Cinema

முடிகிறதா???சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படம் ஷூட்டிங் மகிழ்ச்சியாக இருக்கும் நடிகர்கள்!!!..

Mudigirathaa Annaatthe Shooting:

தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்த் அவர்கள் பெங்களூரில் பிறந்தாங்க. இவர் ஆரம்பத்தில் பஸ் கண்டக்டராக தான் இவரோட வாழ்க்கையை ஆரம்பிச்சிருக்காரு. ஆனா இப்போ நம்ம தமிழ் சினிமாவில் இவர் தன்னோட காலிடத்தை அழிக்க முடியாத அளவுக்கு பதிய வச்சிட்டாருனு சொல்லலாம்.

இவர் நடிகரா மட்டும் இல்லாம நிறைய படங்களையும் தயாரிச்சு இருக்காரு. இவரோட முதல் திரைப்படம் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள்.

இந்த படத்துக்கு அப்றம் இவருக்கு அதிக அளவுக்கு ரசிகர்கள் இல்லைனாலும் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய பாஷா படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை தந்தது. இவர் நடிச்ச படங்களுக்காக நிறைய விருதும் வாங்கிருக்காங்க.

இவர் நல்லவனுக்கு நல்லவன் படத்துக்காக பெஸ்ட் தமிழ் ஆக்டர் விருதை வாங்கிருக்காரு. இது தான் இவரோட முதல் பில்ம்ஃபர் விருது.

அதுக்கு அப்றம் சிவாஜி,எந்திரன் படத்துக்கு தமிழ் நாடு ஸ்டேட் பிலிம் அவார்ட்ஸ் வாங்கிருக்காங்க, பிறகு தமிழ் நாடு அரசாங்கம் சார்பாக கலைமாமணி விருதும், இந்திய அரசாங்கம் இவருக்கு பத்மபூஷன் மற்றும் பத்மவிபூஷண் விருதும் கொடுத்து இவரோட திரையுலக வாழ்க்கையை பெருமை படுத்திருகாங்க.

இந்த அளவுக்கு தன்னோட திரை உலகத்தில் நாயகனாக இருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்கள் தற்போது அன்னாத்த என்னும் திரைப்படத்தில் நடிச்சிட்டு இருக்காரு.

இந்த படம் இயக்குநர் சிவா இயக்கதில்,கலாநிதி மாறன் தயாரிப்பில்.நயந்தாரா,கீர்த்தீ சுரேஷ் நடிப்பில்,டி.இமான் இசையில் மிக பிரம்மாண்டமாக உருவாகிட்டு வருதுன்னு சொல்லிருக்காங்க.

இந்த படம் 2020 பொங்கல் அப்போ ரிலீஸ் ஆகறதா சொல்லிருந்தாங்க. ஆனால் சூப்பர்ஸ்டார் டிஸ்கவரி சேனலில் டெலிகாஸ்ட் ஆகற மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் கலந்ததுனால் மற்றும் covid19 காரணமாகவும் இந்த படத்தோட ரிலீஸ் தேதி தள்ளி போனதாகவும் இப்போ இந்த படத்தோட டீம் என்ன சொல்லிருக்காங்கனா இன்னும் 15 நாள் ஷூட்டிங் இருக்கறதாவும் சூப்பர்ஸ்டார் தற்போது சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருக்கும் நிலையில் அடுத்த மாதம் ஷூட்டிங் வச்சிருக்கதாவும் சொல்லிருக்காங்க.

இந்த ஷூட்டிங் முடிஞ்ச பிறகு படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்துக்காக சூப்பர்ஸ்டாரின் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர் பாத்திட்டு இருக்காங்கனு சொல்லலாம்.

6 thoughts on “முடிகிறதா???சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படம் ஷூட்டிங் மகிழ்ச்சியாக இருக்கும் நடிகர்கள்!!!..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube