Cinema

திருமணமாகி 16 ஆண்டுகளுக்கு பின் தந்தையான பிரபல இயக்குநர்!! அடடா…!!! இரட்டை குழந்தைகளா….!!!

சஜி சுரேந்திரன், இவர் கேரளாவில் பிறந்தவர். இவர் ஒரு மலையாள திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் படங்கள் பெரும்பாலும் வணிக ரீதியாக வெற்றியையும், சிறந்த நகைச்சுவைக்கும் பெயர் பெற்றதுனு சொல்லலாம். குறிப்பாக இவரின் “விவாஹிதராயல்” மற்றும் “ஹேப்பி ஹஸ்பன்ட்ஸ்” திரைப்படங்கள் முழுவதும் நகைச்சுவையாகவும், அதிக வசூல் ஈட்டிய திரைப்படமாகவும் இருக்கின்றது.

இவர் மகாத்மா காந்தி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றவர். சஜி கல்லூரியில் படித்து கொண்டிருக்கும்போதே தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். பிறகு இவர் விஜி தம்பியின் படங்களுக்கு உதவி இயக்குனராகவும் மேலும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் பணியாற்றி உள்ளார். 2006 ஆம் ஆண்டு “டிசம்பர் மூடுபனி” என்ற குறும்படத்தின் மூலமாக
திரைப்பட இயக்குநர் ஆனார்.

பிறகு “விவாஹிதராயல்” என்ற படத்தின் மூலம் மலையாள திரைப்பட அறிமுக இயக்குநராக அடிவைத்தார். பின் இனிய கணவர்கள், நான்கு நண்பர்கள், அவள் தாக்க்ஷி என பல வெற்றி படங்களையும் இயக்கினார். 2010 ஆம் ஆண்டு இவர் இயக்கிய “நான்கு நண்பர்கள்” என்ற திரைப்படத்தில் உலக நாயகன் கமலஹாசன் ஒரு சிறிய வேடத்தில் தோன்றினார், இது இந்த படத்திற்கு சிறப்புடையதாகும்.

மேலும் இவர் தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார். மனசம், மேகம், மந்தரம், மாதவம், தயா போன்றவை இவர் இயக்கிய தொலைக்காட்சி தொடர்கள் ஆகும். இவர் மனைவி பெயர் சங்கீதா. இவர் 2005 ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் வரை குழந்தைகள் இல்லாமல் இருந்தது.

அந்த வகையில் தற்போது இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இதை சஜி தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டு அதில், “சில நேரங்களில் அற்புதங்கள் இரட்டிப்பாக வரும், இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது, கடவுளுக்கு நன்றி” என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும் இவர்களுக்கு திரையுலகில் பலரும் வாழ்த்துகளை
தெரிவித்து வருகின்றனர்.

6 thoughts on “திருமணமாகி 16 ஆண்டுகளுக்கு பின் தந்தையான பிரபல இயக்குநர்!! அடடா…!!! இரட்டை குழந்தைகளா….!!!

  • Most of this comes from the greed of name brand drug manufacturers purchasing cialis online The two sick children were hanging out in the hibiscus tea vs erectile dysfunction city, and they

  • Cialis tadalafil is very effective and is the only medication in its class that treats both erectile dysfunction and enlarged prostate symptoms generic priligy As a result, tadalafil is sometimes used as a treatment for pulmonary hypertension or elevated blood pressure in the lungs under the brand name Adcirca

  • cialis without prescription Certain prior medical conditions, hereditary alterations or interactions with other drugs may impair or negatively affect the intake of Cialis Soft Tabs 20mg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube