Cinema

மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கொரோனோ நிவாரண நிதியாக 10 லட்சம் கொடுத்த பிரபல நடிகர்!!!

தியாகராஜ சிவானந்தம், இவர் தமிழ் சினிமாவில் “தியாகராஜன்” என அழைக்கப்படுகிறார். இவர் தமிழ் படங்கள் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளிலும் நடித்து புகழ் பெற்றிருக்கிறார். இவர் 1990 இல் நடித்த நடிகர்களில் டாப் 5 இல் இடம் பிடித்திருக்கும் நடிகர் பிரசாந்தின் தந்தை ஆவார். தியாகராஜன் 21 ஜூன் 1946 இல் தமிழ்நாட்டில் பிறந்தவர். இவர் நடித்த படங்கள் அனைத்தும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்ததுனு சொல்லலாம்.

இவர் திரைப்பட நடிகராக மட்டும் இல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் கலை இயக்குனராக பன்முக வேலையிலும் ஈடுபட்டு இருக்கிறார். இவர் ஒரு தொழிலதிபராக இருந்தாலும் நடிப்பதில் ஆர்வம் காட்டியுள்ளார்.

இவர் “அலைகள் ஓய்வதில்லை” என்னும் படம் முலியமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் இவர் ராதாவிற்கு அண்ணனாக தோன்றினார். இந்த படம் இவருக்கு மிகப் பெரிய வெற்றியை கொடுத்தது.

பிறகு மலையூர் மாம்பட்டியானில் கொள்ளைக்காரனாகவும், நீங்கள் கேட்டவை, பாயும் புலி என அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்துகொண்டே வந்தார். இது போல் பல வெற்றிகளை கொடுத்து இருந்தாலும் இவர் தன் மகனுக்கு வலி விட்டார்.

அதாவது இவர் படத்தில் நடிப்பதை தவிர்த்து விட்டு தன் மகனின் வெற்றிக்காக விலகி கொண்டார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் எதார்த்தமான கதையினை கொண்டிருக்கும்.

இவ்வாறு தன் நடிப்பிலும், தொழில் துறையிலும் மிகப் பெரிய அளவு வெற்றியை அடைந்தவர் இவர். தற்போது நிலவும் கோவிட் 19 ஊரடங்கு காரணமாக முதலமைச்சர் நிவாரண நிதி என நடிகர்கள், தொழிலதிபர் மற்றும் விளையாட்டு வீரர் என பலரும் நிதி கொடுத்து வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது இவரும் கொரோனோ நிவாரண நிதி கொடுத்து இடம் பிடித்திருக்கிறார்.

இவரும், இவர் மகன் பிரசாந்தும் நேற்று மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து கொரோனோ நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் காசோலையாக வழங்கி உள்ளார்.

இது போல் முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கம் மு.க.ஸ்டாலினிடம் ரூ.15 லட்சமும், ரயில்வே துறையின் தலைவரான ஞானசேகரன், வக்கீல் சிவசண்முகம் என பலரும் உடன் இருந்து காசோலையை வழங்கி உள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube