TV Artist

குக் வித் கோமாளி சீசன் 3 இன் புதிய தொகுப்பாளர்!! அட இவரா!!

விஜய் டிவியில் நிறைய ஷோவ்ஸ் பிரபலமாக இருந்தது அதில் மக்கள் மனதை வென்ற ஒரு ஷோனா அது குக் வித் கோமாளினே செல்லலாம்.. அந்த அளவுக்கு எல்லாரும் ரசிச்சு மூல்கிய ஒரு ஷோ இது. தற்போது
இந்த ஷோவை பற்றி ஒரு தகவல் வைரலாகிட்டு இருக்கு. அது என்னனா, குக் வித் கோமாளி சீசன் 3 யில் ஒரு முக்கிய பிரபலம் தொகுப்பாளராக ஜோயின் பண்ண போறதா தகவல் வெளியாகி இருக்கு.

குக் வித் கோமாளியின் சீசன் 2 சென்ற வருடம் இறுதியில் தொடங்கி இந்த வருடம் நியூ இயர் வரை ஒளிபரப்பானது. சீசன் 1 யை விட சீசன் 2 ஒரு மிக பெரிய ஹிட்டை கொடுத்தது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு
சீசன் 2 மக்கள் மனதில் இடம் பிடிச்சு இருக்கு.. இந்த சீசன் 2 வில் பங்கேற்ற குக்ஸ் மற்றும் கோமாளிகள் எல்லாரும் சேர்ந்து பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது நாம் அறிந்தவை.
இந்த சீசனோட இறுதியில் எல்லாருமே ரொம்பவே எமோஷனலா பேஸ்னாங்க. அப்போ பேசும் போது நாங்க எல்லாரும் அடுத்த சீசனக்காக வெய்ட் பண்றோம்னு சொல்லி இருக்காங்க.

கடந்த சீசனை போல சீசன் 3 யும் இந்த வருடத்தோட கடைசியில் தான் தொடங்கும் என்று எல்லாரும் எதிர்பார்த்துட்டு இருக்காங்க. இந்த நிலையில் சீசன் 3 யில் கலந்துகொள்ள நிறைய பிரபலங்கள் அவங்களோட விருப்பத்தை
தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கு. சமீபத்தில் சனம் செட்டியும் அவங்களுக்கு வாய்ப்பு கிடைச்சதுனா அவங்களும் CWC சீசன் 3 க்கு செல்வதாக சொல்லி இருந்தாங்க.

இப்போ சீசன் 3 க்காக ஒரு மிக பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும், இந்த நிலையில் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டு இருகாங்க. அது என்னானு பார்த்தா இந்த சீசனில் ரக்க்ஷனுடன் சேர்ந்து ஒரு பிரபலம் இந்த ஷோவை
தொகுத்து வழங்க போறாங்கன்னு தகவல் வந்தது.. அந்த பிரபலம் யார் என்று யோசித்த போது, யாரும் எதிர் பாராத விதமாக கடந்த சீசனில் கோமாளியாக இருந்த மணிமேகலை தான் இந்த
சீசனில் ரக்க்ஷன் கூட சேர்ந்து தொகுப்பாளராக வேலை செய்ய போறாங்க என்ற தகவலை வெளியிட்டாங்க.

சீசன் 2 வில் ரக்க்ஷன் மட்டுமே ஆங்கர் பணத்துனால இந்த சீசனில் இந்த புதிய மாற்றம் ஏற்படுத்தி இருப்பதாக சொல்லி இருக்காங்க. மணிமேகலை இதற்க்கு முன்னாடி CWC இல் இருந்து பழக்கப்பட்டவர் என்பதால்
காமெடி மற்றும் கலாட்டா இன்னும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.. இந்த தகவலை தொடர்ந்து ரசிகர்கள் மேலும் ஆர்வத்தோடு இருப்பது அறியப்படுகிறது..

6 thoughts on “குக் வித் கோமாளி சீசன் 3 இன் புதிய தொகுப்பாளர்!! அட இவரா!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube