Cinema

சூப்பர்சிங்கரில் இருந்து வெளியேறிய பென்னி நடந்தது?

விஜய் டிவி என்றாலே ஹிட்தான். இப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் தொடர்கள் மட்டும் இல்லாமல், நிகழ்ச்சிகளும் மிகவும் பிரபலமானதாகவே இருக்கும். அதுமட்டும் இல்லாமல் மக்களின் பார்க்கும் ஆர்வத்தை தூண்டும் விதமாகவும் இருக்கும். விஜய் டிவியில் பிக் பாஸ், குக் வித் கோமாளி, mr&mrs சின்னத்திரை, bb ஜோடிகள், காமெடி ராஜா கலக்கல் ராணி என பல விதமாக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதே போல விஜய்டிவியில் Telecast ஆகும் நிகழ்ச்சியில் ஒன்று தான் சூப்பர் சிங்கர் ரியாலிட்டி ஷோ.

சூப்பர் சிங்கர் பல வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் மக்கள் நேசிக்கும் ஒரு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி சீசன் 1 இல் தொடர்ந்து தற்போது சீசன் 8 வரை வெற்றி அடைந்துள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஒரு கூட்டமே இருக்குனு சொல்லலாம் ஏனா அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி விஜய் டிவியின் வெற்றிக்கு பெரிய பங்கு வகித்துள்ளது.

இப்படிப்பட்ட நிகழ்ச்சியான சூப்பர் சிங்கரில் பாடல்கள் மட்டும் இல்லாமல், ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி தரும் விதமாக நடுவில் சிரிக்கவும் வைப்பாங்க. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களாக மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா இவர்களின் நகைச்சுவை, ஒருவரை ஒருவர் கேலிபேசும் விதம் என பல வகையிலும் நம்மை உற்சாக படுத்தும் எந்த வழிகளையும் இவர்கள் தவறவிடுவதே இல்லை என்றே சொல்லலாம்.

தற்போது சூப்பர் சிங்கர் சீசன் 8 ஒளிபரப்பட்டு வருகிறது. இந்த சீசன் மற்ற சீன்களை விட மிகவும் பிரபலமாக போய்ட்டு இருக்கு. இந்த சீசனில் ஒவ்வொரு வாரமும் புதிது புதிதான சுற்றுகளை நடத்தி வராங்க. இந்த சீசன் போட்டியாளர்களும் நல்ல பாடிட்டு இருக்காங்க. இந்த சீனில் அனுராதா, பென்னி, உன்னிகிருஷ்ணன், S.B.சரண்
ஆகியோர் நடுவர்களாக தன்னுடைய வேலையை சிறப்பாக செய்து வராங்க. அவ்வப்போது இவர்களும் நகைச்சுவையாக பேசிக்கொண்டும் இருப்பாங்க.

இந்த நிலையில் தற்போது சூப்பர் சிங்கரில் இருந்து பென்னி அவர்கள் வெளியேறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் பென்னி அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இனி நான் சூப்பர் சிங்கர் பற்றி எந்த பதிவும் போடமாட்டேன் எனவும் இதிலிருந்து நான் வெளியேறுகிறேன் எனவும் சொல்லிருக்காங்க. இது குறித்து இவரின் ரசிகர்கள் பலரும் இவருக்கு வருத்தத்துடன் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

சார்ப்பட்டா படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் அவர்கள் இயக்கும் படத்தில் பிரபல நடிகர்!!!

அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குனராக கால்பதிதவர் தான் பா. ரஞ்சித். அதுக்கப்பறம் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்றாஸ், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் வெளிவந்த காலா,
கபாலி போன்ற படங்களை இயக்கினார். இதை தொடர்ந்து ஆர்யா நடிப்பில் வெளியான சார்ப்பட்ட பரம்பரை என்ற படத்தை இயக்கினார், பா. ரஞ்சித் அவர்கள் அடுத்தடுத்து ஹிட் ஆனா படத்தை கொடுத்து முன்னனி இயக்குனராக தமிழ் திரை உலகில் வளம் வருகிறார்.

சார்ப்பட்ட வெற்றியை தொடர்ந்து நீலம் ப்ரோடக்க்ஷன் தயாரிப்பில் பா. ரஞ்சித் அவர்கள் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இப்போ இயக்கிட்டு இருக்கிறார். அட்டக்கத்திக்கு அப்பறமா ஒரு சூப்பரான லவ் ஸ்டோரிய இந்த படத்தை பன்னிட்டு இருக்கறதா
தெரிவிச்சி இருக்காரு. அது மட்டும் இல்லாமல் சார்ப்பட்ட வெப் சீரிஸ் ஆகா ப்ரோடக்க்ஷன் வேலையும்
போயிட்டு இருக்கு. இந்த நிலையில் பா. ரஞ்சித் அவர்களுடைய அடுத்த படம் பாத்திங்கனா முக்கியமான ஒரு அப்டேட் கிடைச்சி இருக்கு . அது என்னான சியான் விக்ரம் அவர்கள் வந்து பா. ரஞ்சித் அவர்களுடைய இயக்கத்தில் நடிக்க போறதா செய்தி கிடைத்து இருக்கு.

சியான் விக்ரம் அவர்கள் தற்போது கோப்ரா, உன்ணியின் செல்வன், விக்ரம் 6o படங்களில் நடிச்சிட்டு இருக்கிறார். இந்த மூன்று படங்களும் முடித்து விட்டு பா. ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் நடிக்க போறாரு. இந்த படத்தை ஸ்டூடியோ ஞானவேல் ராஜா தயாரிக்கப்போறாங்க. இவர் ஏற்கனவே ரஞ்சிதின் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்த மெட்ராஸ் என்ற திரைப்படத்தை தயாரிச்சி இருக்காங்க. மெட்ராஸ் படத்தை தொடர்ந்து இப்போ சியான் விக்ரம் படத்தை பா. ரஞ்சித் அவர்களும் ஞானவேல் ராஜா அவர்களும் கூட்டணியா சேர்ந்து இந்த படத்தை பன்றாங்க.

விரைவில் பா. ரஞ்சித் மற்றும் சியான் விக்ரமின் அவர்களோட காம்பினேஷனில் தயாராக போற அந்த படத்தோட ஆபீஸியல் அப்டேட் வெளிய வரும் அப்படினு சொல்லி எதிர் பார்க்கப்படுது. இவங்களோட காம்பினேஷன்ல வர போற இந்த படத்தை ஆர்வத்துடன் எதிர் பார்த்துட்டு வருகின்றனர். இந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என்று பேசப்பட்டு வருகிறது.

6 thoughts on “சூப்பர்சிங்கரில் இருந்து வெளியேறிய பென்னி நடந்தது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube