Cinema

ஜகமே தந்திரம் படம் நிகழ்த்திய சாதனை என்ன என்று தெரியுமா?

Dhanush jagame thandhiram

தனுஷ் நடித்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் ஜகமே தந்திரம் இதில் ஜேம்ஸ் , ஜோஜி , ஐஸ்வர்யா லட்சுமி , வடிவுக்கரசி லால் , ஜோஷ் , கலையரசன் , ராசுக்குட்டி ஆகியோர் நடித்துள்ளனர் . இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார் . இந்த படத்தில் உள்ள ரகிட்ட ரகிட்ட , என்ன மட்டும் லவ் பண்ணு பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த திரைப்படத்தை வொய் நாட் நிறுவனம் தயாரித்து உள்ளது . இந்த படமானது தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் , உள்ளிட்ட 16 மொழிகளிலும் , 190 நாடுகளிலும் வெளியாகி உள்ளது . இந்தியாவில் கோரோனோ காரணமாக இந்த படத்தை தியேட்டரில் இல்லாமல் ஓடிடியில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர் . ஜூன் 18 ம் தேதி ஓடிடியில் இந்த படம் வெளியானது . இந்த படம் வெளியாகி பல விமர்சனங்களை பெற்று வருகிறது . இந்த படம் வெளியாகி குறுகிய நேரத்திலேயே இந்த படத்தை பற்றி அதிக மீம்ஸ் வந்துள்ளது.

இந்த நிலையில் ஜகமே தந்திரம் படத்தை உலக அளவிலேயே இந்த படத்தை அதிக பார்வையாளர்கள் பார்த்து உள்ளனர். உலக அளவில் அதிக பார்வையாளர்களை கொண்ட திரைப்படம் ஆக ஜகமே தந்திரம் திரைப்படம் என சாதனையை பெற்று உள்ளது. இந்த படமானது பல நாடுகளின் நெட்ப்ளிஸ்ஸ் பட்டியலில் டாப் 10 இடத்தை இந்த படம் பெற்றுள்ளது.

அதாவது இந்தியாவில் மட்டும் அல்லாமல் இந்தியாவிற்கு வெளியில் உள்ளவர்களும் இந்த படத்தை பார்த்து உள்ளதாக நெட்ப்ளிக்ஸ் தெரிவித்துள்ளது. இந்த படம் குறித்து பல விமர்சனங்களும் , கருத்துக்களும் வைரலாகி வரும் நிலையில் நெட்ப்ளிக்ஸ் பட்டியலில் டாப் 10 இடத்தை பெற்றிருப்பது தனுஷ் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

5 thoughts on “ஜகமே தந்திரம் படம் நிகழ்த்திய சாதனை என்ன என்று தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube