Cinema

கரகாட்டக்காரன் ‘கனகாவின்’ வைரலாகும் புது வீடியோ…

Kanaga viral video: கனகா, இவங்களுடைய உண்மையான பெயர் லட்சுமி பிரியா. இவங்க கனகா என்ற பெயரில் தமிழ் மக்களிடம் நன்கு அறியப்படறாங்க. கனகா தமிழ், மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடிச்சிருக்காங்க. கனகா, 1989 திலிருந்து 2000 வரையிலும் தமிழ் சினிமாவில் பணியாற்றி இருக்காங்க. கனகாவின் தாய் தேவிகா இவங்களும் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம்வந்தாங்க. கனகாவின் தாத்தா ரகுபதி வெங்கையா நாயுடு இவர் தெலுங்கு சினிமாவின் முதல் ஒலி படத்தின் தயாரிப்பாளர் என்ற பெயரை பெற்றவர்.

கனகா கங்கை அமரன் இயக்கிய ‘கரகாட்டக்காரன்’ என்ற தமிழ் திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகமானங்க. இந்த படத்தை அடுத்து பெரிய வீடு பணக்காரன், அதிசய பிறவி சாமுண்டி, பெரிய குடும்பம் மற்றும் விறலுக்கேத்த வீக்கம் என பல படங்களிலும் கனகா நடித்திருக்காங்க. இவங்க நடித்த பல படங்கள் திரை அரங்குகளில் நீண்ட நாட்கள் ஓடி வெற்றி பெற்றதுனு சொல்லலாம். கனகா தெலுங்கு மற்றும் மலையாள முன்னணி கதாநாயகர்களுடன் நடித்திருக்கிறாங்க. இவங்களுடைய கடைசி மலையாள படம் ‘ஈ மள தென் மழை’.

கனகா முகேஷ், மம்முட்டி, மோகன்லால் என முன்னனி கதாநாயகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்திருக்காங்க. அதிலும் தெலுங்கு திரையுலகில் 50 வருடங்களுக்கு மேல் பணியாற்றி இருக்காங்க. 10 வருடங்களுக்கு மேல் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும் வலம் வந்துருக்காங்கனு சொல்லலாம். பிரம்மர்ஷி விஸ்வமித்ரா, வாலு ஜடா டோலு பெல்ட்டு என்ற சில தெலுங்கு படங்களிலும், காட்பாதர், வசுதா, வியட்னாம் காலனி, பூபதி போன்ற மலையாள படங்களிலும் நடிச்சிருக்காங்க. இந்த படங்கள் வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை அடைந்திருக்குனு சொல்லலாம்.

இவங்க தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்காங்க. அதில் கனகா நான் நடிக்க வரத்துக்காக இந்த மாதிரி பேசிட்டு இருக்கனு நிறைய பேர் சொல்ராங்க, ஆனால் நான் நடிக்க வரத்துக்காகவோ, எனக்கான விளம்பரங்களை ஏற்படுத்தறதுக்காகவோ பேசல அப்படி நினைக்கறவங்க அவங்களுடைய விருப்பம், அவங்களுடைய குணம் ஆனால் நான் அதற்காக பேசவில்லை என சொல்லிருக்காங்க. நான் சராசரியாக ஒரு விசயத்தை சொன்ன அதை நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டிங்க. என்னை பற்றிய தவறான கருத்தை பேசாதீங்க.

யார் பாடன பாட்டையோ நீங்க பாடிட்டு இருக்காதிங்க ஏன்னா கேக்கறவங்களுக்கு சில சந்தேகங்கள் வரும், மேலும் பழைய படங்கள் மாதிரி பண்ணாம கொஞ்சம் எதார்த்தமான நம் வாழ்க்கைக்குள்ள வாங்க என பல வகையிலும் சொல்லிருக்காங்க. இது போன்ற தவறான கருத்துக்களை சொல்லிட்டே இருக்கறதுனால தான் நான் இந்த விடியோவை பதிவிட்டு இருக்கிறேன். மேலும் பல விசயங்களையும் நகைச்சுவையாக தன்னோட ரசிகர்களுடன் பேசிருக்காங்க. நான் நடிக்கறதுக்காக பேசவில்லை நிறைய விசயங்களை உங்களுடன் பகிர்ந்துக்கறதுக்காக தான் பேசுகிறேன் என்றும் தெளிவாக சொல்லிருக்காங்க.

பிக் பாஸ் 5 வில் களமிறங்குகிறாராவிஜய் டிவி ஆங்கர் பிரியங்கா???

விஜய் டிவியில் வரும் எல்லா ஷோக்களுமே தனித்தன்மை வாய்ந்ததாக தான் இருக்கும். ஒவ்வொரு ஷோவ்க்கும் தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கும் அந்த அளவிற்கு எல்லா ஷோக்களும் வெற்றி அடைந்திருக்குனு சொல்லலாம். அதிலும் பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி சொல்லவே தேவையில்லை அந்த அளவிற்கு இந்த ஷோக்களுக்கு உலகளவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கு. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி வருடத்திற்கு ஒரு முறை என பிக் பாஸ் சீசன் 1 இல் தொடர்ந்து தற்போது பிக் பாஸ் சீசன் 5 வரையிலும் வெற்றிகரமாக இந்த ஷோ நடந்துட்டு வருது.

தற்போது பிக் பாஸ் சீசன் 5 விற்கான ஏற்பாடுகள் நடந்துட்டு இருக்கு. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து கொண்டு வரும் ரசிகர்களுக்கு மிக பெரிய ஆவல் இருந்துட்டே இருக்குன்னு சொல்லலாம். பிக் பாஸ் வீட்டில் யாரெல்லாம் வர போறாங்கன்னு நிறைய பேர் ஆவலுடன் எதிர் பாத்துட்டு இருக்காங்கனும் சொல்லலாம். அந்த வகையில் கடந்த நான்கு பிக் பாஸ் சீசன்களிலும் ஒரு நான்கு பேர் விஜய் டிவியில் இருந்தும், பின் மாடல்லிங் பண்றவங்களும், சிங்கர், டான்சர், பிறகு வெளி நாடுகளில் இருந்து சிலர் என இந்த வரிசை படி கலந்துக்குவாங்க.

அதிலும் முக்கியமாக எல்லாத்துக்கும் கோவப்படற மாதிரி ஒரு கோவக்கார ஆண் அல்லது பெண் பிரபலங்கள் பங்கேற்ப்பாங்க. இந்த மாதிரி இந்த சீசனில் யார் வரப்போறாங்கனு எல்லாருக்கும் ஒரு கேள்வி குறியாவே இருக்கும். எந்த துறையிலிருந்து யாரெல்லாம் வரப்போறாங்க என்ற கேள்வியை விட நம்ம விஜய் டிவியில் இருந்து யார் வரப்போறாங்க என்ற குழப்பம் தான் நமக்கு அதிகம் இருக்கும். அந்த வகையில் தற்போது வெளிவந்த செய்தி பாடி நம்ம விஜய் டிவியில் இருந்து பிரபலமான ஆங்கர் மற்றும் சீரியல் நடிகை
கலந்துக்கப் போறதாக சொல்ராங்க.

பிரபலமான ஆங்கர் அப்படினா நமக்கு தோணறது மாகாபா ஆனந்த், dd, பிரியங்கா, கோபிநாத் இவங்கள்ல யார் வரப்போறாங்கனு நமக்கு ஒரே சந்தேகமா இருக்கும். இப்போ வெளிவந்த தகவல் படி விஜய் டிவியின் முன்னணி ஆங்கராக விளங்கும் பிரியங்கா தான் பிக் பாஸ் சீசன் 5 வில் கலந்துக்கறதுக்கான வாய்ப்பு நிறையவே இருக்குன்னு சொல்லிருக்காங்க. மேலும் விஜய் டிவியில் “சின்னத்தம்பி” தொடரில் நடிக்கும் பவானி ரெட்டி அவங்களும் பிக் பாஸ்ஸில் கலந்துக்கறதுக்கான வாய்ப்புகள் இருக்கு, இவங்க இரண்டு பேரும் விஜய் டிவியில் இருந்து பிக் பாஸ்ஸிற்கு போகலாம் என சொல்லிட்டு இருக்காங்க.

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வந்த ஷகிலாவின் மகளான மில்லா அவங்களும், டிக்டாக் மூலம் பிரபலமான GB முத்து அவர்களும் போலான்னு இருக்காங்க. அதற்கு பிறகு சம்யுக்தாவின் தோழியான ப்ரதாயினி அவங்களும், சாரப்பட்டா படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப் அவர்களும், மைனா மற்றும் ராட்சசன் படத்தில் வில்லியாக நடித்த சூசன் அவங்களும் பிக் பாஸ்ஸிற்கு போக வாய்ப்பு இருக்குன்னு சொல்ராங்க. ஆனால் சூசன் சில நாட்களுக்கு முன்னாடி கொடுத்த இன்டெர்வியூவில் நான் சேரன் அவர்களுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறேன் அதனால் பிக் பாஸ்ஸிற்கு போவது சந்தேகம் தான் என சொல்லிருக்காங்க.

6 thoughts on “கரகாட்டக்காரன் ‘கனகாவின்’ வைரலாகும் புது வீடியோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube