Cinema

தனுஷ் இன் தெலுங்கு பட அப்டேட்!! ஆர்வத்துடன் வெளியாகிய செய்தி…

சேகர் காம்முலாவுடன் தனுஷ் தற்போது நேரடியாக இணைந்து இருக்கிற ஓட படம் என்னவென்று யாரும் அறியாமல் இருந்த வகையில், தற்போது அந்த படத்தின் பெயர் பான்- இந்தியா படம் என்று தெரிய
வந்து இருக்கு.. இந்த நிலையில் தற்போது தனுஷ் இரண்டாவது தெலுங்கு படத்தில் கமிட்டே ஆகி இருக்கிறதா தகவல் வெளியாகி இருக்கு.. இந்த தகவலை தெலுங்கு சினிமா வட்டாரங்கள் உறுதியாக தெரிவிச்சு
இருக்காங்க..

தனுஷிற்கு சேகர் காம்முலாவுடன் இணைத்து வேலை செய்ய கூடிய முதல் நேரடி திரைப்படம் என்றால் அது பான்- இந்தியா என்று கூறலாம்.. இந்த நேரடி தெலுங்கு படமாக உருவாக்கப்படுகிறது.
இந்த நேரடிப் படம் வேலை போய் கொண்டு இருக்கும் நிலையில் இவர் இரண்டாவது தெலுங்கு படத்தில் கமிட் ஆகி இருக்காருன்னு தெலுங்கு சினிமா வட்டாரம் உறுதியான தகவலை வெளியிட்டு இருக்காங்க..

வரிசையாக நிறைய படம் நடிச்சு தன்னோட நடிப்பு திறமையை வெளிப்படுத்தி கொண்டு இருக்கும் தனுஷ் தற்போது முதல் முறையாக, தெலுங்கின் முன்னணி இயக்குனரான தேசிய விருது பெற்ற சேகர்
காம்முலா இயக்கத்தில் நடிக்க போவதாக கூறியுள்ளார்.. கடந்த இரண்டு மாதங்களாக தி கிரே மேன் படத்துக்காக அமெரிக்காவில் ஷூட்டிங் போயிட்டு இருந்த நிலையில் இந்த தகவலை வெளியிட்டு இருக்காங்க..

இதன் பிறகு அமெரிக்காவில் இருந்து ஹைதராபாத் வந்த தனுஷ் கார்த்திக் நரேனின் டி 43 ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். இவருடைய முதல் நேரடி தெலுங்கு படத்திற்காக இயக்குனர் மற்றும் படப்பிடிப்பு
குழுவோடு இணைந்து பேசினார். இதே படப்பிடிப்பின் போது தனுஷ் மற்றோரு தெலுங்கு இயக்குனரையும் சந்தித்து இருக்காரு.. தனுஷை வச்சு ஒரு படம் எடுக்க போவதாக இந்த சந்திப்பில் பேசி இருக்காங்க.
அதுக்கு தனுஷும் ஒத்துக்கிட்டதாக தகவல் வந்து இருக்கு.. இந்த படம் தெலுங்கு , தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியிடப்போவதாக தகவல் வெளியிட்டு உள்ளார்கள்..

தனுஷிற்கு தெற்கிலும் பாலிவுட்டிலும் புகழ் அதிகமாக இருக்கிற காரணத்தினால் தயாரிப்பாளர் நாகவம்சி இந்த படத்தை மூன்று மொழிகளை எடுப்பதாக தீர்மானித்து இருக்கிறார்.
இதற்காக ஒத்துக்கிட்ட நிலையில் தற்போது இயக்குனர் வெங்க்கி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளார். இந்த நிலையில் தனுஷ் மற்றோரு படத்திற்கு அட்வான்ஸ் வாங்கியதாக தகவல் வெளியாகி இருக்கு..

5 thoughts on “தனுஷ் இன் தெலுங்கு பட அப்டேட்!! ஆர்வத்துடன் வெளியாகிய செய்தி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube