நடிகர் விஜய்க்கு ஜோடியாக VJ சித்ரா!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் முல்லை கதாபாத்திரத்தில் கலக்கிகொண்டு இருப்பவர் தான் விஜே சித்ரா (VJ Chitra ).

தற்போது உள்ள சீரியல் டிரெண்டில் கதிர் முல்லை ஜோடி தான் டாப் என்பது அனைவரும் அறிந்ததே.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரீச்க்கு பிறகு சித்ரா ஒரு சில தமிழ் படங்களில் இப்போது நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் சமீபத்தில் Q&A Section வந்த சித்ரா ரசிகர்கள் கேட்ட அனைத்து கேள்விக்கும் பதில் குடுத்தார்.
அப்போது ஒரு ரசிகர் உங்கள் உயரத்திற்கு தளபதி விஜயுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டுமென ஆசைப்படுகிறேன் என்றார் மற்றும் இதில் உங்கள் கருத்து என்ன என்றும் கேட்டார்.
அதற்கு விருப்பம் சொல்லி, தானும் காத்துக்கொண்டு இருக்கிறேன் என்பது போல ரியாக்ஷன் செய்தார் சித்து.