சின்ன பூவே மெல்ல பேசு சீரியல் கரண் (தீரஜ் தூப்பர்) பற்றி தெரியுமா?

ஜீ தமிழில் திங்கள் முதல் சனி வரை மதியம் 3.00 மணிக்கு ஒளிபரப்பாகும் சின்ன பூவே மெல்ல பேசு என்னும் சீரியலில் நடிக்கும் கரண் பற்றியும் அவரின் வாழ்க்கை பற்றியும் பின்வருமாறு பாக்கலாம் வாங்க.

பிறந்த தேதி, பெற்றோர் :

சின்னதிரையில் சின்ன பூவே மெல்ல பேசு சீரியலில் நடிக்கும் நடிகர் கரண். அவரோட உண்மை பெயர் தீரஜ் தூப்பர். அவரு 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி டெல்லில பிறந்திருக்காரு.அவரு அப்பா பெயர் சுசில் தூப்பர். தீரஜ்க்கு இரண்டு சகோதரர்கள் ஒரு சகோதரி(ஷைல). இவர் டெல்லியில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்.

தீராஜக்கு பிடித்தமானவைகள் :

தீரஜ் தூப்பர்க்கு மிகவும் பிடித்த சாப்பாடு சைனீஸ் குசின், பிஸ்சா. அவருக்கு பிடித்த நடிகர் சைப் அலி கான், வருண் தாவன் மற்றும் ரன்பீர் கப்பூர். அவருக்கு பிடித்த விளையாட்டு கிரிக்கெட் மற்றும் புட்பால். அவருக்கு மிகவும் பிடித்த இடம் மூணாறு, மால்டிவ்ஸ் மற்றும் லண்டன்.

அவருக்கு மிகவும் பிடித்த வாகனம் டுகாட்டி. பாடகர் எ. ஆர். ரஹ்மான் ரொம்ப பிடிக்கும். கிரிக்கெட்டர்ல விராட் கோலி பிடிக்கும். அவருக்கு பிடிச்ச படம் தி பர்சட் ஆப் ஹாப்பினஸ்.

நடித்த விளம்பரங்கள் :

தீரஜ் தூப்பர் அப்பா சுஷில் தூப்பர். தீரஜ் தூப்பர் ஒரு மாடல்லிங்க இருந்துருக்காரு. அந்த மாடல்லிங் மூலமா கமெர்ஸ்யல் விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு கெடச்சுது. அத பயன்படுத்திய தீரஜ் தூப்பர் 100க்கு மேற்பட்ட விளம்பரங்கள் நடிச்சிருக்காரு. அதுல பிரபலமான மாருதி சுசுகி, சாம்சங் காலக்சி, டாபர் ஹனி, வீடியோகான் மொபைல் இப்படி பல விளம்பரங்கள் நடிச்சிருக்காரு.

சிறு வயதில் ஆர்வம் :

இவரு பள்ளியில் படிக்கும் போது விளையாட்டுக்களில் ஆர்வமா இருந்தாரு. அவருக்கு கிரிக்கெட் ரொம்ப புடிக்கும். பள்ளில கிரிக்கெட் டீமின் கேப்டன்ன இருந்திருக்காரு. காலேஜில்ல படிக்கும் போது சின்ன மாடல்லிங் கன்டெஸ்ட்ல வின் பண்ணிருக்காரு.

டிப்ளமோ பேஷன் டிசைனிங் முடிச்சிருக்காரு. இவரு கலர்ஸ் டிவில ஒளிபரப்பு செய்யப்பட்ட சீரியல் மாட் பிட்டாஹ் கே சார்னன் மெய்ன் சுவார்க்ல, ஆன்ஷ் கதாபாத்திரத்துல நடிச்சிருக்காரு.

திருமணம் :

வின்னி அரோற ஓட தீரஜ் தூப்பர் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.2016 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி இவருக்கு கல்யாணம் ஆகிருக்கு. அதை தொடர்ந்து பிஹிநென், மிர்ஸ். டெண்டுல்கர் நடிச்சிருக்காரு. டான்ஸ் இந்திய டான்ஸ் மற்றும் ச ரி க ம ப ப்ரோக்ராம்ல தொகுப்பளராகவும் இருந்துருக்காரு.

கதைச் சுருக்கம் :

நடிகை ப்ரீத்தா பெண் லூத்ரா குடும்பதலைவியான பாணிக்கு பிசியோதேரபிஸ்ட் ஆக வந்துருக்காங்க. பானிக்கு இரண்டு பேரன்கள். முதல் பேரன் ரிஷப் மற்றும் இரண்டாம் பேரன் கரண்.

பானின் மூத்த பேரன் ரிஷப் நாளடைவில ப்ரீத்தாவா ஒருத்தலையா காதலிக்க ஆரம்பிச்சிட்டாரு.ஆன இளைய பேரன் கரணும் ப்ரீத்தாவுக்கும் சண்டையாவே போய்ட்டு இருக்கும்.

ரிஷப் காதல் கனவாகியது :

ரிஷப் என்னதான் ப்ரீத்தாவ காதலிச்சாலும் அவருக்கு திருமணத்துல பெருசா ஆர்வம் இல்லாதவற இருந்தாரு. ப்ரீத்தா ரிஷப்ப திருமணம் செய்ய வற்புறுத்தினாங்க அதுக்கு அவரு ப்ரீத்தாவ தான் திருமணம் செய்ய போறோம்னு ஒதுக்கிட்டாரு.

ஆன ரிஷப்க்கு ஷெர்லின் கூட நிச்சயம் நடக்க போறத தெரிஞ்சி ப்ரீத்தா மேல வச்சிருந்த காதல மனசுல பொதச்சிட்டு ஷெர்லின்ன நிச்சயம் பண்ணிட்டாரு.வானவில்லாய் நினைவுகள் வந்து மறைந்தாலும் வண்ணங்கள் மனதில் பதிந்துவிடுகிறது.

ப்ரீத்தாவுக்கு ஷெர்லின் மேல சந்தேகம் வந்துச்சி. ஷெர்லினுக்கு ஒரு ஆண் நண்பர் இருக்காருனு தெரிஞ்சிருச்சு.

ப்ரீத்தாவும் கரணும் :

இந்த கல்யாணம் நடக்க கூடாதுனு நெனச்ச ப்ரீத்தா அத கரண் கிட்ட சொன்னாங்க. ஆன கரண் அத நம்பள. பிறகு சில ஆதாரங்கள் பாத்து கரண் நம்புனாரு.பிறகு ரிஷப்ப ஷெர்லின் கிட்ட இருந்து காப்பாத்த ப்ரீத்தாவும் கரணும் சேர்ந்து பல முயற்சி செய்றாங்க.

காதல் போராட்டம் :

அன்பு இருந்ததானே சண்டை வரும் அதுமாதிரி அதுல சண்டை போட்டுட்டு இருந்த அவங்க நட்புக்குள்ள போறாங்க. ப்ரீத்தாவுக்கு ஷெர்லின் ஓட ஆண் நண்பர் கூட திருமணம் பேச்சு போனது. பிரித்வி கிட்ட இருந்து ப்ரீத்தாவ காப்பாத்த ரிஷப்பும் கரணும் முயற்சி செய்றாங்க. இது கடைசில என்ன ஆகும் யாரு யாருக்கூட செருவாங்கனு தான் இந்த காதல் மெகாத்தொடர்.

இந்த உலகத்துல காதல் இல்லாம யாருமே இருக்கமாட்டாங்க எல்லாரு மனசுலயும் ஒவ்வொரு விதமான காதல் இருக்கும். அத நாம்ப வெளிப்படுத்தி மகிழ்ச்சியாக இருக்கணும்.காதலுருக்கானா கவிதை காதல் என்னும் பிடிக்குள் சிக்கி காற்றும் திணறுகிறது கொஞ்சம் இடைவெளிவிடு பிழைத்து போகட்டும்.

5 thoughts on “சின்ன பூவே மெல்ல பேசு சீரியல் கரண் (தீரஜ் தூப்பர்) பற்றி தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published.

Follow Us

Subscribe us on Youtube