Serial

தாயான பிரபல தொகுப்பாளினி ஐஸ்வர்யா பிரபாகர்!!

சன் டிவி மற்றும் விஜய் டிவி ஷோவில் அங்கரிங் பண்ணி பிரபலமானவங்க தான் ஐஸ்வர்யா பிரபாகர்…. இவிங்க ஒரு டான்சர், தொகுப்பாளினி, அது மட்டும் இல்லாமல் சில சிரியல்ல கூட நடிச்சி இருக்காங்க… சன் டிவி ல சந்திரலேகா சீரியல் ல நடிச்சாங்க அதை தொடர்ந்து சன் டிவி ல சன் குடும்ப விருதுகள் நிகச்சியை தொகுத்து வழங்கனாக…
இவிங்க 2015 ல ப்ரனீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டாங்க… இவிங்க கல்யாணம் USA ல செட்டில் ஆகிட்டாங்க.. இப்ப பக்கமாக ஐஸ்வர்யா அவுங்களோட ஆறாவது திருமண நாளை கொண்டாடி இருந்தாங்க..
இப்ப ஐஸ்வர்யா அவர்கள் கர்ப்பமாக இருக்கற மகிழ்ச்சியான
விசியத்தை அவுங்களோட பான்ஸ்க்கு ஷேர் பண்ணி இருக்காங்க…

அதுமட்டும் இல்லாமல் சமூகவலைத்தளத்துல இருந்து இந்த வீசியதை மறைக்க முடியாது அப்டினும் சொல்லி இருக்காங்க… இவிங்க இப்போ கர்ப்பமாகி ஏழு மாதங்கள் ஆகிறதாம்.. தமிழ்நாடு மாதிரி USA கிடையாது அதாவது டெஸ்ட் பண்ணும்போதே பிறக்கபோவது பெண்குழந்தையா இல்லை ஆண்குழந்தையை அப்டிங்கறதா USA ல சொல்லிடுவாங்க… அதுபோல இவிங்களுக்கு பெண்குழந்தை பிறக்கபோவதாக மிகவும் மகிழ்ச்சியாக தெரிவித்து இருக்காங்க… அதுமட்டும் இல்லாமல் இந்தமாதிரி நேரத்துல பான்ஸ் உங்களுடைய பிராத்தனை எனக்கு மிகவும் தேவை அப்டினும் சொல்லி இருக்காங்க ஐஸ்வர்யா..


இவிங்க சன் குடும்பவிருதுகள் நிகழ்ச்சியை தொடர்ந்து அமுல் சூப்பர் குடும்பம் அப்படிங்கற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி இருக்காங்க… அதை தொடர்ந்து விஜய் டிவி ல ஜோடி நம்பர் மூன்று நிகழ்ச்சியில கண்டெஸ்டண்ட் ஆகா பார்ட்டிசிபேட் பண்ணி இருந்தாங்க… அதும் இவிங்க நம்ம சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதுல டான்ஸ் ஆடி இருப்பாங்க… அதுமட்டும் இல்லாமல் ரொம்ப பேமஸ் நிகச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கனாங்க… அதை டதொடர்ந்து விஜய் டிவி ல ஒரு சில சீரியல்ளையும் நடிச்சி இருக்காங்க… இவிங்க ரொம்ப குண்டு ஆகி இருக்காங்க… அதற்க்கு அப்பறோம் மறுபடியும் தன்னுடைய உடல் எடையை குறைச்சி தன்னுடைய பழைய நிலைக்கே வந்து இருக்காங்க…

இவிங்க இப்போ you
tupe chennal தான் ரன் பண்ணிட்டு வராங்க… அந்த சேனல் ல தான் எப்படி நான் உடல் எடையை குறைத்தேன் அப்படிங்கற டிப்ஸ் கூட குடுத்து இருந்தாங்க… ஐஸ்வர்யா பிரபாகர் அவர்கள் இன்னும் நிறைய நடிக்கணும் நீங்க இந்தியா வரணும் அப்டினு அவங்களோட பான்ஸ் அவிங்க கிட்ட வேண்டுகோள் வச்சிட்டா இருக்காங்கனு தான் சொல்லணும்…

பாண்டியன் ஸ்டோர்ஸில் ஐஸ்வர்யாவாக மாறும் சாய் காயத்ரி…

விஜய் டிவியில் நிறைய பிரபலமான சீரியல்களும் நிகழ்ச்சிகளும் தொடர்ந்து ஒளிபரப்பட்டு வருகிறது. அதில் பாரதி கண்ணம்மா, ராஜா ராணி, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் என நிறைய சீரியல்கள் அதிகமான ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மிகவும் பிரபலமான ஒரு தொடர்னு சொல்லலாம். அந்த அளவிற்கு நிறைய ரசிகர்களை ஈர்த்திருக்கும் ஒரு தொடர். இந்த தொடர் இப்போ இருக்க இளைஞர்களுக்கு மட்டும் இல்லாம பெரியவர்களுக்கும் முக்கியமாக சகோதர்களுடன் பிறந்தவர்களுக்கு ரொம்பவே பிடித்த சீரியலாக தான் இருக்கும்.

இந்த சீரியல் பல எதார்த்தமான குடும்பங்களின் கதையாக இருக்கும். அண்ணன், தம்பியாக நடித்திருக்கும் காட்சிகள் மக்களை கண்கலங்க வைப்பதாகவும் இருக்கும், அதனாலேயே இந்த சீரியலை எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். இந்த சீரியல் ஆரம்பத்தில் இருந்து இப்போ வரைக்கும் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்போடயே இருக்கு. இந்த சீரியலை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே தான் இருக்கு. இதில் நடித்து வரும் அனைத்து நடிகர்களும் தங்களுடைய முழு மனதோடு உண்மையான குடும்பத்தை போன்று எதார்த்தமாக நடிச்சிட்டு வராங்க.

இந்த சீரியலில் ஸ்டாலின் சத்தியமூர்த்தியாகவும், சுஜிதா தனலட்சுமியாகவும், ஜீவா வெங்கட்டாகவும், ஹேமா மீனாவாகவும், கதிர் குமரனாகவும், காவ்யா முல்லையாகவும், சரவணன் கண்ணனாகவும் நடிச்சிட்டு இருக்காங்க. இந்த கதையுடைய முக்கியமான கதாபாத்திரமே இவங்க எல்லாரும் தான். இந்த கதை இவங்கள வச்சி தான் போகிட்டு இருக்கு. அந்த வகையில் தற்போது இந்த கதையில் கண்ணன் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டதால் வீஜே தீபிகாவின் கதாபாத்திரமான ஐஸ்வர்யாவும் இப்போ முக்கியமான கதாபாத்திரமாக மாறி இருக்குனு சொல்லலாம்.

இந்த சீரியலில் சில மாதங்களுக்கு முன்பு தான் முல்லை என்ற கதாப்பாத்திரம் மாற்றப்பட்டது. இந்த மாற்றத்தையே இன்னம் சில பேர் ஏற்றுக்கொள்ளவில்லை அதற்குள் இந்த சீரியலில் மீண்டும் ஒரு கதாப்பாத்திரம் மாற்றப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அது எந்த கதாப்பாத்திரம் என்றால் தற்போது இந்த தொடரில் முக்கியமான கதாப்பாத்திரமாக மாறி வந்த ஐஸ்வர்யா தான். இந்த கதாப்பாத்திரம் மாற்றப்படுவதாக சில வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது, தற்போது இந்த தகவல் உண்மையாக இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.

இந்த கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் வீஜே தீபிகா சில காரணங்களால் விலகுவதாகவும், இந்த கதாப்பாத்திரத்தை நிறைவுப்படுத்தும் வகையில் ஈரமான ரோஜாவே என்ற தொடரில் துணை கதாநாயகியாக நடித்த சாய் காயத்ரி நடிப்பதாக சொல்லிருக்காங்க. இந்த கதாப்பாத்திரத்திற்கு சாய் காயத்ரி பொருத்தமாக இருப்பாங்களா என்ற கேள்வி இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கும் ரசிகர்கள் மனதில் கேட்கப்பட்டு வருகிறது. மேலும் சில பேர் இந்த ஜோடி பொருத்தமாக இருக்காது என்றும் இந்த ஜோடி அக்கா தம்பி போல் இருக்கும் என்றும் கமெண்டில் பதிவிட்டு வராங்க.

6 thoughts on “தாயான பிரபல தொகுப்பாளினி ஐஸ்வர்யா பிரபாகர்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube