Serial

மெளனராகம் தருண் நிஜ வாழ்க்கை!

Mouna raagam Tharun:

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் தான் மௌன ராகம். இசை மற்றும் அப்பா மகள் பாசத்தினை மையமாகக் கொண்ட ஒரு தொடராகும். இத்தொடர் முதல் பகுதி 2017ஆம் ஒளிபரப்பப்பட்டு வெற்றிநடை போட்டது.

தற்போது இத்தொடரின் இரண்டாம் பகுதி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இத்தொடரின் ரசிகர்கள் இரண்டாம் பகுதிக்கும் முதல் பகுதிக்குக் கொடுத்த அதே வரவேற்பினை கொடுத்து வருகின்றனர்.

இத்தொடரில் கதாநாயகனாக நடிக்கும் தருண் பற்றின தகவல்கள் காணலாம் வாங்க.

தனிப்பட்ட தகவல்கள்:

இவருடைய முழு பெயர் ராகுல் ராமசந்திரன். இவரை ராகுல் ராம் என்று அழைக்கின்றனர். இவருடைய சொந்த ஊர் கேரளா இவர் கேரளாவில் உள்ள த்ரிச்சூர் என்ற இடத்தில 1992ஆம் ஆண்டுத் 19ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் பிறந்துள்ளார். மேலும் இவர் தன்னுடைய கல்லூரிப்படிப்பை (GOVA UNIVERSITY) முடித்துள்ளார்.

திரை உலகிற்கு அறிமுகம்:

இவர் முதலில் ஓரு மாடலாகத் தான் தன்னை அறிமுகப்படுத்தி உள்ளார். ஒரு சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். அதோடு பல ஆடிஷன்களுக்கு சென்று தான் ராகுலிற்கு மௌன ராகம் தொடர் கிடைத்துள்ளது.

டிக் டாக் :

டிக்டாக் பலரது வாழ்க்கையில் விளையாடினாலும் ஒரு சிலரின் கனவுகளுக்குத் துணை நிற்கிறது. அவ்வாறு துணை நின்றவரில் ராகுலும் ஒருவர்.

டிக்டாக்கில் ராகுலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. ஆம் டிக் டாக்கின் சாக்லேட் பாய்யாக உள்ளார் குறிப்பாக இவரின் சிரிப்பு தான் இருக்கு ப்ளசாக உள்ளது.
இவருக்கு நான்கு மொழிகள் சரளமாகப் பேச வருமாம்.

மௌனராகம் :

இசை பின்னணியை கொண்ட ஒரு குடும்பக் கதை ஆகும். மேலும் இந்தத் தொடர் வங்காளி மொழி தொடரான ‘போட்டால் குமார் கான்வலா’ எனும் தொடரின் மறு ஆக்கம் ஆகும்.

இந்தத் தொடரின் பகுதிகள் ஹாட் ஸ்டார் என்ற இணையதளத்தின் மூலமாகவும் பார்க்க முடியும். இந்தத் தொடரின் இரண்டாம் பாகம் 1 பிப்ரவரி 2021 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது.

மௌனராகம் தொடரில் ராகுல் தருண் என்ற பெயரில் ராவினவிற்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் மௌனராகம் முதல் பகுதியில் நடித்த நடிகர்களும் உடன் நடிக்கின்றனர். என்னதான் மலையாளம் தாய் மொழியாக இருந்தாலும் தமிழ் தொடரில் அருமையாக நடிக்கிறார்.

இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் வருண் மற்றும் தருண் இருவரும் உண்மையான அண்ணன் தம்பிபோல் உள்ளனர்.

கதை சுருக்கம் :

முதல் பகுதியில் சக்தியை அழைத்துக் கொண்டு மல்லிகா கொடைக்கானல் சென்று விடுகிறார். பின்னர் பன்னிரண்டு வருடங்கள் கழித்து மல்லிகா உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் மல்லிகாவின் டிரீட்மெண்ட்டிற்காகச் சக்தியுடன் சென்னைக்கு வருகிறார்.

அதோடு சக்தி அவளுடைய அப்பாவை பார்த்துவிடக் கூடாது என்று நினைக்கிறார். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் சக்தி கார்த்திக்கின் மியூசிக் ஸ்கூலில் வேலைக்குச் சேர்கிறார்.

சக்தி தன் பெயரை சத்திய என மாற்றிக் கொண்டு கார்த்திக் ஸ்கூலில் வேலை செய்ய தொடங்குகிறார்.

சத்தியாவை பார்த்தவுடனே தருணிற்கு பிடித்துப் போகிறது. தருண் கார்த்திக்கின் பார்ட்னர் மகன் மேலும் இவரும் இந்தப் பள்ளியில் தான் இருக்கிறார். அவ்வாறு இருக்கும் பொது சத்தியாவின் மீது காதல் வருகிறது ஆனால் கார்த்திக்கின் மற்றொரு மகளான ஸ்ருத்திக்கும் தருண் மீது காதல் வருகிறது.

இதற்கிடையில் தருணின் அண்ணனான வருணிக்கும் ஸ்ருத்திக்கும் திருமணம் செய்ய பேச்சு வார்த்தை நடக்கிறது ஆனால் வருணிற்கு உடல் நிலை சரில்லாமல் உள்ளது (நெருப்பை பார்த்தால் பயப்படும் மனநிலை) அதை பற்றிக் கார்த்திக் அறிந்து கொண்டு தன் பார்ட்னருடன் கோவப்படுகிறார்.

மேலும் தருண் தன்னுடைய காதலை சத்யவிடம் தெரிவிக்கிறார். இதை ஸ்ருதி பார்த்து விட்டுச் சத்தியாவின் மீது மிகவும் கோவபபடுகிறார்.

பின்னர் மல்லிகாவிற்கு சக்தி கார்த்தி ஸ்கூலில் வேலை செய்வது தெரிந்து விடுகிறது இதனால் மல்லிகாவின் உடல் நலம் மேலும் மோசம் அடைகிறது.

அதை தொடர்ந்து வருண் தனக்கு உள்ள பிரச்சனையை நினைத்துத் தற்கொலை செய்து கொல்ல முயற்ச்சி செய்கிறார். ஆனால் சத்திய அங்கு வந்து அவரை தடுத்து நிறுத்துகிறார்.

இதனால் வருணும் தன்னுடைய மனக்கவலையை சத்யவிடம் சொல்கிறார். பின்னர் சத்திய வருணுனிருக்கு ஆறுதல் கூறி சமாதானப்படுத்ததுகிறார். இதனால் வருண் தன்னுடைய தற்கொலை எண்ணத்தை மாற்றிக் கொள்கிறார். இதை வருணின் அப்பா மறைந்து இருந்து பார்த்து விடுகிறார்.

மல்லிகாவின் ஆபரேஷன் செலவிற்காகச் சக்தி பல இடங்களில் உதவி கேக்கிறார். ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை இதற்கிடையில் கார்த்திக் உதவ வரும் பொது ஸ்ருதி அதை தடுத்து விடுகிறார்.


சத்தியாவின் நிலைமை அறிந்த வருணின் அப்பா உன் அம்மாவின் மருத்துவ செலவிற்கு நான் பணம் தருகிறேன் என் மகனை நீ திருமணம் செய்து கொள்வாயா எனக் கேக்கிறார். இதை சற்றும் எதிர்பாரத சத்திய தன்னுடைய அம்மாவிற்காகச் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார்.

தற்போது மல்லிகாவிற்கு ஆபரேஷன் முடித்து அவர் குணமடைந்து வருகிறார்.வருணின் அப்பா சத்தியவை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வருகிறார்.

வருணை திருமணம் செய்ய போகும் பெண் எனச் சத்தியாவை தருணிற்கு அறிமுகப்படுத்துகிறார். இதனால் தருண் மிகவும் மன வேதனை அடைகிறார்.

வருனிற்கும் சக்திக்கும் திருமணம் நடக்க போவதை கார்த்திக் குடும்பத்தாரிடம் வருணின் அப்பா சொல்கிறார்.

இதை பற்றிக் கேட்டதும் கார்த்திக் கவலைப் படுகிறார். ஸ்ருதியும் அவர் அம்மா மற்றும் பாட்டியும் மிகவும் சந்தோசம் படுகிறார்கள்.

சக்திக்கும் வருணிற்கும் திருமணம் நடக்குமா இல்லை கார்த்திக் அல்லது மல்லிகா இருவரில் யார்ரென்னும் இத்திருமணத்தை நிறுத்துவர்களா என வரும் தொடர்களில் பார்க்கலாம்.

வருணிற்கும் சத்தியாவிற்கும் திருமணம் ஆகுமா என மௌன ராகம் ரசிகர்கள் எதிர் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

ஆனால் கொரோன காரணத்தால் படப்பிடிப்புகள் நிறுத்த பட்டு இருப்பதால் பழைய எபிசொட்க்களை மீண்டும் ஒளிபரப்ப்பி கொண்டு உள்ளனர்.

ஷூட்டிங்கிற்கு இடையில் கதாநாயகி ராவின லைவ் வடிந்தார் அப்போது அவர் ராகுலை லைவ்வில் மக்களுக்குக் காட்டினார்.

ராகுல் ஒரு ஹாய் சொன்னதும் ரவினாவிடம் பேசிய அணைத்து ரசிகர்களும் தருணை பற்றியும் தருணின் காதல் பற்றியும் கேக்க ஆரம்பித்து விட்டனர்.

அதோடு நாடகத்தில் மட்டும் தான் காதல் இருக்குமாம் மற்ற படி நிஜத்தில் ராகுல் ரவினாவிற்கு அண்ணா தானம். ராகுலை அண்ணா என்றே அழைக்கிறார்.

அதோடு ஷூட்டிங் இடைவேளை நேரத்தில் தருண் மட்டும் ராவின இருவரும் சேர்த்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து போடுகின்றனர். அதை மௌனராகம் ரசிகர்கள் ரசித்துப் பார்த்து வருகின்றனர்.

இந்தத் தொடரின் மூலம் பல ரசிகர்களை ராகுல் பெற்றுள்ளார். அதோடு பல இளம் பெண்களுக்குக் கனவு நாயகனாகவும் மாரி உள்ளார்.

இது போன்று பல தொடர்களுக்கு மெயின் ஹீரோவாக வருவாரென எதிர்பார்க்கபடுகிறது.

இவர் வளர்ந்து வரும் நடிகர் என்பதால் இவரை பற்றின தகவல்கள் சமூகவலை தலத்தில் அவ்வளவாக இல்லை ஆனால் தற்போது இன்ஸ்டாகிராமில் தருணிற்கு (FAN PAGE) தொடங்கி உள்ளனர்.

அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் FOLLOW செய்து வருகின்றனர். கூடிய விரைவில் அதிக ரசிகர்ககளை பெற்று பிரபலம் ஆகி விடுவார் என்று மௌன ராகம் ரசிகர்கள் நினைக்கின்றனர்.

6 thoughts on “மெளனராகம் தருண் நிஜ வாழ்க்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube