரஷியாவில் படித்துக் கொண்டு இருந்த இந்திய மாணவர்கள் நாடு திரும்ப விமான ஏற்பாடுகள் செய்து கொடுத்தது போன்ற பல உதவிகள் செய்து உள்ளார்

குறிப்பாகக் கொரோன இரண்டாம் அலையில் அக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு இந்தியாவே திணறியது. அப்போது சோனு சூட் அக்சிஜன் தேவைப்படுவோருக்கு அக்சிஜன் வழங்க ஒரு குழுவினை ஏற்பாடு செய்தார்.

பெங்களூரு மருத்துவமனையில் அக்சிஜன் இல்லாமல் உயிருக்குப் போராடிய 23 கொரோன நோயளிகளை சோனு அவர்களின் குழு காப்பாற்றியுள்ளது.

பிரான்சிலிருந்து அக்சிஜன் தயாரிக்கும் ஆலைகளை வரவழைக்க போவதாகக் கூறியுள்ளார். மேலும் அணைத்து செலவிற்கும் தன்னுடைய சொந்த சொத்துக்களை பயன்படுத்தி வந்துள்ளார். தற்போது தன்னுடைய சொத்துக்களை அடமானம் வைத்து ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

மக்கள் மால்களில் பொருள்கள் வாங்குவதை தவிர்த்து உள்ளுர் வணிகர்களிடம் பொருள்கள் வாங்க வேண்டும் என்பதற்காகச் நேற்று சோனு சூட் சூப்பர் மார்க்கெட் என்று ஒன்றை தொடங்கி உள்ளார். சைக்கிளில் பொருள்களை எடுத்துச் சென்று பொது மக்களிடம் விற்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அதற்காக முட்டை பிரெட் மற்றும் அன்றாட மளிகை பொருட்களை சைக்கிளில் வைத்து விற்று வருகிறார்.

பொருள்கள் இலவசமாக வீட்டிற்க்கே வந்து கொடுக்கப்படும். அதோடு பத்து முட்டை வாங்கினால் ஒரு பிரெட் இலவசம் போன்ற சலுகைகளை வழங்கி அசத்தி வருகிறார். மேலும் அதை வீடியோவாக எடுத்துச் சமூக வலை தலங்களில் பதிவிட்டு இருந்தார். அதை பல லட்சம் மக்கள் விரும்பியும் பகிர்ந்தும் வருகின்றனர்.

சோனு சூட் அவர்கள் செய்த உதவிக்குக் கைமாறாகத் தெலுங்கானா மக்கள் இவருக்குக் கோவில் கட்டி வழிபடுகின்றனர். அதோடு பல வியாபாரிகள் தங்களுடைய கடைக்கு இவருடைய பெயரை வைத்துள்ளனர்.

மேலும் பஞ்சாப் மாநிலம் சோனு சூட் அவர்களை தங்கள் மாநிலத்தின் அடையாளமாக அறிவித்துள்ளது. அதோடு (United Nations Development Programme) இவருக்குச் சிறந்த மனிதாபியமான செயல் விருது வழங்கிச் சிறப்பித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube