Serial

விஜய் டிவி அன்ஷுக்கு நிச்சயம் முடிந்தது!

விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாமல் சீரியல்களும் ரசிகர்களிடையில் நல்ல வரவேற்பை பெரும். தற்போது ஒளிபரப்பப்பட்டு வரும் தொடர்களை விட அதற்கு முன்னர் ஒளிபரப்பப்பட்டு முடிந்த தொடர்களான சரவணன் மீனாட்சி, கல்யாணம் முதல் காதல் வரை, மாப்பிள்ளை, தெய்வம் தந்த வீடு, ஆண்டாள் அழகர் போன்ற பல தொடர்களும் மக்களின் மனதில் மிகப் பெரிய இடத்தை பிடித்திருக்கிறது. இந்த தொடர்களில் வரும் நடிகர்கள், நடிகைகள், காதல் வசனங்கள், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது. மேலும் இந்த தொடர்களில் வரும் காட்சிகள் மக்களின் பார்க்கும் ஆர்வத்தை தூண்டும் விதமாகவும் அமையும்.

இந்த வரிசையில் இடம் பெற்றிருக்கும் தொடர்களில் ஒன்று தான் ராஜா ராணி சீசன் 1. என்னதான் தற்போது ராஜா ராணி சீசன் 2 ஒளிபரப்பட்டு வந்தாலும் சீசன் 1 தொடரிற்கு இருந்த
ரசிகர்கள் கூட்டமே தனி தான். மேலும் ராஜா ராணி சீசன் 1 இல் நடித்த நடிகர்கள் இன்றளவும் பேசப்பட்டு வருகிறார்கள். இவர்களின் உண்மையான பெயர்களை அறியாமல் இவர்களை சீரியல் பெயர்களை வைத்தே மக்கள் கொண்டாடுகிறார்கள். சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர், கார்த்திக் சம்பா என இன்றளவும் இவர்களை இந்த பெயர்களை கொண்டே மக்கள் ரசிக்கிறார்கள். விஜய் டிவியில் நடிக்கும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கும்.

அந்த வகையில் ராஜா ராணி சீசன் 1 தொடர்களில் நடித்த எல்லா நடிகர் நடிகைகளுக்கும் நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது என்று சொல்லலாம். இந்த வரிசையில் ராஜா ராணி சீசன் 1 தொடர் மூலம் பிரபலமானவங்க தான் அன்ஷு ரெட்டி. இவங்க ராஜா ராணி, கோபுரங்கள் சாய்வதில்லை, மேகமலா, காதலோ ராஜகுமாரி போன்ற தொடர்களில் நடித்திருக்காங்க. அன்ஷு தெலுங்கானாவில் பிறந்தாங்க. இவங்க தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு தொடர்களிலும் நடித்து இருக்காங்க.

தெலுங்கில் இவங்களுடைய “மேகமலா” என்ற முதல் தொடரிலேயே மிகவும் பிரபலமானங்கனு சொல்லலாம். தமிழில் ராஜா ராணி என்ற தொடர் மூலம் பிரபலமானங்க. இந்த தொடரில் அன்ஷு “திவ்யா” என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பாங்க. அன்ஷுவினுடைய நடிப்பிற்கு அழகிற்கு ரசிகர்கள் நிறையவே இருக்காங்க. இந்த வகையில் அன்ஷு ரெட்டிக்கு தற்போது திருமண நிச்சியதார்த்தம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர்களுடைய நிச்சியதார்த்தம் கோவிட்19 நோய் தொற்று காரணமாக மிகவும் எளிமையான முறையில் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களுடைய நிச்சியதார்த்த புகைப்படத்தை பார்த்து இவர்களுடைய ரசிகர்கள் மற்றும் இணை நடிகர்கள் அனைவரும் ஆச்சர்யத்தில் மகிழ்ந்து இவங்களுக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். மேலும் இவர்களுடைய நிச்சியதார்த்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் கமெண்டுகளையும், லைக்குகளையும் அள்ளிவீசி வருகிறார்கள்.

ஆலியா மானசா அவர்கள் தன்னுடைய குழந்தை பற்றி சொன்ன விஷயங்கள்!

தமிழ் சீரியலில் நடிக்கும் நடிகைகள் ஷாட் டைமில் பிரேக் கிடைச்சா இல்லைனா வந்து ஏதாவுது ஃபிரீ டைமில் பிரபலங்கள் நிறைய பேர் அவங்க பேன்ஸ் ஓட சோசியல் மீடியா மூலியமா இன்ட்ராக்ட் பண்ணுவாங்க. அந்த வகையில் சமீபத்தில் ஆலியா மானசா அவர்கள் அவங்களோட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் QNA செஷன் வச்சிருந்தாங்க. இந்த QNA செஷன்ல குறிப்பா
அவங்க என்னா சொல்லி இருந்தங்கனா ஐலா பத்தி எதோ தெரிஞ்சிகுமுனா என்கிட்ட கேலுங்கனு சொல்லி இருந்தாங்க.

அந்த வகையில் ஒருதர் கேட்டு இருந்தாங்க எதோ ஒரு விஷயத்துக்காக ஐலா வந்து பிடிவாதமா இருந்தா என்னா
பண்ணுவிங்கனு கேட்டாங்க அதற்கு ஐலா வந்து பிடிவாதமா இருப்பா ஆனா நா நிறைய விஷயத்துக்கு எங்கரேஜ்
பண்ணமாட்டேன். அவங்க பிடிவாதமா இருந்துட்டு அழுவாங்க எதோ வேணும் அப்படினு சொல்லுவாங்க ஐலாக்கு வந்து
அது யூஸ்புல்லா இருந்தா அப்ப ஐலா பேச்சு கேட்டு பண்ண வேண்டியது பண்ணுவேன்.

ஒரு கட்டத்துக்கு மேல் பிடிவாதமா இருக்கும் போது பாவம் சொல்லி கொடுத்துருவோம் போக போக அவங்க அண்டர்ஸ்டாண்ட்
பண்ணிக்கணும் என்று சொல்லியிருந்தாங்க. அதுமட்டும் இல்லாமல் அவங்க பிடிவாதமா இருக்கும் போது அவங்க பேச்சைகேட்டு இத பண்ணலாம் என்று டிசைட் பண்ணறோம் அப்படினு உலகத்தில் இருக்கறது எல்லாமே வேணும் உலகத்தில் எல்லாருமே மரியாதை கொடுக்கணும் நினைச்சிபாங்க. ஆனா அது பண்ணவே கூடாதுனு சொல்லி இருந்தாங்க.

குழந்தை ஓட பிஹேவியர் வந்து பெற்றோர் ஓட கைல தான் இருக்கு அப்படினு சொல்லி இருந்தாங்க. ஜலா பாப்பா ஓட பிறந்த நாள் எப்பனு ஒருதர் கேட்டு இருந்தாங்க அதற்கு 20- 03- 2020 அப்படினு ஷேர் பண்ணியிருந்தாங்க. ஐலா ஓட வெயிட் கேயினுக்கு என்னா ஸ்பெஷலா கொடுக்குறீங்க என்று கேட்டு இருந்தாங்க. எங்களோடைய என்னோம் வந்து குண்டா புசு புசுனு இருக்கற மாதிரி இல்ல ஹெல்தியா இருந்தா போதும் டாக்டர் சொன்ன மாதிரி பழங்கள், காய்கறிகள், முட்டை மற்றும் சின்ன சின்னதா சிக்கன வெட்டி தர மாதிரி ஷேர்
பண்ணியிருந்தாங்க.

ஐலா பாப்பாக்கு என்னா சோப் யூஸ் பண்றனு கேட்டு இருந்தாங்க. அதுக்கு வந்து பேபி வாஷும் நலுங்கு மாவும் தான் யூஸ் பண்ணறோம் என்று
சொல்லியிருந்தாங்க. அய்லாக்கு பிடித்த உணவு என்னானு கேட்டு இருந்தாங்க. ஐலாக்கு வந்து அசைவம் நா ரொம்ப பிடிக்கும் விரும்பி சாப்பிடுவாங்க.
இட்லி வந்து சுத்தமா பிடிக்காது சைவத்தில்ல வந்து ஆளூ பரோட்டா மட்டும் தான் பிடிக்கும் என்று ஷேர் பண்ணி இருந்தாங்க.

5 thoughts on “விஜய் டிவி அன்ஷுக்கு நிச்சயம் முடிந்தது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube