Serial

பிக் பாஸ் சீசன் 5 இல் வரவிருக்கும் சீரியல் பிரபலம் அட இவரா???

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோவ்வும் மக்கள் மத்தியில் ரொம்பவே பிரபலமாகும், அதிலும் வருடத்திற்கு 100 நாட்கள் என நடக்கும் பிக் பாஸ் ஷோவ்வ சொல்லவே தேவை இல்லை. ஏன்னா பிக் பாஸ் ஷோவ்க்கு உலகம் முழுவதும் தனிப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே இருக்குனு சொல்லலாம். அப்படிப்பட்ட ஷோவ் தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற பல மொழிகளில் அடுத்தடுத்து சீசன்களில் வந்துட்டு இருக்கு.

இதன் அடிப்படையில், தமிழில் பிக் பாஸ் சீசன் 1,2,3,4 என நான்கு சீசன் முடிந்து விட்டது. பிக் பாஸ் சீசன் 1 இல் ஆரவ், சீசன் 2 வில் ரித்விகா, சீசன் 3 இல் முகேன் ராவ் மற்றும் சீசன் 4 இல் ஆரி என நான்கு பேர் டைட்டில் வின்னரா ஆனாங்க. அந்த வகையில் சீசன் 5 இல் யாரெல்லாம் கலந்துக்க போறாங்க, யார் பிக் பாஸ் டைட்டில வாங்க போறாங்க என ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமா இருக்காங்கனு சொல்லலாம்.

அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 5 இல் பிரபல சீரியல் தொலைக்காட்சி தொடரின் நடிகர் “ஈஸ்வர்” கலந்து கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈஸ்வர், இவர் சர்வதேச வணிக நிர்வாகத்தில் எம்.பி.ஏ படிச்சிருக்காங்க. ஈஸ்வர் சில தமிழ் திரைப்படங்களிலும் நடிச்சிருக்காங்க. இவர் “ஆபீஸ்” என்ற சீரியல் மூலியமாக தான் தமிழ் தொலைக்காட்சில் தொடர்களில் வந்தாங்க.

பின் படிப்படியாக பல தொடர்களிலும் நடிச்சிட்டு இருக்காங்க. ஆபீஸ் தொடரிற்கு பிறகு தேவதையை கண்டேன், நாம் இருவர் நமக்கு இருவர், கல்யாண பரிசு, கல்யாணம் முதல் காதல் வரை, ராஜா ராணி போன்ற பல பிரபலமான தொடர்களிலும் நடிச்சிருக்காங்க. இவர் நடித்த தொடர்கள் மூலியமாக இவர் தமிழ் மக்களிடத்தில் மிகவும் பிரபலமானங்க.

இப்படி பல தொடர்களிலும் நடிச்சு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ஈஸ்வர் தற்போது பிக் பாஸ் சீசன் 5 இல் பங்கேற்க உள்ளார். இந்த தகவல் வெளிவந்ததில் பிக் பாஸ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் போட்டியாளர்களை வரவேற்க காத்திருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube