Cinema

வீடு இன்றி வாடும் தியகராஜா பாகவதரின் பேரன்!!!

தியாகராஜ பாகவதர்ஸ இவருடைய முழு பெயர் மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர். இவரை எம்.கே.டி என்றும் அழைப்பாங்க. இவர் இந்தியாவில் புகழ் பெற்ற நடிகர் ஆவார். அது மட்டும் இல்லாமல் இவர் தயாரிப்பாளராவும் கர்னாடிக் மியூசிக் சிங்கராவும் இருக்காங்க. நம்ம தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடிகர்களில் இவரும் ஒருவர். அது மட்டும் இல்லாமல் இவர் தான் தமிழ் சினிமாவினுடைய முதல் “சூப்பர் ஸ்டார்” என்றும் அழைக்கப்பட்டவர்.

இவருடைய திரை உலகின் முதல் படம் “பவளக்கொடி” இந்த படம் இவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த படத்தில் இவர் “அர்ஜுனன்” என்ற கேரக்டர் பண்ணிருந்தாங்க. இவரோட இரண்டாவது படம் “நவீன சாரங்கதாரா” இந்த படத்தை கே.சுப்ரமணியம் அவர்கள் இயக்கினாங்க. இந்த படத்தில் இவர் “சாரங்கதாரா” என்ற கேரக்டர் பண்ணிருந்தாங்க. இவரோட எல்லா கேரக்டரும் மக்களை ரசிக்க வச்சதுனு சொல்லலாம்.

இவர் படங்களில் சூப்பரா நடிச்சது மட்டும் இல்லாம நிறைய பாடல்களும் எழுதிருக்காங்க, இவரோட பாடல்களும் தமிழ் மக்களுக்கு ரொம்பவே பிடிச்சதுன்னு சொல்லலாம். இவரோட பாடல்கள் சில உன்னை அல்லால், நீலகண்ட, அம்பு மனம் கனிந்து என பல பாடல்களை பாடி மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடிச்சிருக்காங்க. இவரோட நடிப்பும், பாடல் வரிகளும் திரை உலகில் நிச்சியம் தனி இடத்தை பிடிச்சிருக்கு.

1944 ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த “ஹரிதாஸ்” என்ற இவருடைய படம் 1945 மற்றும் 1946 ம் ஆண்டு தீபாவளி வரையும் திரையில் ஓட காரணமானவர் பாகவதர். இப்போ இவருடைய மகள் வழி பேரன் வசிக்க வீடு இல்லாமல் தவிப்பதாகவும், வீட்டு வசதித்துறை மூலம் வீடு ஒதிக்கீடு கோரி முதலமைச்சருக்கு மனுவையும் அளித்துள்ளாராம்.

பணம் இருந்த காலத்தில் அதை மதிக்காமல் சொகுசாக வாழ்ந்திருக்கிறார் பாகவதர். பிறகு லட்சுமிகாந்தன் என்ற பத்திரிகையாளர் மூலம் கொலை வழக்கில் சிக்கிப் புகழை இழந்ததோட மட்டும் இல்லாமல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கோவிட் 19 தாக்கத்தால் பலர் இந்நிலையில் இருந்திருந்தாலும், பிறருக்கு அள்ளிக் கொடுக்கும்
வல்லராக திகழ்ந்தவர் தியாகராஜ பாகவதர், இவரின் பேரனுக்கு இந்த நிலைமை ஏற்பட்டதை கண்டு மிகவும் மனம் வருந்துகின்றனர்.

5 thoughts on “வீடு இன்றி வாடும் தியகராஜா பாகவதரின் பேரன்!!!

  • I find that Tadalafil works best when I take it 12 hours before sex, so if it doesn t work as well as you thought it might within the first hours, try again later priligy equivalent Cialis daily sale

  • The continuity of the brand in the market for a minimum period was also one important criterion for assessing the best over the counter ED pills from the vast lot of brands generic cialis online pharmacy These products often contain hidden, undeclared pharmaceutical ingredients, such as sildenafil the active ingredient in Viagra , tadalafil the active ingredient in Cialis and others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube