பாக்கியலட்சுமி எழில் பற்றி நாம் அறியாதவை!
Baakiyalakshmi ezhil:
தற்போது விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர்தான் பாக்கியலட்சுமி தொடர்.
இந்தத் தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு எட்டு முப்பது மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பப்படுகிறது. இத்தொடருக்கு பலதரப்பட்ட வயதிலும் ரசிகர்கள் உள்ளனர் குறிப்பாகக் குடும்பத்தலைவியிகளின் மத்தியில் இத்தொடர் அதிக வரவேற்பினை பெற்றுள்ளது எனலாம்.
தந்தைக்கு எப்படி பெண் என்றால் பிள்ளைகள் அதிகம் பிடிக்குமோ அதேபோலத் தாய்க்கு ஆண்பிள்ளைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அது மாதிரியாகப் பாக்கியலட்சுமி தொடரில் தாய்க்கு மிகவும் பிடித்த மகனாக நடிக்கும் எழில் பற்றிய தகவல்களை இங்குக் காணலாம்…..

தனிப்பட்ட தகவல்கள்:
இவருடைய உண்மையான பெயர் விஷால் ஆகும். தற்போது VJ விஷால் என்று அழைக்க படுகிறார். இவர் 1996 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி சென்னையில் பிறந்துள்ளார். மேலும் இவர் தன்னுடைய பள்ளி படிப்பை சென்னையில் உள்ள AV Meiyappan Matriculation Higher Secondary School, Chennai ல் முடித்துள்ளார். மேலும் அண்ணா பல்கலைக்கழத்தில் என்ஜினீயரிங் பட்டம் பெற்று உள்ளார்.
அவமானங்களும் அதனால் எடுத்த முடிவும் :
இவர் பள்ளி படிக்கும் காலத்தில் மிகவும் துருதுருவென இருப்பாராம். மேலும் தன்னுடன் இருபவர்களை எப்பவும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பாராம். தன்னுடைய 17வது வயதில் பள்ளி படித்துக் கொண்டு இருக்கும் பொது மால்களில் PAMPLET கொடுக்கும் பணி செய்து வந்துள்ளார்.இவ்வாறு சென்னையில் பிரபலமான மால் ஒன்றில் PAMPLET கொடுத்து வந்துள்ளார்.
அந்தச் சமயம் அங்குள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் எம்சி செய்து வந்தார்களாம். இவருக்கும் அவர்களைப் பார்த்து ஆர்வம் வந்துள்ளது. உடனே இவரும் அவர்கள் இடைவேளை சென்ற இருக்கும்பொழுது மைக்கை எடுத்துப் பேச ஆரம்பித்து விட்டாராம். இதைப் பார்த்த ஈவென்ட் மேனேஜர் இவரைக் கன்னத்தில் அறைந்து விட்டாராம்.
இதனால் மிகவும் மனவேதனை அடைந்த விஷால் அங்கிருந்து வந்து விட்டாராம். ஆனால் இந்த விஷயத்தை பற்றி தன் வீட்டாரிடம் எதுவும் கூறாமல் இருந்துள்ளார். ஏனெனில் இவர் வீட்டிற்கு மிகவும் செல்ல பிள்ளையாம். பின்னர் தான் முடிவெடுத்தாராம் வரும்காலத்தில் கண்டிப்பாக ஒரு அங்கராக வர வேண்டும் என்று.
பயிற்சியும் முயற்சியும் :
பிறகு சென்னையில் ஒரு ஒரு எண்ணை நிறுவனத்திற்கு விளம்பரத்திக்காகப் பேச ஆரம்பித்துள்ளார். ஸ்பீக்கர் மற்றும் மைக் உடன் ரோட்டில் நின்று பேச ஆரம்பித்தாராம். ஆம் அவ்வாறு பேசியதில் இவருக்கு ஒரு நாள் சம்பளமாக 250 ரூபாய் கொடுத்தார்களாம். பின்னர் எப்படி அங்க்கர் ஆவது என்று பல பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
இவருடைய அக்கா மற்றும் நண்பர்கள் இவருக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்தார்களாம். பின்னர் பல பயிற்சிகள் மேற்கொன்றாராம் அதில் ஒன்று தான் மிமிக்கிரி. தன் காலேஜ் நண்பர்களிடம் பல குரலில் பேசிக்காட்டுவாராம் முதலில் எந்த வாய்ஸ்ம் வர வில்லையாம். பின்னர் பல நாள்கள் பயிற்ச்சிச்சிக்கு பிறகு முதல் முதலில் விஜய் சேதுபதி வாய்ஸ்யை பேசிக்காட்டினாராம்.
விஷால் விஜெ விஷால் ஆனார் :
பின்னர் இவருக்கு லோக்கல் சேனலில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது. இதைப் பற்றித் தன் அம்மாவிடம் கூறியுள்ளார் இவருடைய அம்மாவும் தன்னுடைய சொந்தங்களுக்குப் போன் செய்து தன் மகன் டிவியில் வரப்போவதாகவும் வேலை கிடைத்தை பற்றிச் சந்தோஷமாகக் கூறியுள்ளார்.விஷால் அவர்களும் சந்தோஷமாக அங்குச் சென்று அங்கரிங் செய்து விட்டு வீட்டிற்கு வந்தாராம்.
இவருடைய அம்மா இவரைப் பார்த்ததும் அழுக ஆரம்பித்து விட்டாராம். இவருக்கு எதுவும் புரியாமல் ஏன் எனக் கேட்டதும் உனக்கு இந்த வேலை வரவில்லை நீ இனிமேல் இந்த வேலை செய்ய வேண்டாம் என்று கூறினாராம். உனக்கு இது வராது நீயே உன்னை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறாய் என்று சொன்னாராம். இவ்வாறு அம்மா கூறுவாரென விஷால் சற்றும் எதிர்பார்க்க வில்லையாம். இதைப் பற்றி இரவு 11 மணிபோல் யோசித்துக் கொண்டிருந்தாராம்.

லோக்கல் சேனலிலே நம் திறமையை காட்ட முடியவில்லை என்றும் அம்மாவே நம்மளை பற்றி இவ்வாறு கூறி விட்டார் என்று இவருக்கு யோசனையாக இருந்ததாம்.பிறகு எப்படியாது முன்னேற வேண்டும் என்று பல ஈவென்ட் ஷோவில் கலந்து கொள்வாராம். பல ஷோக்களுக்கு பணமே வாங்காமல் வேலை செய்து கொடுத்துள்ளார். ஏனேனில் இவருக்குத் தன்னுடைய திறமையை காட்ட ஒரு சந்தர்ப்பம் தேவைப் பட்டதாம். மேலும் இவருடைய நிறம் இவருக்கு உறுதுணையாக இருந்ததாம்.
Vj Hunt:
பின்னர் Vj Hunt என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு உள்ளார். இவரும் சரி ஆடிஷன்ஸ்ங்கு போவோம் கண்டிப்பாகச் செலக்ட் ஆகிவிடுவோம் என்று நம்பிக்கையில் போயுள்ளார். அங்குச் சென்று பார்த்தால் ஆயிரம் பேருக்கு மேல் நின்று இருந்தார்களாம்.
இவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லையாம். பின்னர் தன்னுடைய மிமிக்ரி மற்றும் காமெடியாகப் பேசும் திறனை எடுத்து வெளியிட்டாராம். இதன் மூலம் இவர் அந்த ஆயிரம் பேரில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அந்தச் சேனலில் இவருக்கும் வேலையும் கொடுத்தனராம்.வெளிச்சம் டிவியில் அங்காளி பங்காளி, கால் பண்ண காசு மற்றும் வேந்தர் டிவியில் துள்ளுவதோ இளமை போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஆங்கர்ராக இருந்துள்ளார்.
விஜய் டிவி :
இப்படியே இருந்து கடைசில் விஜய் டீவிக்குள் நுழைந்து விட்டார். ஆனால் ஆங்கராக இல்லாமல் அசிஸ்டன்ட் டைரக்டராகச் சென்று உள்ளார்.விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளுக்கு அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்துள்ளார் அதில் கலக்கல் சாம்பியன்ஸ், அது இது எது போன்ற பிரபல ஷோக்கள் அடங்கும்.சிவகார்த்திகேயன் மற்றும் மாகாபாஆனந்த் போன்றோர் பணி செய்வதை நேரில் பார்த்துள்ளார்.
மாகாபா அவரிடம் அது இது எது ஆங்கராகக் கண்டிப்பாக நான் வருவேன் என்று கூறுவாராம். எத்தனாவது சீசனாக இருந்தாலும் கண்டிப்பாக அது இது எது ஆங்கராவேன் என்று கூறுவாராம்.பின்னர் விஜய் டிவி தொடர்களில் நடிக்க ஆர்மபித்துள்ளார் இவரின் முதல் தொடர் கல்யாணம் முதல் காதல் வரையாகும் பின்னர் அரண்மனை கிளி போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார்.

ஜோடி நம்பர் ஒன் (10)
ஜோடியில் ஷ்ரிதுவுடன் ஜோடியாக ஆடினார். ஜோடியில் ஆடுவதற்கு முன்பே ஷ்ரிதுவும் விஷாலும் நண்பர்களாக இருந்துள்ளனர். மேலும் இருவருக்கும் இடையில் எப்பொழுதும் சண்டைதான் இருக்குமாம். ஜோடியின் மூலமே இவருக்கு ரசிகர்கள் கிடைக்க ஆரம்பித்தனர்.
மேலும் இதன் மூலமே இவர் சின்னதிரை உலகில் பிரபலமாக ஆரம்பித்தார். ஷ்ரிது மற்றும் விஷால் ஜோடி மக்களால் பெரிதும் விரும்பப்பட்டது. ஜோடியில் இவருக்குப் பிடித்த ஜோடி என்றால் அது ராமர் மற்றும் ஹேமா வாகும்.
பாக்கியலட்சுமி :
இந்தத் தொடரில் எழில் என்னும் கதாபாத்திரத்தில் பக்கியலக்ஷ்மிக்கு இரண்டாவது மகனாக நடிக்கிறார். தன்னுடைய அம்மாவை மற்றவர்கள் கேவலமாக நினைக்கும் பொது இவர் மட்டும் தன் அம்மாவின் கனவை மதிக்கிறார். அம்மாவின் கனவிற்கு உயிர் கொடுக்க நினைக்கிறார். இந்தக் கதாப்பாத்திரம் தான் தமிழ் நாட்டில் உள்ள அணைத்து தாய்மர்களுக்கும் எழில் அவர்களை பிடிக்க செய்தது.
மாஸ்டர் :
மாஸ்டர் படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு வந்துள்ளது. இவரும் முதல் பத்து நாட்கள் சூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். விஷால் “விஜய்” அவர்களுடன் பேச மிகவும் ஆசைப்பட்டாராம் அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் அவர்கள் இருந்த பொது அவரைப் பார்த்துக் கையசைத்தாராம். நான்கைந்து முறை க்கு பிறகு விஜய் அவர்கள் விஷாலை பார்த்து விட்டாராம் தளபதி அவரும் பதிலுக்குக் கையசைத்து அருகில் அழைத்தாராம். பின்னர் விஜய் அவர்களிடம் விஷால் பேசினாராம் இவரைப் பற்றி விஜய் அவர்கள் கேட்டதற்கு இவர் ஜோடியில் ஆடியதை பற்றிக் கூறினாராம். இதை யாரிடம் சொல்வது என்றே தெரிய வில்லையாம் அவ்வளவு சந்தோசமாக இருந்ததாம். பின்னர் ஷூட்டிங்காக அனைவரும் டெல்லி சென்று இருந்தார்களாம் அங்கு விஷால் அவர்களுக்கு உடல்நலம் சரி இல்லாமல் போனதாம் லோகேஷ் அவர்களிடம் சென்று என்னால் முடியவில்லை என்று கூறிய பிறகு அவர் பரவாயில்லை நாம் நிறைய படங்கள் பண்ணுவோம் அதில் பார்த்துக்கலாம் என்று கூறிவிட்டாராம். இதன் காரணத்தால் படத்திலிருந்து பாதியில் விளக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாம்.

2017 & 2018அண்டிற்கான சிறந்த “ENTRATRAINER AWARD” இவருக்குக் கிடைத்துள்ளது.
இந்த உலகத்தில் நம்மை வெற்றியாளராக மாற்றுவது நம்முடைய கனவு மட்டுமில்லை நம் அடைந்த அவமானங்களும் தோல்விகளும் தான்…..
Like any other medicinal drug, Cialis 20mg comes with some side-effects buying generic cialis online safe
buy priligy pills This thorough review will discuss ED, the physiology of penile erection and the role of PDE5, and all aspects of tadalafil, from its development, through its pharmacology, to its latest clinical studies and indications
New Orleans-based Ochsner Health is the first health system to integrate its EHR with an Epic application that aims to provide individualized cancer treatment best place to buy cialis online reviews The concomitant use of erythromycin or strong CYP3A4 inhibitors e
cheap cialis generic online Unfortunately this tubing wears out quickly
There are like, a dozen of so pills in there for him to get his sperm count up and strong, as well as to get his arounsal friskiness level up. clomiphene citrate administration