CinemaTV Artist

பிக்பாஸ் ஆர்த்தி பற்றி பலரும் அறியாதவை!

bigg boss tamil aarthi:

அனைவராலும் விரும்பிப் பார்க்கப்படும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி தான் பிக் பாஸ் மூன்று சீசன்களை கடந்து நான்காம் சீசனில் வெற்றிகரமாக நடந்து கொண்டு இருக்கிறது.

எத்தனை பகுதி வந்தாலும் பிக்பாஸ் முதல் பகுதியே மக்களால் பெரிதும் விரும்பப்பட்டது. ஏனெனில் முதல் சீசனில் கலந்து கொண்ட அனைவரும் உண்மையாகவே இருந்தனர் என்று மக்கள் நினைக்கிறார்கள்.

அந்த பிக்பாஸ் முதல் பகுதியில் போட்டியாளராக பங்கேற்ற நம் ஆர்த்தி கணேஷ் பற்றி வாங்க தெரிஞ்சுக்கலாம்.

ஆர்த்தினாலே பிக் பாஸ் தான் நியாபகம் வரும். அதுவும் ஜுலீயோட போட்ட சண்டைதான் முதல்ல நியாபகம் வரும். 

பிறப்பு & படிப்பு:

நம்ம ஆர்த்தி 1985 இல் நவம்பர் 9ஆம் தேதி ஊட்டியில்  பிறந்தார் பின்பு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார்.

 பள்ளி படிப்பை ஜேர்க் மெட்ரிக்காலுஷனில்ம் கல்லூரிப் படிப்பை சென்னையில் பிரபலமான மீனாட்சி பெண்கள் கல்லூரியில் முடித்தார்.மேலும் இவர் ஒரு MBA பட்டதாரி ஆவர்.

இவர் தன்னுடைய நடிப்பு திறமையை தன்னுடைய இரண்டு வயதிலேயே காட்டத் தொடங்கிவிட்டார்.

முதல் படமான வண்ண கனவுகள் 1987 இல் வெளிவந்தது. பின்பு அவருடைய இரண்டாவது படமான சத்திரியன் 1990 இல் வெளிவந்து வெற்றி பெற்றது. 

ஆர்த்தி 2008 இல் கலைஞர் தொலைக்காட்சியில் நடை பெற்ற மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாவது வெற்றியாளராக தேர்ந்த்தெடுக்கப்பட்டார்.

அத்துடன் ரூபாய் 500000 லட்சம் பரிசு தொகையினை  பெற்றார் என்பது குறிப்பிடக்கத்து.

பின்னர் இவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் இவருக்கு மக்கள் மனதில் நல்ல  அங்கீகாரத்தை அடையச் செய்தது பிக்பாஸ் நிகச்சியாகும். 

இவர் மான் ஆட மயில் ஆட நிகழ்ச்சின் போது தன்னுடன் ஜோடியாக ஆடிய கணேஷ் என்ற காமெடி நடிகரை திருமணம் செய்து கொண்டார்.

திருமண வாழ்கை:

இவரின் திருமண வாழ்கை மிகவும் சுவாரசியமானது வாங்க அதை பற்றி பாக்கலாம்.

bigg boss tamil aarthi

ஆர்த்தி மற்றும் கணேஷ் திருமணம் காதல் திருமணம் என்று பலரும் நினைக்கிறார்கள் ஆனால் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாகவே இருந்துள்ளனர் சிறு வயது முதலே இணைந்து நடித்து வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் நட்ப்புடனே பழகி வந்துள்ளனர் இருப்பினும் கணேஷின் தந்தை ஆர்த்தி குடும்பத்தாரிடம் சென்று திருமண விஷயமாக  பேசி உள்ளார்.

உடனே ஆர்த்தியின் குடும்பத்திரனும் சம்மதம் அளித்தனர் பின்பு இருவரின் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.

இதில் மற்றுமொரு சிறப்பு எனில் ஆர்த்தி தான் கணேஷ்க்கு கால் செய்து எனக்கு திருமணம் என கூறியுள்ளார்.

அதற்கு மாப்பிள்ளை யார் என கணேஷ் கேட்டதற்கு நீதான் மாப்பிளையென்று அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஆர்த்தி.

பின்னர், ஆர்த்தி தனக்கு குழந்தை வேண்டாமென்று கணேஷ்யிடம் கூறியுள்ளார் கணேஷும் அதை ஒப்பு கொண்டார்.

ஏனெனில் ஆர்த்தி தன் அம்மாவின் மீது அளவுகடந்த அன்பு வைத்து உள்ளார் ஆர்த்தியின் தாய் இறக்கும் போது ஆர்த்தினால் அந்த துன்பத்தை தாங்க முடியவில்லை அதனால் தன் பிள்ளைகளுக்கு இவ்வாறு நடக்க கூடாதுயென்று நினைத்தாராம்.

ஆனால் ஆர்த்தி மற்றும் கணேஷிற்கு  பல குழந்தைகள் இருக்கிறார்கள் ஆம் இவர்கள் இருவரும் தன்னுடைய ஒவ்வொரு திருமண நாளின் போதும் ஒரு குழந்தைய தன் குடும்பத்துடன் இணைத்து கொள்கின்றனர்.

சினிமா துறை:

ஆர்த்தி நடித்த பல படங்கள் நன்றாக வசூல் செய்தன அதிலும் அருள் படத்தில் ஜோதிகாவுடன் சேர்ந்து தன் நகைச்சுவையை திறமையை அருமையாக காட்டிருப்பார்.

bigg boss tamil aarthi

மேலும் இவர் நடித்த கிரி குண்டக்க மண்டக போன்ற படங்களும் அதில் அடங்கும் அதிலும் படிக்காதவன் படத்தில் தனுஷிற்கு அத்தை மகளாக அருக்காணி என்ற பெயரில் நடித்தது அனைவராலும் ரசிக்கப்பட்டது.

இவர், வெள்ளி திரையிலும் சின்ன திரையிலும் ஜொலித்து கொண்டு இருக்கிறார் குறிப்பாக தற்போது விஜய் தொலைக்காட்ச்சியில் கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சில் நீதிபதியாக இருந்தார்.

அதிலும் அந்த  நிகழ்ச்சில் தினா போன் செய்து அனைவரையும் கமன்ட் செய்வது வழக்கம்.

அதில் அவர் நிகழ்ச்சி தொகுப்பாளார்களையும் நடுவர்களையும் வைத்தது கமன்ட் பண்ணுவதில் கில்லாடி அதில்ஆர்த்தியை அவரின் குண்டான தோற்றதை வைத்தது கிண்டல் செய்யும் பொது சிரிக்காதவர்களே கிடையாது.

பிக் பாஸ் – bigg boss tamil

ஆர்த்தி ( bigg boss tamil aarth ) பிக் பாஸ் ஷோவ்வில 21 நாள்கள்  தான் இருந்தார்  ஜூலியுடன் சண்டை போட்டு அனைவரின் வெறுப்பை பெற்றாலும் அடுத்த கார்டு சுற்றுின் மூலம் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.

bigg boss tamil aarthi

அப்போது அவர் தன் தலைமுடியினை கேன்சர்  பாதிக்கப்பட்ட நோய்யாளிகளுக்கு தானமாக வழங்கி இருந்தார் அதன் மூலம் மீண்டும் அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்டார்.

 உடல் எடை கூடினால் அதை ஒரு தடையாக கருதும் திரை உலகில் அதையே ஒரு ஆயுதமாக மாற்றித் தன் வெற்றிப் பாதையை அமைத்துக் கொண்டார் நம் ஆர்த்தி. 

திருமணம் முடிந்த போதும் தன்னுடைய கலைச் சேவையில் இருந்து விலகாமல் தன்னுடைய கணவருடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

இவருடைய கணவரும் ஒரு சிறந்த கலைஞன் ஆவார். ஆர்த்தியின் கலை திறமையில் சாதிக்க இவரின் கணவரும்  உற்ற துணையாக இருக்கிறார்.

அதனால் மீண்டும் சின்னத்திரை அல்லது வெள்ளித்திரையில் இவர் ஜொலிப்பார் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

7 thoughts on “பிக்பாஸ் ஆர்த்தி பற்றி பலரும் அறியாதவை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube