Serial

அன்புடன் குஷி அன்பு யார் தெரியுமா?

Anbudan kushi anbu:

விஜய் டீவில நிறைய சீரியல் பிரபலம் ஆகிட்டு வருது. சீரியல்ல நடிக்கர ஆக்ட்ரெஸ்ஸும் பிரபலம் ஆகிட்டு இருக்காங்க. விஜய் டீவி நிறைய சீரியல் மற்றும் Actors களை உருவாக்கி இருக்கு. அப்படி பிரபலமான சீரியல்தா அன்புடன் குஷி. இந்த சீரியல் மற்றும் இந்த சீரியல்ல அன்புவா நடிக்கற ஆக்டர் பத்தியும் பாக்கலா.

பிரஜின் பிறப்பு:

பிரஜின் பத்மநாபன் தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் கவனம் செலுத்தும் இந்திய திரைப்பட நடிகரான பிரஜின் என பிரபலமாக அறியப்படும் பிரஜின் பத்மநாபன். சன் டீவியுடன் வி.ஜெ .வாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பிரஜின் தனது படங்களில் திஷ்யம் மற்றும் சம்பூதிரி ஆகியோருடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பிரஜின் என முக்கியமாக அறியப்படும் பிரஜின் பத்மநாபன் ஒரு இந்திய திரைப்பட நடிகர் செப்டம்பர் 6,1981 அன்று இந்தியாவின் கேரளாவில் பிறந்தார். தற்போது பிரஜின் வயது 35.

ஒரு தலை ராகம் சங்கர் இயக்கிய அரபு எமிரீட்ஷை தளமாகக் கொண்ட தமிழ்-மலையாள இருமொழியான மணல் நகரத்தில் அவர் முன்னணி பாத்திரத்தில் நடித்தார். இப்போது அவர் ஒரு தமிழ் திரைப்பமான எஞ்சியம் நான் இருப்பனைத் தொடர்கிறார், இது பென்னி தோமஸ் இயக்கியது மற்றும் ஷ்கிரிப்ட் நாகமனிஷி மற்றும் அஷ்ரிப் பெருங்கடி தயாரித்தது.போட்டி-ரேபிலே , சத்ருளா மற்றும் பழைய வண்ணாரப்பேட்டை போன்ற சில படங்களிலும் தோன்றியுள்ளார். பல திரைப்படங்கல்ல இவரோட நடிப்பால் பலரால் புகழப்பட்டார்.

பிரஜின் திருமண வாழ்கை:

பிரஜின் மலையாள படங்களில் நட்சத்திரமாக இருந்த சாண்ட்ராவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் காதலித்து வீட்டில் சொல்லி திருமணம் செய்து கொண்டனர். சாண்ட்ரா முதலில் பிரஜினை காதலிப்பதாக சொன்னார். இதுக்கு அப்பறம் கொஞ்ச நாளைக்கு அப்புறம் ரெண்டு பேரும் தோலைப்பேசி மூலம் பேச தொடங்கினாங்க. ரெண்டு வருஷம் தொலைபேசி மூலம் தங்களது காதலை வெளிப்படுத்தினர். இரண்டு வருடங்களுக்கு பிறகு சந்தித்து பேசி பிறகு வீட்டில் சொல்லி திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் இருவரும் தமிழ் திரையுலகில் பிரபலம் ஆகி கொண்டு இருக்கும் நடிகர்கள்.திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு அழகான ரெட்டை பெண் குழந்தைகள் பொறந்தாங்க. இவர்கள் ஆச பட்டு ரெட்டை பெண் குழந்தைகள் வேண்டும் என்று வேண்டி கொண்டதாக கூறியுள்ளார்கள். குழந்தை பிறப்பிற்கு பிறகு இருவரும் சேர்ந்து குழந்தைகளை பார்த்துக் கொள்கிறார்கள். பிரஜின் தற்போது தன் குழந்தைகளிடம் நேரம் செலுத்துகிறார். இவங்களோட இந்த திருமண வாழ்க்கையில மேலும் சந்தோஷப்படுத்தும் விதமாக இந்த ரெண்டு குழந்தைகளும் இருக்காங்க.

பிரஜின் சீரியல் வாழ்க்கை:

பிரஜின் விஜய் டிவி சீரியலில் முதல் முதலில் அறிமுகம் ஆனார். இவர் முதலில் சின்ன தம்பி சீரியலில் நடிக்க தொடங்கினார். இதன் பிறகு மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இந்த சீரியல்கு பிறகு இவர் நிறைய குடும்பத்தினரின் வீட்டில் ஒருவராக இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள். இவரை சந்தித்த நிறைய பேர் இவரின் நடிப்பு மிக அருமையாக இருப்பதாக கூறி பாராட்டி உள்ளார்கள் என்று ப்ரஜின் interview- வில் சொல்லி இருக்காரு. பிரஜின் சீரியல்கு பிறகு நிறைய குழந்தைகள் மனசிலும் இடம் பிடிச்சு இருக்காரு.

இது பிரஜின் மனசுல மேலும் நடிக்க ஆர்வத்தை தூண்டி இருக்கு.தர்போது பிரஜின் அன்புடன் குஷி என்ற தொடரில் மிக அருமையாக நடித்து கொண்டு இருக்கிறார். இதுவும் நிறைய பேரோட மனசுல இடம் பிடிச்சு இருக்கு. இந்த கதைக்கு அப்புறம் பிரஜின் இன்னும் பலரோட மனசுல இடம் பிடிச்சு இருக்காரு.

அன்புடன் குஷி:

அன்புடன் குஷி ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் ஒரு தமிழ் மொழி தொடராகும். ஜன்னவ ஜன்னவரி 27, 2020 முதல் 17 மே 2021 வரை திரையிடப்பட்டது. covid-19 தொற்று நிலைமை காரணமாக தர்காலிகமாக நிறுத்தத்தப்பட்டது. இது ஆரம்பத்தில் பிரஜின், மான்சி ஜோஷி மற்றும் அரவிந்த் சிவகுமார் ஆகியோருடன் நடிக்கிறார். பின்னர் சாக்க்ஷிக்கு பதிலாக ரேஷ்மாவும் பின் தொடர்ந்தனர். பின்னர் சிவகுமாருக்கு பதிலாக லோகேஷ் நியமிக்கப்பட்டார். அன்பு ஒரு இளம் பையன் குஷியின் வீட்டில் வேலை செய்யும் ஒரு வேலைக்காரன். நீண்ட காலத்திற்குப் பிறகு, குஷி ராஜஸ்தானிலிருந்து சென்னைக்கு திரும்பி வருகிறார். பேஷன் டிசைனிங் மற்றும் வேலை பிடிக்க ஆரம்பிக்க தொடங்கினார். இருப்பினும், அவரது தந்தை ஆதித்யா ஒரு குற்றவாளி என தெரியாமல் சுதீஷ் உடன் தனது திருமனைத்தை ஏற்பாடு செய்கிறார். ஆனால், குஷி ரகசியமாக பேஷன் டிசைனிங் படிக்க தொடங்குகிறார். அது தெரிந்ததும் அன்பு அவளுடைய தந்தையின் கோபத்தைப் பற்றி அவளுக்கு எச்சரிக்கிறான்.

அன்பு ஒரு தொழில் முறை குத்து சண்டை வீரர். சில பிரச்சனைகளுக்கு பிறகு குஷிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாமல் அன்புவின் வீட்டுக்கு செல்கிறாள். அங்கு சென்று அவர் குடும்பத்தினர் கூப்பிடும் போது குஷி அவள் கழுத்தில் இருக்கும் தாலியை காட்டி அன்புவை கல்யாணம் செய்து கொண்டதாக கூறினால். இதன் காரணமாக அன்பு குஷியை சீக்கரமாக வீட்டை விட்டு வெளியே போக சொல்றான்.அதனால் குஷி அன்புவிடம் அவளோட பிரச்சைகளை சொல்லி இதை தீர்க்க சில மாதங்கள் அவகாசம் கொடுக்குமாறு கேட்கிறாள். அன்புவும், குஷியும் சிறு வயது நண்பர்கள். குஷி அன்பு வீட்டுக்கு வந்து அன்புவோட மனைவியா நடிக்க ஆரம்பிச்சு படிப்படியாக அன்புவை காதலிக்கிறாள். ஆனால் அன்பு குஷியை முதலாளியின் மகள் மற்றும் ஒரு நல்ல நண்பராக மட்டுமே பார்க்கிறேன் என்று அன்பு சொல்லிக்கிட்டே இருக்கறான். இதுக்கு அப்புறம் அன்பு ( Anbudan kushi anbu ) அவனோட சகோதரி கல்யாண பிரச்சனைய எப்படி முடிக்கறான் மற்றும் குஷியை எப்படி அவரோட மனைவியா ஏத்துக்க போறாரு பற்றியது. இந்த தொடர முழுக்க முழுக்க காதல் பற்றிய கதை. பார்ப்பவர்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு இல்லாமல் சுவாரசியமான காதல் கதியாக இருக்கும். இது மேலும் சுவாரசியமா போகும்னு எதிர் பார்க்கப்படுது.

6 thoughts on “அன்புடன் குஷி அன்பு யார் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube