Cinema

கத்ரீனாவுடன் நடிக்க போகும் விஜய் சேதுபதி! வெளியான தகவல்!

தமிழ் திரையுலகத்தில் முன்னனி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டும் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவமான பல கதாபாத்திரத்திலும் நடிச்சிட்டு வராங்க. ஆக்டர் விஜய் சேதுபதிக்கு பாத்தீங்கனா
கடைசியா மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் ஆனது. தமிழில் நடிகர் ரஜினி காந்த் மற்றும் விஜய்
ஆகியோருக்கு வில்லனாக நடித்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களிலும்
நடிச்சிட்டு வராங்க.

ஹிந்தியில் அமீர் கான் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த விஜய் சேதுபதி கால் சீட் பிரச்சனையின்
காரணமாக அந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியானது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மிக பெரிய வெற்றி பெற்ற மாநகரம் என்ற திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்றாங்க. இந்த படத்தை சந்தோஷ் சிவன் ஹிந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக இருக்காங்க நடிகர் விஜய் சேதுபதி.

இதை தொடர்ந்து அந்தாதும் என்ற படத்தை எடுத்த இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் மேலும் ஒரு படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடிக்க
இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்த படத்தை lets ott global தான் ப்ரொடியூஸ் பன்றாங்கலாம். அவங்க இப்போ இந்த படத்தில் இருந்து நிறைய அப்டேட் கொடுத்து இருக்காங்க. பஸ்ட் அப்டேட் என்னானு பாத்தீங்கனா இந்த படத்துக்கு டைட்டில்
கொடுத்து இருக்காங்க. இந்த படத்துக்கு மெர்ரி கிறிஸ்துமஸ் அப்படினு பெயர் வச்சி இருக்காங்க.

இந்த படத்தை ஒரு திரில்லர் மூவியா எடுக்கபோறாங்கலாம். முக்கியமாக இந்த படத்தோட ரன்னிங் டைம் 90 நிமிடம் மட்டும் தான், இந்த படத்துக்கு இடைவேளை இல்லையாம். விரைவில் இந்த படத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் அப்படினு
சொல்லப்பட்டு வருகிறது.

6 thoughts on “கத்ரீனாவுடன் நடிக்க போகும் விஜய் சேதுபதி! வெளியான தகவல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube