கயல் சீரியலில் நடிக்க இருக்கும் நடிகை இவரா!! எதிர்பார்ப்புடன் இருக்கும் ரசிகர்கள்!

சன் டிவி சீரியல்கள் எல்லாம் ரொம்ப நல்லா போய்ட்டு இருக்கு மக்களுக்கு எல்லாம் புடிச்ச மாதிரி திருப்பங்களுடன் போய்ட்டு இருக்கு. புது சீரியல்களும் அடுத்தடுத்து சன் டிவியில் வரபோது, அந்த வரிசையில் விஜய் டிவியின் பிரபல நடிகரின் புது சீரியலும் சன் டிவியில் சீக்கிரமா வரபோது.

விஜய் டிவியின் பிரபலம் வேற யாரும் இல்ல ஆக்டர் சஞ்சீவ் அவர்கள் தான். இவர் சன் டிவியில் புதிய சீரியல் பண்றது
எல்லாருக்கும் தெரியும். சன் டிவியில் தான் புதிய சீரியல் நடிக்கறதையும் இந்த சீரியல் ப்ரைமே டைமில் வரபோறதையும் சொல்லியிருந்தாங்க.

சன் டிவியில் சீக்கிரமா வர போற சீரியல் தான் கயல். இந்த புது சீரியலில் தான் சஞ்சீவ் நடிக்கறாரு. விஜய் டிவியில்
ராஜா ராணி, காற்றின் மொழி சீரியலுக்கு அப்பறமா சஞ்சீவ் சீரியலில் நடிக்கறதால அவருடைய பேன்சுக்கு இந்த
கயல் சீரியல் பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இந்த புது சீரியலுக்கு பூஜை முடிஞ்சி ஷூட்டிங்கும் ஸ்டார்ட் பண்ணிட்டாங்கனு சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

இந்த சீரியலை விஷன் டைம் ப்ரோடியூஸ் பண்ணறாங்க. இந்த சீரியலில் சஞ்சீவுக்கு ஜோடியா நடிக்க போறது யாருனு சோசியல்
மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. கயல் சீரியலில் ஹீரோவாக சஞ்சீவ் நடிக்கிறாரு இவருக்கு ஜோடியா ஹீரோயினாக
நடிக்க இருப்பது யாருனு பாத்தீங்கனா நம்ப சைத்ரா ரெட்டி தான். யாரடி நீ மோகினி என்ற சீரியல் வில்லி கேரக்டரில்
நடித்து மிகவும் பிரபலமானார்.

இவங்களுக்கு மெயின் ரோல் கொடுக்கமாட்டாங்களா என்று நிறைய பேர் கொடுக்கலையே என்று வருத்தப்பட்டு இருந்த நிலையில் சஞ்சீவ் ஓட நெஸ்ட் சீரியல்களில் சைத்ரா ரெட்டி நடிக்கிறாங்க. இந்த சீரியலுக்கு ப்ரோமோ எடுத்துட்டாங்க கூடிய சீக்கிரமே வரும் என்று சொல்கிறார்கள். இந்த சீரியலில் நிறைய பிரபலங்கள் நடிக்கிறார்கள். விஜய் டிவியில் சஞ்சீவ் ஜீ தமிழில்
சைத்ரா இவங்க இரண்டு பேரும் சேர்ந்து சன்டிவியில் நடிக்கிறார்கள். இவங்க ஜோடி எப்படி இருக்கும் பல
சுவாரஸியத்தோடு கதை உருவாகும் என்று படக்குழுவினர் சோசியல் மீடியாவில் சொல்லிட்டு வராங்க.

6 thoughts on “கயல் சீரியலில் நடிக்க இருக்கும் நடிகை இவரா!! எதிர்பார்ப்புடன் இருக்கும் ரசிகர்கள்!

Leave a Reply

Your email address will not be published.

Follow Us

Subscribe us on Youtube