Cinema

வெற்றிமாறன் இயக்கும் அதிகாரம் என்ற படத்தில் ராகவாலாரன்ஸ்! ஆவலுடன் இருக்கும் ரசிகர்கள்!

தனுஷை தாண்டி வெளியே வரமாட்டாரா வெற்றிமாறன் அப்படினு ஏங்கிட்டு இருந்த ரசிகர்களுக்கு
அடுத்த இன்ப அதிர்ச்சியா ராகவாலாரன்ஸ் ஓட சேர்ந்து படம் பண்ணி இருக்காங்கனு தகவல்கள் வெளியாகி
உள்ளது.

இயக்குனர் வெற்றிமாறன் தனுஷ் கூட நிறைய படம் உருவானதையும் ஒரு நேஷனல் அவார்ட் கன்பாம் அப்படினு
சொல்லற அளவுக்கு படங்கள் இருக்கு. தமிழ் சினிமா உடைய தரமான இயக்குனர்களில் வெற்றிமாறனும் ஒருவரா
இருக்காரு. அசுரன் படத்துக்கு வெற்றிக்கு அப்பரமா தற்போது நடிகர் சூர்யாவை ஹீரோ ஆக்கி விஜய் சேதுபதிக்கு
ஒரு இம்பார்டண்ட் ரோல் கொடுத்து விசாரணை போலவே விடுதலை படத்தையும் வித்யாசமாக டைரக்ஷன் பண்ணிட்டு வராங்க இயக்குனர் வெற்றிமாறன்.

விடுதலை படத்தை தொடர்ந்து சூர்யா ஓட வாடிவாசல் என்ற படத்தையும் இயக்குனர் வெற்றிமாறன் எடுக்க இருக்காரு. பல மாதங்களுக்கு முன்னாடி இந்த படத்தோட அறிவிப்பு வெளியான நிலையில் சூர்யா 40 முடிஞ்ச உடனே இந்த படத்தோட ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணிருவாங்கனு எதிர் பார்க்கப்படுது.

இந்த நிலையில் வெற்றிமாற கதையில் இன்னொரு பிரபல நடிகர் நடிக்க இருக்கறதா தகவல்கள் வெளியாகி உள்ளது. அது வேற யாரும் கிடையாது நம்ப லாரன்ஸ் மாஸ்டர் தான் இயக்குனர் வெற்றிமாறனுடன் சேர்ந்து
பண்ணப்போறாராம். இந்த படத்துக்கு வெற்றிமாறன் கதை, திரைக்கதை, வசனம், பண்ண போறாரு என்று தகவல்கள்
வைரல் ஆகி வருகிறது.

மொத்தத்தில் வெற்றிமாறன் மற்றும் ராகவாலாரன்ஸ் கூட்டணி சேர்ந்து இந்த படம் மிகவும் சூப்பர் டுப்பர் ஹிட்டாகும்னு
சொல்லிட்டுவராங்க. இந்த படத்துக்கு அதிகாரம் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த படத்தை 5 ஸ்டார் கதிரேசன் அவர்கள்
தயாரிக்கிறார்.

இந்த படத்தோட பஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் மோஷன் போஸ்டர் ஜூன் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்திற்கு எஸ். தமன் இசை அமைக்கிறார். இந்த படத்தோட புதிய தகவலை 5 ஸ்டார் நிறுவனம் சோசியல் மீடியாவில் வெளியிட்டனர்.

6 thoughts on “வெற்றிமாறன் இயக்கும் அதிகாரம் என்ற படத்தில் ராகவாலாரன்ஸ்! ஆவலுடன் இருக்கும் ரசிகர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube